பக்கங்கள்

மசாலா தோசை டூ…. மஷ்ரூம் சூப்….!!!!

நன்றி… பாம்பே கண்ணன்…. 
முதன் முதல் நாம் சந்தித்த போது, நான் மசாலா தோசை விழுங்கிக் கொண்டிருந்தேன்.. என தாங்கள் எழுதிய பகுதி பார்த்த போது… கொஞ்சம் அசந்து தான் போனேன்.. உங்கள் பவர் ஆப் அப்சர்வேஷனை குறித்தும், இத்தனை காலம் சென்ற பிறகும் கூட அதை நினைத்து சொன்ன விதமும்… விஷுவல் ரெப்ரென்சும் என்னை ஆச்சரியப்படுத்தியது… கூடவே பழைய நினைவுகள், இனிமைக் கணங்களாய் விரிந்தது… தங்களின் அன்பும் நட்பும் என்னை தாலாட்டியது…


நினைவுகளை பதிவிடலாமே என எழுத துவங்கினேன்… சரி என்ன தலைப்பு தரலாம் என யோசித்த போது.. உங்கள் பாணியிலேயே அடுத்த நம் சரவணா பவன் சந்திப்பை நினைத்து கொண்டேன்.. உடனே இப்பகுதியின் தலைப்பு வந்தது… ஆம், நாரத கான சபாவில் நான் வெட்டி விழுங்கியது மசாலா தோசை… சரவண பவனில் நாம் குடித்தது மஷ்ரூம் சூப்… ஹ..ஹா…

வெவ்வேறு மனிதராய் வெவ்வேறு ஆர்டராய் ஒரு டேபிளில் வந்தமர்ந்து ஒரே ஆர்டராய் நாம் இணைந்த … எனும் மெட்டபர் தான் இந்த தலைப்பு…  நம் நட்புதான் இந்த பதிவு…

உங்களை சந்தித்த அந்த முதல் தினம் இப்படித்தான் இருந்தது…

அன்று… ஆல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளரும்…நண்பர் தமிழரசன்… அவர்களின் சரித்திர நாடகம்… நாரத கனா சபாவில். அவர் குழுவின் பயிற்சிக்காக, நாடகத்தை வீடியோவில் எடுத்து தருவதாக நான் சொல்லியிருந்தேன்… அதனால் சாயங்காலம் அலுவலகம் முடித்து நேரடியாக நாரத கான சபா வந்து விட்டேன்… சீக்கிரமே… வந்து, கேமராவை வைக்க வேண்டிய இடம், தயாரிப்பு முஸ்தீபுகளையெல்லாம் முடித்து விட்டு, வயிற்றை பற்றி யோசிச்சேன்.. எப்படியும் 9 மணியாகி விடும்… இப்போது மணி 5.30… சரி ஏதாவது வயிற்றுக்கு போடவில்லையெனில்… கிள்ளும்

அதே நேரம் ஓவராய் சாப்பிட்டு விட்டு வீட்டில் சாப்பிடவில்லையெனில்.. அங்கும்………… கிள்ளுதான்………. எனும் யோசனையுடன்……….. சேஃப்ஃபாக… ஒரு மசாலா தோசை விழுங்க துவங்கியபோது, எதிரில் அமர்ந்திருந்த அவர் சொல்லிக் கொண்டிருந்தார்… கல்கியின் ஒலிப்புத்தகம் குறித்து…

நான் தலை நிமிர்ந்து முன்னால் பார்த்தேன்… கண்ணாடி…  அதற்கு வெளியே தெரியும்… ஆர்வம் பளிச்சிடும் கண்கள்… சிரித்த முகம்… மிகவும் இயல்பான வசீகரமான ஆளுமை… நட்பான தோற்றம்…..

ம்…. இவர் தெரியும்… பெரியாள்… ஆனா தெரியல...... யாரு… ம்… இவரு.. என குழம்பிக் கொண்டே அவர் பேசுவதை கேட்டேன்…

இப்பல்லாம் மேடை நாடகம் செய்யறதில்ல சார்… விட்டுட்டேன்.. ரொம்ப ஸ்ட்ரெய்ன்… அப்புறமும் எக்னாமிக்ஸ் இப்ப வேற மாதிரியாயிடுச்சு.. என பேசிக் கொண்டிருந்தார்.
எனக்குள் ஆர்வம் தூண்டியது ஒலிப்புத்தகம் எனும் வார்த்தைதான். அதுவும் கல்கி… அவர் கையில் அதற்க்கான பேம்ப்லட் இருந்தது…

என்னுள் ஆர்வம் கிண்டப்பட்டது..  நாரத கான சபா உப்புமா போல, இஞ்சி தூக்கலாய் மணம் காற்றில் பரவியது… மெதுவாய் விசாரித்தேன்… சிவகாமியின் சபதம் ஒலிப்புத்தகம் முடித்து விட்டேன் என்றார்… வியப்பாய் இருந்தது… அப்படியா… பொன்னியின் செல்வன் அதுவும் முடித்து விட்டேன்… யம்மாடி… அப்படியா… என தோன்றியது…. அதில் எவ்வளவு மெனக்கெடல் இருக்கும், எத்தனை சவால்கள் இருக்கும் என ஆழமாய் புரிந்தேன்..

ஏனெனில் அப்போது தான் நான் ஜெமோவின் அறம் வரிசை கதைகளின் யானை டாக்டர் ஒலி வடிவம் முடித்திருந்தேன்…. ஒரு சிறுகதையே என்னிடம் தாவு வாங்கியிருந்ததை உணர்ந்ததால்…  டாக்டர் கே என்னை பிடித்து வைத்திருந்த அந்த 40 – 50 நாட்களும் அந்த சுகமும் வேதனையையும் ஒரு சேர நான் உணர்ந்திருந்தேன்…

அப்போது இந்த கல்கியின் முயற்சி, அத்தனை பெரிய நாவல்…. என்னை முழுமையாகவே ஆச்சரியப்படுத்தியது… வாழ்த்துக்களை தெரிவித்து.. உங்கள் எல்லா முயற்ச்சியும் வெற்றி பெறட்டும் என மனதினுள் ஒரு பிரார்த்தனையையும் உதிர்த்து விட்டு எனக்கு தோன்றியதை சொல்ல துவங்கினேன்..

நீங்க ஏன் இப்படி செய்யக் கூடாது… இது மாதிரி செஞ்சா என்னாகும் எனும் ரீதியில் சடசடவென பேசினேன்….

அப்போது சட சடவென சில ஆலோசனைகள் பேசினேன்… ஏன் தமிழ் நாடு சுற்றுலாத் துறையில் முயற்சி செய்யக் கூடாது. ஒரு சுற்றுலா பஸ் செல்லுகிறது… பேருந்தினுள்… ஒரு ஒலிச் சந்தி ஒலிக்கிறது… சட்டென நிற்கிறது…. வெளி வரும் கைடு சொல்கிறார். நீங்கள் இப்போது கேட்டீர்களே.. அந்த சம்பவம் நடந்த இடம் இது தான் என சொன்னால் எப்படி இருக்கும்…

கையில் தான் முழு ஆடியோவும் இருக்கிறதே… சரியாக எடிட் செய்தால் வேலை எளிதாய் முடியுமே என சொன்னேன்….

இந்த புதிய தலைமுறைக்கு எப்படியாவது இதை கொண்டு செல்ல முடியுமா… யூத் பிராண்டிங் செய்ய முடியுமா…

பேருந்தில் பயணம் செய்யும் போது கேட்க சொல்ல… தற்காலிக விற்பனை செய்ய ஏதேனும் செய்ய முடியுமா அனும் ரீதியில்…  நிறைய பேசினேன்…

இன்னும் இன்னும் என 5 -6 ஐடியாக்களை அவிழ்த்து விட்டேன்…. அவருக்கும் என் எனர்ஜி புடித்தது… பின்னர் இருவரும் சந்தித்து கொள்ள துவங்கினோம்… முன்னர் நான் இயக்கிய குறும்படம் பார்த்தார்… அவருக்கு பிடித்திருந்தது… எங்கள் இருவருக்கும் எங்களை பிடித்தது… அடிக்கடி போனில் பேசினோம்… 

அப்போது தான் பார்த்திபன் கனவு முயற்சி தொடங்கினார். ஒரு நாள் அழைத்து… நீங்கள்…, சக்கரவர்த்தி செய்யுங்கள் என்றார்…. அதுக்கென்ன சார், செஞ்சுடுவோம் என்றேன்…
பாதியில் நின்றது, அதற்க்கென அவர் சொன்ன காரணம் மிகச் சரியாக இருந்தது… வருத்தம் தெரிவித்த அவரை பார்த்து.. இதனால் என்ன இருக்கு சார்….. அடுத்து பார்ப்போம் என்றேன்… அவரே கொஞ்ச நாட்கள் சென்று…. மாரப்ப பூபதி செய்யுங்களேன் என்றார்.. ஒக்கே செஞ்சுருவோம் அதுக்கென்ன என்றேன்…

மாரப்ப பூபதியாய் வாழ்ந்த அந்த சில மணித்துளிகள் எனக்கு இனிமை… இன்று அந்த ஒலி கேட்ட போது… ம்… நல்லாயிருக்கு… இன்னும் நல்லா செஞ்சிருக்கலாமே… என ஒரு ஆதங்கம்… அது எப்போதுமே ஒரு கலைஞனாய் எனக்குள் தோன்றும்… என்றாலும்…  ஒரு மிகப்பெரிய கட்டமைப்பில்… திட்டச்செயல்பாட்டில் நானும் ஒரு சிறு துரும்பாய் செயல்பட்டேன்… பாம்பே கண்ணனின் இந்த முயற்சியில் நானும் ஒரு சிறு பணி செய்தேன்… என்பது மிக்க மகிழ்ச்சி..


இன்று அருமையாக ரிலிசும் செய்து விட்டார். வரவேற்ப்பு நன்றாகவே உள்ளது…
வாழ்த்துக்கள்… மிகப்பெரிய வேலையை முடித்திருக்கிறார்…. இன்னும் மென்மேலும் அவர் விரிந்து பரந்து செயல் பட இறைவனை வேண்டுகிறேன்…. ஆல் த பெஸ்ட்… கோ அகெட்…