பக்கங்கள்

நீலம்...... நிறமா? உணர்வா?

வண்ணம் பார்க்கும் கண்கள், மூளைக்கு சொல்லும் சேதி என்ன? ....

அடுக்கடுக்காய் கேள்விகளாய் கேட்டு கொண்டே இருக்கிறேனே....

நேற்று என்னை பாதித்த ஒரு சிந்தனை பங்கு வைக்கும் போது
இத்தனை கேள்விகள். இந்த பதிவு முடிந்த பின் மேலும் கேள்விகள் உங்களுக்கு வாய்க்க வாழ்துக்கள்

நீயோன் விளம்பர பலகை வெளிர்ந்த நீலத்தில் பளிச்சிட்டது

விளம்பர சுவாரசியம் இல்லாதால் கண்கள் வெறுமையாய் அதையே பார்த்து கொண்டு இருந்தது. மனம் வேறு எங்கேயோ …., என்ன துரதிர்ஷ்டம் !!! மனிதன் மட்டுமே இப்படி .
இருப்பது ஒன்று, செய்வது மற்றொன்று , சிந்திப்பது வேறொன்று என்று அஷடாவதானியாய்.
இல்லையோ .... ஓவ்வொரு அங்கமும் ஓவ்வொரு வேலை செய்வதால் …. மெய் - புலம் - வெவ்வேராய்
மன ஒருங்கிலே ஒரு வேறுபாடு. ஆழமாய் சிந்திக்க உந்துதல். ஆச்சர்யமாய் என்னை நானே கேட்கிறேன். ஏன் இப்படி.
திடிர் என்று ஏன் இத்தனை ஆழமான சிந்தனை.
கணினிக்கு தெரிந்த மொழி எது. 0 அல்லது 1
இதை தவிர எதுவும் தெரியாது. நமக்கு புரிய வேண்டும் என்பதால் வேறு மொழிகளை உருவாக்கி கொண்டோம்.
அது போலே மனித மூளை மொழி வர்ணம் எனும் போது .... நீலம்...... நிறமா? உணர்வா?
--------------------------------------------------------------------

சுத்தி வளைக்காம நேர விஷயத்தை சொல்லு ..... என்பவருக்கு

தற்செயலா நீலத்தை உத்து பாத்தேன் . ஜிவ்வுன்னு மண்டைக்குள்ளே தாருமாரா யோசனை. டீப் திங்கிங். ஏன் இப்படி .... ராத்திரியிலே தூங்கும்போது பாக்கிற கனவு ப்ளக் அண்ட் வைட். ஏன்னா மூளை உள்ளுக்குள்ள பேசிக்கிற மொழி வர்ணம். அதனாலதான் வர்ணம் மூளைக்குள்ளே போயி சில உணர்வுகள தூண்டும்.

ஜாக்கிரதையா நம்ம உணர்வுகளை வர்ணத்து கிட்ட இருந்து காப்பாத்துவோம்

கர்நாடகா ... கர்... புர்

சேனா – மது.

அருகருகே இருந்தாலும் பகைமையாய் உட்கார்ந்து இருந்தனர். ஒரே ஊரை சேர்ந்தவர்களே . நேற்று வரை பிரச்சினை இல்லை.
ஆனால் இன்று நிலை வேறு. உடகங்கள் எல்லாம் இன்று இவர்களை பற்றியே. அரசியல் கூட இன்று அவர்களிடையே அருகில் உட்கார்ந்து அளவளாவி கொள்கிறது

மது : ஏன் என்னை அடிச்சே....
சேனா: நீ ஏன் குடிச்ச …..
மது : அதுக்கு அடிப்பியா
சேனா: ஆமா நீ நாட்ட, நம்ம கலாச்சாரத்தை கெடுக்கிரே
மது : நீ குடிக்க மாட்டியா
சேனா: நான் ஆம்பிளை
மது : ஓஹோ. நான் பொம்பளே, அதான் பிரச்சினையா
சேனா: பேச்ச மாத்தாதே , உங்க வீட்டுலே அப்பா நீ குடிச்சதுக்கு கொஞ்சுவார ….. தூக்கி போட்டு மிதிக்க மாட்டாரு , உன் அண்ணன் உனக்கு ஊத்தி கொடுப்பானா ….
நாம் யார் பக்கம். மதுவா……. சேனாவா .....

நல்ல கிளப்புராங்கையா பீதிய........ படுக்காளி

செய்தி : மங்களூர் நேற்று பகலில் சேனா உறுப்பினர் சிலர் மது அருந்தும் இடம் சென்று அங்குள்ள பெண்களை அடித்து விரட்டினர்.

பதிலுரைக்கு பதில்

தனி மனித ஒழுக்கம் என்ற பதிவின் பின்னோட்டம் பிரமாதம்.
பதிவிற்கு நன்றி.
சரி தான். நீங்கள் நினைத்தும் பதித்தும் உண்மை.
ஆழமான பார்வைக்கும், கருத்து செறிவுக்கும் பாராட்டுக்கள்.

விபசாரம், திவிரவாதம், ஹவாலா, கடத்தல், ஆள் கடத்தல், அடிமை
வேலை என்ற துபாயின் முகங்கள் மறுக்க முடியாது என்றாலும், அதை இன்னொரு பதிவாக சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன்.
என் வேலை சுலபம் ஆகி விட்டதே, உங்கள் பட்டியலை சொல்கிறேன்.
அதிலும் இந்த அரசு எடுத்த கோட்பாடு கோடு பற்றி சொல்லி ஆக்க புர்வமாய் பார்க்க எண்ணம் உண்டு.

துபாய் - சட்ட மீறல்கள் இல்லாத, புண்ணிய பூமி எனபதல்ல என் வாதம்

தனி மனித ஒழுக்கமாய் நான் பார்த்தது - பெரும்பான்மையான ஒரு 70% மேலான வாழ்க்கை நடைமுறை என்பது என் கணிப்பு
வாதங்கள் சிந்திக்க வைக்கும், எண்ணங்கள் விரிவாக்கம் செய்யும்.
தங்கள் எழுத்துக்களை வேண்டி விரும்பும் - படுக்காளி

வளைகுடாவில் வானவில் -2

துபாயில் கால் பதித்து, சாதித்த பாதித்த விஷயங்களை பட்டியலிட்டபோது ….
முந்தைய பதிவில் அபரிமிதம் என்று சொல்லி அரை கிலோ கறி சாப்பிட்டோம்.

இது இரண்டாமாவது ‘தனி மனித ஒழுக்கம்’
இரண்டு நிகழ்வுகளின் ஊடே இதை விவாதிப்போம்

1. சோம்பலான காலை வேளை, விடுமுறை நாள். நான்கு முக்கு சாலையில் சிக்னல்.

கிரீச்சிட்டு நிற்கிறது ஒரு சொகுசு வாகனம். திடீர் என்று வலது திசையில் செல்ல முடிவெடுத்து, வண்டியை எடுக்கிறார் வாகன ஒட்டி, பாதசாரி செல்லும் பச்சை விளக்கை கவனிக்காமலே.

-நடக்க யாரும் பாதசாரி இல்லை என்றாலும் சாலை விதிகள் சிறிதாக மீரப்படுகிறது!!!

ஓரத்தில் நின்ற காவலர் அவரது கார் நம்பர் வைத்து அபராதம் எழுதினார். இதை கவனித்த வாகன ஒட்டி தன் தவறை உணர்ந்தார். மன்னிப்பு என்பதாய் கைகளை தூக்கினார், காவலரும் சிரித்தார். வண்டி கடந்து சென்றது.

அவர் இரங்கி வர முயற்சிக்கவும் இல்லை, காவலர் அபராதம் எழுத தவறவும் இல்லை . வாதித்தாலோ கெஞ்சினாலோ பருப்பு வேகாது என்று அவருக்கும் தெரியும். கண்ணுக்கு தெரியும் இலக்கத்தை எல்லாம் எழுதி தன் அதிகாரத்தை இவரும் தவறாக பயன் படுத்த மாட்டார்.

2. வானொலி நிலையங்கள் சாலை நெரிசல் பற்றிய தகவல்களை அடிக்கடி தரும்.
நெரிசலில் அவதி படுபவர் தம் தொலைபேசி மூலமாய் தகவல் தருவார், மற்றவருக்கு உதவும் வகையில். முகம் தெரியா, தொலை பேசி தகவல்களை அடிப்படையாய் கொண்டு வானொலி நிலையங்களும் தகவல் தரும் . யாரும் இது வரை தப்பாய் சொன்னது இல்லை.

3. சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி, வாகன நிருத்தலுக்கான கட்டணச் சீட்டு எடுத்து, வெளிப்புரத்தில் இட்டு செல்வார். வேண்டுமென்றல் நாம் எடுக்கலாம் ஒரு ரூபா மிச்சம் பிடிக்க.
சக வாகன ஓட்டுனர் யாரும் அப்படி எடுத்தது இல்லை

கண்ணில் விளக்கெண்னை ஊற்றி தேடினாலும் அரை பிளேடு ஆறுமுகமும் , பிக் பாக்கெட் பீட்டரும் கிடைத்ததே இல்லை.

ஏன் இந்த நிலை ….

* சின்ன தேசம்
* சுருங்கிய ஜனத்தொகை
* கண்டிப்பான சட்ட திட்டம்
* சட்ட மீறல்களை கண்காணிக்க சீரிய தொழில் நுட்பம்
* தொலை நோக்கு பார்வை கொண்ட சட்ட நுணுக்கம்
* வேலை இருந்தாலே வாழ முடியும் - இல்லை என்றால் எது விசா

அச்சில் ஏராத அற்புதம்

என் பெரு மதிப்பிற்குரிய இருவர்,
நல்ல தமிழுக்கு என்னை அறிமுகப் படுத்தியவர்கள் .
நல்ல ரசிகர்கள் , நல்ல படைப்பாளிகள் .

அச்சேறாத இந்த கவிதை வரிகள் என்றும் சாஸ்வதம்,
தமிழுக்கு பெருமை என்பது வாஸ்தவம்

ஒன்று
"மழை நனை பனை போல் மதி அழகுடையோள்"
(நனைந்த பனை - பளிச்சிடும் கருமை )
மற்றது
"இரு மனம் விழி வழி எழுதிய கவி பல "

தாண்டி நின்ற பெருமிதம்

படுக்காளியின் பதிவை பார்த்து பின்னூட்டம் எழுதிய அன்புக்கு நன்றி
நான் எழுதிய பதிவை விட பிரமாதமான தமிழ் , உயர்ந்த கவி நடை

ஒரு விமர்சனம் என் படைப்பை தாண்டி நின்ற பெருமிதம்

தங்கு தடையில்லா பொங்கு தமிழில் ...
சொந்த உணர்வுகளின் சந்த நடையில் ...
புன்னகை மலர்விக்கும் நகைச்சுவை எழிலில் ...
ஆழ்ந்த கருத்துக்களின் சிந்தனைத் தெளிவில் ...
படிக்கப் படிக்கத் தித்தித்தது
பல நினைவுகளைப் புதுப்பித்தது
நன்றி !! ஜோ பாஸ்கர்.....

காணும் பொங்கல்

அலுவலக வேலை - நேரமின்மை என்று, சோம்பேரித்தனத்துக்கு தங்க முலாம் பூச முயற்சி செய்த போது, அண்ணன் கட்டளை எனை எழுத தூண்டியது . நன்றி .

காணும் பொங்கல் .

கரி நாள் , ஏன் இந்த பெயர் வந்தது … தெரிந்தால் சொல்லுங்களேன் .

பொங்கல் கொண்டாடிய எல்லோரும் நிச்சயம் எடுக்க வேண்டிய முடிவு பயணம் செல்வது. பண்டை தமிழரின் நிலாச்சோருநிகர்த்த நிகழ்வு.

கடமைக்காய் குடும்பத் தலைவர் ஒரு நாள் வெளியில் செல்லும் ஆசையோடு - சுதந்திரக் காற்றுக்காய் குடும்பத் தலைவி, அடுத்த வீட்டு மல்லிகா புடவையும் தெரிந்து விடும் எனும் நப்பாசையோடு. பருவத்தின் வாயிலில் உள்ளோர்கள் விளம்பரப் படுத்தும் குதுகூலத்துடன்.

முயல் தீவு, சிங்காரத் தோப்பு, கோரம் பள்ளம், ரோச் பூங்கா, கட்டபொம்மன் கோட்டை என மற்ற நாட்களில் மறந்திருந்த இடங்கள் எல்லாம் இன்னிக்கு மவுசு.

வருடம் பூரா மீன் பிடித்த படகு இன்று பயணிகள் வாகனம் ஆகும். ஸ்பெஷல் பஸ் - பேருந்து நிலையத்தை நிறைக்கும்.

முந்தைய நாள் வெண் பொங்கல் இன்று புதிதாய் பாத்திரத்தில் இடம் பிடிக்கும். புலால் உண்ணும் கூட்டத்தின் சாப்பாட்டு பொதியில் வருத்த கரி மூக்கை துளைக்கும். எப்போதும் சண்டை உண்டு - சோத்து மூட்டை தூக்க. தூக்கி வீச ஏதுவாய் பொதி தயார் செய்ய சொன்னாலும், அம்மா எப்போதும் பாத்திரத்திலே அடைத்திடுவார், ஆத்திரமாய் வார்த்தை வரும் .
சீக்கிரமாய் கிளம்ப வேண்டும் நல்லதாய் இடம் பிடிக்க என்றாலும், எப்போதும் தாமதம் ஆகும்.

போகின்ற வழி எல்லாம் சந்தோசமாய் மனிதர்கள். நாம் தீர்மானித்த இலக்கு அடுத்தவர் ஆலோசனையில் கேள்வியாய் நிற்கும்.
"தண்ணி வசதி சரி இல்லை அதான் முயல் தீவு போகாம கட்டபொம்மன் கோட்டை”
பேருந்து நிலையத்தில் மறுபடியும் சோதனை. நாம் செல்ல வேண்டிய இலக்கில் பேருந்து குறைவாய் இருக்கும் அல்லது மிகுந்த கூட்டத்தோடு இருக்கும்.

தொலைவில் தெரியும் நமக்கான பேருந்து. பர பரப்பு உடம்பில் தொற்றும். உட்கார இடம் தேடி, உதிரம் உட்சத்தில் ஓடும். இடம் கிடைத்து பெரு முச்சு வரும் போது உலகையே வென்றதாய் இருக்கும்.

இடம் கிடைக்காது நிற்கின்ற சக பிரயாணிகளை பாவமாய் பார்க்க தோன்றும். சில சமயம் சிக்கல். தெரிந்தவராய் இருந்து, நிற்கும் தகுதியை கடந்து இருந்தால் நம் சீட் பறி போகும்.
ஓடாத பஸ்சில் - தூசியான காலடியில், உணவை வைக்க மனம் இல்லாது மடியிலே வைக்க நேரிடும். சில சமயம் சுடும்.
பேருந்தின் வயிறு பிளந்து காக்கி சட்டை ஓட்டுனராய் அமர ஆறுதல் ஓலமிடும். உடம்பெல்லாம் விரைப்பாகும்
அடித்து வீசும் முரட்டு காற்று வியர்த்த தேகத்தில் இன்பமாய் படரும். பயணசீட்டு வழங்க வேண்டி ஊர் எல்லையில் நிற்கும்போது சுத்த காற்று உத்வேகம் தரும். விடுமுறை நாளிலும் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்துனர் அவர் தம் குடும்பம் என இறக்கம் எட்டி பார்க்கும்.
இலக்கை அடைந்ததும் நல்ல இடம் தேடி கண்கள் அலையும். தேர்வு செய்த இடத்தில் அரை மனதாய் போர்வை விரிக்க படும். துவைக்கும் கடினம் தோன்ற அக்கரையாய் அம்மா பார்பார். விரித்து வைத்த போர்வையிலே, மர நிழலிலே நம் இருப்பு நிச்சயம ஆகும். இனி இது நம் இடம், நாம் எழுந்து செல்லும் வரை. சக மனிதர் சுற்றி இருப்பார்.
குடும்பம் இணைத்திடும் இன்பமாய் அன்பிலே. நேற்று போட்ட சண்டை கூட இன்று மறந்திடும். இது நம் குடும்பம் என்று பெருமையாய். சோத்து பொட்டலம் பிரிக்கலாமா என்று பெரிசுகள் சொல்லும். இளம் சொட்டு உறுப்பினர் எல்லாம் ஒரு நடை செல்ல ஆசை படுவார் . எச்சலுக்கு ஆசை பட்டு நாய்கள் கூட நம்மருகில்.

புதிய சூழ்நிலையில் சாப்பாட்டின் சுவை கூடும். பறந்து வரும் தூசிகூட எளிதாக மறந்து போகும். அடுத்த வீட்டு சாப்பாட்டு நம்மை விட நல்லதாய் தோன்றும்.
ஒரே உடையில், சீருடையாய் கூட்டமாய் திறிந்திடுவார், தனி மனித அடையாளமோ அங்கிகாரமோ வேண்டாத / விரும்பாத சில காளைகள்.
சுற்றுலா வந்தாலும் கடமையாய் ரேடியோ கேட்கும் சிலர், கேட்பது தங்களுக்காகவா அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்கா
நெருங்கிய நண்பர் என்றாலும் குடும்பத்தை அறிய மாட்டோம் . இன்று அறிமுகம் கிடைக்கும்.

சிலருக்கு காதல் பூக்கும், பூத்த காதல் சிலருக்கு மலரும், சந்தோஷமான மனதில் நல்லதே நடக்கும். கனவில் உள்ள தேவதையை சிலர் இங்கு தான் இன்று தான் காணுவர், நாளையில் இருந்து அவன் நாற்பது நாட்களுக்கு காதல் கவிதை எழுதி திளைப்பான். வெகு காலமாய் முயன்று வரும் தன் காதல் சிலருக்கு தோற்கும். தன் நாயகியை வேறு ஒருவரோடு காண்பார், நாளை முதல் தாடி வளர்ப்பார். அவரும் கவி யாவார்.

சூரியன் மேற்கில் சாய மெதுவாய் கிளம்பி வீடு வந்து சேருவோம், அடுத்த முறை பயணம் எங்கே என்று அன்றே தீர்மானிப்போம்.

நாளை அலுவல் நோக்கி ஆவலாய் காத்திருப்போம், அடுத்த முறை ஆயதங்கள் மறுபடி இனிமை சேர்க்கும்.

பொங்கல் பொங்குச்சா

பள்ளி நாட்களில் படுக்காளி குதூகலித்தது, பங்கு வைக்கும்போது பரவசம் ஆகிறது .

பத்து நாட்களுக்கு முன் தான் கிறிஸ்து பிறப்பு, புது வருட பிறப்பு.
மீண்டும் ஒரு கொண்டாட்டம். சலித்ததே இல்லை.

கொண்டாட்டத்தின் ஆயத்தங்கள் ஊக்கம் தரும். உற்சாகத்திற்கு வேர் ஊன்றும்.
பொங்கல்கட்டி
, தூசு தட்டி எடுப்பது முதல் படி. ஒரு வருடமாய் பார்க்காததால் ஒளிந்துகொண்டு இருக்கும் மூன்று கட்டிகள் , கிடைத்தும் நிறைவு தரும். சுலபமாய் கிடைக்கும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் மக் - சுண்ணாம்பு வாங்க .

சுடுகாடு பக்கத்தில் சுண்ணம் விற்கும் கடையிலே கூட்டம் பர பரக்கும். தர தர வென கொதித்து கொண்டு இருக்கும், சுண்ணம் பெரிய திவலைகளிலே . வெண்ணை போலே இருந்தாலும், வாசனை கிரு கிறுக்கும் . லேசாய் சூடிருக்கும். ஒரு கோப்பை நாலணா.

சிப்பி சுண்ணாம்பு வாங்கி , பக்கத்து கடையிலே காவி பொடி வாங்கி, மேல் சட்டை பையில் வைத்து , வீடு வந்த பின்பு தெரிந்தது சட்டையை வீணாக்கியது. ஆச்சியிடம் திட்டு.

வெள்ளையாய் வர்ணம் பூசி காவியிலே இடை கோடு. எட்டி பார்த்த ஆச்சி பாராட்டி விட்டு செல்வார்.
ஊரெங்கும் உற்சாகம், புதுசாய் முளைத்திருக்கும் சாலையிலே கடைகள். கரும்பு ஓய்யாரமாய் சாய்ந்து இருக்கும், காய்ந்த பனை ஒலை குவிந்து இருக்கும், கண்ணு பிள்ளை பஞ்சு தொங்கி கொண்டு இருக்கும். காய் கறி கடைகள் கல கல விற்பனையில் .

கொண்டாட்டம் போகியில் தொடங்கும்.
உடைக்கத் தயாராய் மண் பானைகள் திராவிட பாரம்பரியம். எரிக்கும் வழக்கம் ஆரிய உபயம் என்றாலும், சைக்கில் கடையில் வாங்கிய பிஞ்சு போன டயர் - பற்ற வைத்தால் பரவசம். புகை கக்கும் டயர் சுழற்சியிலே நெருப்பு பூ பூக்கும்
பொங்கல் தினம்.
விரித்து வைத்த வாழை இலையில் சாஸ்திரத்துக்கு என்று எல்லா காய்கறிகள். இறைவனுக்கு படையல் இயற்கைக்கு படையல்.
கண்ணு பிள்ளை பஞ்சு வாசலிலே வேப்பன்கொழுந்துடன் கூட்டணி.

கொதிக்க தயாராய் மூவரும் கோதாவில் . முக்கோணமாய் பொங்கல் கட்டிகள், பச்சரிசி களைந்த உலை நீர் , மஞ்சள் கிழங்கு சுற்றி- அழகிய கோலமுமாய் பொங்க பானை .

சூரியனுக்கும் நமக்கும் போட்டி. சரியாய் அவன் வருவதற்கு முன் நாம் பொங்கலை பொங்க வைத்து விட வேண்டும்.
ஊதுகுழல் அன்று பெரிதாய் கிராக்கி.

ஆவேசத்தில் ஊதும்போது தலை கிரு கிறுக்கும். ஆக்ஸிஜன் அளவுக்கு அதிகம் ஆனதால் - மண்டைக்குள்ளே .

பொங்கிய பானையிலே மனதும் பொங்கும்.
மங்கள குலவை ஒலி குயில் போலே மலரும் .
பொங்கலோ பொங்கல் என்ற சத்தத்தில், தெரு திரும்பி பார்க்கும்.

புத்தம் புது உடையிலே நண்பர் எல்லாம் வருவார்.
பொங்கலின் வாழ்த்து இது "பொங்கல் பொங்குச்சா "
என் சோட்டு காரர் எல்லாம் எடக்காய் பதிலுரைப்பார்
"வயிறு வீங்குச்சா "

உறங்காத ராத்திரி -7 நிறைவு பகுதி

சற்றே குறுகலான சந்தில் ஒரு இருட்டில் ஒளிந்து இருந்தது அந்த விலாசம். தொலை பேசி விற்பனை செய்யும் ஒரு மொத்த விற்பனைய்ளார் அலுவலகம் .

இருண்டு கிடந்த அலுவலகத்தில் என்ன செய்ய. கை பிசைந்து கொண்டு நிற்கும் வேளையிலும் நம்பிக்கையை விட வில்லை.

சுற்று முற்றும் பார்த்தான். மொத்த தெருவும் வெறிச்சோடி இருக்க, ஒரே வீட்டில் மட்டும் விளக்கு. மெல்ல நடந்து அந்த விளக்கு உள்ள வீட்டை அணுகினான், ஆட்டோ காரன் எச்சரித்தான் " வேண்டாம் சார் கத்த போறாங்க " தயக்கம்தான் என்றாலும் சுருக்கமாய் தன் பிரச்சினையை சொன்னான் பிரபா. தீவிரத்தை உணர்ந்த அந்த நல்ல மனிதர் உடன் இரங்கி வந்தார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். விலாசத்தின் அருகில் வந்து தீவிரமாய் உற்று நோக்கினார்

அடுத்த வீட்டிலுள்ள மனிதரை எழுப்பினார். பிரபா முயண்டிருந்தால் முடியாதது. சுருக்கமாய் விவரம் கேட்டு, உதவ தயாராய் அவரும் வந்தார்.

நான்கு ஐந்து பேர் கூடி நின்று விவாதிக்கவே, அரவம் கேட்டு எதிர் வீட்டில் விளக்கு எரிந்தது. வந்தவர் கேட்டார், விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் சொன்னார்

"அங்கே வேலை செயிரவுங்க மொட்டை மாடியிலே படுப்பாங்க சார் " குழுவே சுரு சுருப்பானது. கூட்டத்தில் உள்ள இளைஞன் ஒருவர் சுவர் ஏறி உள் குதித்தார். ஏணி ஏறி மொட்டை மாடி சென்று சிறிது நேரமாய் தெரியாமல் இருந்தார்.

கால் மாற்றி அவஸ்தையில் நின்று கொண்டு பிரபா. வந்து இறங்கிய போது உள்ள நிலைமய்க்கும் இப்போதுக்கும் உள்ள வேறுபாடு கண்டான். ஆட்டோ டிரைவர் சொன்ன போது, " ஒண்ணும் முடியாது சார், நாளைக்கு காலையிலே வந்து பாரு" என்ற போது தயங்கி நின்றது நினைவுக்கு வந்தது.

இந்த முயற்சி தந்த விளைவு நம்பிக்கை தந்தது. தத்துவம் ஒன்று பளிச்சிட்டது. ‘விரும்பினால் அடையும் இலக்கு’

தனக்காய் உறக்கம் துறந்து உதவ நின்றிடும் அந்த குழுவை பார்த்து பெருமிதம் கொண்டான். நான் இவர்களுக்கு எப்படி கை மாறு செய்வேன் என்று மனதினுள் பிதறினான்.

குதித்த நண்பர் மற்றொரு மனிதருடன் வெளி வந்தார். கால் சட்டை அணிந்து தயாராய். "ஒண்ணும் பிரச்சினை இல்ல சார், நம்ம அவன் வீட்டுக்கு போயிடல்லாம் " என்று நம்பிக்கையாய் கை பிடித்தார்

இந்த உலகம் நல்லவர்களாய் இருக்கிறது, நல்லவர்களை தாங்குகிறது.

அரை மணி நேர பயணம்.

இலக்கை அடையும் முனைப்பு இருந்தாலும் சந்தேக கேள்விகள் இப்போது குடைய ஆரம்பித்தன. யார் இவர். எப்படி இவருக்கு நம் உறவினர்களின் தொலை பேசி எண் கிடைத்தது. இதெல்லாம் பொய்யா . மனம் விசித்திரமானது, தீர்வுகளை காட்டிலும் குளப்பத்துக்கே முன்னுரிமை

இறுதியாக அந்த வீட்டை அடைந்த போது மணி 4.30

கதவு தட்டலில் சன்னல் திறந்தது ஒரு பெண்மணி தலை தெரிந்து "யாரு ". கூட வந்த அலுவலக நண்பன் குரல் கேட்டதும் தலை விலகியது. விளக்கு எரிந்தது.

சற்று நேர காத்திருப்பில் கதவு திறந்தது.
"வாங்க” என்று சொல்லி கதவை திறந்த போது ; திறந்த கதவு வழியே உள்ளே நுழையும் முன் தெரிந்தது.

ஓரத்தில் பச்சை பை.

பை திரும்ப கிடைத்தும், பயணம் நிச்சயம் ஆனதும், தெரிந்த காட்சியில் பிரபா திகைத்தான். கண்ணிர் கழுக்கென்று வந்தது. பெரு முச்சு நீண்டதாய் . சுவரில் சரிந்து அழுதான்.

உள்ளே நுழையாது வெளியில் இருந்து அழும் அவனை அந்த குடும்பம் ஆதரவாய் பார்த்தது , அன்போடு அரவணைத்து உள்ளே வா என்றது. எதுவும் பேச வேண்டாம், முதலில் பால் சாப்பிடு என்றது. தொலைத்து இருந்த பையில் அறியாது இருந்த தொலைபேசி அட்டவணை பார்த்து அவர்களை எல்லாம் முயற்சி செய்த கதையும் , பிரபா தேடல் என்றும் அடுத்த சில நிமிடங்கள் கதையாய் பேச பட்டது

************************************************************ முற்றும்

முடிக்கும் முன்:
எனக்கு இது ஒரு பாடம் - அனுபவம்.
கற்று கொண்டது உண்டு.
அதை உங்களுக்கு சொல்லி நீங்களும் அறிய வேண்டும் என்ற அக்கரை இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.
சிரமப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்

என்றென்றும் அன்புடன்
படுக்காளி

உறங்காத ராத்திரி பகுதி 6

உறங்கிய மாம்பலத்து வீதிகளில் வாடகை கார் , அந்த அடுக்கு மாடி குடிஇருப்பில் நின்றது. பிரபா துணைவியாரின் அக்கா வீடு. காலங்கள் சில சென்று பார்க்க வந்தாலும் அந்த எதிர்பார்ப்பு மற்றும் தள்ளுபடி.

அழைப்பு மணியின் அழுத்தலில் சோமபலாய் கதவு திறந்தவர் தங்கையை பார்த்தும் சுரு சுருப்பானார், மதிப்பிற்குரிய மைத்துனர் மட்டும் போர்வையின் சிறைக்குள்ளே. பை தொலைந்ததும், கேள்விக்குறியான பயணமும் அதை விவரிக்கும் மன நிலையும் இல்லாது இருந்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தாளியை பார்க்காத அந்த செயல் ஒரு புரக்கணிப்பாகவே பட்டது. ஸ்டீபன் ர. காவி ன் ‘paradigm shift’ நினைவுக்கு வர துடைத்து போட்டான் பிரபா
நேரம் நள்ளிரவு. தோசை வார்த்து உண்ண வர்புருத்தினார் குடும்ப தலைவி. ஆறுதலாய் இருந்தது அந்த உணவு. விதியும் கூட சரி சாப்பிட்டு முடிக்கட்டும் என்று அந்த தொலை பேசியை தள்ளி போட்டிருந்தது .
தொலை பேசி ஒலித்தபோது நள்ளிரவை தாண்டி யார் அழைப்பது என்று எடுத்தான் பிரபா. நண்பனாய் பழகிய ஒரு உறவினர் அது. எடுத்தவுடன் சொன்னான் "ஏன் மாமா பையெல்லாம் பத்திரமா வைக்கிறது இல்லையா , இப்படியா தொலைக்கிறது "

ஆச்சரியம். இவனுக்கு எப்படி தெரிந்தது. நகைச்சுவையை உட்கொள்ளாது வினவிய பிரபாவின் தொனி அவருக்கு புதுசு. உணர்ந்தவன் உடனே சொன்னான். "யாரோ அமல் போன் பண்ணிஇருந்தாறு, அவர்கிட்ட பை இருக்குதாம், ஆபீஸ் நம்பர் கொடுத்திருக்காரு . அடுத்த சில நிமிடங்கள் பர பரப்பாய் சென்றது. தொலைபேசி இலக்கத்தை வைத்து விலாசம் கண்டுபிடித்தாயிறறு. இனி நாளை காலை வரை அலுவலகம் திறக்கும் வரை காத்திருக்க முடியுமா , உடனே கிளம்பி விட்டான் பிரபா.

மைத்துனி மெதுவாய் உள் சென்று மாண்புமிகுவிடம் நடந்ததை சொல்ல, உம்காரம் மட்டுமே பதிலாய். இப்படி ஒரு சந்தர்பத்தில் உதவிட வேண்டும் என்று தோணாத அந்த மாண்புமிகு இரு சக்கர வாகனத்தையும் கொடுத்து உதவாதது மனிதாபிமானத்தின் உச்சம். அவசியம் இல்லை. "யாரை நம்பி நாம் பிறந்தோம் .... " பாடல் வரி லேசாய் மனதில் . பை பற்றிய தும்பு கிடைத்த சந்தோஷத்தில் பிரபா வீடு விட்டு இறங்கினான் .
இருட்டுக்கு பழகாத கண்கள், அனைத்தையும் கருப்பாய் காண்பித்தது. சற்று நேரத்தில் மங்கிய வெளிச்சத்தில் நடக்கும் வழி தெரிய ஆரம்பித்து.

ஒரு சில தப்படிகளிலே ஒரு சோதனை. துரத்தில் உள்ள தெரு நாய்கள் கூட்டமாய் குரைத்து கொண்டு அவனை நோக்கி பாய்ந்து வந்தன.

பயம் சுரீர் என தாக்கியது. அடி வயிற்றில் சதை அழுந்தி பொங்கியது. வாய் ஓரங்களில் அமிலம் சுரந்தது.

என்ன செய்வது. திரும்பி பார்த்த போது வீட்டீறகுள் செல்லவும் தூரம் அதிகம். உயிர் பயம் மனிதனின் ஒரு அடிப்படை உணர்ச்சி. மூளையின் முக்கிய செயல் . ஓட சந்தர்ப்பம் இல்லாத போது, தாக்கும் முடிவெடுக்கும். என்னை கடிக்க வந்தால் நான் அதை அடிப்பேன். தீர்மானமாய் முடிவெடுத்தான் பிரபா. கைகள் இறுகி ஆயுதம் ஆனது, மனம் தெளிந்து ஒரு போராட்டத்துக்கு தயார் ஆனது. தொலைத்த பை மறந்தது, குடும்பம் மறந்தது, பொறுப்பு மறந்தது, தாக்கும் குணம் மட்டுமே இருந்தது.

வேகமும் இல்லை, தொய்வும் இல்லை, முறுகிய கைகளோடு நிமிர்ந்து நடந்தான். நாய்களுக்கும் அவனுக்குமாய் உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

என்ன ஆச்சரியம், ஓடி வந்த அத்தனை நாய்களும் சற்று தூரத்தில் நின்று குரைக்க துவங்கியது . என்றாலும் பிரபா நிற்க வில்லை. தொடந்து அதே வேகத்தில் நடந்து கொண்டே இருந்தான். குரைத்து கொண்டே நாய்களும் அவன் கூடே. தவிக்க வைத்த நேரம் அது. நொடி ஓவொன்றும் யுகம்மாய் தோன்றியது. நடக்க வேண்டிய தூரத்தை கண்கள் அழந்து கொண்டே அவன் மனம் செய்த தீர்மானத்தை சொல்லி கொண்டு இருந்தன.

சிறுநீர் கழித்த எல்லை வந்திருக்குமோ, நாய்கள் சட்டென நின்றது. குறைப்பு மட்டும் அடங்கவே இல்லை. பிரபா நடப்பதை நிறுத்தவும் இல்லை.

சற்று நேரத்தில் …. இன்னும் சிறிது நடையில் …. அந்த போராட்டம் முடிந்தது. ஆனால் அதன் தாக்கம் ஆழமாய் பதிந்தது.

விலாசம் தேடி ஆட்டோ அமர்த்தி கொண்டு பயணித்தான் பிரபா. மெல்லிய குலுக்கலுடன் ஆட்டோ விரைந்தது
... தொடரும்

ஆச்சி - படுக்காளி அழிச்சாட்டியம் 2

இது "வயது வந்தவர்களுக்கு மாத்திரம் "
சினிமா பாஷையில் ‘A’ படம்

வெளியூர் போக ஆயத்தங்களில் படுக்காளி குடும்பம்.
"அரை கால் சட்டை போட்டுக்கோ அப்போதான் அரை டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்"
அக்கரையாய் அறிவுரை சொன்ன ஆச்சியை , பார்த்து படுக்காளி
“ஏன் அதையும் அவுத்து போடுறேன், என்னை தூக்கி மடியிலே வச்சி கோங்க ஓசியிலே போயிடலாம்”

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம்

அடுப்பு வேலைகளில் மும்முரமாய் ஆச்சி , வேலை இல்லாத படுக்காளி அவரிடம் .
படுக்காளி : " என்ன செய்யுறீங்க”
ஆச்சி : " தேங்காய் திருவறேன்”
படுக்காளி : " எதுக்கு”
ஆச்சி : " நாய் குலைக்கும் போது குப்பைலே போட”
திரும்பி சென்றான் படுக்காளி, சற்று நேரம் பொறுத்து வந்து சொன்னான்
படுக்காளி : " ஆச்சி நாய் குலைக்குது, தேங்காய் கொண்டாங்க
குப்பைல போட்டுட்டு வரேன் மிடுக்காளியாய் ஒரு படுக்காளி
நே!!!.... என்று ஆச்சி

மாறுதல் சில கேள்விகள்

மேகம் திடிரென்று வானை மூடி கொண்டது.
மழை துளியை பூமி நோக்கி விசிறி அடித்தது.
குப்பென்று மண் வாசனை.

மனம் சிரித்தது, முகம் ததாஸ்து.
மனிதன் இனிமை ஆனான். மனிதம் மலர்ந்தது

கவிதை போலே நிகழ்ந்த இந்த மாறுதல் கேள்விகளை பிரசவித்தது

புற மாறுதல் அக மாற்றத்திற்கு எப்படி அனுமதித்தது
நம்பிக்கையா , நல்உணர்வா , சொவ்கரியமா , மாறுதலா....

அமுக்குவான் பேய்

பேய் , இருக்கா... இல்லையா .

தெளிவாக பதில் சொல்ல முடியாத கேள்வியில் படிக்கின்ற நீங்கள் சிந்தனையை நெருடிகொண்டு இருக்கும் வேளையில் , படுக்காளி ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

கல்லூரி நாட்களில் - ஊர் சுற்றி விட்டு, இரவிலே படுக்க ஆயத்தமான ஒரு குளிர் கால இரவு. நள்ளிரவு மணி 12:00 .

உடன் உள்ள சில நண்பர்கள் ஏற்கனவே நித்ரா தேவியோடு கை குலுக்கி இந்த உலகத்தை மறந்து இருந்தனர். படுக்க ஆயத்தங்களில் படுகாளியும் அவன் நண்பனும். திடீர் என்று அந்த சம்பவம் நடந்தது.

உறங்கி கொண்டு இருந்த ஒரு நண்பன் ஹிம்சையாய் உருண்டு கொண்டு இருந்தான். பற்களை கடித்து கொண்டு , ஒரு முச்சு திணறுவது போலே. என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கால்களை , கைகளை லேசாய் அசைத்து கொண்டு ஒரு தப்பிக்கும் முயற்சியில். ஹீனமாயி ஒரு கூக்குரல் வேறு. தொண்டை அழுத்தி வார்த்தைகள் வராத ஒரு பாவனை. உமிழ் நீர் லேசாய் கன்னத்தில் வழிந்தோடியது.

அவனே சற்று நேரத்தில் எழுந்தான். பரக்க பரக்க முழித்தான்.
"யாரோ என் மேலே உக்கார்ந்துகிட்டு என் கழுத்தை புடிச்சு நெரிச்சாங்க , கத்த முயற்சி பண்ணேன் முடியலே.
சக நண்பன் சொன்னான் " ஆமாடா எனக்கும் நேத்து இது மாதிரி இருந்தது . இந்த வீட்டுலே பேய் இருக்கு. "

பார்த்தும் கேட்டதும் நினைவில் பதிந்து ஒரு செய்தியானது .

நாட்கள் பல கடந்த போது ஒரு பத்திரிகையின் வாயிலாய் ஒரு செய்தி வாசித்தேன். கடினமான உடல் உழைப்பின் இறுதியில் உறங்கும் நேரத்தில், ஏதோ ஒரு காரணத்தால் மனம் முழித்துக்கொள்ளும் ஒரு சந்தர்பத்தில், உடல் சோர்வினால் ஒத்துழைப்பது இல்லை. மனம் மறுபடி மறுபடி வறபுருத்தினாலும் உடல் சொல் பேச்சு கேட்காமல் ஒழுங்கீனம் செய்தால், இது போன்று தோன்றும்.

இந்த செய்தி கேட்ட போது புத்தி கடந்த காலத்தை நினைவு படுத்தி தெளிந்தது. பயம் விலகியது.

ஒரு செயலை நினைவில் பதிக்க ஒரு விளக்கம் தேவை படுகிறது.
அது அறிவியலோ மருத்துவமா, மனோ தத்துவமா, வேதாந்தமா, சித்தாந்தமா, என்பது உங்கள் கைகளிலே

சந்தர்பவாதமாய் மேற் கூறினாலும் உண்மையின் ஆழம் அதிகமோ ...