பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரப்பெட்டி 12 ஆகஸ்ட் 2009

படுக்காளி: ஆச்சி, நம்ம பக்கத்து வீட்டு பத்மா நல்லா ஒடிப் போயிட்டாளாம்
ஆச்சி: யாருடா, கடைஞ்ச மோர்ல வெண்ணை எடுப்பானே அவன் மகளா
படுக்காளி: இல்லை, எச்சக் கையில காக்கா ஒட்ட மாட்டாரே, அவர் மக‌
ஆச்சி: ரெண்டும் ஒண்ணுதாண்டா, யாரு கூட ஒடுனா
படுக்காளி: அஞ்சாறு பொம்பள பிள்ளைக கூட ஒடி, ஃப்ஸ்ட் பிரைஸ் வாங்கிட்டா, நிர்வாகத்த துணைக்கிட்ட கொடுத்துட்டு, சிலை துற‌க்க போயிட்டாரு முத்தமிழ் அறிஞரு.

ஆச்சி: நல்லது தானேடா, ஆடி மாசம் வந்தாலே, இப்படித்தான்.

படுக்காளி: தண்ணி கொடுக்காத தங்கப்பா கிட்ட, தேர்தல் சமயத்தில அணை கட்டக் கூடாதுன்ன அப்பாரக்கப்பாக்கிட்டயா...

ஆச்சி: சொன்னத விட்டுட்டு சுரைய புடுங்காத, இந்த சர்வாக்கர் யாருன்னு கூகுள் ல தேடு,

படுக்காளி: காது வாக்கில கேட்டேன், கோபால புரம் பக்கத்தில தெய்வப் புலவருக்கு கோயில் இருக்காம், இங்கனக்குள்ள தூத்து தெளிக்க ஆள் இல்லையாம், துபாய்ல மழை பெய்யுதாம்.

ஆச்சி: ஏல வாய் நீண்டு போச்சுறா, கோயில் சமாச்சாரம் எல்லாம் பகுத்தறிவு இல்லடா,தமிழ் மட்டும் ஒ.கே. அதுவும் இல்லாம, கோவில் சமாச்சாரம் சம்சாரங்களுக்கு மட்டும் தாண்டா,

படுக்காளி: அது சரிதான், திருவண்ணாமலை பூஜை, திருத்துறைப் பூண்டி காவடி எல்லாம், தினகரன்ல வருமா... பிரெண்டு கோபி , 50வது விழாவில அருமை நாயகம் அடிச்ச பல்டி பத்தி சொல்ல சொல்றாரு.
ஆச்சி: அருமை நாயகம்னா யாரு பல் துருத்திக்கிட்டு 'ஆஹா... வந்திருச்சி'ன்னு பாட்டு பாடி பல்டி எல்லாம் அடிக்குமே அந்த தம்பியா.

படுக்காளி: அவருதேன்... அம்பது வருசம் ஆச்சேன்னு, வெற்றி (வெட்டி இல்லை) டி.வி. நிகழ்ச்சி எடுக்க, எட்டி பார்த்த எடுபட்ட பய டி.வி. எனக்கு கொடுன்னுச்சாம்.

அட்வான்ஸ் வாங்கித் துண்ணுட்டு, திருப்பி தர மாட்டேன்ன விவகாரத்தில சிக்கல் தீர்த்த சிங்கார வேலன், கேட்டதுனால 'கேட்டது தளபதியோட தம்பியா இருந்தா பரவாயில்ல, அஞ்சா நெஞ்சன் அப்பால்ல கேக்கிறாறுன்னு' டயலாக் மட்டும் விட்டாராம்.

வைச்ச பேர காப்பாத்த வேண்டாமா, அவ்வளவு பொருமை நம்ம மண்ணைப் போல ஒருவன்.

படுக்காளி: நேத்து கேட்டீங்களே, ஜகன் மோகினி பத்தி, செமிச்சு போன அந்த சோற எடுத்து, மறுபடி திங்கப் போறாங்களாம்.
அதான்... ரீ மேக் பண்றாங்களாம்

ஆச்சி: ஹும்.... ஹும்... படுக்காளி உன் திட்டுல தீட்டு இருக்குடா...போராங்கடா சுயமா சிந்திக்க பயப் படுறாங்க
நேத்து ஆடியோ நிகழ்ச்சிக்கு போன அத்தன பேறும் பின்னங்கால் பிடறில அடிக்க ஒடுனாங்களாம் ஏண்டா

படுக்காளி: பின்ன பன்னீர் தெளித்து கல் கண்டு கொடுப்பாங்கல்ல வாசல்ல‌
ஆச்சி: ஆமாம்

படுக்காளி: அது செஞ்சது பூரா பேயும் பிசாசுமாம்.

ஆச்சி: அது சரி யாரு நடிக்கிறது.

படுக்காளி: பேய்... குட்டி பேய்.... பூதம்.... பிசாசு.... அப்புறம் நமிதா. பின்னே என்ன உங்க காலத்திலயும் ஜெய மாலினிதான.

எப்பவுமே நம்ம பதிவுல ஒரு தத்துவம் எதிர் பாக்கிராங்க, ஏன் ஒரு குறை வைப்பானே. முடிக்கிறதுக்கு முன்னால

இட்லி வடைல சூப்பரா சொல்லியிருப்பாறு,

வாழ்க்கையில சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம் நமீதா. எவ்வளவு பெரிய நடிகை. அவங்க பாப்புலர் ஆக 'சின்ன சின்ன' டிரெஸ்தான் காரணம்

2 கருத்துகள்:

 1. ஆச்சி படுக்காளி அஞ்சறைப்பெட்டி சூப்பரு....

  அதுலயும், இவிய்ங்க ரெண்டு பேரும்....ம்ம்ம்ம்... பின்னுது படுக்காளி....

  அப்பாரக்கப்பா
  ஆள்வார்பேட்டை ஆண்டவர்....

  அந்த ஆள்வார்பேட்டை அருமை நாயகம், நீலாங்கரை போயி பேரு மாறி "பரமக்குடி பல்டி நாயகம்" ஆனாராமே.... அந்த மேட்டர் பலே....

  இன்னும் எளுதுங்க.....

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி.

  ஆஹா.... பட்டத்துக்கு குறைவே இல்லை போல...

  பரமக்குடி பல்டி நாயகம் இதுவும் நல்லா இருக்கே.

  இருந்தாலும் மருத நாயகம் எப்போ வருதுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு