பக்கங்கள்

தாண்டி நின்ற பெருமிதம்

படுக்காளியின் பதிவை பார்த்து பின்னூட்டம் எழுதிய அன்புக்கு நன்றி
நான் எழுதிய பதிவை விட பிரமாதமான தமிழ் , உயர்ந்த கவி நடை

ஒரு விமர்சனம் என் படைப்பை தாண்டி நின்ற பெருமிதம்

தங்கு தடையில்லா பொங்கு தமிழில் ...
சொந்த உணர்வுகளின் சந்த நடையில் ...
புன்னகை மலர்விக்கும் நகைச்சுவை எழிலில் ...
ஆழ்ந்த கருத்துக்களின் சிந்தனைத் தெளிவில் ...
படிக்கப் படிக்கத் தித்தித்தது
பல நினைவுகளைப் புதுப்பித்தது
நன்றி !! ஜோ பாஸ்கர்.....

1 கருத்து:

 1. பின்னூட்டத்தையே முன்னோட்டமாக்கி வெள்ளோட்டம் விட்டவனே !

  பாடுவது பாமரன் என்றாலும் -

  பாட்டுடைத் தலைவன் பரமன் என்றால்

  பவ்வியமாய்

  பட்டுடுத்தி பவனி வருகின்றன பளிங்குச் சொற்கள் ....

  கவி சாமானியன் என்றாலும் -

  கரு சான்றோன் என்றால்

  கன்னித்தமிழும் கடல் போல பொங்குகிறாள் .....

  பாராட்டையே பாராட்டும் படுக்காளியே !

  நீ

  மாலைக்கே மாலை அணிவிக்கிறாய் ...

  கரவொலிக்கே சுரம் பிடிக்கிறாய் ....

  உண்மைஎன்னவெனில்

  விஞ்சி நிற்பது -

  விமரிசனத்தின் தமிழ் மணமல்ல

  பெருந்தன்மையால் விரிந்த உங்கள் மனம் .

  பதிலளிநீக்கு