பக்கங்கள்

உறங்காத ராத்திரி பகுதி 6

உறங்கிய மாம்பலத்து வீதிகளில் வாடகை கார் , அந்த அடுக்கு மாடி குடிஇருப்பில் நின்றது. பிரபா துணைவியாரின் அக்கா வீடு. காலங்கள் சில சென்று பார்க்க வந்தாலும் அந்த எதிர்பார்ப்பு மற்றும் தள்ளுபடி.

அழைப்பு மணியின் அழுத்தலில் சோமபலாய் கதவு திறந்தவர் தங்கையை பார்த்தும் சுரு சுருப்பானார், மதிப்பிற்குரிய மைத்துனர் மட்டும் போர்வையின் சிறைக்குள்ளே. பை தொலைந்ததும், கேள்விக்குறியான பயணமும் அதை விவரிக்கும் மன நிலையும் இல்லாது இருந்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தாளியை பார்க்காத அந்த செயல் ஒரு புரக்கணிப்பாகவே பட்டது. ஸ்டீபன் ர. காவி ன் ‘paradigm shift’ நினைவுக்கு வர துடைத்து போட்டான் பிரபா
நேரம் நள்ளிரவு. தோசை வார்த்து உண்ண வர்புருத்தினார் குடும்ப தலைவி. ஆறுதலாய் இருந்தது அந்த உணவு. விதியும் கூட சரி சாப்பிட்டு முடிக்கட்டும் என்று அந்த தொலை பேசியை தள்ளி போட்டிருந்தது .
தொலை பேசி ஒலித்தபோது நள்ளிரவை தாண்டி யார் அழைப்பது என்று எடுத்தான் பிரபா. நண்பனாய் பழகிய ஒரு உறவினர் அது. எடுத்தவுடன் சொன்னான் "ஏன் மாமா பையெல்லாம் பத்திரமா வைக்கிறது இல்லையா , இப்படியா தொலைக்கிறது "

ஆச்சரியம். இவனுக்கு எப்படி தெரிந்தது. நகைச்சுவையை உட்கொள்ளாது வினவிய பிரபாவின் தொனி அவருக்கு புதுசு. உணர்ந்தவன் உடனே சொன்னான். "யாரோ அமல் போன் பண்ணிஇருந்தாறு, அவர்கிட்ட பை இருக்குதாம், ஆபீஸ் நம்பர் கொடுத்திருக்காரு . அடுத்த சில நிமிடங்கள் பர பரப்பாய் சென்றது. தொலைபேசி இலக்கத்தை வைத்து விலாசம் கண்டுபிடித்தாயிறறு. இனி நாளை காலை வரை அலுவலகம் திறக்கும் வரை காத்திருக்க முடியுமா , உடனே கிளம்பி விட்டான் பிரபா.

மைத்துனி மெதுவாய் உள் சென்று மாண்புமிகுவிடம் நடந்ததை சொல்ல, உம்காரம் மட்டுமே பதிலாய். இப்படி ஒரு சந்தர்பத்தில் உதவிட வேண்டும் என்று தோணாத அந்த மாண்புமிகு இரு சக்கர வாகனத்தையும் கொடுத்து உதவாதது மனிதாபிமானத்தின் உச்சம். அவசியம் இல்லை. "யாரை நம்பி நாம் பிறந்தோம் .... " பாடல் வரி லேசாய் மனதில் . பை பற்றிய தும்பு கிடைத்த சந்தோஷத்தில் பிரபா வீடு விட்டு இறங்கினான் .
இருட்டுக்கு பழகாத கண்கள், அனைத்தையும் கருப்பாய் காண்பித்தது. சற்று நேரத்தில் மங்கிய வெளிச்சத்தில் நடக்கும் வழி தெரிய ஆரம்பித்து.

ஒரு சில தப்படிகளிலே ஒரு சோதனை. துரத்தில் உள்ள தெரு நாய்கள் கூட்டமாய் குரைத்து கொண்டு அவனை நோக்கி பாய்ந்து வந்தன.

பயம் சுரீர் என தாக்கியது. அடி வயிற்றில் சதை அழுந்தி பொங்கியது. வாய் ஓரங்களில் அமிலம் சுரந்தது.

என்ன செய்வது. திரும்பி பார்த்த போது வீட்டீறகுள் செல்லவும் தூரம் அதிகம். உயிர் பயம் மனிதனின் ஒரு அடிப்படை உணர்ச்சி. மூளையின் முக்கிய செயல் . ஓட சந்தர்ப்பம் இல்லாத போது, தாக்கும் முடிவெடுக்கும். என்னை கடிக்க வந்தால் நான் அதை அடிப்பேன். தீர்மானமாய் முடிவெடுத்தான் பிரபா. கைகள் இறுகி ஆயுதம் ஆனது, மனம் தெளிந்து ஒரு போராட்டத்துக்கு தயார் ஆனது. தொலைத்த பை மறந்தது, குடும்பம் மறந்தது, பொறுப்பு மறந்தது, தாக்கும் குணம் மட்டுமே இருந்தது.

வேகமும் இல்லை, தொய்வும் இல்லை, முறுகிய கைகளோடு நிமிர்ந்து நடந்தான். நாய்களுக்கும் அவனுக்குமாய் உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

என்ன ஆச்சரியம், ஓடி வந்த அத்தனை நாய்களும் சற்று தூரத்தில் நின்று குரைக்க துவங்கியது . என்றாலும் பிரபா நிற்க வில்லை. தொடந்து அதே வேகத்தில் நடந்து கொண்டே இருந்தான். குரைத்து கொண்டே நாய்களும் அவன் கூடே. தவிக்க வைத்த நேரம் அது. நொடி ஓவொன்றும் யுகம்மாய் தோன்றியது. நடக்க வேண்டிய தூரத்தை கண்கள் அழந்து கொண்டே அவன் மனம் செய்த தீர்மானத்தை சொல்லி கொண்டு இருந்தன.

சிறுநீர் கழித்த எல்லை வந்திருக்குமோ, நாய்கள் சட்டென நின்றது. குறைப்பு மட்டும் அடங்கவே இல்லை. பிரபா நடப்பதை நிறுத்தவும் இல்லை.

சற்று நேரத்தில் …. இன்னும் சிறிது நடையில் …. அந்த போராட்டம் முடிந்தது. ஆனால் அதன் தாக்கம் ஆழமாய் பதிந்தது.

விலாசம் தேடி ஆட்டோ அமர்த்தி கொண்டு பயணித்தான் பிரபா. மெல்லிய குலுக்கலுடன் ஆட்டோ விரைந்தது
... தொடரும்

1 கருத்து: