மகிழ்ச்சி மலரட்டும் மனதிலே
பழையன கழிதலும் புகுவன புகுதலுமே பண்டைய தமிழனின் மரபாய் இருந்தது
புத்தாண்டை வரவேற்போம் , நம் தமிழ் தொண்டை தொடர்வோம்
உறங்காத ராத்திரி பகுதி 5
தொலைபேசி கூண்டு. அழுக்காய் பிரயாணம் முடித்தவர்களும், சுத்தமாய் பிரயாணம் போவோர்க்களுமாய், வரிசையாய் ஆட்கள். காவலருடன் சென்றதால் உடனே பேசும் வாய்ப்பு கிடைத்தது. மெலிந்த தேகமாய், கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து அங்கே பார்வை இழந்த அலுவலர். கையில் உள்ள எண்ணை உரக்க சொன்னான் பிரபா. "இல்லையே இது நம்ம நம்பர் இல்லைங்க" என்று பிரபாவின் ஆர்வத்தில் ஆசிட் உதறினார்.
வழிந்தோடிய உற்சாகம் அவரின் அடுத்த பதிலால் மேலும் சறுக்கியது. சற்று நேர சிந்தனையில் சொன்னார் "மொத்தம் 94 பூத்து இருக்கு, கஷ்டம் சார் கண்டு பிடிக்கிறது ". தொடர்ந்து அந்த எண்ணை முயர்சித்தும் யாரும் எடுக்காத சூட்சமம் இப்போது புரிந்தது.
கண்கள் பார்த்தும் மனம் கணக்கிட்டதும் ஒரு 5 அல்லது பத்து இருக்கும் என்று தானே. இத்தனை பூத்து உள்ளது ஆச்சர்யம் தானே . 94 மிகப் பெரிசு அல்லவா, எப்படி கண்டு பிடிப்பது என்று லேசாய் ஒரு மிரளல், என்றாலும் முயற்சியை தளர விட வில்லை. கண்ணில் கண்ட மேலும் சில கூண்டுகளை ஓட்டமும் நடையுமாய் வினவினான். எல்லாம் இல்லைகளே. இரக்கமில்லாமல் நேரம் மட்டும் நகர்ந்து கொண்டே இருண்டது.
இது பலன் அளிக்காத முயற்சி என்பதாய் காவலர் லேசாய், நடையில் காட்டினர். பிரபா மட்டும் ஓடி கொண்டே இருந்தான். அவன் விடாமுயற்சி பலன் அழித்து. விதியும் தன் கோர பற்களை
விலக்கி கொண்டு 19 வது கூண்டை நெருங்கும்போது புன்னகை செய்தது.
இலக்கம் கேட்டு குனிந்து இருந்தவர், நிமிர்ந்து சொன்னார் "இது சிட்டி வாசலிலே பழக கடை பக்கத்திலே " ஆச்சரியமாய் ஏறிட்டான் பிரபா. பிரதேயகமாய் சிலருக்கு இப்படி எண்கள் நினைவில் நிறுத்துவது ஒரு பழக்கம். இறைவனாய் தெரிந்தார் அந்த பெரியவர். வியர்த்த கைகளை பிடித்து கண்ணில் ஒற்றி கொண்டான் பிரபா. இது தான் சக மனிதரில் இறைவனை காணும் உத்தியோ / வித்தையோ. நன்றியை வெறும் வாயால் சொல்லாது ஏன் தொட வேண்டும். உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொது வார்த்தைகள் சுலபமாய் தோற்கும். மெய் தீண்டுதல் அதை சுலபமாய் செய்யும். ஆம். தன் உணர்வு முழுவதுமாய் உணர்த்தப்பட்டத்தாய் பிரபா உணர்ந்தான். அதை உணர வேண்டிய அந்த மறு ஜீவனும் அதையே உணர்ந்தது . வாசர்கள் அனுமதித்தால் இன்னும் ஒரே ஒரு வரி. காதல் உணர்த்தும் செயலாய் காமம் உட்கொண்டால், எத்தனை பெரிய சமுக மாற்றம் இந்த மனித சந்ததி பெரும்.
ஒரு பழக்கடையின் ஓரத்தில் ஒளிந்திருத்தது அந்த தொலைபேசிக் கூண்டு . இலக்கத்தை பார்த்து உருதி செய்தார். ஆம் இது எங்க நம்பர் தான். சுருக்கமாய் விவரம் சொன்னான் பிரபா. உதவ தயாராகி வியாபாரத்தை விட்டு விட்டு சிந்திக்க, மைத்துனரின் இலக்கம் காண்பித்தான் பிரபா. பட்டியலை பார்த்து உறுதி செய்தார் "ஆமா சார், 9.45 போன் பண்ணி இருகாங்க . கண்கள் கடிகாரத்துக்கு தாவியது. இப்போது 10.45 . என்றால் சரியாக ஒரு மணி நேரம் முன்பாக. மேலும் விவரம் சேர்க்க காவலர் உதவிஉடன் கேள்விகளால் துருவினான். வந்தது இருவர். "ஆமா சார், கையிலே ஒரு பச்சை கலர் பாக் வச்சிருந்தாங்க, இங்கே வச்சிட்டு தான் அங்கே போன் பண்ணினாங்க " கை தன்னிசையாய் மேசையை தடவியது. இரண்டு தொலைபேசி எண்களை முயற்சி செய்து ஒன்றில் மட்டும் பேசினார்கள். ஆர்வம் தலைகேறியது அந்த இன்னொரு நம்பர் என்ன. "கால் கநெக்ட் ஆனாதான் சார் பதிவாகும் " கை கேட்டும் தூரத்தில் அவர்கள். அவர்கள் கையிலே பை. ஒரு மணி நேர தூரத்தில் நான். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் காலைக்குள் கிடைக்க வேண்டுமே நேரம் செல்ல செல்ல, "இனி இங்கிருந்து என்ன பயன் ".
சோர்வான குடும்பம், குழப்பமான மனதோடு ரயில் நிலையம் விட்டு கிளம்ப முடிவு செய்தான். நெரிசல் இல்லாத சாலையில் உறங்கும் நகரத்தின் ஊடே விரைந்தது அந்த வாடகை கார்.
தொடரும் ...
உறங்காத ராத்திரி பகுதி 4
மணி 21:00 : சென்னை சென்ட்ரல்
எத்தனை பேர் காவல நிலையம் சென்று புகார் செய்து இருப்பிர்கள் என்று தெரியாது. செய்திருந்தால் நான் சொல்லுவது புதுசு அல்ல. புகார் செய்யும் நம்மையே திருடனாய் பார்க்கும் பார்வை அவர்களுக்கு. சந்தேகம் கூட பிறந்ததோ என்று தோன்றும்.
பதட்டத்தை மறைத்து கொண்டு சுருக்கமாய் விவரித்தான் பிரபா. பிரட்சினையின் தாக்கத்தை புரிந்த காவலர், ரயில் நிலைய உயர் அதிகாரியை தொடர்பு கொண்டார். அமைதியாய் கேட்டவர், அதிரடியாய் சொன்னார்.
பை தொலைத்திருந்தால், அதுவும் ஒரு ஐந்து நிமிடங்களுக்குள் என்றால் நிச்சயம் களவு இல்லை. மேலும் அது சக பிரயாணிகளிடம் சென்று இருப்பதே வாய்புக்கள் அதிகம். கோச் லிஸ்ட் பார்த்து தொலைபேசியில் பேசி முயற்சிக்கலாம்.
பிரபாவுக்கு இந்த சிந்தனை புதிது. நம்பிக்கை துளிர் விட்டது. புதிய கோணம் அவனுக்கு உத்வேகம் தந்தது. தான் மட்டும் தனியாய் இல்லை என்று புரிந்தது. ஒரு குழுவே அவனுக்காக அவன் பிரட்சினைக்காக எனும் போது உணர்வு வித்தியாசம் ஆனது. ஒரு நாடு அதன் கட்டமைப்பு புரிந்தது. அரை மனதோடு அழுது அலுத்து கட்டிய வருமான வரி நினைப்பு வலித்தது.
பார்வையை தளர விட்டு சன்னல் கம்பி உடே பார்த்த போது துணைவியார் வருவது தெரிந்தது. கைகளை கால் சட்டை பையின் உள் செலுத்தி காசு எடுத்து சன்னல் கம்பிகளின் ஊடே கொடுத்தான். சில சமயங்களில் நாம் விரும்பினாலும் பேச சநதர்ப்பம் அமைவதில்லை. பேசாமல் கண்களாலே, இருவரும் சூழ்நிலையை புரிந்து கொண்டனர். மௌனம் அங்கே கவிதையாய் மலர்ந்தது. ஆயிரம் வார்த்தை சொல்ல வேண்டியதை, ஒரு பரிவை, ஒரு கோபத்தை, ஒரு இயலாமையை பார்வை உணர்த்தியது.
அமைதியை கிழித்துக் கொண்டு மெல்லியதாய் சிணுங்கியது பிரபாவின் தொலை பேசி. அவன் செயலை மாற்றி அமைக்க போகும் அந்த அற்புத தொலை பேசி சாராம்சம் புரியாமலே காதுகளில் கொடுத்தான். அழைத்தது மைத்துனன். திருவனந்தபுரத்தில் இருந்து . மைத்துனன் அதிரடியாய் கேட்ட கேள்வி ஆச்சர்யம் தந்தது . "நீங்கள் பச்சை நிறத்தில் ஒரு பையை தொலைத்திர்களா "
என்ன இது. இது எப்படி இவருக்கு தெரிந்தது.
"ஒருவர் அழைத்திருந்தார் அவர் அந்த பை வைத்திருப்பதாய் சொன்னார்" என்று கேட்ட போது அடி வயிற்றில் சந்தோசம் பரவியது. யார் அவர், எங்கிருக்கிறார், அவர் தொலை பேசி என்ன என்ற சர மாரி கேள்விகளுக்கு தெரியாது என்ற ஒற்றை பதில் அலுப்பை தந்தது.
புத்தி வேகமாய் சிந்தித்து அழைத்தவரின் தொலைபேசி எண்ணை கைபேசியில் பார்க்க சொன்னது. ஒ. சென்னை இலக்கம் அது.
காவலர் குழுவும் சுறு சுறுருப்பானது. தொலைபேசி அலுவலகம் அழைத்து இந்த நம்பரின் முகவரி கேட்க அது சென்னை சென்ட்ரல் பொது தொலைபேசி கூண்டின் இலக்கம் என்ற பதில் கிடைத்தது. என்றால் பெயரில்லா அந்த ஆத்மா பையை எடுத்து இதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பேசிஇருக்கிறார் . பேசியவர் எப்படி திருவனந்த புரம் பேசினார். அவருக்கு மைத்துனரின் நம்பர் எப்படி கிடைத்தது. புரியவில்லை, என்றாலும் அதற்கு இது நேரமில்லை. கையில் சேகரித்த நம்பருடன் துணைக்கு ஒரு காவலருடன் பிரபா வேகமாய் ஓடினான்.
தொடரும் ...
உறங்காத ராத்திரி பகுதி 3
“அப்போ பை காணாமா போச்சு, இப்போ அம்மாவும் காணாமா போச்சு” என்ற மழலை சொல் கேட்டு திரும்பினான். சிறுபிள்ளை தனமாய் தொலைத்தது புத்தியில் உரைத்தாலும் புலம்புவதற்கு
இது நேரம் இல்லை. தீர்வு கண்டே ஆக வேண்டிய சமயம் இது.
அனிச்சையாய் கண்கள் மூடி கொண்டது, கண்கள் உள்ளிருந்து மேலே நோக்கியது. சூழ் நிலை மறந்தது. சிந்தனைகள் பிராத்தனையாய் உரு மாறியது. பிரார்த்தனைகள் கட்டளைகளாய் மலர்ந்தது.
இனி அழுவது இல்லை. கோபம் இல்லை. புலம்புவது இல்லை.
நிச்சயம் எனக்கு அந்த பை திரும்ப கிடைக்கும் . நாளை நான் நிச்சயம் துபாய் செல்வேன் .
தெளிவான வார்த்தைகள் மனதிலே வழிந்தோடியது. தன்னை புதியதாய் உணர்ந்தான் பிரபா.
பணிமனை சென்ற ரயில் எங்கே நிற்கும், கடந்து சென்ற ரயில் பணியாளை கேட்டான். தெரிந்து கொண்டு, துணைவியார் வந்து விடுவார் என்று சங்கல்பம் செய்து கொண்டு அத்தனை முட்டைகளையும் முதுகில் சுமந்து கொண்டு மகனுடன் நடக்க ஆரம்பித்தான். சுமையின் அழுத்தம் அவனை பாதிக்கவே இல்லை.
தனியே சென்ற துணைவியாரை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவிர்கள் அல்லவா, எனவே பிரபாவை விட்டு விட்டு ரயில் பெட்டிக்கு செல்வோம் வாருங்கள் .
பதட்டத்தில் அவன் சரியாக பார்காது இருந்தால் என்ற நப்பாசை யோடு தேட ஆரம்பித்த துணைவியார் நேரம் செல்ல செல்ல நம்பிக்கை இழந்தார். இன்னொரு பாஸ்போர்ட் எடுப்பது சிரமமோ, அதுவும் ஒரு ராத்திரி தானே உள்ளது என்று நினைத்த போது , இருள் சூழ்ந்தது, மின் விசிறிகள் நின்ற ஒலி கேட்டது. இருள் கருப்பு மை போலே சட்டென பெட்டியில் பரவியது. பார்வை திணறியது.
என்ன ஆச்சு, நிமிர்ந்து மேலே பார்த்த போது மின் துண்டிக்கப் பட்டு இருப்பதை உணர்ந்தார்.
சரி முழுதும் பார்த்து விடுவோமே என்று சொற்ப வெளிச்த்தில் கண்களை பழகிக் கொண்டு தேடுதலை தொடர்ந்தார். கிரிச்… என லேசான ஓசை கேட்டு பின்னால் திரும்பி பார்த்தால், ஒன்றும் இல்லை. சரி தேடுதலை தொடருவோம் என்று குனிய முற்படும் போது தான் சன்னல் வழியே அந்த விபரீதம் தெரிந்தது. வண்டி நகர்ந்து கொண்டு இருபது. ஒ… முதல் சில தப்படிகள் புகை வண்டி நகருவது கண்களுக்கு மட்டுமே புரியும். காதுகளுக்கு புரிய சிறிது வேகம் தேவை.
விபரீதம் புத்தியில் உரைத்து, செயல் சற்று தாமதம் ஆனதை உணர்ந்தார். வேக வேகமா வாசல் வந்து போது நல்ல தூரத்தில் ப்ளாட்பாரம் தெரிந்தது. குதிக்கலாமா… என்ற எண்ணம் வராமல் இல்லை. தூரமும் வேகமும் சற்றே அந்த எண்ணத்தை பலவீனபடுத்தியது. சரி எப்படியும் சற்று நேரத்தில் நிர்கத்தானே வேண்டும என்ற எண்ணத்தின் ஊடே ஒரு பேச்சு குரல் கேட்டது.
சற்றே நம்பிக்கை துளிர் விட்டது. யாராய் இருக்கும்...குரல் வந்த திசை நோக்கி, குறைந்த வெளிச்சம் ஆகையால் மெல்ல நடந்தார். பார்வைக்கு உருவம் வரும் முன்னரே, அவன் சாராய நெடி. எச்சரிகை ஒலி லேசாய் மனதில்.
"யாரம்மா அது" குரல் வந்த போது சற்றே நம்பிக்கை பிறந்தது. விவரம் சொல்ல, கேட்டவன் வருந்தினான். "என்னம்மா நீங்க..., சரி உடுங்க அடுத்த ரயில் புடிச்ச மறுக்கா போயிரலாம்"
வண்டி நிற்கிற வழியாய் தெரியவில்லை. இன்றைக்கு பார்த்து நல்ல வேகம் வேறு. நேரம் சற்று கடந்த போது, இன்னொரு ஆள் அரவம் கேட்டது. மெலிந்து இருந்த தேகத்தில் சாராயம் இல்லை , மடிச்சு கட்டிய லுங்கியில்அவர்களை நோக்கி .
பயம் மெல்லியதாய் பரவியது.
முதல் மனிதனை பார்த்த போது வந்த நம்பிக்கை இருவர் என்ற போது சங்கடம் தந்தது. தனிமையான நேரம், இருள், ஓடும் ரயில், தொலைத்த பை என கலவையை ஒரு சங்கடம்.
சே... வந்தது பெரிய தப்பு. என்ன நினைத்து என்ன, எப்படி யாவது போனால் சரி. வந்தவன் விவரம் கேட்டு, சொன்னான் "அம்மா இந்த வண்டி shed போயிடும். நீங்க வெளியே போய் ஆட்டோ புடிச்சீங்கண்ணா 20 ரூபா கொடுத்தாநேர சென்ட்ரல் போயிரலாம்.
சரக் என்று உறைத்தது. வெறும் கையிலே ஓடி வந்து ஏரியவளுக்கு ஏது காசு. நினைவுகள் முட்டி மோதும் வேளையில், வண்டி வேகம் குறைந்து நிற்க தயாராகியது. ப்ளாட்பாரம் இல்லாததால் இறங்குதல் கடினமாய் இருந்தது, நினைத்ததை விட உயரம் அதிகமாய் இருந்தது. சரளை கற்களின் பாதை நடப்பதற்கு சற்று கடினமாய் இருந்தாலும், முடிந்த வரை வேகமாய் நடக்க ஆரம்பித்தார். சற்று நேர நடையில் மூலை திரும்பியதும், வெளிச்சமாய் பார்த்த திட்டு, ஆறுதலாய் இருந்தது.
இருவருமே உடன் வந்து ஆட்டோ அமர்த்தி உதவி செய்து விட்டு சென்றனர். ஆட்டோ ஓட துவங்கியதும் குளிர் காற்று முகத்தில் பட்டதும் இது வரை இருக்கமாய் இருந்த உடம்பை லேசாய் தளர்த்தி கொண்டார். தொலைந்து போன பை கிடைத்திருக்குமா, தனியாய் போனதற்கு திட்டுவானா என்ற நினைவுகளுக்கு மத்தியில் நகர நெரிசலில் ஆட்டோ வேகமாய் நகர்ந்தது. தொடரும் ...
உறங்காத ராத்திரி - பகுதி 2
சோம்பேறித்தனமாக பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், நிற்க தயாராக ஓடிக் கொண்டு . இறங்குவதற்கு ஆயத்தம் ஆனாலும் சென்னை மண்ணை மிதிக்கும் குதுகலத்தையும் பிரபா மறக்கவில்லை. குனிந்து சன்னல்களின் ஊடே பார்வையால் துளாவினான். எப்போதும் ஒரு நப்பாசை, தெரிந்தவர் யாரையாவது பார்போமா என்று.
பெருமுச்சு ஒன்றோடு, இதற்கு மேல் முடியாது என்பதாய் ரயில் நின்றது. பரபரப்பாய் ஆட்கள் உதிர்ந்தார்கள் . என்ன அவசரம். முட்டி மோதி கொண்டு ஓவொருவரும். சிவப்பு ஆடை சுமை தாங்கிகள் பயணிகளின் எதிர் திசையில். வேலைக்கு ஆலாய் பறந்து பார்வையாலே பகுத்து கொண்டு இருந்தார்கள். காலம் பொன் போன்றது . இருக்கிற நிமிடங்களில் வாடிக்கையாளரை
தேர்வு செய்ய வேண்டும்.
பிரபாவின் அருகிலே ஒரு சுமை தூக்கி. பேரம் பேச பெரிசாய் மூடு இல்லை என்றாலும் செந்தமிழில் பேசும் வாய்ப்பை இழக்க விரும்பாதவனாய் பிரபா. பேரங்கள் பேச பட்டு விலை நிர்ணயம் ஆனது.
சுமை தூக்கியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து பிரபா வேகமாய் நடக்க, முன்று வயது மகனுடன் துணைவியார் சிறிது தூரத்தில். சுரத்தில்லாமல் மூட்டைகளின் எண்ணிகையை கூட்டினார் , மூணு அஞ்சு ஆறு ஏழு , லேசாய் அதிர்ந்து மறுபடியும் எண்ண, அதே எண்ணிக்கை வர, விரைவாய் நகர்ந்து பிரபாவிடம் குறைந்ததை சொன்னார். சிரித்து கொண்டே நின்ற பிரபாவின் மனதில் பரமார்த்த குரு சீடர்கள் எண்ணிக்கை கதை.
அஞ்சு ஆறு ஏழு அவனும் அதை உணர, ஆம். ஒரு பையை காணவில்லை. அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அந்த பச்சை பையை தேடிஓடினான். ஓட்டமும் நடையுமாய் அவர்கள் பிரயாணித்த பகுதிக்கு வந்து தேடினான். மேலும் கீழுமாய் அலசி பார்த்ததில், குப்பைகளும் காலி பட்டில்களுமே இருந்தன, தேடி வந்த பச்சை பையை காணவில்லை.
திடிரென்று ஒரு எண்ணம் பளிச்சிட, என் பாஸ்போர்ட் வீட்டு பத்திரங்கள் என்று அத்தனை ஆவணங்களும் அதில் அல்லவா இருண்டது. அடி வயிட்றில் பயம் அப்பி பிடித்தது. மறுபடி தேடினான். லேசாய் கை நடுங்கிற்று.
இல்லை. இங்கு இல்லை. அரை மனதுடன் கீழே இறங்கினான்.
காத்திருக்க விருப்பம் இல்லாத சுமை தூக்கி சென்றதால், துணைவியார் முட்டை முடிச்சு களுடன் குழந்தையுடன் ஏறக்குறைய வெறுமையான ப்ளாட்பாரத்தில் . லேசான கலங்கிய விழிகளுடன், நடுங்கும் வார்த்தைகளில் சொன்னான், அங்கே இல்லை.
துணைவியார் ஏறிட்டு பார்த்து 'சரியா பார்த்திங்களா' என்றதும் கோபம் உச்சிக்கு ஏறியது. பார்த்துதானே சொல்றேன், வார்த்தைகள் ஓங்கி ஒலித்தன. 'ஒரு நிமிசம் இருங்க, நான் பார்த்திட்டு வரேன்' பதிலுக்கு காத்திராமல் விறு விறு வென்று நடந்தார்.
சூழ்நிலையின் தீவிரம் உரைக்க, செய்வதறியாது நின்றான் பிரபா. நாளை காலை துபாய் செல்ல வேண்டும பாஸ்போர்ட் இல்லை என்றால் எப்படி. இத்தனை நாள் காத்திருந்த அந்த தருணம் தன் கண் முன்னால தகர்வதை, கொள்ள மனம் மறுத்தது. என்ன செய்வது இப்போது.
தொலைந்து போன அந்த பை தானே வேண்டும். மற்றது போயிருந்தால் கூட பரவாயில்லை.
கோர்வை இல்லது எண்ணங்கள் முட்டி மோதி கொண்டு இருந்த
அந்த நேரத்தில் தான் அது நிகழ்த்து. பயணிகள் இறங்கியவுடன் பணிமனைக்கு செல்ல வேண்டி மெல்லிய ஓசையுடன் ரயில் நகர தொடங்கியது. சுரீர் என்று உணர்ந்தான் பிரபா. துணைவியார் இறங்குவார் என்று எதிர்பார்த்து விழிக்க, ரயில் வேகம் பெற்று திரும்பி சென்றது.
இருண்ட ப்ளாட்பாரத்தில் ஒத்தையிலே தூக்க முடியாத சுமைகளுடன் குழந்தையுடன் என்ன
செய்வது என்ற தீர்மானம் இல்லாமல் பிரபா.
தொடரும் ...
உறங்காத ராத்திரி - பகுதி 1
உறங்காத ராத்திரி - பகுதி 1
கதை அல்ல. ஆனால் கதை போலே சொல்ல ஆசை உண்டு. என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். ஒ ... இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது . சூழ்நிலையின் தாக்கத்தால் உணர்வுகளின் விளிம்புக்கு தள்ளப் பட்டேன். பயம், கோபம், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சியும் ஒரு சேர பெற்றேன்.
இரவு 9 மணி தொடங்கி, விடிகாலை 5 மணிக்கு நிறைவு பெற்ற கதை
தடாலடி திருபங்களும், இதயம் நொறுக்கும் நிகழ்வுகளும் என ஒரு உறங்காத இரவு
மனித நேயம் மிக்கவர்களையும், அதை மறுத்த மாக்களையும் தரிசித்த ராத்திரி
இறையை சந்தித்தேனோ, என்று இன்று வரை நினைக்க வைத்த நிகழ்வு
ஆரம்பிக்கும் முன் :
(கதை என்றோம் அல்லவா, கதைக்கு ஒரு நாயகன்- பிரபா)
பிரபாவின் நீண்ட நாள் கனவு அந்நிய தேசம் வந்து பணம் சம்பாதிப்பது. பருத்தியே புடவையாய் காய்த்த்து போலே அலுவலக மாறுதல் கிடைத்தது . அதுவும் துபாய். மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பமே.
நாளை துபாய் பயணம். சென்னையில் - காலை 12 மணிக்கு. இப்போது இருப்பது பெங்களூர்.
மணி 2 : முன் தினம்
பரபரப்பான பெங்களூர், மந்தமான வானிலை, மெஜெஸ்டிக் ரயில் நிலையம்.
கண் நிறைய கனவுகளுடன், நெஞ்சம் நிறைந்த மகிச்சியுடன் டிப் டாப்பாய் பிரபா. நின்றது வாடகை கார். ஒ.கே. எட்டு லக்ககேஜு சரியா இருக்கு . சில்லறை கொடுத்தும் கூட, சிரிப்புடன் மறுத்தான் பிரபா. பெருமிதம் நெஞ்சிலும், முகத்திலும். டிரைவர் பூ போலே சிரித்தான். துணைவியார் கூட ஆச்சர்யமாய் பார்த்தார். பத்து பைசாக்கு கசடும் இவனா இன்று பாரி வள்ளல் ஆனான் என்று. திடும் என புறபட்டதால், முன் பதிவும் இல்லை, பயணச் சீட்டு இல்லை. .
ஐந்து மணி நேர பயணம் தான் என்றாலும் குடும்பத்தோடு கை நிறைய சாமான்களுடன், ம்... கஷ்டம்தான்.
சுற்றி இருந்த சாமான்களை பார்த்து பெருமுசோடு சொன்னான். இவ்வளவு தானா, இனி எல்லாம் புதுசுதானோ. வாழ்கையே வினோதமா இருக்கே , என் வீடு, என் படுக்கை என்று நான் நினைத்தது, இனி எனக்கில்லை. தத்துவம் புத்தியில் உரைக்க மெல்லிய முறுவலுடன் ரயில் நிலையம் நோக்கி நகர்ந்தான், அவனை பிரச்சனையில் ஆழ்த்த விதியும் தயாரானது.
தொடரும் ....
பயில்வான் பாடி
ஓட்ட வைத்தது போலே ஒரு உடல் கட்டு.
பயில்வான் பாடி.
படுகாளிக்கு சம்மந்தமே இல்லாத குழுமத்தில், இது 6 pack இது 8 pack என்றவர்கள் திரும்பி என்னை பார்த்து சொன்னது
இது ‘Family Pack’
நன்றி - நண்பன் நாகர்ஜுனா (பட்டம் தந்தவர்)
உன்னதமான உதய சூரியன்
கிறிஸ்துமஸ்.
பிறந்த தேதி சரியாக தெரியாததால், ரோமானிய சூரிய தினத்தையே இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக உலகமே கொண்டாடி வருகிறது.
இருள் நீக்க வந்த ஒளி தானே அவர்.
இருள் என்று எதை சொல்ல… அறியாமை - மனித இயலாமை .
அன்று யூதர்கள் அவரை ஒரு அரசியல் தலைவராக பார்த்தார்கள். எதிர் பார்த்தார்கள் என்றும் சரியாக சொல்லலாம்.
ரோமானிய அரசும் அவ்விதமே. ரோமானிய அடிமை சங்கிலியில் இருந்து விடுதலை வாங்கி தருவார் என்று கணக்கிட்டு அவருக்கு ஈட்சை சாமரம் வீச, அச்சம் கொண்ட ரோமானிய அரசும் அன்று இயேசுவை கொன்றார்கள். அவர் சொல்ல வந்த கருத்தை காது கொடுத்து கேட்காத பரிதாபம்.
அவர் ஆன்மாவின் மீட்பு பற்றி பேச, அரசியல் பேசு என்று காலம் அன்று கட்டளை இட்டது.
இன்றும் பெரிய மாறுதல் இல்லையோ.
படிப்பு வேணும், காசு வேணும், வேலை வேணும், உடல் நலம் வேணும் என்ற நம் பிட்சை பிரார்த்தனைகள் – அறியோமையோ?
மதங்கள் சமூக - ஆன்மிக தேவைகளுக்காக , என்று வாதிட்டால் இறைவன் விரும்புவது பின்னதை, இறை அடியார்கள் வேண்டுவது முன்னதை.
இந்த வேறுபாடை மாத்திரம் பக்தர்கள் நாம், உணர்ந்து கொண்டால் - இந்த கிறிஸ்துமஸ் ஒரு மாபெரும் மாறுதல் தரும்.
சுய விமர்சனம்
உருவாக்கியமைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் உறுதுணையாய் சில உயர்ந்த உள்ளங்கள். கோபி, அபு, ஜோ பாஸ்கர், ஷேர்னி, ராம்கி, இன்னும் பல.
என் பணிவு கலந்த வணக்கங்களும் நெஞ்சம் நிறைத்த நன்றிகளும்
வெண்ணை இல்லாத ரொட்டி, அதி மேதாவித்தனமான அனத்தல்கள், அப்படி ஒன்னும் பிரமாதம் இல்லே என்ற விமர்சனங்கள் துணிவான சில நல்ல இதயங்களிடமிருந்து பெற்றேன்.
காலா நூலா என்ற பதிவு பார்த்து பெயரில்லா எழுதிய ஊடகம் என்னை திகைக்க வைத்து தெளிய வைத்தது.
கலாச்சாரத்தின் கயமைத்தனம் பார்த்து மிரண்டவரே அதிகம். என் சகியே என்னை ஏர இறங்க பார்த்து மௌனத்தை பதிலாய் வைத்தார் .
உன் மனதில், நினைப்பில் இத்தனை அழுக்கா என்று பிரிய நண்பன் சுட்டி காட்டினான். படுக்காளி சருக்கியதை உணர்தேன். நான் நினைத்ததையும், உணரந்ததையும் வார்த்தையில் உணர்த்த
முடியாத இயலாமையை புரிந்தேன். இன்னும் முயற்சிப்பேன்.
எண்ணிகையை மட்டுமே விரிவு செய்து எந்த செயல் திறனும் இல்லாத சில்லறையாய் சில பதிவுகள்.
வார்த்தை கோர்வையும் உள்ளடங்கிய மெல்லிய நகைச்சுவையுமாய் திருப்தியாய் இரண்டு பதிவுகள் பம்பரம் பதவிசு , குப்புசாமி சுப்புசாமி பொன்னுசாமி .
ஆதரவுக்கு நன்றி .
படுக்காளி படிக்கிறேன் , முயற்சிப்பேன் முன்னிலும் தீவிரமாய் ...
ஒரு இந்திய கிராமம்
என்னடா எடுபட்ட பயலே - பதிலுரைத்தாள் லெச்சுமி
எக்கா பசிக்குது சோறு போடுரியா
சுள்ளி பொறுக்கிட்டு இப்போதான் வந்தேன் குப்பை பார்த்திட்டு வாரேன்
" பள்ளி சென்ற பையன் பசியறிந்து சோறிட
சுள்ளி வென்ற சிறு பெண் விவரமின்றி மாறிட
பொறுப்பாய் பணிக்கு சென்ற பெத்த மனம் வயல்காட்டில்
பெற்றவன் மதி மயங்கி கிடக்கிரான் சாராய கடையில் "
வெருப்பிலே ஒரு செருப்பு
அவசியம் என்று ஆணாலும் கூட, கால்அணி என்று சிறப்பாய் ஒரு பெயர் மட்டுமே சொந்தமாக்கி கொண்டாலும், இன்னும் அது ஒரு அவமானத்தின் சின்னமாய் உள்ளது ஒரு விந்தை.
கல்லும் - முள்ளும் - புல்லும், நம்மை தாக்காது, புறம் காத்து வந்தது இன்று ஆயுதம் ஆனதே... அந்தோ பரிதாவம்.
டிசம்பர் பூ
வெற்றி என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்த உழைப்பாளி
ஒப்பனையில் தன் முதுமையை மறைக்காத முரட்டுகாளை
பல முறை அழைத்தும் அரசியலுக்கு இன்னும் வராத முத்து
தமிழ் (உலக ) திரை உலகின் முடி சூடா மன்னன்…
ரஜினி
என்ற மந்திர சொல்லின் உரிமையாளர்
திரை துறையில் கால் வைக்கும் போதே
தன் இயற் பெயரை இன்னொரு மாமேதைக்கு
தாரை வார்திருந்த மன்னன்
பல ஆண்டுகள் கடந்தபின் அதை
மறுபடியும் சொந்தம் ஆக்கி கொண்ட மாவீரன்
பிறந்த நாள் காணும் அண்ணாரை படுக்காளி வாழ்த்துகிறேன்
காலா நூலா
'உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா'
எஸ். பி பி ன் வசிகர குரலில், தத்துவம் ததிகினத்தோம்.
ஒரு பாடல் வரியில் மனம் சிக்கி கொண்டது. மேலே நகராது சிந்தனை மக்கர் செய்தது. இரண்டு பழமொழிகள் நினைவில்நெருடியது .
'அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது'
'உன் வாழ்கை உன் கையில்'
என்னடா இவன் பாட்டுக்கு, அச்சு பிச்சுன்னு ஒரு தலைப்பை போட்டுட்டு, கார்ல போறான், பாட்டு கேக்கிரான், பழமொழி சொல்றான்னு படுக்காளி ய நீங்க திட்டுறது கேட்குது. வாங்கண்ணே… ஆனது ஆச்சு. இந்த பதிவு முடியிறதுகுள்ளே சொல்லிட்றேன்.
'கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை,
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்த லாலா '
எதை கொண்டு என் வாழ்வை முடிவு செய்ய.
கால் கொண்டு ஆடும் பிள்ளை ஆனால் , என் வாழ்க்கை என் கையில். அதன் வெற்றியும் தோல்வியும் என்னை சாரும் . அதுவே நூல் கொண்டு ஆடும் பொம்மை ஆனால் , இறைவன் ஆஜர்.
நீ கடமையை செய், கொடுப்பதும் எடுப்பதும் அவனே என்று உங்கள் மனது சொல்லுவது எனக்கு கேட்கிறது.
அதுவும் தான் இதுவும் தான் என்ற டகால்டியே வேண்டாம்.
தெளிவாய் சொலுங்கள் காலா… நூலா …
பம்பரம் பதவிசு
படுக்காளியின் கால் சட்டை பை துருத்திக்கொண்டு இருக்கும். நெல்லிகாய், காகிதத்தில் பொதிந்த கல்கோனா, கூட்டத்தில் பம்பரம். பருவ காலங்களை போலே விளையாட்டு உபகரனங்கள் மாறி கொண்டே இருக்கும்.
நாடார் கடை ஒரு காமதேனு. தேங்காய் சில்லி முதல் ஆகாய விமானம் வரை (விளையாட்டு ) சல்லிசாய் கிடைக்கும். கூட்டம் குறையும் வரை காத்திருந்து, அரிசி முட்டை யின் மேல் கால் வைத்து எந்த கலர் வேண்டும் என்று சொல்ல முயற்சிக்கும்போது, அரிசி கொட்டி விடுமோ என்று நாடார் பதறுவார்.
நாலனா கொடுத்து வாங்கிய பம்பரம் நல்ல வாசமாய் இருக்கும். வர்ணத்தின் வாசனை அது. உலகையே வென்ற பெருமிதம் கொப்பளிக்கும்.
வாங்கிய பம்பரத்தோடு நேரே செல்வது பட்டறைக்கு தான். நடுவில் உள்ள ஆணி அகற்றப்பட்டு ஆக்கர் வைக்கப்படும். நாலனா பம்பரத்திற்கு பத்து பைசா ஆக்கர்.
புஸ்… புஸ்… என துருத்தி ஊதப்பட்டு, கன கன வென்று தீ எரியும். நெருப்பு பொறி பறக்கும்.
ஆக்கர் தீகுளித்து சிவப்பாய் மாறி, நீர் குளித்தவுடன் புகை விடும. இதில் உஸ்… என்று ஓசை வேறு. புதிதாய் வாங்கிய பம்பரத்தை காலின் இடுக்கில் பிடித்து, ஆக்கர் இடுவார்.
குளிர் பான முடியின் நடு மையத்தில் துழைஇட்டு வெள்ளை கயிறு முழ நீளம் வாங்கி, மொங்கான் முடி போட்டு இறுக்கினால் - ஒரு பக்கம் சோடா மூடியும் மறு பக்கம் பம்பர முடியுமாய் சாட்டை தயார்.
இன்னும் இரு வாரத்திற்கு படுக்காளி தான் ராஜா !!!
ஊடகங்கள் உச்சத்தில்
நாடு பிரச்சனை யில் உள்ள பொது அதை சட்டை செய்யாமல் நீ சட்டை மாற்றிணய , திரைப்பட இயக்குனர்- அவர் மகனோடு உனக்கென்ன சகவாசம், நன்றயுள்ள பிராணியை நாவில் கொண்டு நடப்பாயா. இது போன்ற கருத்துக்களை இரண்டு நாட்கள் தொடர்ச்சியை காண்பித்தால் மந்திரி பதவி இல்லை... எந்திரி!!!
கையில் பிடித்த ஒலி வாங்கியை கடல் கடந்தும் நீட்டி அவர் இப்படி சொல்கிறார், நீ என்ன சொல்கிறாய் எனகேட்கிறது நிருபர் குழாம். அங்கு அவர் சொல்வதை உடனே இவரிடம் சொல்லி .. ம்... நீ என்ன சொல்கிறாய் என கேட்டு, பதில் சொல்லாது செல்லும் அவரை மறுபடி காட்சி சிறை படுத்தி திரும்ப திரும்ப தொலைக்காட்சிகளில் காண்பிப்பது, என உடகங்கள் உட்சத்தில்.
அச்சமில்லாது, உறக்கமில்லாது பணி புரியும் வேகம் பாராட்டுதலுக்கு உரியது.
மக்களின் ஆதரவு இன்று உங்கள் கைகளில்.
பொறுப்பு உணர்ந்து, தன் நிலை உணர்ந்து, கவனத்தோடு செயல் புரிய படுக்காளி வேண்டு கிறேன்.
குப்புசாமி சுப்புசாமி பொன்னுசாமி
வன்முறையில் நம்பிக்கை உள்ள வர்க்கம்.
தாள் வாரத்தில் இவர்கள் நடந்து வந்தால் அடி வயிற்றில் அமிலம் சுரக்கும். இதயம் தாறு மாறாய் ஓடும்.
நாற்காலி செய்யும் கடையில், கருப்பு புள்ளி இருந்தால் நல்லது என பிரம்பு வாங்கி, ஒரு கை - இரு கை - பிருஷ்டம் - முழங்காலிட்டு பாதங்கள் என தண்டனை பகுக்கப் பட்டு பரிமாரப்பட்டன.
இவர்களில் சுப்பு பொன்னு பிரத்யேகமானவர்கள். தன் கையே தனக்கு உதவி என்ற கோட்பாடுடன் கோதாவில் உள்ளவர்கள்.
தோள் பட்டைக்கு கிழே சதை திரட்சியை தேடி சுப்புசாமி கிள்ளினால் வலி உச்சத்தில் மயக்கம் வரும். கத்தக்கூட முடியாது.
பொன்னு வேறு வகை. கை விரல்களை முஷ்டி மடக்கி நடு விரல் மொக்கையாக்கி உச்சந் தலையில் குட்டுவார். கபாலத்தில் கிர்.... என்று ஓசை கேட்கும். சிந்தனை ஒரு நொடி ஸ்தம்பிக்கும். .. டூரிங் தியேட்டர் இல் அறுந்து போன பிலிம் சுருள் போலே. கண்ணில் சுருள் சுருளாய் சங்கீத குரி போலே சுழலும். கண்ணீர் கட்டுப்பாடு இழந்து மடை திறக்கும்.
சக மாணவர்கள் பார்வையிலே , தன்மானம் விளித்து பார்க்கும். அவமானம் புடுங்கித் தின்னும். அடி வாங்குதல் அவமானம் இல்லை. அழுவது அவமானம். அனிச்சையாய் வாய் வாத்தியாரை
வையும். கூட்டுக்காரன் பிரதீப் பிருஷட்டத்தில் பிரம்படிவாங்குவன். வேதனை காட்டுவான். கூட்டுவான். வாத்தியாருக்கு முகம் மறைந்து முதுகு தெரிய... பூ போலே சிரிப்பான். சில சமயம் கண்ணடிப்பான். ஒ. எத்தனை பெரிய சாதனை. அவன் தான் நாயகன். தனிமையில் சந்தித்து ரகசியம கேட்டபோது, பல முறை மறுத்து, ஒரு நன்னாரி சர்பத் லஞ்சத்தில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கி கொண்டு சொன்னான். சுப்பு சாமீ வகுப்புக்கு இரண்டு கால் சட்டை அணிவேன் என்று. படுக்காளி முயன்ற பொது, கடைசி வரை முன்றாம் கட்ட தண்டனை கிடைக்காததால் பிரதீப் சொன்னது சரியா தவறா என்று இன்று வரை தெரிய வில்லை .
நாற்றம் புடித்த வேர்கள்
மூளை சலவை செய்யப்பற்று தன் உயிரை மதிக்காதவன் சக உயிரை மதிப்பானா அவனை துப்பாக்கி போல ஜடபொருளைதான் கொள்ள முடியும். பிரச்சனை அவன் மட்டும் அல்ல. அவனை தயார் செய்தானே. அவன்.
அவன் யார் ?
மதிக்கத்தக்க மனிதன் என்ற போர்வையில் ஒளிந்து இருக்கும் அவனை தோண்டி எடுத்து களையும் வரை சராசரி மனிதன் கவனமாய் இருக்க வேண்டும.
சாலை மெரிசல் பரிசில்
அறிவியலை ஆதரி நிகழ் காலத்தை நேசி மனித நேயம் மலர செய் "
காலையில் சாலையில் - பார்த்ததும், பாதித்ததையும் பதித்தபோது விழுந்த் பதிலுரைகள் மேலே ...
இனிப்பான வார்த்தைகள், இதமான வாதங்கள் ...
பெருகி வரும் வாகனமும் வெப்பமும் நிதர்சனம் அல்லவா
சாலையில் தனி மனித ஒழுங்கீனங்கள் மலிந்ததை மறுக்க முடியுமா
குறை கண்டால் தானே களைய முடியும்.
நம்பியார் நல்ல நம்பியார்
தன் நடிப்பால் இத்தக்கைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நடிப்பின் சொந்தகாரர் இன்று நம்மிடையே இல்லை. அவரின் நினைவுகளை பட்டியலிடுகிறேன்
* ஒரு காலில் எட்டு, ஒரு காலில் ஒன்பது - என ஷூ போட்டு கொண்டு, டேபிள் மேல் போட்டு ஆட்டுவார்.
* காகிதம் செய்வோம் நல்ல ஆயிதம் செய்வோம் - அதான் கள்ள நோட்டு அடிக்கிறேன், துப்பாக்கி செய்றேன் என்று விளக்கம் தருவார்
* நாய்க்கு பதிலாக , வீட்டில் புலியை வளர்ப்பார், அதையும் காலடியில் வைத்து கொண்டு தடவி கொடுப்பார்.
* பிற்காலத்தில் குணசித்திரமும் நகைச்சுவையும் பிரதானமாய் நடித்தார்
* திரை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்
* பலகுரல் கலைஞர்களுக்கு பிழைப்பு இன்று வரை வழங்குகிறார்
சாலை மெரிசல்
வண்டிக்குள்ளே வானரங்கள் !!!
நகரமெல்லாம் நெருக்கமாச்சு
நெருப்பு போலே நரகமாச்சு...
பொழுது போக்கு என்று கடமை ஆனது
நாடகங்கள், நாட்டியங்கள்- மாலை, இரவு காட்சிகள் மட்டுமே என உள்ள போது, திரைப்படம் மட்டும் ஏன் காலை காட்சிகளை கட்டவிழ்த்து விட்டன.
ஏன் இந்த கோளாறு. ?
செய்திகள் இன்றியமையாதது என்று வாதாடினாலும், பொழுது போக்கு என்று கடமை ஆனது !!!
நன்றி: பிரிய நண்பன் கோபி ஆதங்கத்துடன் சொன்னதை பதித்திருக்கிறேன்
வளைகுடாவில் வானவில்
* அபரிமிதம் - இரண்டு கிலோ சிக்கன், ஒரு கிலோ இறைச்சி என உளமார வாங்கி அடித்தட்டு இந்தியன் வயிறார உண்ன முடியும். திட்டமே இல்லாது, கடைக்கு போன பிறகு தொலைபேசி, தொலைக்காட்சி என வாங்க முடியும். உரில் ஒருவருக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு, கொடுக்கலை என்றால் பரவாயில்லை என ஒதுக்க முடியும்.
* சிதோஷனம்
காகா காதை
முன் ஒரு காலத்திலே படுக்காளி பிறகிரதுக்கு முன்னாலே, படிக்கிற நீங்க பிறகிரதுக்கு முன்னாலே காகா நல்லா நடந்துட்டு இருந்துச்சு. அழகா நடக்குற அன்னத்தை பார்த்து அது போலே நடக்க ஆசை பட்டுச்சு. எவ்ளோ முயன்றும் முடியலே.
அன்ன நடையும் வராம, தன் நடையும் மறந்து போய், அத்துவானத்திலே தத்தி தத்தி குதிச்சுதாம்
கலாச்சாரத்தின் கயமைத்தனம்
அது என்ன டேஞ்சர் ஏரியா?
சரி அழகை ரசிக்கிறேன்… அதே நான்… பட்டு போன மரத்தை நின்று ரசிப்பேனா. அது எனக்கு மகிழ்வு தருமா… அமைதி தருமா. இல்லை என்றே தோன்றுகிறது.
சரி செடி பார்த்தேன். அதே போல் குழந்தை பார்த்து ரசித்திருக்கிறேனே..
பார்த்து, உணர்ந்து நான் நிற்பது ஒட்டு மொத்த செடியிடமா.. அல்லது அந்த செடியின் அங்கங்களிடமா… ஆழமாக ஒரு அங்கம் பார்த்துத்தான் நான் செடியை ரசிக்கிறேனா… தண்டு பெரிய ரசனையில்லை… இலையை ரசிக்கிறேன், அதன் வடிவம் கவனிக்கிறேன், பூவை தேடுகிறேன். அதன் காம்புகள் கூட எனக்கு கவனம் இல்லை…
காய்ந்த மரம் ரசிக்காத எனக்கு, என் கண்களுக்கு ….. பச்சை இலைகள் சொல்வது அச்செடியின் ஆரோக்கியந்தானே. பட்ட மரம் ரசிக்காத என் தன்மை எனக்கு ஆழமாய் சொல்வது என்ன. ……..????
சரி ஒத்துக் கொள்கிறேன்… ஆரோக்கியமான இலையை தாண்டி என் உணர்வுகள் அலைவது எங்கே…
கலாரசிகன் எனவும், காமாந்தகாரன் எனவும் எத்தனை மாறுபாடு…