பக்கங்கள்

நன்றி விகடன்.

கீழ்காணும் கட்டுரை விகடன் டாட் காமில் பிரசுரிக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நாள் எனக்கு ஒரு மகிழ்ச்சியின் நாள். பிள்ளைப் பிராயத்தில் தொடங்கி, ஆனந்த விகடன் என் ஆதர்சன பத்திரிக்கை.

வெகு நாளைய கனவு இன்று தான் நிறைவேறியது. மூன்று முறை சிறுகதை எழுதி அனுப்பி இருக்கிறேன். பத்து நகைச் சுவை அனுப்பி இருக்கிறேன். முல்லை எம். பெர்க்மான்ஸ், அம்பை தேவா, ஜோதி ராஜ் எனும் நண்பர் குழாமின் உந்துதல். தொடர்பு தகவல் தந்து உதவிய பிரிய நண்பர் கோபிக்கு நன்றி.

http://youthful.vikatan.com/youth/lawrencewit27082009.asp

குப்புசாமி.. சுப்புசாமி.. பொன்னுசாமி..!

பள்ளி நாட்களில் எனது பயங்களில் பிரதானமானது, தலைப்பில் கூறியுள்ள இந்த மகானுபாவர்கள்தான்.
வாத்தியர்கள்!!!
வன்முறையில் நம்பிக்கை உள்ள வர்க்கம்!
தாழ்வாரத்தில் இவர்கள் நடந்து வந்தால், அடி வயிற்றில் அமிலம் சுரக்கும். இதயம் தாறு மாறாய் ஓடும்.
நாற்காலி செய்யும் கடையில், கறுப்பு புள்ளி இருந்தால் நல்லது என பிரம்பு வாங்கி, ஒரு கை - இரு கை - பிருஷ்டம் - முழங்காலிட்டு பாதங்கள் என தண்டனை பகுக்கப்பட்டு பரிமாறப்பட்டன.
இவர்களில் சுப்பு, பொன்னு பிரத்யேகமானவர்கள். தன் கையே தனக்கு உதவி என்ற கோட்பாடுடன் கோதாவில் உள்ளவர்கள்.
தோள் பட்டைக்கு கிழே சதை திரட்சியை தேடி சுப்புசாமி கிள்ளினால், வலி உச்சத்தில் மயக்கம் வரும். கத்தக்கூட முடியாது.
பொன்னு வேறு வகை. கை விரல்களை முஷ்டி மடக்கி, நடு விரல் மொக்கையாக்கி உச்சந் தலையில் குட்டுவார். கபாலத்தில் கிர்ர்ர்..... என ஓசை கேட்கும். சிந்தனை ஒரு நொடி ஸ்தம்பிக்கும்... டூரிங் தியேட்டரில் அறுந்து போன ஃபிலிம் சுருள் போலே. கண்ணில் சுருள் சுருளாய் சங்கீத குரி போலே சுழலும். கண்ணீர் கட்டுப்பாடு இழந்து மடை திறக்கும்.
சக மாணவர்கள் பார்வையிலே, தன்மானம் விளித்து பார்க்கும். அவமானம் புடுங்கித் தின்னும்.
'அடி வாங்குதல் அவமானம் இல்லை; அழுவது அவமானம்.'
அனிச்சையாய் வாய் வாத்தியாரை வையும். கூட்டுக்காரன் பிரதீப் பிருஷட்டத்தில் பிரம்படி வாங்குவன். வேதனை காட்டுவான். கூட்டுவான். வாத்தியாருக்கு முகம் மறைந்து முதுகு தெரிய... 'பூ' போலே சிரிப்பான். சிலசமயம் கண்ணடிப்பான். "ஒ.." எத்தனை பெரிய சாதனை. அவன் தான் நாயகன்.
அவனை ஒரு நாள் தனிமையில் சந்தித்து ரகசியம கேட்டபோது, பல முறை மறுத்து, ஒரு நன்னாரி சர்பத்
லஞ்சத்தில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கி கொண்டு சொன்னான்:
"சுப்பு சாமீ வகுப்புக்கு இரண்டு கால் சட்டை அணிவேன்."
நான் முயன்ற போது, கடைசி வரை முன்றாம் கட்ட தண்டனை கிடைக்காததால் பிரதீப் சொன்னது சரியா, தவறா என்று இன்று வரை தெரியவில்லை!

அப்பா அம்மா விளையாட்டு

தொடர் கதை:

“போடா முட்டாள்,நீயெல்லாம் மனுசன்னு பேசுனேன் பார், என் புத்திய செருப்பாலே அடிக்கணும்”
"வாசு, வார்த்தை சரியில்ல, நிதானமா பேசு, இல்லை நான் பேச மாட்டேன், என் கை தான் பேசும்"
கஷ்டப்பட்டு அது வரை அடக்கி இருந்த பொறுமை எல்லை மீற, தன் முன் உள்ள தண்ணீர் கோப்பையை எடுத்து எறிந்தான் வாசு. குறி தவறியது. வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடே அன்றி தாக்குதல் நோக்கம் இல்லாததால், மேசையின் விளிம்பில் பட்டு, நங்கென்று சத்தம் மாத்திரமே வந்தது. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலைகுலைந்தாலும், தன்னை உடன் நிறுத்தி ஆவேசமாய் கை முஷ்டி வீசினான் பாஸ்கர். வாசுவின் கன்னத்தில் இடி என இறங்கியது அந்த அடி. அடியின் தாக்குதலால் தன் இருக்கை விட்டு வாசு கீழே விழ, பாஸ்கர் அவனை நோக்கி விரைந்தான். எழும் போது, அவன் இருக்கை துள்ளி விழுந்தது.உணவகம் இந்த சத்தம் கேட்டு அவர்கள் வசம் திரும்பியது. இரண்டு மூன்று பேர், ஓடி வந்தனர். சட்டென பிரிந்து, எசகு பிசகாய் இருவரையுமே பிடித்து கொண்டார்கள். பிடிக்க திமிறிக்கொண்டு கத்தினாலும், ஒரு நிமிடம் உள்ளுணர்வு விழித்தது. இருவருமே சூழ் நிலையின் தீவிரம் அப்போது தான் உணந்தனர். "என்ன சார் இது, பத்து நிமிசத்துக்கு முன்னால தோள்ல கை போட்டுக்கிட்டு வந்தீங்க, அதுக்குள்ள அடிச்சுக்கீட்டீங்களே"
சே! என்ன சிறுபிள்ளைத்தனம், வெட்கத்தில் இருவருமே தலை கவிழ்ந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கவே வெட்கப்பட்டனர். சுற்றியிருந்தோர் சல்லி விலையில் அறிவுரை சொன்னார்கள். சூழ் நிலைக்கு பொருந்தா சில சேதிகளும் சொன்னார்கள். சிலர், பாரதி வார்த்தையில் நெட்டை மரங்களென நின்று புலம்பினர். இருவரும் அசையாது நின்றனர்.

தவறு செய்ததை உணர்ந்ததால் தோள்கள் சரிந்து சுவரோரம் சாய்ந்து நின்றனர். இனி மேல் அடிக்க மாட்டார்கள் என்பது அவர்கள் மவுனத்தில் தெரிந்தது. சண்டை விலக்கி விட்ட பெறுமிதத்தில் கூட்டம் கலைந்து சென்றதும் பாஸ்கர் சொன்னான் "சாரி"

வாசு முன்னேறி அவன் கை பிடித்து பார்வையாலே அதே வார்த்தை சொன்னான். அமைதியாய் இரண்டு பேரும் அமர்ந்தனர். மௌனம் உரக்க கத்திக் கொண்டு இருந்தது.

"நேரம் ஆச்சு, நான் கிளம்புறேன், அனிதாவுக்கு இன்னைக்கு நைட் சிஃப்ட்; கோகிலா ஸ்கூல் விட்டு இன்னேரம் வந்திருப்பா"
"சரி"

வாசு தளர்ந்த நடையில் நடக்க தொடங்க, சிந்தனை சிலிர்த்துக் கொண்டது. சட்டென நம்ப முடியவில்லை. எனக்கும் பாஸ்கருக்குமா இந்த சண்டை. எவ்வளவு அன்னியோன்யமான நண்பர்கள் நாங்கள். கையை உயர்த்தி முடி கோதினான். சடுதியில் நிறைவு பெற்ற அந்த துர்பாக்கிய நிகழ்வில் தோள் சிறிது வலித்தது.

வாசு! என்ற பாஸ்கரின் குரல் கேட்டு நின்று, பின்னர் திரும்பினான். "கோகிலாவுக்கு பிஸ்கட் கொடுத்தனே, அதை எடுக்காம் போயிட்ட, இரு நான் கொண்டு வரேன்" ஒட்டமும் நடையுமாய் பாஸ்கர் விரைந்து வந்தான். வாசு பலவீனமாய் சிரித்து, கை நீட்டி வாங்கிக் கொண்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பாசமான அன்பு தன்னை வெளிப்படுத்தியது. வெளியே வானம் சிணுங்கி தூறல் இட்டது. குளிர் காற்று அவர்கள் இருவருக்கும் இதமாய் இருந்தது. (முற்றும்....)

(என்னடா இது, என்ற தங்கள் குழப்பம் புரிகிறது. மொட்ட தாத்தா குட்டையில விழுந்தார்ங்கிற கதையா. வெள்ளைக் கருவும் இல்லாம, மஞ்சக் கருவும் இல்லாம ஒரு முட்டை. இப்போ மட்டும் இதை எழுதினவன் கையில கிடைச்சான், மவனே சட்னிதான்டி என்கிற தங்கள் பல தரப்பட்ட நினைப்பு புரிகிறது)வேறு ஒன்றும் இல்லை, வார இறுதியில் வீட்டில் சினிமா பார்க்க உட்கார்ந்தோம். எனது செல்ல மகன், குறுந்தட்டை பொருத்திவிட்டு எங்களோடு வந்து அமர்ந்தான். படம் தொடங்கியது. சூப்பர் விறுவிறுப்பில் பிரமாதமாய் கதை நகர்ந்தது. நாங்களும் படத்தில் ஒன்றிப் போக, வந்ததே அந்த திகைப்பு. பார்க்க தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இடைவேளை வந்தால் எப்படி. பின்னர் தான் புரிந்தது, முதலுக்கு பதில் இரண்டாமது சிடி போட்டால் அப்படித்தான்.

ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் நாங்கள் பார்த்த வரிசையே பெட்டர். இயக்குனரும், எடிட்டரும் கேட்டால் அடிப்பார். அப்போது தான் இந்த பொறி. நாமும் ஒரு கதை இப்படி எழுதினால் என்ன, கிளைமாக்ஸ் முதலில், பின்னர் கதை. அதுவும் இல்லாமல் கொஞ்ச காலமாகவே இது பற்றி எழுத திட்டமிட்டு இருந்தேன். கல்யாணத்தில் எது பெட்டர். லவ்ஸா அல்லது வீட்ஸா (வீட்டில் பார்த்து வைப்பதா)

இன்னொன்று, கதையோ, கட்டுரையோ எழுதும் போது, ஆசிரியர் ஒரு தீர்மானம் எடுத்து விட்டு, அதை நியாயப் படுத்தும் விதமாகவே புத்திசாலித்தனமாய் கோர்வை தயார் செய்வார். அப்படி இல்லாமல், இரண்டையும் பற்றி எந்த பக்கமும் சாராமல், மூர்க்கமாய் வாதாட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். இப்போது எல்லாவற்றையும் சேர்த்து எழுதி விட்டேன். வாருங்களேன் ஒரு சத்திய பிரமாணம் எடுத்து விட்டு செல்வோம். நான் சொல்வதெல்லாம் கப்ஸா. கப்ஸா தவிர வேறு ஒன்றும் இல்லை. இது கதை அல்ல. இரு அபிப்ப்பிராயங்கள்/ எண்ணங்கள் கொண்ட இரண்டு பேரின் காரசார விவாதமே. நான் எந்த பக்கமும் இல்லை. முடிவெடுக்கும் வேலை நான் எடுத்து கொள்ள வில்லை. அல்லது இது தான் சரி என்றெல்லாம் சொல்லப் போவது இல்லை. உங்களுக்கு பிடித்த முடிவை நீங்கள் சார்ந்து கொள்ளுங்கள்.

பகுதி-1

தொடரும் .....இன்றைய நாள் உணர்வு என்று வண்ணம் பெறும்

'கடிகாரம் 12 மணி அடிக்கும் போது, இந்த தேசமே உறங்கிக் கொண்டு இருக்கும்.

விழிக்கும் போது அடிமை விலங்கு உடையும் புது வாழ்வு மலரும்.

நீண்ட காலமாய் அடக்கப்பட்ட நம் தேசத்தின் ஆன்மா உரிமை பெறும் சரித்திரத்தின் அரிய தருணம்.

இன்று நம் எல்லா துரதிருஷ்டம் முடித்து, புனர் ஜென்மம்'

நேரு 62 வருடங்களுக்கு முன்னால் முழங்கியது.

போர் முடித்து, வெற்றி நடை போட்டனர் சுதந்திர போர் வீரர்கள். உடலில் குறைந்து மனதில் விழுப் புண் அதிகம். அஹிம்சைக்கு நன்றி.

என்னவோ போர் தளபதி மாத்திரம் ஸ்கூட் விட்டு ராட்டை நூற்றார்.

சரி இது நேற்று.

இன்று. கொடி ஏத்தி முட்டாய் கொடுத்தால் முடிந்து போயிற்றா. விடுமுறை எடுத்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்தால் ஆயிற்றா.

அந்த நாள் உணர்வு தர இதோ புகைப்படம். நம் இன்றைய நாள் உணர்வு என்று வண்ணம் பெறும்.

சுதந்திர தின வீர வணக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரப்பெட்டி 12 ஆகஸ்ட் 2009

படுக்காளி: ஆச்சி, நம்ம பக்கத்து வீட்டு பத்மா நல்லா ஒடிப் போயிட்டாளாம்
ஆச்சி: யாருடா, கடைஞ்ச மோர்ல வெண்ணை எடுப்பானே அவன் மகளா
படுக்காளி: இல்லை, எச்சக் கையில காக்கா ஒட்ட மாட்டாரே, அவர் மக‌
ஆச்சி: ரெண்டும் ஒண்ணுதாண்டா, யாரு கூட ஒடுனா
படுக்காளி: அஞ்சாறு பொம்பள பிள்ளைக கூட ஒடி, ஃப்ஸ்ட் பிரைஸ் வாங்கிட்டா, நிர்வாகத்த துணைக்கிட்ட கொடுத்துட்டு, சிலை துற‌க்க போயிட்டாரு முத்தமிழ் அறிஞரு.

ஆச்சி: நல்லது தானேடா, ஆடி மாசம் வந்தாலே, இப்படித்தான்.

படுக்காளி: தண்ணி கொடுக்காத தங்கப்பா கிட்ட, தேர்தல் சமயத்தில அணை கட்டக் கூடாதுன்ன அப்பாரக்கப்பாக்கிட்டயா...

ஆச்சி: சொன்னத விட்டுட்டு சுரைய புடுங்காத, இந்த சர்வாக்கர் யாருன்னு கூகுள் ல தேடு,

படுக்காளி: காது வாக்கில கேட்டேன், கோபால புரம் பக்கத்தில தெய்வப் புலவருக்கு கோயில் இருக்காம், இங்கனக்குள்ள தூத்து தெளிக்க ஆள் இல்லையாம், துபாய்ல மழை பெய்யுதாம்.

ஆச்சி: ஏல வாய் நீண்டு போச்சுறா, கோயில் சமாச்சாரம் எல்லாம் பகுத்தறிவு இல்லடா,தமிழ் மட்டும் ஒ.கே. அதுவும் இல்லாம, கோவில் சமாச்சாரம் சம்சாரங்களுக்கு மட்டும் தாண்டா,

படுக்காளி: அது சரிதான், திருவண்ணாமலை பூஜை, திருத்துறைப் பூண்டி காவடி எல்லாம், தினகரன்ல வருமா... பிரெண்டு கோபி , 50வது விழாவில அருமை நாயகம் அடிச்ச பல்டி பத்தி சொல்ல சொல்றாரு.
ஆச்சி: அருமை நாயகம்னா யாரு பல் துருத்திக்கிட்டு 'ஆஹா... வந்திருச்சி'ன்னு பாட்டு பாடி பல்டி எல்லாம் அடிக்குமே அந்த தம்பியா.

படுக்காளி: அவருதேன்... அம்பது வருசம் ஆச்சேன்னு, வெற்றி (வெட்டி இல்லை) டி.வி. நிகழ்ச்சி எடுக்க, எட்டி பார்த்த எடுபட்ட பய டி.வி. எனக்கு கொடுன்னுச்சாம்.

அட்வான்ஸ் வாங்கித் துண்ணுட்டு, திருப்பி தர மாட்டேன்ன விவகாரத்தில சிக்கல் தீர்த்த சிங்கார வேலன், கேட்டதுனால 'கேட்டது தளபதியோட தம்பியா இருந்தா பரவாயில்ல, அஞ்சா நெஞ்சன் அப்பால்ல கேக்கிறாறுன்னு' டயலாக் மட்டும் விட்டாராம்.

வைச்ச பேர காப்பாத்த வேண்டாமா, அவ்வளவு பொருமை நம்ம மண்ணைப் போல ஒருவன்.

படுக்காளி: நேத்து கேட்டீங்களே, ஜகன் மோகினி பத்தி, செமிச்சு போன அந்த சோற எடுத்து, மறுபடி திங்கப் போறாங்களாம்.
அதான்... ரீ மேக் பண்றாங்களாம்

ஆச்சி: ஹும்.... ஹும்... படுக்காளி உன் திட்டுல தீட்டு இருக்குடா...போராங்கடா சுயமா சிந்திக்க பயப் படுறாங்க
நேத்து ஆடியோ நிகழ்ச்சிக்கு போன அத்தன பேறும் பின்னங்கால் பிடறில அடிக்க ஒடுனாங்களாம் ஏண்டா

படுக்காளி: பின்ன பன்னீர் தெளித்து கல் கண்டு கொடுப்பாங்கல்ல வாசல்ல‌
ஆச்சி: ஆமாம்

படுக்காளி: அது செஞ்சது பூரா பேயும் பிசாசுமாம்.

ஆச்சி: அது சரி யாரு நடிக்கிறது.

படுக்காளி: பேய்... குட்டி பேய்.... பூதம்.... பிசாசு.... அப்புறம் நமிதா. பின்னே என்ன உங்க காலத்திலயும் ஜெய மாலினிதான.

எப்பவுமே நம்ம பதிவுல ஒரு தத்துவம் எதிர் பாக்கிராங்க, ஏன் ஒரு குறை வைப்பானே. முடிக்கிறதுக்கு முன்னால

இட்லி வடைல சூப்பரா சொல்லியிருப்பாறு,

வாழ்க்கையில சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம் நமீதா. எவ்வளவு பெரிய நடிகை. அவங்க பாப்புலர் ஆக 'சின்ன சின்ன' டிரெஸ்தான் காரணம்

ஆச்சி படுக்காளி அஞ்சரப்பெட்டி 11 ஆகஸ்ட் 2009

படுக்காளி அறையில் இருந்த புகைப் படத்தில் இருந்து பேச ஆரம்பித்தார்.

ஆச்சி: படுக்காளி எப்ப முகமூடி ஆன. வாய மூடி, மூக்க மூடி ஒரு மார்க்கமா இருக்க.
படுக்காளி: உங்களுக்கென்ன ஆச்சி, போட்டாவா இருக்கீங்க பிரச்சன இல்ல. ஊரெல்லாம் பயந்து போய் கிடக்கு.
ஆச்சி: ஏண்டா
படுக்காளி: பன்னி காய்ச்சல். முதல்ல பன்னிக்கு வந்துச்சு, இப்போ 6 உசிர வாங்கிருச்சி. வயசு வித்தியாசம் இல்லாம, பச்ச பிள்ள, வைத்தியம் பாத்த டாக்டருன்னு வகை தொகை இல்லாம கொன்னுக்கிட்டு இருக்கு. எப்போ எப்படி முடியும்னு தெரியல‌.
ஆச்சி: எங்க காலத்தில கூட ஃப்ளேக் வந்துச்சு. இந்த கொள்ள நோய்க்கு ஒரு சாவு இல்லடா.
உட்டுல உள்ளவ்ங்கள சாவ கொடுத்துட்டு, ரொம்ப கஷ்டம்டா... கவனமா இருக்கணும். வீண் வதந்தி, பிள்ளைதாச்சி வாந்தி போல. இதெல்லாம் அடங்குற வர நாமெல்லாம் அடங்கணும்டா.
ஆச்சி: உள்ள வந்தப்போ ஒரு பாட்டு பாடுனியே... 'போடி போடான்னு' ரொம்ப மரியாதயா இருக்கேடா”

படுக்காளி: அதெ ஏன் கேக்குறீங்க, இப்ப உள்ள சினிமாக் காரன் எல்லாம், பொறுக்கி, மொள்ளமாரின்னு டைட்டில் தேடி அலையுறாங்க. தமிழாவும் இருக்கணும், மரியாத இல்லாம் இருக்கணும்னு தேடுறாங்க‌

படுக்காளி: கந்த சாமி வருது ஆச்சி.
ஆச்சி: முருகன் படமா...
படுக்காளி: பேருதான் நொந்த சாமி, செய்யுறது பூரா முருக்கு சாமி வேலதான். அதுல ஓசியில காசு வாங்காம காங்கிரசுக்கு கொள்கை விளக்கப் பாடல் வருது.

இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க, நான் ஒரு மின்னல் தாங்க, தள்ளி நீங்க போங்க.

பாட்டு கேட்ட பா.ஜா.கா. மனித உடம்புல பிறந்து வளராத ஒரே பாகம் கண்தான். அது மட்டும் தான் இத்தாலி. இந்த தாலி / இந்திய தாலி வந்த பின்னாடி இந்தி மாதிரி இடுப்பு சேல மாதிரி பூரா இந்தியாதேன். அப்படின்னு மேடத்த பத்தி எழுதியிருக்காங்கங்குதாம். அத்வானி கூட அவரோட அரசியல் ஆலோசகர்கிட்ட அடுத்த வாட்டி இமயமல போற வழிக்கு இதை சொல்லிட்டு போங்கன்னு சொல்லப் போக, எந்திரன் எசகு பிசகா மோட்டு வளைய பார்க்கிராம்.

நம்ம தாணு தம்பி படம் தான, ஒரு வாரம் தள்ளிப் போனதுல கர் புர்னு இருக்காராம்.

ஆனாலும் ஆச்சி, டாப் டூப்னு ஒரு பாட்டு, மியா மியான்னு ஒன்னு, வாடா காப்பி குடிப்போம்னு காதலன கூப்பிடுற பாட்டு எல்லாம் நச்சுன்னு இருக்கு. பாவம் சந்திர பாபு. 'பம்பரக் கண்ணாலே' ன்னு பாடச் சொல்லிட்டு, டிஜிட்டல் தொழில் நுட்பத்துல் கொதவளய பிடிச்சு, பாவம் பம்பர... பம்பர... ன்னு பரிதாவமா பாடுராறு. இந்த பாடல் கொலைக்கெல்லாம் ஈ.பி.கோ இல்லையோ. சொர்கத்துல அங்கனக்குள்ள சந்திர பாபு பார்த்தா சொல்லுங்க இத பத்தி. இல்லேன்னா சட்டம் போட்ட அம்பேத்கர் கூட ஒ.கே.


படுக்காளி: ஆடி படம் பிடிச்ச பாம்பு, ஒரு வாரத்தில பொட்டிக்குள்ள வந்துருச்சு.

ஆச்சி: யாரப் பத்தி சொல்லுற
படுக்காளி: நம்ம விஜயகாந்த் இல்ல, அவர் நொடிச்சுப் போன தயாரிப்பாளர கூப்பிட்டு, நான் நடிக்கிறேன் என்ன வச்சு படம் எடுன்னு சொல்ல, 'எங்கள் ஆசான்' ன்னு படத்துக்கு பேரு. பாவம் ஆச்சி ஒரு வாரத்தில பொட்டிக்குள்ள வந்துருச்சு.

ஆச்சி: ஆயிரம் சொல்லு, மிஸ்சியம்மா மாதிரி வருமா. இல்லக்காட்டி அந்த ஜகன் மோகினி. இப்படி படம் எடுக்க சொல்லு.

ஆச்சி: வில வாசி எப்படிரா....

படுக்காளி: பருப்பு வில பட்டம் மாதிரி பறக்குது ஆச்சி.

ஆச்சி: எது நீ விடுற கோணப் பட்டம் தான, சுருக்க சரியா போட்டு, வால்ல தும்ப கட்டு எல்லாம் சரியாகும்.

படுக்காளி: புரியல ஆச்சி.

ஆச்சி: அடே, நீ சொன்ன பட்டம் பாஷைதான். சுருக்கு உன் பொண்டாட்டி, தும்பு வரவு செலவு.

படுக்காளி: ஆச்சி நீங்க கில்லாடி, பட்டத்தில பட்டம் கொடுக்கலாம் போல.


வெட்கத்தில் சிரித்து உறைந்தார் ஆச்சி. உரை யாடல் நாளை தொடரும்

நட்பின் தினம் இன்று

உறவுகளை தினத்தின் அடிப்படையில் கொண்டாடுவது அடிப்படையில் எனக்கு ஒப்புதல் இல்லை. அன்னையருக்கு ஒரு தினம், மங்கையருக்கு ஒரு தினம், என்று சொல்வது வெள்ளைக்காரனுக்கு உகந்ததாய் இருக்கலாம். வருடத்தின் அத்தனை தினத்திலும், அத்தனை உறவுகளை நினைக்க வேண்டும், உயர்வாய் மதிக்க வேண்டும் என்பது தாழ்மையான கருத்து.

என்றாலும், நட்பை குறித்த தினத்தை பதிவு இல்லாமல் விடவும் மனது இல்லை. நட்பை பற்றி பதிப்போமே என்று தோன்றியது.

அமையும் உறவுகளில் வேறு பட்டு அமைக்கும் இந்த பந்தம் நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கும். பணம் சேர்ப்பது உங்கள் லட்சியம் என்றால், அதை ஊக்குவிக்கும், உற்சாகப்படுத்தும் ஒரு நண்பனை தேர்ந்தெடுத்தால் போது மானது.

எந்த பிரதிபலனும் இல்லாது நட்பில் இணைவது உன்னதம்.

உயர்வு தாழ்வு இல்லாத புதுமை பிணைப்பு.

அதேபோல் உரிமையாய் திட்டவும், உளம் திறந்து பேசவும், வழி வகுக்கும்.
நட்பை போற்றுவோம். நல்ல நண்பரை பெறுவோம்.