பக்கங்கள்

உறங்காத ராத்திரி -7 நிறைவு பகுதி

சற்றே குறுகலான சந்தில் ஒரு இருட்டில் ஒளிந்து இருந்தது அந்த விலாசம். தொலை பேசி விற்பனை செய்யும் ஒரு மொத்த விற்பனைய்ளார் அலுவலகம் .

இருண்டு கிடந்த அலுவலகத்தில் என்ன செய்ய. கை பிசைந்து கொண்டு நிற்கும் வேளையிலும் நம்பிக்கையை விட வில்லை.

சுற்று முற்றும் பார்த்தான். மொத்த தெருவும் வெறிச்சோடி இருக்க, ஒரே வீட்டில் மட்டும் விளக்கு. மெல்ல நடந்து அந்த விளக்கு உள்ள வீட்டை அணுகினான், ஆட்டோ காரன் எச்சரித்தான் " வேண்டாம் சார் கத்த போறாங்க " தயக்கம்தான் என்றாலும் சுருக்கமாய் தன் பிரச்சினையை சொன்னான் பிரபா. தீவிரத்தை உணர்ந்த அந்த நல்ல மனிதர் உடன் இரங்கி வந்தார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். விலாசத்தின் அருகில் வந்து தீவிரமாய் உற்று நோக்கினார்

அடுத்த வீட்டிலுள்ள மனிதரை எழுப்பினார். பிரபா முயண்டிருந்தால் முடியாதது. சுருக்கமாய் விவரம் கேட்டு, உதவ தயாராய் அவரும் வந்தார்.

நான்கு ஐந்து பேர் கூடி நின்று விவாதிக்கவே, அரவம் கேட்டு எதிர் வீட்டில் விளக்கு எரிந்தது. வந்தவர் கேட்டார், விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் சொன்னார்

"அங்கே வேலை செயிரவுங்க மொட்டை மாடியிலே படுப்பாங்க சார் " குழுவே சுரு சுருப்பானது. கூட்டத்தில் உள்ள இளைஞன் ஒருவர் சுவர் ஏறி உள் குதித்தார். ஏணி ஏறி மொட்டை மாடி சென்று சிறிது நேரமாய் தெரியாமல் இருந்தார்.

கால் மாற்றி அவஸ்தையில் நின்று கொண்டு பிரபா. வந்து இறங்கிய போது உள்ள நிலைமய்க்கும் இப்போதுக்கும் உள்ள வேறுபாடு கண்டான். ஆட்டோ டிரைவர் சொன்ன போது, " ஒண்ணும் முடியாது சார், நாளைக்கு காலையிலே வந்து பாரு" என்ற போது தயங்கி நின்றது நினைவுக்கு வந்தது.

இந்த முயற்சி தந்த விளைவு நம்பிக்கை தந்தது. தத்துவம் ஒன்று பளிச்சிட்டது. ‘விரும்பினால் அடையும் இலக்கு’

தனக்காய் உறக்கம் துறந்து உதவ நின்றிடும் அந்த குழுவை பார்த்து பெருமிதம் கொண்டான். நான் இவர்களுக்கு எப்படி கை மாறு செய்வேன் என்று மனதினுள் பிதறினான்.

குதித்த நண்பர் மற்றொரு மனிதருடன் வெளி வந்தார். கால் சட்டை அணிந்து தயாராய். "ஒண்ணும் பிரச்சினை இல்ல சார், நம்ம அவன் வீட்டுக்கு போயிடல்லாம் " என்று நம்பிக்கையாய் கை பிடித்தார்

இந்த உலகம் நல்லவர்களாய் இருக்கிறது, நல்லவர்களை தாங்குகிறது.

அரை மணி நேர பயணம்.

இலக்கை அடையும் முனைப்பு இருந்தாலும் சந்தேக கேள்விகள் இப்போது குடைய ஆரம்பித்தன. யார் இவர். எப்படி இவருக்கு நம் உறவினர்களின் தொலை பேசி எண் கிடைத்தது. இதெல்லாம் பொய்யா . மனம் விசித்திரமானது, தீர்வுகளை காட்டிலும் குளப்பத்துக்கே முன்னுரிமை

இறுதியாக அந்த வீட்டை அடைந்த போது மணி 4.30

கதவு தட்டலில் சன்னல் திறந்தது ஒரு பெண்மணி தலை தெரிந்து "யாரு ". கூட வந்த அலுவலக நண்பன் குரல் கேட்டதும் தலை விலகியது. விளக்கு எரிந்தது.

சற்று நேர காத்திருப்பில் கதவு திறந்தது.
"வாங்க” என்று சொல்லி கதவை திறந்த போது ; திறந்த கதவு வழியே உள்ளே நுழையும் முன் தெரிந்தது.

ஓரத்தில் பச்சை பை.

பை திரும்ப கிடைத்தும், பயணம் நிச்சயம் ஆனதும், தெரிந்த காட்சியில் பிரபா திகைத்தான். கண்ணிர் கழுக்கென்று வந்தது. பெரு முச்சு நீண்டதாய் . சுவரில் சரிந்து அழுதான்.

உள்ளே நுழையாது வெளியில் இருந்து அழும் அவனை அந்த குடும்பம் ஆதரவாய் பார்த்தது , அன்போடு அரவணைத்து உள்ளே வா என்றது. எதுவும் பேச வேண்டாம், முதலில் பால் சாப்பிடு என்றது. தொலைத்து இருந்த பையில் அறியாது இருந்த தொலைபேசி அட்டவணை பார்த்து அவர்களை எல்லாம் முயற்சி செய்த கதையும் , பிரபா தேடல் என்றும் அடுத்த சில நிமிடங்கள் கதையாய் பேச பட்டது

************************************************************ முற்றும்

முடிக்கும் முன்:
எனக்கு இது ஒரு பாடம் - அனுபவம்.
கற்று கொண்டது உண்டு.
அதை உங்களுக்கு சொல்லி நீங்களும் அறிய வேண்டும் என்ற அக்கரை இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.
சிரமப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்

என்றென்றும் அன்புடன்
படுக்காளி

1 கருத்து:

  1. Excellent writing ! Great style !! Good Tempo !!! Heratening Message !!!!

    "If you relentlessly pursue your ambition, then the whole world conspires to help you achieve the same" ---- Zig Ziglar.

    பதிலளிநீக்கு