கீழ்காணும் கட்டுரை விகடன் டாட் காமில் பிரசுரிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நாள் எனக்கு ஒரு மகிழ்ச்சியின் நாள். பிள்ளைப் பிராயத்தில் தொடங்கி, ஆனந்த விகடன் என் ஆதர்சன பத்திரிக்கை.
வெகு நாளைய கனவு இன்று தான் நிறைவேறியது. மூன்று முறை சிறுகதை எழுதி அனுப்பி இருக்கிறேன். பத்து நகைச் சுவை அனுப்பி இருக்கிறேன். முல்லை எம். பெர்க்மான்ஸ், அம்பை தேவா, ஜோதி ராஜ் எனும் நண்பர் குழாமின் உந்துதல். தொடர்பு தகவல் தந்து உதவிய பிரிய நண்பர் கோபிக்கு நன்றி.
http://youthful.vikatan.com/youth/lawrencewit27082009.asp
குப்புசாமி.. சுப்புசாமி.. பொன்னுசாமி..!
பள்ளி நாட்களில் எனது பயங்களில் பிரதானமானது, தலைப்பில் கூறியுள்ள இந்த மகானுபாவர்கள்தான்.
வாத்தியர்கள்!!!
வன்முறையில் நம்பிக்கை உள்ள வர்க்கம்!
தாழ்வாரத்தில் இவர்கள் நடந்து வந்தால், அடி வயிற்றில் அமிலம் சுரக்கும். இதயம் தாறு மாறாய் ஓடும்.
நாற்காலி செய்யும் கடையில், கறுப்பு புள்ளி இருந்தால் நல்லது என பிரம்பு வாங்கி, ஒரு கை - இரு கை - பிருஷ்டம் - முழங்காலிட்டு பாதங்கள் என தண்டனை பகுக்கப்பட்டு பரிமாறப்பட்டன.
இவர்களில் சுப்பு, பொன்னு பிரத்யேகமானவர்கள். தன் கையே தனக்கு உதவி என்ற கோட்பாடுடன் கோதாவில் உள்ளவர்கள்.
தோள் பட்டைக்கு கிழே சதை திரட்சியை தேடி சுப்புசாமி கிள்ளினால், வலி உச்சத்தில் மயக்கம் வரும். கத்தக்கூட முடியாது.
பொன்னு வேறு வகை. கை விரல்களை முஷ்டி மடக்கி, நடு விரல் மொக்கையாக்கி உச்சந் தலையில் குட்டுவார். கபாலத்தில் கிர்ர்ர்..... என ஓசை கேட்கும். சிந்தனை ஒரு நொடி ஸ்தம்பிக்கும்... டூரிங் தியேட்டரில் அறுந்து போன ஃபிலிம் சுருள் போலே. கண்ணில் சுருள் சுருளாய் சங்கீத குரி போலே சுழலும். கண்ணீர் கட்டுப்பாடு இழந்து மடை திறக்கும்.
சக மாணவர்கள் பார்வையிலே, தன்மானம் விளித்து பார்க்கும். அவமானம் புடுங்கித் தின்னும்.
'அடி வாங்குதல் அவமானம் இல்லை; அழுவது அவமானம்.'
அனிச்சையாய் வாய் வாத்தியாரை வையும். கூட்டுக்காரன் பிரதீப் பிருஷட்டத்தில் பிரம்படி வாங்குவன். வேதனை காட்டுவான். கூட்டுவான். வாத்தியாருக்கு முகம் மறைந்து முதுகு தெரிய... 'பூ' போலே சிரிப்பான். சிலசமயம் கண்ணடிப்பான். "ஒ.." எத்தனை பெரிய சாதனை. அவன் தான் நாயகன்.
அவனை ஒரு நாள் தனிமையில் சந்தித்து ரகசியம கேட்டபோது, பல முறை மறுத்து, ஒரு நன்னாரி சர்பத்
லஞ்சத்தில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கி கொண்டு சொன்னான்:
"சுப்பு சாமீ வகுப்புக்கு இரண்டு கால் சட்டை அணிவேன்."
நான் முயன்ற போது, கடைசி வரை முன்றாம் கட்ட தண்டனை கிடைக்காததால் பிரதீப் சொன்னது சரியா, தவறா என்று இன்று வரை தெரியவில்லை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்கள் படுக்காளி...
பதிலளிநீக்குஇது தொடக்கம்தான்... தாங்கள் இது போன்ற பல படைப்புகளை படைத்து, அவை பல பத்திரிக்கைகளில் வரும் நாள் வெகு தொலைவிலில்லை....
வாழ்த்துக்கள் மீண்டுமொருமுறை....
மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல நட்பு நம் இன்பத்தில் முழுமனதாய் பங்கு கொள்ளும். அதுவே தோழமை ஊக்கப் படுத்தி, உயர்வாக்கும்.
நான் எழுதுவதும், பதிப்பதும் தாங்களால் தான். எனும் போது என் முன்னேற்றம் தங்கள் கையில். பார்த்து கோங்க.
படுக்காளி
Congrats ! Great !! Good achievement. We wish you many more laurels.
பதிலளிநீக்குரொம்ப நன்றி! அன்போடு தாங்கள் தரும் ஊக்க்மும் உற்சாகமும் என்னை மேலும் முயற்சி செய்ய தூண்டும்.
பதிலளிநீக்கு