பக்கங்கள்

வித்தையடி நானுனக்கு பிரிவ்யூ காட்சி.....

வித்தையடி நானுனக்கு பிரிவ்யூ காட்சி: திரையில் ஓடும் திரைப்படத்தில் என்னை தொலைத்து இருந்தேன்... அப்பப்ப சில சிந்தனைகள். 

படைப்பாளிக்கே இருக்கக் கூடிய ஒரு அசௌகரியம்...  நடிப்பு ஏன் இப்படி இருக்கக் கூடாது - இங்கு வசனம் இப்படி இருக்கலாமோ - இங்கு லைட்டிங்க் இப்படி இருக்கலாமே.. இப்படியெல்லாம் தோன்றும்...

ஆனால் - அதில் ஒரு பிரச்சனை...

அந்த எண்ணங்களில் - ஐடியாக்களில் முழுமை இல்லை. அவை அக்கதை சார்ந்தே இருக்கின்றன. தொக்கு தொக்காய் ஒரு சிறு உறுகாய் போல - ஊறுகாய் மட்டும் வைத்துக் கொண்டு ஊரைக் கூட்டி விருந்து கொடுக்க முடியுமா... 

அதுபோல - ஒரு காட்சியில் வசனம் இப்படி இருக்கலாமோ என நினைத்து இருந்தேன்... எதுக்கும் இருக்கட்டும் என எழுதியும் விட்டேன்... எனக்கான நினைவுக் குறிப்பாய் இங்கு வைக்கிறேன்...

மித்ரா
தயா… தயா….. (தேடி…. தேடி… நடந்து வந்தபடி….)

இங்க இருக்கீங்களா… (கிடார்… மற்றும் கிளாஸூடன்… தயா)

ஹாங்… அது சரி.. சுருதி ஏத்திகிட்டிருக்கீங்களா….
தயா
ஹா..ஹா.. (மெல்லிய நகைப்பில்) கிட்டாரா சொல்றீயா… இல்ல இதையா (கையில் டிரிங்க்ஸ் கிளாஸைக் காண்பிக்கிறார்)
மித்ரா
ம்…. (சுவரில்… சரிந்து… சாய்ந்தபடி….) ரெண்டுமே தான்…
தயா
(ஒரு மிடறு குடித்து… லேசாய்…கண்ணை… சுருக்கி)…………. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…. எந்த வார்த்தைக்கும்… ஒண்ணுக்கு மேல மீனிங்க் இருக்குமே…
மித்ரா
(அங்கீகரிக்கும்… ஒரு புன்னைகை…. அவன் சொன்னதை… லேசாய் ஒத்துக் கொண்டது போல்.. ரசித்தபடி…. சட்டென தலையை திருப்பி)……….. தயா…. Tell me something…. Hum…. But an honest answer…
தயா
Ok
மித்ரா
ஆம்பிளைங்களுக்கு…. ம்… What do you think of woman…
தயா
ம்… (சற்று யோசித்தபடி)…………. இது தான்… (கையில் இருக்கும் டிரிங் கிளாசை காட்டியபடி) …. கிக்…
மித்ரா
ஓ… Just an Evening Affair……. ங்கிறீங்களா…
தயா
நோ.. நோ… men and women should be together… ங்கிறேன்… You see.. women is like a wine and men are like Cups…
மித்ரா
ஓ… இது புதுசா இருக்கே….
தயா
லுக்… இந்த கப் இல்லேன்னா… டிரிங்க் எப்படி இருக்கும்… நிக்க முடியும்…  இல்லை… அதே மாதிரி… Look at the other side…………….. டிரிங் இல்லேன்னா… கப்புக்கு வேலுயுவும் இல்ல… (கையில் இருக்கும் கோப்பையை ஒரு மூச்சில் குடித்து விட்டு… ) தட்ஸ் இட்… (அங்கும் இங்கும் அசைத்து… இல்லை என்பதைப் போல் காட்டுகிறான்)
மித்ரா
ஓ… Male chavunism…. ஒரு கூட்டுக்குள்ள போட்டு அடைக்கணும்ன்னு  நினைக்கிறது தான்… மென்ஸ் ஐடியா…. இல்லையா…
தயா
ம்… அப்படி ஏன் நினைக்கணும்…. மேல ஓப்பனா தான இருக்குது… சைடுல இருக்கிற அமைப்பை நீங்க அடைப்புன்னு நினைக்கிறது தான் கோளாறே….  Men give space…. Men wants to ensure security…  தட்ஸ்.. இட்… ஆனா நீங்க… எந்த கட்டுப்பாட்டையும் வெறுக்குறீங்க… The solution is…. Look up…
மித்ரா
ஓ… இண்ட்ரஸ்டிங்…. க்ளாசுல மேல ஓப்பனாத்தான் இருக்குது….
தயா
ம்… MALE… கூட ஓப்பனாத்தான் இருக்குறோம்…. We are OPEN… we like to be OPEN… We like to See OPEN….
மித்ரா
தயா.. யூ ஆர் அ ஜீனியஸ்.. Woman are wine… and men are cups…  நல்ல தாட்…
தயா
ம்…. Not entirely……….. இது எட்டையபுரத்து முண்டாசுக்கவியோட தாட் தான்…
மித்ரா
யாரு
தயா
பாரதி… The great poet of our times….. அவர்…. மென் வீமன் ரிலேஷன் பத்தின ஒரு வொண்டர் ஃபுல் சாங்.. கேக்குறீயா… சிட் டவுண்….  ( பாடல் துவங்குகிறது… பாயுமொழி நீயெனக்கு)


சொம்பு வெட்டியான் தெரு…


குடும்ப சொத்து பங்கிடுதல்….

வில்லங்கமான - விவகாரமான இந்த விஷயம் தான். குடும்பங்களின் அன்பையும், அனுசரணையையும் பாதிக்கிறது - இன்றைய குடும்பங்கள்  இந்த குடும்ப சொத்து பங்கிடுதல்…. குறித்து சிந்திக்க இக்குறிப்புகள் உதவும் என நம்பி,  இவைகள் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என ஆசைப்பட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

இப்பதிவை வாசிக்கும் முன், ஒரே ஒரு கணம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு தட்டில் உண்டு, ஒரு முலையில் பால் குடித்து, ஒரு வீட்டில் தங்கி, ஒரு குடும்பமாய் வாழ்ந்த அண்ணன் தம்பி, தங்கை அக்காக்கள் - என்பதை மறக்காமல், ஒரு பெற்றோருக்கு பிறந்த மலர்கள் தான் நாம்… என நினைவு மேலோங்க… மேலே வாசிக்க துவங்குவோம். அன்று நாம் கண்ட அன்பை இன்று தேடுதலோடு நினைவு கூர்வோம்.
1.   
பெற்றோர் சம்பாத்தியம் அவர்கள் பிள்ளைகளுக்கு சமமாய் பங்கிடுதல் தான் முறை. 

இதில் எந்த பாகுபாடும் சரியில்லை… ஆண் பெண், நல்லவன் கெட்டவன், வாழ்ந்தவன் வாழாதவன் ஒத்திருந்தவன் ஒத்து ஊதாதவன்… எனும் பேதம் கொள்ளாமல், சரி சமமாக பங்கிடுதல் மிக மிக ஆதாரமானது. (என் தங்கச்சி கஷ்டப்படுறா… என தங்கள் சொத்தை, கிப்ட் பண்ண ஒருவருக்கு உரிமை உண்டு, ஆனால், பிரிக்கும் போது, ஏற்ற தாழ்வு செய்யும் சாய்ஸ்… பெற்றோர்களுக்கு கிடையாது)
2.   சரிசமமாக பங்கிடும் - மிகப் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கானது. அது மிகப்பெரும் கடமை. பிற்காலத்தில், சொத்து குறித்து பிள்ளைகள் சண்டை செய்தால் அது பெற்றோர் செய்த தவறு… அவர்களுக்கே இழுக்கு. எனவே கவனமாக, பலதும் ஆராய்ந்து நேர்மையாக பொறுப்புணர்வோடு, பெற்றோர்கள் செயல்படுவது மிக மிக முக்கியமானது.

3.   சரி - சரிசமம் அத்தனை எளிதா.. இல்லை - கிடையாது. காலங்கள் மாறும் போது பிராக்டிக்கலாய் சமமாய் இருக்காது போகலாம். உதாரணம், இரு வீடுகள் இரு பிள்ளைகளுக்கு என பெற்றோர் சொல்லி விட்டார்கள். ஒரு வீடு, 4,39,415.95 இன்றைய மதிப்பு… இன்னொரு வீடு……….. அதே இலக்கங்கள் இருக்குமா… 4,39,416.05 ரூபாயாகி விட்டால்………… 

எனவே.. எவ்வளவு கண் கொத்தி பாம்பாக செயல்பட்டாலும்… சரிசமம் வருவதற்க்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

இப்படி சில சில்லறை பிரச்சனை வரும்… இதை சில்லறை பிரச்சனை என கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும்.

4.   பெற்றோர்கள் தரும் சொத்தை…பிள்ளைகள் சந்தோஷமாக சுவீகரிக்க வேண்டும்… எனக்கு வேண்டாம்… அதுல இருந்து ஒரு பைசா வேண்டாம் என சொல்வது அலட்டல்… அதே போல், எல்லாம் எனக்கு வேண்டும் அல்லது, மேஜர் ஷேர் எனக்கு வேண்டும் என்பது அயோக்கியத்தனம்… 

அமைதியாய்… எப்படி பெற்றோரின் அன்பை பகிர்ந்து கொண்டோமோ அது போல செல்வத்தையும் அமைதியாக வாங்கி, மன நிறைவோடு, நம் பெற்றோரை நன்றியுடன் தலை வணங்கி நினைக்க வேண்டும்.

5.   ஒரு முக்கியமான பாயிண்ட் 

இது… இப்பிரச்சனையின் ஆணி வேரே இது தான்.. பிள்ளைகள், பெற்றோரின் சொத்தை… எதிர்பார்க்க கூடாது, எப்படி பாகம் பிரிக்கும் போது சமமாய் பிரிக்க மட்டுமே பெற்றோர்களுக்கு உரிமை என சொன்னோமோ அதுபோல், பிள்ளைகள் தனது தேவைகளை தன் ஆசைகளை, லட்சியங்களை - தன் சம்பாத்தியத்தில் பெற வேண்டும். அது தான் ஒருவருக்கு பெருமை.

 ஒரு பெற்றோர், தம் பிள்ளைக்குத் தரும், மிகப் பெரும் சொத்தே.. ஆரோக்கியமான உடல், அன்பான மனது, உயர்ந்த சமூக வாழ்வியல் படிப்பினைகள், வேல்யூ சிஸ்டம்… அவ்வளவே.. அவர்கள் தரும் பணம்… பொருட்டே அல்ல… பணம் எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்… நம்மாலேயே… சம்பாதிக்க முடியும்……. என்பதே நிதர்சனம்…. இந்த உண்மை புரியாமல் - காசை பெரிதென நினைப்பதும் - தன்னால் அவ்வளவு சம்பாதிக்க முடியாது எனும் நினைப்புமே சண்டைக்கு வழி உண்டாக்குகிறது.

ஒரு திரைப்பாடலில் சொல்வது போல…………. ’கொடுக்கிற நோக்கம் உறுதியாயிட்டா.. எடுக்கிற நோக்கம் வளராது………’ 

எனவே… பூர்வீக சொத்தை… ஒரு நாளும்…. கணக்கில் கொள்ளாமல், தன் காலில் நின்று.. தனக்கு தேவையானதை … தானே சம்பாதிக்கும் மனப் பக்குவமும்… திடமும்.. ஒவ்வொரு பிள்ளைக்கும் வளர வேண்டும்

6.   வரும் சொத்தில்.. கூடுதல் குறைதல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். கூடுதலாய் உங்களிடத்தில் குடும்பச் சொத்து வந்து விட்டால்.. உடன் பிறந்தோரை அழைத்து, அவர்களுக்கு உரியதை… முறையாக பங்கிட்டு கொடுத்து விடுதல் நலம்.
7.   
ஒரு வேளை.. உங்களுக்கு வர வேண்டியது வராமல்.. குறைவாக வந்தால்.. சிரித்த படி… சரி, நம்ம உடன் பிறந்தது… ஆண்டு அனுபவிக்கட்டும்… என விட்டுக் கொடுப்பது.. உத்தமம்..
எக்காரணம் கொண்டும் - சண்டை செய்வதோ அல்லது நீதிமன்றம் நாடுவதோ - அல்லது மூன்றாம் பேர் உதவி நாடுவதோ வெட்கக் கேடு.

 ஏனெனில்… குடும்பத்தில்.. தோல்வி என்பதில்லை… மனம் முழுக்க…. மகிழ்வுடன்… அந்த உடன் பிறந்தோரை.. ஆசிர்வதித்து… வைத்து கொள்.. நன்றாக இரு.. என ஆசிர்வதிக்கும் மனம் இருக்க வேண்டும்…. சம்பாதித்த பெற்றோர் - அதை விட்டு விட்டுத்தானே சென்றார்கள், எனும் தெளிவு இருந்தால்- இதனால் நமக்கு என்ன யூஸ்... என்ற கேள்வி பிறக்கும்...

இறுதியாக கேட்டுக் கொள்ளுங்கள்….

ஊரில் இருக்குது படியும் தராசும்..

ஆம், 5 அடி பூமிக்காக, நிதிமன்றம் போய், ஜெயித்து கொண்டு வந்தவனை ஊர் என்ன சொல்லும்… வீரன் எனச் சொல்லாது… ஆஹா.. இவனல்லவோ வெற்றி வீரன் என ஒரு நாளும் சொல்லாது…. ஏனெனில்.. ஒரு குடும்பத்தின் அண்ணன் தங்கைக்கிடையே.. ஊர் எந்த காலமும் உள்ளே கால் வைக்காது…

அதே நேரத்தில்… மற்றதை நினைத்து பாருங்கள்…… ” நமக்குள்ள எதுக்கு தகராறு... என்ன 5 அடி தான…  வைச்சுக்கப்பா… இதுல என்ன இருக்கு” என சொல்பவனை ஊர் கொண்டாடும்.. 

தனது சொத்தை கொடுத்து விட்டு வருபவனை... இந்த உலகம்... தோத்தாங்கொளி தோல் புடுங்கி என சொல்லும்… என்ற நினைப்புதான் நம்மில் நிறைய பேரை சண்டை செய்ய வைக்கிறது... இல்லை… நிச்சயம் இல்லை.… ஊர் அவனை பாசக்காரன் என சொல்லும், பரந்த மனசுக்காரன் என சொல்லும்.

என்ன இருந்தாலும்… அவனோட பரந்த மனசு யாருக்கு வரும்.. என புகழ்மாலை சூட்டும்….…ஒரு கோடி ரூபாய்க்காக… பங்காளி கழுத்த அறுப்பதை வீரம் எனவோ.. சூரர் எனவோ….. ஊர் சொல்லாது, அறிவில்லாதவன்.. முட்டாள், பயங்கரமானவன்.. அவனிடம் நெருங்காதே என நினைக்கும்…


ஒரு வேளை நேரடியாய் இதை அவனிடத்தில் சொல்லாது… முகத்திற்கு முன்னே… சூப்பர்… பிரமாதமாய் வெட்டி… நீதான் உங்க அப்பனுக்கு மவன்னு நிறுபிச்சுட்ட என சொல்லும்.. ஆனால், தன் கருத்தை மூடி மறைத்து கொள்ளும்… 
சொம்பு வெட்டி - தன் பங்கை நிறுபிப்பதை விட முக்கியம் - அந்த சொம்பில் தண்ணீர் வாங்கி குடித்து தாகம் தீர்ப்பதே... 

எதிர்… எதிரி…

ஒரு எளிமையான விடயத்தை தொட விரும்புகிறேன்… உங்களுக்கு உபயோகமாக இருந்ததா.. என விவாதிக்க தொடர்பில் இருங்கள்…

சரி……….ஒரு கேள்வி….

இந்த உலகில் … எல்லோருக்கும் ஒரே கருத்து எதிலாவது உள்ளதா??????

நம் விருப்பு வெருப்புக்களை சொல்கிறேன்……

ம்… அத்தனை மனிதருக்கும் பிடித்த… ஒரு உணவு இருக்கிறதா.. ஒரு செயல் இருக்கிறதா… ஒரு மனிதர் இருக்கிறாரா…. ஒரு இடம் இருக்கிறதா…

ம்… இல்லை…..

அப்படியானால்…

எதிர்… என்பதை தவிர்க்க முடியாது…. அது இயற்கை… அவருக்கு இட்லி… இவருக்கு தோசை.. அதே மாவு… அதே சட்னி.. அவிப்பதும், சுடுவதும் என வேறுபாடு மட்டுமே… ஆனாலும்… ஒருவருக்கு பிடிப்பது இட்லி, 

இன்னொருவருக்கு தோசை…. அது மட்டுமா… இட்லிக்கு சட்னி இல்லை சாம்பார்… இப்படி தொடங்கி, எதிர் என்பது எங்கும் இருக்கிறது…

அதாவது எதிர்…. நம் விருப்பத்தில், நம் தீர்மானத்தில், நம் சிந்தனையில்… இப்படி எங்கும் எதிலும் இருக்கும்….

எதிர் என்பது எங்குமிருக்கும்…… வீட்டில், வெளியில் அலுவலகத்தில்… கணவன் மனைவிக்கிடையில், உறவுக்களிடையில், அண்ணன் தம்பி, நட்பு.. இப்படி எல்லா இடத்திலும்…  நிறைந்து இருக்கும்.. இதனால் பாதகமில்லை… ஆனால், எதிர்.. எதிரி என ஆகும் போது விவகாரம் ஆகி விடுகிறது..

மிக நுணுக்கமான விஷயம் இது.  எதிர் ஒக்கே.. எதிரி தான் டேஞ்சர் எனும் போது… எது எதிர்……………………ர்ரிரியை ஆக்குகிறது என தெரிந்து கொள்வோமா….

அப்படி ஒரு விவாகாரமான ஒரு விஷத்தை.. அல்லது விஷயத்தை என்ன என தெரிந்து கொண்டால் நல்லதல்லவா… ,ம்… அந்த ஒரு சிறு துரும்பை புரிந்து கொண்டு, அதை தங்களுக்கு தோதான விஷயத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ம்… இந்த எதிர்……………………ர்ரிரியை எடுத்தெறிந்து தங்கள் வாழ்வை பூக்களமாக்குங்கள் எனும் வேண்டுகோள் தான் இப்பதிவு…
எதிர் எப்போது எதிரி ஆகும்.. ஒரு மெல்லிய கோடு.. அதை கடக்கும் போது எதிர் எதிரியாகி விடும்…

இக்கேள்விக்கு விடை காண… இது என்னவாக இருக்கும்… என நான் முயன்று கொண்டிருந்த போது… அவரை பார்த்தேன்… யார்…

அவர்தாங்க… நம்ம… எதுத்தாத்து ஏகாம்பரத்தை பார்த்தேன்.. அவரிடம் கேட்டேன்..

சார்.. எதிர் எப்போ எதிரி ஆகும் என.. அவர்… ஈ… என … பல் அத்தனையையும் காட்டினார்… எனக்கு பட்டென பொறி தட்டியது… நான் குஷியானேன்… உடனே.. கைய கொடுங்க சார்… கரெக்ட்டான ஆன்சர் சொன்னீங்க என்றேன்.. அவர் நே… என பார்த்தார்…

பகைமை எனும் உணர்வு வந்தமரும் போது.. பகைமை பல்லை காட்டும் போது.. இந்த எதிர் என்பது எதிரியாகி விடுகிறது…

இதை எளிமையாகவும் தெளிவாகவும் இனி மேலெடுத்து செல்ல, இரு ஆளுமைகளை பார்ப்போம்.

நாம் அனைவரும் அறிந்த இரு ஆளுமைகள்… காந்தி.. நேரு….

இவர்கள் இருவருமே.. அரசியல் அல்லது பொது வாழ்க்கை சம்பந்தப்பட்டவர்கள். வரலாற்று ஆளுமைகளில், இன்றும் இந்தியர்களால் மதிக்கப்படும் இரு ஆளுமைகள்…. இருவரும் இணைந்து பணியாற்றினர். இருவருக்கும் ஒரே தளம்… இலக்கு… இல்லையா..

தேச நலன்.. நாட்டுப் பற்று.. மனித நலம்.. மேம்பாடு இப்படி…

ஆனா… காந்தி………….. நேரு…………………. இரண்டும் இரு துருவங்கள்… ஒரு சில பரிமாணத்தில் இல்லையா…………….

சட்டையை கழற்றி போட்டுட்டு… இடுப்புல ஒரு கதர்… போதும் என்பவர் ஒருவர்… நீண்ட வெண்மையான ஷெர்வானி போட்டு, அன்றலர்ந்த ரோசாவை பட்டன் ஹோலில் செருகு என்பார் மற்றொருவர்… … 

அவருக்கு அது.. இவருக்கு இது…
சரி உங்களுக்கு எது…

உலகில் ஒரே அச்சா… எல்லோருக்கும்.. இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

எல்லோரும் காந்தியாக முடியுமா.. இல்லை எல்லோரும் நேருவாக வேண்டுமா.. கிடையாது, அவசியம் இல்லை… உலகம் என்பது, காந்தியையும் கொண்டிருக்கும், நேருவையும் கொண்டிருக்கும்… எனவே கவலையே இல்லை…

சரி, காந்தியையும், நேருவையும் அவர்கள் உடைகளை கொண்டா எடைபோடுகிறோம்… ம்… சிந்தனையை கொண்டா எடை போடுகிறோம்… காந்தியிடம் எதிர்பார்க்கும் அதே குணங்களையா நேருவில் தேடுகிறீர்கள்… 

இல்லையே… மாமா மாமா தான்.. தாத்தா தாத்தா தான்…

இதைத்தான் எதிர் என்பது இயல்பு என சொல்லுகிறேன்…

சரி, மாமா, என்றைக்காவது, தாத்தாவுக்கு ஷெர்வானி ப்ரசண்ட் பண்ணியிருப்பாரா… அல்லது காந்தி பக்கத்துல போய் உக்கார்ந்துகிட்டு, ஹலோ…இதை கேளுங்களேன்… அரை ட்ரவுசர் போட்டுகிட்டு, ஸ்விம்பிங் பூல்ல.. நீந்தி குளிச்சுட்டு, நச்சுன்னு ஒரு கப்புல கல்புல ஒயின் குடிச்சுட்டு… ஜம்முன்னு ஃப்பே…. சாப்பிட்டு விட்டு, அந்த குட்டை பாவாடை போட்டிருப்பாளே… ஜா…… பேசிக்கிட்டிருந்தா.. ஆஹா.. ஆஹா…அஹ்ஹா.. உலகம் என்ன சொர்க்கம் என பேசியிருப்பாரா…

பேசியிருந்தாலும்… உடனே.. காந்தி… சரி.. நாளைக்கு காலையில ஏந்திரிச்சு.. பல்விளக்கிட்டு உன் வீட்டுக்கு வந்துர்றேன்.. நீ சொன்னத செஞ்சுரலாம் என செய்திருப்பாரா….

அல்லது, காந்தி போய், ஆட்டிக்குட்டி, ஆட்டுக்குட்டி இல்ல அது புழுக்க போட்டுதே… அதை எடுத்திட்டு போய், அவரைக்காய் செடியில போட்டேனே… அது என்ன வித்தியாசம் வந்துச்சு தெரியுமா.. அப்பூறம்… ராட்டு நூக்கும் போது, 28 வது நிமிசத்தில… மனம் ஒரு தாள லயத்துல இயங்க தொடங்குச்சு… அப்படியே உடம்புன்னு இல்லாம.. பிரி… பிரியா… நூல் போகுதுப்பா என சிலாகித்திருப்பாரா…. அல்லது… நேத்து.. நைட்டு.. உடல் ஆராய்ச்சியில…. உடம்புல… கம்பளி பூச்சு ஊர்ற மாதிரி விரல் வைச்சு தேய்க்க சொன்னப்போ… ஒண்ணுமே ஆகலப்பா… அப்படியே… கட்டையா உடம்பு கிடந்துச்சு….

என காந்தி பேசியிருப்பாரா…..

இருந்திருக்காது… நிச்சயம் இருந்திருக்காது…

மறுபடியும் சொல்கிறேன்…

காந்தி காந்தி தான்… நேரு நேரு தான்..

இதில் சரி எனவோ.. தவறெனவோ எதுவும் இல்லை… எல்லாரும் காந்தி மாதிரி ஆகுங்க என்றால் அது தவறு.. அல்லது எல்லாரும் நேரு மாதிரி ஆகுங்க என சொல்வதும் தவறு…

எதிர் எதிர் மன விருப்பம் கொண்டிருந்தாலும்… நட்பில் இணக்கமாக இருந்தார்கள்… இருவரும் அருகில் உட்கார்ந்து கொண்டார்கள்… இந்தியா பற்றி கவலைப் பட்டார்கள்.. என்ன செய்வது என யோசித்தார்கள்… விவாதித்தார்கள்.. தட்ஸ் ஆல்….

நண்பர்களே.. இது தான் சூட்சமம்..

உங்களுக்கு எது சரியோ.. அது சரியானதே…

அடுத்தவருக்கு எது சரியோ… அது அவருக்கு சரியானதே…

ஷெர்வானியிலும் தவறில்லை.. சட்டை போடாத அரை நிர்வாணத்திலும் தவறில்லை…  நேரு போய்.. நேருக்கு நேராய் நின்று… காந்தியை பார்த்து… 

ம்.. இங்க பாரு… என ஷெர்வானியை கையில் திணித்து… கடலை உருண்டையை வாங்கி கீழே போடாத வரை தவறே இல்லை… அல்லது காந்தி போய், ஷெர்வானியை கிழித்து… சட்டை போடாம இருந்து பார், எப்படி சுகமாக இருக்குது என சொல்லும் வரை பிரச்சனையில்லை..

தான் செய்வது சரி…………… என நினைக்க வேண்டியது அவசியம்… ஆனால் தான் நினைப்பது மட்டுமே சரி … அடுத்தவனுக்கு ஒண்ணும் தெரியாது என நினைக்கும் போது… 

நான்… நான் தான் கரெக்ட்டு.. 

நீ வேஸ்ட் என மட்டம் தட்ட முயலும் போது தான்…. பகைமை மனதில் குடியேறுகிறது… 

நாம் நாமாயிருக்க… அடுத்தவரை அவர் நிலையில் மதிக்க… அறிந்திருக்கும் வரை குழப்பமில்லை…

எதிர் இருக்கும்……….. எதிரி இருக்காது…………

சிலுவை வலிகளும் இறைவனின் மனக்குழப்பமும்


யேசு குறித்தும் அவரது மரணம் குறித்தும் சில தகவல்கள்… சிந்தனைகள்.

யேசு… குற்றம் சாட்டப்பட்டார், அவசர அவசரமாய்… அபாண்டமாய் கொலை தீர்ப்பளித்து…. இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்.. என்பதை வரலாறாய் நாம் வாசிக்கிறோம்…,


யேசு… இறைவனின் மகன். புதுமைகள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். தன் பரம பிதா.. தந்தையிடம் இருந்து எதையும் கேட்டுப் பெறும் ஆற்றல் பெற்றிருந்தார். இறந்து போன லாசரை உயிருடன் எழுப்பித்தார். தண்ணீரை.. திராட்சை ரசமாக மாற்றினார். அப்படி எத்தனை எத்தனையோ…… அவரின் இறுதிக் காலத்தை பார்ப்போமா….

அவருக்கு அப்போது வயது 33. தன் சாவு குறித்து அவர் உணர்ந்து கொண்டார். இன்று.. தான் பிடிக்கப் படுவேன் என அறிந்தார். அது மட்டுமா, அது எப்படிப்பட்ட சாவு என்பதையும் அவர் மிக தெளிவாக உணர்ந்தார்.

தன் சீடனாலேயே காட்டிக் கொடுக்கப் படுவேன், சவுக்கால் அடிக்கப்படுவேன், ரத்தம் விளாறு விளாறாக வழியும். வேதனை உச்சமாய் இருக்கும். முள்முடி சூட்டப்படுவேன். அது தலையை குத்திக் கிளிக்கும். கையிலும், காலிலும் ஆணி அடிக்கப்படுவேன். உடலில் இருக்கும் ரத்தம் முழுதும் வெளியேற, உடம்பில் ரத்தமே இல்லாமல், வெறும் தண்ணீராக இருக்கும். சிலுவையில் சாவேன்…..

என மிக தெளிவாக, உணர்ந்தார். இதையெல்லாம் நடக்கும் என்று அறிந்த உடனே… அவர் தன் தந்தையிடம்.. ஓடிச் சென்றார்… அவரை கூவி அழைத்தார்…. தந்தையே… பரம பிதாவே.. வேண்டாம்.. இது எனக்கு வேண்டாம்.. இந்த சாவு எனக்கு வேண்டாம்.. என்னை காப்பாற்றுங்கள். இந்த சாவை என்னை விட்டு அகலச் செய்யுங்கள் என மன்றாடினார்…
வானகத்திலிருக்கும் தந்தை… பதில் தரவில்லை… மௌனம்.. மௌனம்… யேசு கலங்கினார்… இன்னும் உரக்க கூவினார்…..

இறை மக்களுக்காக… எப்போதெல்லாம் கூவி அழைத்தாரோ.. அப்பொதெல்லாம் செவிமடுத்த தந்தை இப்போது பதில் பேசவில்லை…இறந்த லாசரின் சகோதரி… துக்கங் கேட்டு கலங்கி.. அப்பா தந்தையே… என அழைத்த போது… பரம தந்தை லாசர் உயிர் திருப்பிக் கொடுத்தார்…. அப்படி கொடுத்தவர்… இன்று தனக்கென ஒரு வரம் கேட்கும் போது தலை திருப்பி கொண்டார்…

கானாவூர் திருமணத்தில்…  தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியவர்… செவிகளை திருப்பிக் கொண்டார்… யேசு மேலும் கலவரமானார்… சற்று நேரம் கழிந்து மறுபடி கூவினார்… அழுதார்… வேண்டாம்.. வேண்டாம்.. என்னை காப்பாற்றுங்கள் என்றார்…

இப்போதும் இறைவனின் தந்தை அவரது குரலை கேட்கவில்லை…
யேசு.. மேலும் நடுங்கினார்… வியர்வை ஓடியது.. இன்னும் பயந்தார்… ரத்தம் தறி கெட்டு ஓடியது… ஓடிய ரத்தம் அபரிமிதமான வேகத்தில் ஓடியது… அந்த ரத்தம் இதயத்தை தாறு மாறாக ஆக்கியது…
ரத்தம்… வேர்வை நாளங்களில் எல்லாம் வழிந்தது… யேசு அஞ்சினார்… தன் சாவைக் குறித்த பயத்தால்… என்ன செய்வது என தெரியாமல் அலை மோதினார்..

அங்கிருந்து வந்து தன் சீடர்களை … பார்த்து… நான் கூக்குரலிட்டேன்.. தந்தை பதில் தரவில்லை.. எனக்காக நீங்கள் கேளுங்கள்…. எனக்காக பிரார்த்தியுங்கள்… என வேண்டினார்.. அவர்களை பிரார்த்தனை செய்யச் சொல்லி விட்டு.. மீண்டும் சென்று.. தந்தையிடம் பேசினார்…
மண்டியிட்டு, தந்தையே தந்தையே.. என குரல் கொடுத்தார்.. பதிலில்லை..… பதிலில்லை… தந்தையே.. தந்தையே.. ஏன்.. ஏன்… என்னை கை விட்டீர் என கூப்பாடு போட்டார்.
இல்லை.. தந்தை கேட்கவில்லை.. யேசுவுக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை.. சரி… என் நிலையை விட.. உங்கள் முடிவே முக்கியம். நான் தங்கள் சித்தப்படி… நடக்கிறேன்.. இச்சாவை ஏற்றுக் கொள்கிறேன்.. என சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து அகன்றார்…. இயலாமை.. இயலாமை… திரும்பி வந்து பார்த்த போது, சீடர்களும் தூங்கி கொண்டிருந்தார்கள்.. அழுகை.. பயம் எல்லாம் கோபமாக வெளி வந்தது… சீடர்களை பார்த்து கேட்டார்…

என்ன இது. ஒரு மணி நேரம் முழித்திருந்து எனக்காக பிரார்த்திக்க கூடாதா…
யேசுவின் மனித இயலாமைகளை நாம் காண்கிறோம்…. விவிலியத்தில் இறைமகனின் உணர்வுகள் தெளிவாக சொல்லப்படுகின்றன….

ஏன்.. ஏன் … இப்படி நடந்தது…

ஏன், பரம பிதா… வானக இறைவன்.. இப்படி செய்தார்… ஏன் தன் மகனை வலியுடனும் வேதனையுடனும் மரிக்க சம்மதித்தார்… அவர் நினைத்திருந்தால்… தன் மகனின் துயரத்தை துடைத்து இருக்கலாமே…
ஏன் இறைவன் யேசுவை கை விட்டார்…

இக்கேள்வி என்னிலும் தோன்றியது… மிக ஆதாரமான ஒரு கேள்வியாகவும் பட்டது, விடை உடன் தெரியவில்லை.. சில நாட்கள் ஆனது… வாரங்கள் ஆனது…  நேற்று திடிரென ஒரு விடை வந்தது.. இது சரியா என தெரியாது… ஆனால், இருக்கலாம் என பட்டது… அதை இதோ ஒன்று இரண்டு என பட்டியலிடுகிறேன்.. இது ஒரு சிந்தனை தான்.. இதை விட தேர்ந்த பதில்கள் தங்களிடம் இருக்கலாம்… சொல்லுங்களேன்… இதை பகிர்வதன் நோக்கமே… 

தங்களின் கருத்துக்களை கேட்கவும், கற்றுக் கொள்ளவும் ஆவலாய் இருக்கிறேன்…


1.   படைப்பில் இருந்து துவங்குவோம்… இறைவன்.. வானத்தையும், பூமியையும், அதில் காண்பவை காணாதவை என அனைத்தையும் படைத்தார்.

2.   மனிதனையும் மனுஷியையும் படைத்தார். மனிதனை இறையின் இயல்பாக படைத்தார்.

3.   அந்தோ பரிதாவம்… மனிதன் தன் உயர் நிலையை உணரவில்லை… அவனது படைப்பின் நோக்கத்தை உணரவில்லை.. மாறாக… அவன் கீழான விலங்கின் பரிமாணத்திலேயே தன்னை அடையாளம் கண்டான். இறைவன் மனிதனை படைத்த நோக்கமே.. வேறு… அவன் விலங்கிலிருந்து மேம்பட்டு இருப்பான், இறைக்கும் மற்ற உயிரினத்துக்கும் பாலமாய் இருப்பான்… இருக்க வேண்டும் என விரும்பினார்… அதுவே அவர் படைப்பின் நோக்கம்… இறைவன் வேண்டாம் என விலக்கிய சில சிற்றின்பங்களை மனிதன் … பின் சென்றான்…. பணம் புகழ் வீடு இன்பம்.. பேரு எனும் சுழலில் சிக்கி கொள்வதையே விரும்பினான்…, அவரின் சொல் பேச்சு கேட்கவில்லை..

4.   மனிதன் தன்னை முன்னிலைப்படுத்தினான்… தன் இயல்பை மறந்தான், துறந்தான்… இறைவன் கவலைப்பட்டார்… எப்படியாவது அவனை திரும்பவும் படைப்பின் நோக்கத்திற்கு இட்டு செல்ல விரும்பினார்… இறைவன் அவனுக்கு தீர்க்க தரிசிகளின் வாயிலாக பேசினார்… எப்படி நடந்து கொள்ளலாம் என அறிவுரை தந்தார்…

5.   மனிதன் தான் எல்லாம் தெரிந்தவன் ஆயிற்றே.. அவன் சட்டை செய்யவில்லை..

6.   மனிதன் மீண்டும் மீண்டும் முரண்டு பிடித்தான்… அப்படி என்ன தகராறு… மனிதனுக்கும் கடவுளுக்கும்… இது போதும்… என்று மனிதன் நினைத்தான்… செய்தான்… உதாரணம்… பணம் வேண்டும்… என் பணம் மட்டும் போதாது.. அடுத்தவன் பணமும் வேண்டும்… என்று நினைத்தான்.. பணத்திற்க்காக களவாடினான்… பணத்திலா இன்பம் இருக்கிறது என்கிறார் ஆண்டவர்… இறைவன் சொல்வதையே கேட்காமல், மனிதன் வேறெங்கோ ஓடினான்… இறைவன் திரும்பி பார்த்தார்… அந்த பெண்ணின் வடிவில் இன்பம் இருக்கிறது என ஓடினான்… இறைவன் அதில் இல்லை.. அது தற்காலிகமான சுகம் என்றார்… மனிதனோ… இது போதும்… இது போதும் என்றான்… இறைவன் இது சிற்றின்பம்… உனக்கு வேண்டாம்… என்றார்… மனிதன் அங்கே காணவில்லை.. அவன் வேறு இடத்துக்கு.. வேறு ஆசையுடன் சென்று விட்டிருந்தான்… இறைவனே மலைத்து போனார்… ஒரு இடத்தில் நிற்காமல்.. ஏன் இப்படி இன்பம் இன்பம் என ஓடுகிறான் என புரியாமல் பார்த்தார்….

7.   ஏன் ஆரம்ப கட்ட சுகங்களில் … தன்னை ஈடுபடுத்தி.. அடுத்த அடுத்த என முயன்று கொள்கிறான் என யோசித்தார்…

8.   பின்… வேறு சில நன்மக்கள் மூலமாய்…. பேசினார்.. இப்போது… சற்று இறங்கி வந்தார்…. சரி, நல்லது செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை… படிப்படியாய் மேலே செல்லலாம்… கெட்டது செய்யாதே… சமூகத்தை வதைக்காதே… அட்லீஸ்ட்… இதையாவது செய்.. என சில ரூல்ஸ் அனுப்பினார்… பத்துக் கட்டளைகள்… கொலை செய்யாமலிரு, மோக பாவம் செய்யாமலிரு, களவு செய்யாமலிரு……… என ஒரு மீனிமம் ப்ரோகிராம் ஒன்றை அனுப்பினார்..

9.   மனிதன்.. அதை வாங்கி கொண்டான் சட்டை செய்யாமல்… காது கொடுத்து கேட்காமல், தான் நினைத்த மூப்பாய்… முயங்கி கொண்டிருக்கிறான்..

10. காசு.. பணம்… துட்டு.. மணி.. மணி… பெண்கள்… இன்பம்… இன்னும் இன்னும் இன்பம்… உறவு.. உறவு.. நட்பு எல்லாம் நட்பு… ரொம்ப முக்கியம்… எதுலயும் நான் தான் பெஸ்ட்.. மிச்சவனெல்லாம் எனக்கு அப்புறம் தான் நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்டு… நாந்தான் பெரிசு பெரிசு… எனக்குத்தான் பெரிசு.. பெரிசு….. அவன அடி, இவன கொல்லு எதுவும் ஒக்கே தான்… எனக்கு … ஜமக்கு ஜமக்கு…

11. இறைவன்… எப்படி எப்படி இவனுக்கு உணர்த்துவது என யோசித்தார்…. சரி, ஒரு வழி இருக்கிறது என கண்டு, எல்லா விலங்கினங்ளிலும் ஒரு ஜோடி என தேர்ந்தெடுத்து……….. ஐஸ் ஏஜ் காலத்தில்…….. ஒரு பெரிய பிரளயம் உண்டாக்கி, அத்தனை மனிதர்களையும் அழித்தார்.. க்ளீன் சிலேட் போல…. ஒரு நோவாவின் சந்ததி செய்தார்… இனி வரும் சந்ததியாவது நேராக இருக்கும் என்றார்…


12. ம்.. ஹூம்.. பலனில்லை… அதிலும் ஒரு பெரிய மாற்றம் இல்லை.. நோவா… நோ……. வாகவே போனது… இறைவன் விடுகிற பாடாக இல்லை…

13. நன் மக்களாய் தேர்வு செய்து,  நாம் அறிவுருத்தினோம்… ம்.. ஹூகும்… மனிதனோ… அவர்கள் சொல்வதை கேட்பதில்லை.. எனவே.. என் மகனையே அனுப்புவோம்… என தீர்மானித்தார்…

14. சரி, என இன்றிலிருந்து….  ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்….. தன் ரெப்பரசெண்டேட்டிவ்வாக… இறை மகனை அனுப்பினார்… அவரும் இங்கு வந்து போதிக்க துவங்கினார்..

15. போதனைகளை சிலர் கேட்டார்கள்.. அங்கும் வந்து, போதனைகள் அப்புறம் பாக்கலாம்..முதல்ல எனக்கு இதை தாயேன்.. இதை கொடேன் என பிச்சை பிரார்த்தனைகளையே பெரிதும் முன் வைத்தார்கள்..

16. இறை மகன்.. தலைமைப் பண்பே சேவைதான், உங்களுக்கு தலைவன் ஆக வேண்டுமென்றால், உன் சீடனின் பாதத்தை கழுவு என்றார்…. ம்… ஒக்கே… சொல்றது சூப்பராயிருக்குது… செம மேட்டரு…….. என அவரை பாராட்டி விட்டு, கேட்காத காதை ஆட்டி விட்டு……  நான் தான் பாசு…….. மிச்சமெல்லாம் தூசு…… என்றோம்… மனதில் எளிமையாயிரு.. விண்ணரசு உன்னதே என்றால்………. ஆங்.. யெஸ்.. யெஸ்.. ஞாயித்துக்கிழமை பூசைக்கு வருவேன்… வந்துட்டு……….சீக்கிரம் போகோணும்……. ஆமா… நிறைய பணம் பண்ணனும்.. என்றான்… ‘…. கோடி கோடியா பணம் கொட்ட ஏற்பாடு பண்ணு ஆண்டவரே…. என்றோம்………. நான் கோவிலுக்கு வர்றேன்… ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பேன்… ஆனா……தண்ணீரை ரசமாக மாற்றித்தா என மனிதன் கேட்டான்… குடும்பம் செய்வேன்.. எனக்கு உறவு போதும்.. எனவே.. செத்தவனை உயிருடன் தா…… என கேட்டான்…

17. மனிதன்.. தன் இறை இயல்புகளை மறந்து விட்டு, பிச்சை பாத்திரமாக மாறி, விழும் ஒன்றிரண்டு சில்லறை காசுக்காகவும்.. புகழ், பணம், நறுவீசு, சமூகத்தில் பெரிய ஆள், ஈகோ எனும் அழுக்குத்துணியை கழையத்தயாராக இல்லை… இப்போது இன்னும் ஒரு அதிர்ச்சி.. இறை மகனை சிலுவையில் கொல்ல தயாரானோம்…

18. என் மகனையா நீ கொல்லப் போகிறாய்… என் மகனையா நீ துன்புறுத்தப் போகிறாய்… உன்னை பாதுகாக்கும் என்னையா நீ இப்படி இம்சிக்க போகிறாய் என இறைவன் அதிர்ந்தார்… என்றாலும்.. மனிதன் திருந்த இதில் வழி உண்டா என நினைத்தார்…


19. இறைவன் யோசித்தார்… இவனை அழித்தும் பார்த்தாகி விட்டது, அறிவுரை சொல்லியும் பார்த்தாகி விட்டது… இனி என்ன செய்ய………. என யோசித்து…….. ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார்………. அது அஹிம்சை.. ஆம், அடித்தால்… சகித்து கொள்ளும்… ஆயுதம்…

20. அதைத்தான் இறைவன் செய்தார்…. மனிதன் மேல் கொண்ட அன்பினால் அதை செய்தார்.  அடித்த கை ஓய்ந்து, தளர்ந்து நிற்கும் போது, எதிரில் .நிற்கும் அடித்தவனை பார்க்கும் கொடுமை…. மிக வலியானது… சே.. நானா இப்படி அடித்தேன்.. நானா இப்படி மிருகமானேன்… என நினைப்பது மிக கொடுமை.. அப்படியாவது மனிதன் மனிதம் பெறுவானா என நினைத்தார்.

21. தன் மகனை… பலி கொடுக்க தீர்மானித்தார்… ஒருவன் தன் மகனை அடிக்கும் போது, ரத்தம் வழியும் போது, தந்தையின் மன நிலை எப்படி இருக்கும் ………. என்பது ஒரு தகப்பனுக்கு புரியும்…….

22. தன் வேதனையை சகித்து கொள்ளும் எவரும் கூட, தன் மகனின் சிறு வேதனையை பொறுத்து கொள்ள மாட்டான்.

23. வானுலகில் இருந்து, தந்தை… கடினமாய்.. தன் காதுகளை திருப்பி கொண்டார்… தன் ஒரே மகனின்.. கூக்குரலை… செவி கொடுக்காது இருந்தார்… தம் மகனின் கூக்குரலை புறக்கணித்தார். சிலுவைச்சாவை… தன் மகனின் பாடுகளை அங்குலம் அங்குலமாக அதை விட மேலான விதத்தில் தாம் உணர்ந்தார்… பல மடங்கு மேலாய் துயரம் கொண்டார்…

24. சிலுவை மரணம் குறித்த… தன் மகனின்….  யேசுவின் கூக்குரலுக்கு செவி மடுக்காத இறைவன்… அவரைப் பிடிக்க வந்து… யேசுவின் சீடரால் வெட்டப்பட்ட… காதை ஓட்ட வைக்கும் அற்புதத்திற்கு செவிமடுத்தார்… அதை செய்து கொடுத்தார்…

25. மனிதன் இன்றாவது அதை உணர்வானா…இறைவன் எல்லையில்லா அன்புள்ளவன்… கருணையுள்ளவன்… தன் படைப்பு.. எத்தனை அகங்காரம் கொண்டாலும், தவறு செய்தாலும்.. இப்போது திருந்தி விடுவான், இப்போது சரியாவான் என காத்து கொண்டு இருக்கிறார்… அஹிம்சையை முயற்சி செய்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது… அடுத்த ஆயுதம் என்னவோ,…..