பக்கங்கள்

ஆத்மாவின் பயணம் - நிறைவு பகுதி


“எப்படி இந்த வினோதம், ஏன் இது மாய உலகம் போலுள்ளது”மிடறு விளங்கி ஆத்மா சொன்னான் "எதை சொல்லுகிறீர்" வார்த்தைகள் காற்றோடு கலந்து செல்லமாய் பேசினாள்

"நிறைய உள்ளன. புலி சிரித்தது என்னை முத்தமிட்டது யானயை கிச்சு கிச்சு மூட்டியது"
"இதில் வினோதம் என்ன நண்பரே. அன்பு தானே அடிப்படை உணர்ச்சி. ஒரு மலரை மலையை முயலை ஏன் ஒரு கழுதை குட்டியை பார்த்ததும் தோன்றும் முதல் உணர்ச்சி என்ன? அன்பு பாசம் நேசம் எதோ ஒன்று தானே. உங்கள் கிரகத்திற்கும் இதற்கும் சில மாறுதல்கள் இருக்கலாம், உங்கள் தோல் போல”

டி ஷர்ட் பார்த்து கல கல வென சிரித்தான் ஆத்மா. சிரித்த போது வாய் வழியே காற்று புகுந்தது. நுரையிரலை நிரப்பியது. நரம்பியலில் மாறுதல் செய்தது. சிந்தனை துடைத்தது. புத்துணர்ச்சி பெற்றான். உடல் பஞ்சு போலே ஒரு நொடி மேல் எழும்பி கீழ் இறங்கியது. "என்ன இது, சிரித்தால் இப்படியா. எங்கள் ஊரில் பழமொழி மட்டும் வைத்துள்ளோம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. இங்கே அது நிஜமாய் உள்ளதே.
குனித்து தான் அணிந்து இருந்த நீல நிற டி ஷர்ட் தொட்டு சொன்னான். "இதையா" "ஆம். நீங்கள் நீல நிற தோல் கொண்டவர் அல்லவா" “இல்லை இது உடை” இழுத்து விலக்கி தன் மார்பை காட்டினான். அவள் மெல்ல நகர்ந்து அவன் உடையை பற்றி இழுத்தாள். ஸ்பரிசித்தாள். "ஒ... இது என்ன பழக்கம்… ஏன் மூட வேண்டும்"
தலை சொரிந்து கொண்டு ஆத்மா சொன்னான் "சரியா தெரியலே எல்லாரும் போடுறாங்க நானும் போடுறேன் அவ்வளவுதான். அதுவும் ஒரு 500-600 வருஷம்தான், இதுவும் இரண்டு கட்டமா செய்தோம். முதலில் இடுப்ப மட்டும் மறைத்தோம் பின்னர் மார்பையும். அதுக்கு முன்னாலே நாங்களும் உங்களே போலே தான் இருந்தோம்."
“அப்படி என்றால் ஏன் மார்பையும் இடுப்பையும் மட்டும் மூடி கொள்கிறிர்கள். அங்கம் மறைப்பது தான் நோக்கம் என்றால் மூக்கையும் கண்ணையும் மறைக்கனூமே...."
“அதுவும் செய்யுறோம். அரபு நாடு எனும் பகுதியில் நீங்கள் சொன்னது போலே முஞ்சியையும் மூடி கொள்வோம்”
விசித்தரமாக உள்ளதே. ஏன் இப்படி.
குடும்பக் கட்டமைப்பு. தன் சந்ததி பற்றிய மூர்க்கம், பாலியல் வன்முறை, பொருளாதார ஏற்ற தாழ்வு இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எப்படி ஆரம்பித்தது என்று தெரியாது ஆனால் இன்று நாங்கள் ஓவ்வொருவரும் ஓவ்வொரு காரணத்திற்காக உடுத்தி கொண்டு இருக்கிறோம்.
“சரி… இது உடை… இதை எப்படி செய்திர்கள்.” "நெய்தோ, காய்ச்சியோ, கட்டியோ இதை உருவாக்கி ஜீவனம் நடத்துகிறார் நெசவாளி"
"புரிந்தது போலே பேசிக்கொண்டு இருந்தவர் ஏன் இப்படி புரியாததாய் சொல்லுகிறீர்”
எதை
கடை… நெசவாளி… என்ன இதெல்லாம்
ஒ இங்கே கடையும் இல்லை நெசவாளியும் இல்லை..... முக்கியமாய்... இங்கே ஜீவனமே இல்லை.
இங்கு நிறைய இல்லைகள். வீடு இல்லை. ரோடு இல்லை. மருத்துவமனை இல்லை வைத்தியர் இல்லை. போலீஸ் இல்லை. ஏன்… ஏன்… ஏன்…
இங்கு பசி இல்லை.
தலை உலுக்கி கேட்டான் ஆத்மா. என்ன கொடுமை இது. பசி இல்லைனா எப்படி? ருசியும் இல்லையா?? அப்போ மரணம் எப்படி??
“தெரியாது…. ரொம்ப போட்டு ஏன் அலட்டிகிர ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற!!! எங்களுக்கும் மரணம் உண்டு. செத்தா போய்கிட்டே இருப்போம்”
“அப்போ அழுகை இல்லையா! அஞ்சலி இல்லையா! அண்ணா செத்து போன கவிதை இல்லையா!!!”
காதல் இல்லையா நட்பு இல்லையா பொழுது போக்கு இல்லையா, இலக்கியம் இல்லியா ரஜினிகாந்தும் இல்லையா
நீண்ட இல்லை லிஸ்ட் வாசித்த ஆத்மா சோர்ந்தான். மெலிய குரலில் அவள் சொன்னாள் "அதனால் இங்கு நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடு பட வேண்டியதில்லை. பிட்டி வலிக்க பிள்ளை பெற வேண்டியதில்லை”
ஒ இது ஒன்று தானா, இத்தனை மாறுதல் செய்தது. பகை பஞ்சம் புகழ் பணம் இல்லாதது வரம் என்றால், விஞ்ஞானம் குடும்பம் உயர்வு சொவ்கரியம் என்பது சாபம் ஆகுமா
திரும்பி நடந்து சென்றாள் அவள். முயல் குட்டி ஒன்று அவள் பின்னே தொடர்ந்து நடந்தது. சிந்தனையை கலைத்து ஆத்மா வேகமாய் எழுந்து " பெண்ணே ...."
"என் பெயர் ஏவாள். தனிதனியாய் எங்களுக்கு பெயர் இல்லை. ஆண் என்றால் ஆதாம் பெண் என்றால் ஏவாள். தனி மனித அங்கிகாரம், தனி மனித சாதனை என்று வேறு படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அவள் மறைந்து சென்ற திசை நோக்கி சிறிது நேரம் செய்வதரியாது நின்றான். பின்னர் கல்லும் மண்ணும் செடியும் கொடியும் சேகரித்தான். விண்கலத்தின் அமர்ந்த ஆத்மா ஒரு மெசேஜ் பார்த்து துள்ளி எழுந்தான்.
. அன்பு ஆத்மா.
என் மேல கோபம் போச்சா. உன் அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் தூக்கி போட்டுட்டு செனாய் நகர் உடனே வா. உனக்கு பிடிச்ச கத்திரிக்காய் பொரியல் பிரிட்ஜ் ல இருக்கு. மல்லி பூவும் பக்கதிலே இருக்கு. இரண்டும் இரண்டு நாளா.
பழசை எல்லாம் மறந்துடு. மன்னிச்சுடு
இப்படிக்கு
அபிதா


முற்றும்


முடிக்கும் முன் :

உலகம் உண்டானது எப்படி? முதல் மனித உயிர் உண்டானது எப்படி என்ற கேள்விக்கு, இப்படிதான் என்று சொல்ல இயலாத நிலையில், கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் இது குறித்து ஒரு சுவாரசியமான செய்தி தருகிறது.

ஆறு நாட்கள் எடுத்து இறைவன் உலகை படைத்தார். இறுதி நாளில் தன் சாயலாய் ஆதாமை உண்டாக்கினார். அவன் விலா எலும்பு எடுத்து ஏவாள் உண்டாக்கினார். மகிழ்ச்சியாய் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இந்த நடு மரத்தின் கனியை மாத்திரம் உண்ண கூடாது என்று எச்சரித்தார்.

சாத்தானின் சோதனையால் ஏவாள் தர ஆதாம் அதை புசித்தான் / சாப்பிட்டான் .

சற்று நேரம் கழிந்து இறைவன் அவர்களை தேடி வந்த போது காணாததால் உரக்க அழைத்தார். ஆதாம் மறு மொழி சொன்னான். "இறைவனே நான் நாணத்தால் மரத்தின் பின்னல் ஒளிந்து கொண்டு இருக்கிறேன்" என்று.
என்ன நாணம் புரிந்ததா. உன் நிர்வானம் உணர்ந்தாயா!!!. நான் வேண்டாம் என்று சொன்ன பழத்தை சாப்பிடாயா என்றார். ஆம் என்ற பதிலுக்கு " இதை செய்ததால் இரு சாபங்கள் பெற்றாய். ஒன்று நீ நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடு பட்டு வாழ்வாய் . ஏவாள் பிரசவ வேதனையோடு பிள்ளை பெறுவாய்.
செய்தி முடிந்தது.

இதை முழுமையாய் புரிந்து கொள்ளும் பக்குவம் படுகாளிக்கு இல்லை, ஆனால் நிறைய கேள்விகள் மட்டும் மண்டையை குடைகிறது. குடைந்த கேள்விகளை கதையாய் எழுதியது தான் இந்த முயற்சி.

ஒரு வேளை இறைவன் சொன்னது போல் நடந்து இருந்தால், ஆதமோ ஏவாளோ கீழ்படிந்து இருந்தால் உருவான உலகம் எப்படி இருந்திருக்கும்….
அல்லது தப்பு செய்தது நல்லதாய் போயிற்றா…

என்னை விட ஆழமாய் யோசிக்கும் உங்களிடம் இருந்து கற்று கொள்ள ஆசை. சில மணி துளிகள் செலவழித்து பின்னூட்டம் எழுதுவிர்களா

ஆத்மாவின் பயணம்

கதை ...
அதிரடி விஞ்ஞான நகைச்சுவை

வாருங்கள் பூமி விட்டு வேறு கிரகம் சென்று ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம்.


10...09…08....
பூமியில் இருந்து கோடிக்கணக்கான மைல் தொலைவில். நீண்ட குழா புட்டு வடிவத்தில், ரிம் என்று ஓசையோடு அந்த விண்கலம் தரை இறங்க தயார் ஆனது. ஆத்மா கடைசி நேர சமிக்கைகளை சரி பார்த்து கொண்டே ஆவலாய் உட்கார்ந்து இருந்தான். 'அடுத்த முறை பயணிக்கும் போது கால் நீட்டி படுக்க வசதி செய்ய வேண்டும்'. மனதினுள் நினைத்தான். எங்கே இதற்கே இத்தனை செலவு. நிர்வாகமும் அரசும் இவன் வசதியை கோரிக்கையை ஏற்று கொள்ளாது.
யார் இந்த ஆத்மா. புத்திசாலியான இளம் விஞ்ஞானி. ஐந்து வருடங்கள் அவன் போராடி இந்த பயணத்தை மேற் கொள்கிறான். முதல் முதலில் இப்படி ஒரு கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு 'டகால்டி' என்று பெயரிட்டு, பசி தூக்கம் மறந்து, காதலை மறந்து, அதிகாரிக்கு காகா பிடித்து பெற்ற சாதனை இது.
வயிற்றில் கர் புர் சத்தம். திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல் மாத்திரை மாதிரியாய் விழுங்கிய உணவு லேசான அவஸ்தை தந்தது. 'ஊருக்கு போனதும் நல்லா குளிக்கணும்'
07…06…05…
மனித உயிர்கள் போலே சிந்திக்கும் திறன் உடைய வேற எதாவது பிராணி வேற எங்காவது உண்டா என்ற ஆராய்ச்சியில் உழண்டு கொண்டு இருந்த நிறுவனம் அவன் ஆசை பட்டு சேர்ந்த ஆராய்ச்சி கூடம். வெளி உலகுக்கு தெரியாது... என்று நான் சொல்லி விட்டதால் உங்கள் நேரம் மிச்சம். இல்லை என்றால் இதை தேடி கொண்டு இருப்பிர்கள்.

ஒரு நாள் தற் செயலாய் சம்பாஷனைகள் ஆராய்சியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஒரு வாக்கியம் போலே தெரிந்தது. பல மணி நேர ஆராய்ச்சியில் இன்னும் புரிந்தது . இன்னும் சற்று முயன்றபோது உணர்வு புரிந்தது. அது ஒரு வலியின் ஓசை என்பது புரிந்தது. தன்னிசையான சொல்லாய் இல்லாமல், அடுத்த உயிருக்கு அந்த வலியை சொல்லும் அர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐயோ! அல்லது ஒ! என்று இல்லாமல், எனக்கு உயிர் போகும் வலி என்பதாய் அர்த்தம் / அனர்த்தம் செய்யப்பட்டது. வலியை சொல்லும் ஒரு உயிரினம் புத்திசாலி தானே.
அதை தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் பலன், அந்த கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு நீர் இருப்பதும் தெரிந்தது. அழுது அடம் பிடித்து அரசும் சம்மதிக்க, 9099 கோடி செலவில் இந்த விண்வெளி பயணம் மேற் கொளப்ட்டது. இதில் ஆத்மாவின் சம்பளம் மட்டும் ரூ 1,99,500 இதர தள்ளுபடிகள் தனி. வாங்கும் சம்பளம் செலவளிக்கவே நேரம் இல்லை. இன்னும் கொடுத்தால் ஆத்மா என்ன செய்ய.... என்று சும்மா இருந்து விட்டான்.
04…03…
என்ன பயணம் இது. திருச்சி கும்பகோணம் போல் அல்லாது வெளி கிரக பயணம். கிரக சாரம். எது எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஹோட்டல் புக்கிங் இல்லை. போர்டர் இல்லை. உயிருக்கு கூட உத்திரவாதம் இல்லை. அழுது கொண்டே வழியனுப்பிய ஜுலி - மொச மொச நாய் நினைவுக்கு வந்தது. நான் இல்லாமல் நீ எப்படி இருக்கிறாயோ ஒழுங்காக சாப்பிடாயா. உனக்கு கழுத்தில் மாட்ட சங்கிலியோ பட்டையோ வாங்க ஆசை. இங்கு கிடைக்குமா…
இந்த கிரகத்தின் சூழ்நிலை எப்படி இருக்கும. அதிக குளிரூ... அதிக உஷ்ணம்... ஒரு இழவும் தெரியலே. என்றாலும் பரவாயில்லை. நான் போட போகும் கவச உடை 500 டிகிரி தாங்கும். ப்ளஸ்சோ மைனசோ பரவாயில்லை.
கௌண்ட் டொவ்ன் இன் இறுதி நிலை…
02…01….
தொடரும்ப்ராஜெக்ட்: டகால்டி 12345 பகுதி 2

விண்கலத்தின் உலோக அடி வயிறு கிறீச்சென்று திறந்து, கவச உடையுடன் படபடக்கும் இதயத்தோடு ஆத்மா. வைக்க இருந்த இடது காலை சற்றே சிந்தனையில் மாற்றினான். 'செண்டிமெண்ட் விடுவானே' எம்பி கை பிடித்து வலது கால் தரையில் பட தொம் என்று குதித்தான். 5 அடி உயரம் தான் என்றாலும் பளுவான கவச உடையில் சற்றே சங்கடம்.
கவச உடையின் கண்ணாடி வழியே தெரிந்தது டகால்டி கிரகம். அப்பா என்ன அழகு. வரைந்து வைத்த ஓவியம் போலே.
பச்சை புல் அடர்த்தியாய் வளர்ந்து மெத் மெத் என்று போர்வை போலே தரையில். பளிச்சென்ற வண்ண நிறத்தில் பூக்கள் நிறைந்து இருந்தன செடியில். மிக உயர்ந்த மரங்களும் அடர்த்தியான இலைகளும் குளுமையாய் நிழல் பரப்பி நின்றன. கையில் உள்ள கருவியில் சீதோசனம் பார்த்தான். 16 டிகிரி. வாவ் பெங்களூர் மாதிரி. ஆக்ஸிஜன் அளவு. மிக துல்லியம். அப்போ எதுக்கு இந்த கவசம். தூக்கி எரி.
ஹும்… எத்தனை செலவு செய்தோம் இதற்காக. பண விரயம் கால விரயம்.
கவசத்தை கழட்டி வைத்த போது நன்றாக இருந்தது. குளுமையான காற்று உடம்பில் தென்றலாய் தவழ்ந்தது. நல்ல பூக்களின் நறுமணம். ஆஹா சுவர்க்கம் போலே அல்லவா உள்ளது. நான் எத்தனை பெரிய விஷயம் செய்துள்ளேன். உலகமே கொண்டாட போகிறது. அமைதியாய் லேசாய் நடை போட்டான்.
சட்டென அந்த ஆபத்து. சற்று தொலைவில் புலி ஒன்றை பார்த்தான். பூமியில் உள்ளது போலே. ஆனால் அதை விட்ட பெரியதாய் ஆரோக்கியமாய் மிக கூரிய பற்களுடன். ஐயோ எத்தனை பெரிய தவறு செய்தோம். கவச உடை கழட்டி இருக்க கூடாது. இத்தனை உழைப்பும் வீண் ஆயிற்றே. இத்தனை பெரிய விஷயம் சிரிய மனித மடமையில் வீனானதே… விண்கலத்தில் ஏறி இந்த செய்தி சொல்லவாவது அவகாசம் உண்டா. பயம் வயிறை அப்பி பிடித்தது.
புலி அவனை நோக்கி ஓடி வந்தது. திரும்பி ஓட திரும்பியபோது ஆத்மா கிழே விழுந்தான். இது வேரயா ! சுதாரித்து எழும்பும் முன் புலி அவன் அருகிலே. கண்களை உற்று நோக்கியது. சரி முடிந்தது என்று என்னும் போது, புலி அருகில் குனிந்து முகர்ந்து பார்த்தது. ஆழமாய் முச்சு இழுத்து முகர்ந்து பார்த்தது……… ஹச்.!!! …. ஒரு தும்மல் போட்டது. 'ஊர்ல பார்த்த புலி (ஜூவிலே) பக்கத்தில போனாலே நாறுமே, இது தும்மினா கூட நாரலையே' - என்ன சிந்தனை இது என்று நினைவின் ஊடே... ஆத்மா அதிர்ந்தான். மறுபடியும் குனிந்து புலி கன்னத்தில் முத்தமிட்டது. புலி மீசை லேசாய் குத்தினாலும் முத்தம் பரவாயில்லை நல்லா இருந்துச்சு என்ன இது.!!!! புலி அவனை பார்த்து சிரித்தது. என்ன இது புலி சிரிக்குமா. மெல்ல எழுந்தபோது புலி அவனை விட்டு விலகி ஓடியது. தூரத்தில் சென்று கொண்டு இருந்த ஒரு யானையை துரத்தி பிடித்தது.
ஆத்மா நினைத்தான். ஒ இந்த கிரகத்தில பெரிய உணவு தான் முக்கியமோ. சரி என்ன ஆனாலும் கவசம் போட்டாத்தான் சரி. திரும்பி நடக்க முற்படும் போது, அவன் பார்த்த காட்சியில் மீண்டும் ஆச்சரியத்தான்.
ஓடி சென்று பிடித்த புலி யானையின் வயிற்று பகுதியில் எட்டி கிச்ச் கிச்சு மூட்டியது. யானை சங்கடமாய் நெளிந்தது. வாய் விட்டு சிரித்தது. நீண்ட தும்பிக்கையை நீட்டி புலியின் காதை பிடித்தது. பிடித்த காதை மெல்லமாய் திருகியது. புலி சுழன்று மறுபடி சிரித்தது.
அந்த காட்சியின் தாக்கம் அவனை விட்டு விலகவே இல்லை. எப்படி இது சாத்தியம். சிந்தித்துகொண்டே நடந்ததால் பாதை சரியாய் கவனிக்காமல் அருகில் உள்ள குழியில் விழுந்தான். அம்மா... ஆ கத்திகொண்டே தரை தொட்டான்.
எழுந்து பார்த்தபோது முட்டில் நல்ல வலி தெரிந்தது. எலும்பு முறிந்து இருக்கும் போலே. சே… என்ன இது பார்த்து நடந்து இருக்க வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருந்த போது, காற்று சுழன்று அடித்தது. மெல்லியதாய் அந்த காயத்தை சுற்றி வலுபெற்றது. அந்த காயத்தில் படர்ந்து சுழல ஆரம்பித்தது. லேசான சூடு அதில் தெரிந்தது. ஆழ்ந்து சுவாசித்ததில் லேசான மருந்து வாடை. ஒன்று… இரண்டு… மூன்று… சுழற்ச்சி நின்றது! காற்று காணாமல் போனது. வலி இருந்த இடமே தெரியவில்லை. விழி விரித்து நின்றன் ஆத்மா. கால் உதறி பார்த்தான். நான் விழுந்தேன் அல்லவா, வலி உயிர் போனது போலே இருந்தது அல்லவா. பின்னே எப்படி சரி ஆனது.
என்ன வினோதம் இது. இப்படி எல்லாம் கூட நடக்குமா.
அப்போது செடி அசைவிலே யாரோ வருவது தெரிந்தது. கண்களை கூர்மையாக்கி ஆத்மா பார்த்தான். நல்ல உயரத்தில் கோதுமை நிறத்தில் நீண்ட கூந்தலுடன் ஒரு பெண்… இல்லை ஒரு தேவதை அது. ஒயிலாக மயிலாக நடந்து வந்தாள். வசிகரமாய் சிரித்தாள். அவள் அருகில் வந்த போது நல்ல ஒரு நறுமணம். ஹும்…. ஆழ்ந்து காற்றை சுவாசித்தான். பளபளப்பான மேனியில் ஆடை இல்லை. சங்கடமாய் பார்த்தான் ஆத்மா.
தொடரும்

செய்தி : 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் போட்டிக்கு நமது ராம்கி எழுதிய மு.க புத்தகம் பரிசுக்குரிய புத்தகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது'


செய்தி கேட்டு மனதில் பூ...
(பூரிப்பு என்று கோடிட்ட இடத்தை நிரப்பினாலும் சரி, பூ என்று விட்டாலும் சரி)
அன்பு நண்பா வாழ்த்துக்கள்.

உன் இலக்கிய பயணத்தின் இனிய மைல் கல் இது.

தொடர்ந்து செல் நீண்ட தூரம்.
படுக்காளி

அட போடா பயந்தாங்கோளி...

“அட போடா பயந்தாங்கோளி”
இதை அடுத்தவர் சொன்னாலும், நமக்கு நாமே சொன்னாலும் ஒத்து கொள்ளமால் மனம் அடம் பிடிக்கும். இல்லை என்று சொன்னாலும் இல்லாமலா போய் விடும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அல்லவா.
மனித பயங்களில் எது முதன்மை ஆனது. மரண பயம்.
ஏன் இந்த பீடிகை, நீட்டி முழக்கி, மூக்கை சுத்தி ஏன் காதை பிடிக்கிற என்ற உங்கள் மனக் குரல்கள் எனக்கு கேட்கிறது
சமிபத்தில் என்னை அசைத்து பார்த்த சிந்தனை இது. முன்று சம்பவங்கள்.
1. அலுவலக நண்பன் தன் இரண்டு வயது மகனை முச்சு பேச்சு இல்லாத நிலையில் மரண விளிம்பில் நிறுத்தி, மீண்டும் வாழ்வுக்குள் இழுத்து வந்தது முதலாவது
2. 75 வயதை கடந்து - தான் ஈன்ற பிள்ளைகளால் புரக்கணிக்கப்பட்டு, தன் உடலும் மனமும் ஒத்துளைக்காது வாழ்ந்த என் மாமன், இறந்து போனார் என்ற செய்தி நிம்மதி பெருமுச்சாய் வந்தது இரண்டாவது
3. 45 வயது வாடிக்கையாளர் கருத்தரங்கு சென்ற இடத்தில் அகாலமாய் இறந்தார் என்ற போது உண்மையா என்று எதிர் கேள்வி கேட்டது மூன்றாமது
மரணம் தவிர்க்க முடியுமா?
சில பரிஷத் மகாராஜக்களை கதையாய் கேட்டது உண்டு. பாபா என்று நித்திய வாழ்வு பற்றி புரியாத பாஷையில் கேட்டதும் உண்டு. சராசரி மாமுல் ஒத்து கொள்ள பட்ட சிந்தனையில் மரணம் தவிர்க்க முடியாததாகவே தோன்றுகிறது.
மூன்று செய்திகளுமே என்னிடம் சொல்ல பட்டபோது, எல்லா நினைவுகளையும் உதிர்த்து ஒரு முகமாய் கேட்டேன். மிக முக்கியம் என்று நான் நினைத்து செயல் பட்டு கொண்டிருந்த அன்றாட அலுவல்கள் கூட ... முக்கியமா ??? இல்லை என்பதாய் உதிர்க்கப் பட்டன.
கோரமாய் நின்ற கேள்வி, என் கண்களை உற்று நோக்கியது போலே. ஏன் இந்த நிலை.
மரணம் வயது முதிர்ந்த போது இயல்பும் நியாமும் ஆகிறதோ. அதுவே இளமையில் கொடுமை என்று அர்த்தம் ஆகிறதோ .
மேலே சொன்னது விடை நோக்கி செல்லும் வாக்கியமோ.
இரண்டு வயது பிள்ளை இன்னும் அனுபவிக்கவில்லையே என்ற ஆதங்கம், மத்திய வயதில் அவன் செய்ய வேண்டிய கடமையை தீர்க்க வில்லையே என்ற கூக்குரலோ.
மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும் என்ற நிதர்சனம் நிமிர்த்து நிற்கும்போது நாம் என்ன செய்ய. எப்படி போக்குவது இந்த பயத்தை.

உலக வாழ்வை நாம் வாழ்ந்து, இளைய சந்ததிகள் அதை உணர சூழ்நிலை அமைத்து தந்தால் .....

காலா .... வா என் அருகில் உன்னை என் காலால் எட்டி உதைப்பேன் என்று முண்டாசு கட்டி நாமும் மகா கவியாவோமோ

உலகம் சுற்றுவோம் வாருங்கள் - பஹ்ரைன்

கடல்களால் சூழப்பட்டு ஒரு ஊரை ஒரு நாடாய் சொன்ன வினோதம் தான் பஹ்ரைன். வண்டியில் ஏறி அழுத்தி மிதித்தால் நாட்டின் ஒரு எல்லை விட்டு அடுத்த எல்லை தொட்டு விடலாம், ஒரு மணி நேரத்திற்கு உள்ளே.
சிறியது என்றாலே அழகு தானே. மத்திய கிழக்கு நாடுகளுக்கே உரிய நவின வசதிகளும், நச்சு பிச்சு தொந்தரவுகளும் உண்டு. குளுமையான காற்றிலே பண வாடை துக்கலாய் இருக்கும். ஓரிரு கிலோமீட்டர் தூரத்திலே கடல் சூழ்ந்து இருந்தால் காற்று சுகமாய் தானே இருக்கும். சிரமப்பட்டு மரம் வளர்த்து அதையும் மெனக்கெட்டு தண்ணிர் ஊற்றி கொண்டு இருப்பார்கள். சொல்லாமல் கொள்ளாமல் தானே வளரும் ரோட்டோர கேரளா மரங்கள் கேட்டால் பொறாமை படும்.
மத்திய கிழக்கு சரித்திரங்களின் மிக பழைய பக்கங்கள் பக்ரைனில் தென் படும். இங்கு புதைத்தால் நல்லது என்று நம்பி - பிணங்களைத்தான், வெளி நாட்டில் இருந்து வந்தெல்லாம் புதைத்தார்கள் என்று ஒரு கதை உண்டு. மத்திய கிழக்கின் சுடுகாடு என்று சொன்னால் மிகை அல்ல. எது எப்படியோ ஒரு மிக பெரிய நிலப் பரப்பு இன்று வரை அகழ்வாராய்சிக்கு சோறு போட்டு கொண்டு இருக்கிறது. தோண்டுவதும் துடைப்பதுமாய் இன்றும் சில வெள்ளைகார மேதாவிகள் அரை நிஜார் போட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
முது மக்கள் தாழி போலே உள்ள மண் பானையில் இவர்கள் கலையும், கலாச்சாரமும் கும்மி அடிக்கும். அத்தனை பெரிய பணக்காரர்கள் இல்லை இவர்கள். எல்லாருமே 'புது பணக்காரர்தானே'. எண்ணை எடுக்கப்பட்டு , வாகனத்தில் ஓடும் என்று தெரிந்த பின் தானே இவர்கள் சீமான்கள்.
இவர்கள் வரலாறே பாவம் தானே. அரசரின் மாளிகை கூட இங்கே மண் குடிசை தானே. வரலாறு இல்லாது வளமையான எதிர்காலம் மட்டுமே இங்கு சாஸ்வதம்.
இந்தியாவோடு நெருங்கிய நட்புறவு வைத்தது தெரிகிறது.
ஒரு தேனிர் விலை 50 காசு, புத்தம் புது சொகுசு கார் 5000 ரூபாய். உள்ளூர் காசு ஒரு தினார் இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய். இது என்ன கலாட்டா… ஒரு ரூபாய்க்கு நூறு பைசா என்றால் ஓகே. ஆயிரம் பைசா என்றால், அழுவினி ஆட்டம்…. அதனாலே தான் ஒரு பக்ரைனி தினார், துபாய் மதிப்பில் பத்து திர்ஹம். எது எப்படியோ அரை ரூபா நோட்டு காகிதமா இருக்க, 50/100/250/500 காசு நாணயமா இருக்கு.
சுறுசுறுப்பான துபாய் மாதிரி இல்லாது, சோம்பேறித்தனமான ஊர் என்று சொன்னால் அவர்களே கோபப் பட மாட்டார்கள். ஆனால் துபாயின் வளர்ச்சி பிடிக்காது. வளைகூடாவின் வாசல் என்று துபாய் ஆகி போனது. பஹ்ரைன் தொடங்கிய விளையாட்டை வேகமாய் விளையாடி வெற்றி பெற்றவர் துபாய் காரர்.
இந்த ஊர் உயர முக்கிய காரணம் அருகாமையில் உள்ள ஒரு நாடு. சவுதி அரேபியா. அந்த ஊரில் கிடைக்காத மதுவுக்கும், மாதுவுக்கும் ஆலாய் பறந்து ஒரு கூட்டம் வரும். வார விடுமுறையிலே இங்கு கூட்டம் நெரிக்கும். முரட்டு தனமாய் வண்டி ஓட்டி சாலை விதிகளை மீறும். புன்முருவலோடே பஹ்ரைன் நாடு அதை ஏற்று கொள்ளும்.

இடைவெளி

வெளியூர் அலுவலக பயணம் என் கைகளை கட்டி போட்டது. பஹ்ரைன் தேசத்தின் வங்கி வணிகத்தினருக்கான கருத்தரங்கு ஒன்று சென்றிருந்தேன்.
கோட் சூட் மாட்டிகிட்டு ஆலாய் பறக்கும் இந்த கூட்டத்தை பரிதாவமாய் பார்த்தேன். அவர்கள் ஆதங்கம் அபிலாஷைகள் எல்லாம் எனக்கு அன்னியம். இந்த சாதியில் நான் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

எதாவது புதுசு இருக்கா என்று வந்து எட்டி பார்த்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி, நாளை முதல் தொடர்ந்து எழுதுவேன்.

இடைவெளிக்கு மன்னிக்கவும்

மதினிக்கு கல்யாணம்


மதினிக்கு மகிழ்ச்சியா என்று தெரியாது, எனக்கு கொள்ளை குஷி. பள்ளிக்கு விடுப்பு அல்லவா, வகுப்புக்கு கல்தா அல்லவா. நேற்றே நண்பனிடம் எழுதி கொடுத்து விட்டேன் லீவ் லெட்டர். குடும்பத்தின் அங்கிகாரத்தோடு பொய்யாய் சொன்ன, உடல் நலக் குறைவு நினைத்தாலே இனித்தது. வேலிக்கு ஓணான் சாட்சி, முனுமுனுப்பாய் ஆச்சி சொன்னார். கல்யாண வீட்டு பக்கம் வாத்தியார் வரக் கூடாது மனதினுள் பிரார்த்தனை.

காலையிலே கிளம்பியாச்சு குடும்பமாக. காலை சாப்பாடு அங்கே தான். நெருங்கிய உறவினருக்கு மட்டும் தரும் உச்சகட்ட மரியாதை. மாமுல் உறவு என்றால் மதியம் தாலி கட்டும் சோறு மாத்திரம்.

சபாரி சூட் போட்டு துரை கணக்கா படுக்காளி. காலிலே கருப்பு ஷூ, நேற்று போட்ட பாலிஷில் இன்று பளபளக்கும். சைஸ் மட்டும் சின்னது. பெரு விரலில் வலிஎடுக்கும். வலி என்றாலும் ராஜ நடைக்கு குறைவு இல்லை. உலகமே இனிமையாய் இருக்கும்.

தெரு முனையில் கல்யாண வீடு தெரியும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. கம்பத்தில் குழாய் கட்டப்பட்டு இருக்கும். உட்பகுதியில் மின்னும் சௌன்ட் சர்வீஸ் பெயர். கரகரப்பாய் இறை துதி வரவேற்கும், காதுகளை குடையும். இசையை விட இரைச்சல் அதிகம். கல்யாண வீட்டுக்கு வழி கேட்க கூடாது என்பதற்காக இப்படியா சௌன்ட் விடுவது.

சாமி பாட்டு தான் முதலில் போடணும், கொள்கை விளக்கம் தருவார் ஒலி பெருக்கி மேலாளர். சமிபத்தில் வெளியான திரைப்பட பாடல் இசை தட்டை நேர்த்தியாய் அடுக்கி வைப்பார். இளஞ் சோட்டு பிள்ளைகள் ஆவலாய் பார்த்திருக்கும்.

வீட்டு வாசலிலே குலை வாழை இருபுறமும், நட்ட நடு மையத்தில் (ஏங்க இப்படி ஒரு வார்த்தை பிரயோகம்) நல்வரவு பல்புகளாய் பளிச்சிடும்.
சிரித்த முகத்தோடு உறவினர் வரவேற்பார். சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசலாம் அக்கரையாய் சொல்லுவர். கண்கள் துலாவி நம் சோட்டு நண்பர்களை தேடும்.

வீட்டின் பின்புரத்தில் உணவு அருந்த இடம் இருக்கும். மெகா சைஸ் டின்னில் தண்ணிர் ததும்பி நிற்கும். திரை சீலைகள் மறைத்து இருக்க உண்ணுபவர் வெளி தெரியாது இருக்கும். ஒழுங்கில்லா தரையிலே செங்கலில் முட்டு கொடுத்து துருபிடித்த மேசை வரிசையாய் நின்றிருக்கும். மேசையின் அருகிலே உட்கார இருக்கை உண்டு. பொதுவாக நொண்டியாய் இருக்கும், சிலதுக்கு வயதானதால் கால்கள் ஆடும். கவனமாய் உட்கார வேண்டும் இல்லை என்றால் சேதாரம் அதிகமாய் இருக்கும்.

சோத்து பிரியர்கள் சிலர் அங்கிருந்து நகர்வதே இல்லை. அதற்கு பின்புறம் அடுப்பு மூட்டி சமையல் தூள் பறக்கும். மதி உணவிற்கான காய் கரி இப்போதே வெட்ட பட்டு கொண்டிருக்கும். அழுக்கான சமையல் காரர் பரபரப்பாய் இருப்பார். வேர்த்து விறுவிறுத்து கையில் கத்தியோடு இருப்பார்.
சாப்பிட உட்காரும் போது உறவினர் காண வருவார்.

புதிய உடுப்பிலே கல்யாண வீட்டினர் படபடக்கும் கால்களோடே நடப்பார். காது துளைக்கும் மங்கல ஒலியிலே உரக்கப் பேசுவது மட்டும் அல்லாது, காது வரை குனிந்து பேச வேண்டும்.
முற்றத்தில் உள்ள தென்னங் கீற்று பந்தல் குளுமையாய் பரந்திருக்கும். கால் நீட்டி உடம்பை தளர்த்த கண்கள் சொக்கும்.

கல்யாண நிகழ்வுகள் மங்களகரமாய் செல்லும்.

உனக்கென வாழு ...

கண்ணன் வாங்கினான் காரு
உரெல்லாம் நல்ல பேரு
காசு கூடியதால் பர்சு டாரு
வரவை பார்த்து சிக்கனமாய் சேரு

அறிவுரை யார் சொன்னாலும் யூஸ் இல்லை

பரபரப்பாய் பள்ளி செல்லும் ஆத்மாவை தடுத்து நிறுத்தி சொன்னான் "என் பெயர் ஆத்மா"
"ஒ... அப்படியா என் பெயரும்..."
இடை மறித்து சொன்னான் "தெரியும் உன் பெயர் ஆத்மா, என்னை நன்றாக உத்து பார்”

ஆத்மா அசந்து போனான். என்ன நீ என்னை போலே அல்லவா இருகிறாய்.
"ஆம் நான்தான் நீ. நீ தான் நான்"
"புரியல"
"இதோ பார், எனக்கு நேரம் குறைவு. ஒரு டகால்டி செய்து முப்பது வருடம் முன்னோக்கி வந்து நம் வாழ்கையை மாற்றி அமைக்க வந்திருக்கிறேன்”
"விளையாடு வேண்டாம்னு சொல்லலே, நல்லா படி, அது ஒண்ணுதான் உன்னை காப்பாத்தும், உனக்கு பெஸ்ட் நிர்வாகம், தயவு செய்து வணிகவியல் வேண்டாம்”
கவனமா கேளு… இந்த புகை பிடிக்கிற பழக்கத்த ஆரம்பிக்காதே, பின்னாலே விடுறது ரொம்ப கஷ்டம். அப்புறம் டெய்லி வாக்கிங் போ. பிற் காலத்திலே உடம்பெல்லாம் தளந்திருது.

கஷ்டமா இருந்தாலும், பிடிக்கலைனாலும் பெரியவங்க சொல்றத கேளு, நம்ம நல்லதுக்கு தான் சொல்றங்க. அப்புறம் அந்த பக்கத்து வீட்டு மாலதி மேட்டர விட்டிரு, அதுலே ஒரு யூசும் இல்லே.

சினிமா பாரு, வேண்டாம்னு சொல்லலே, ஆனா அதுக்கு நீ செலவழிக்கிற நேரம் ரொம்ப ஜாஸ்தி. அப்புறம் முக்கியமானது ஓவ்வொரு மாசமும் ஒரு சின்ன அமௌன்ட் சேமிக்க பாரு. இன்னொரு முக்கியமான விஷயம்.....

காற்று சுழண்டு அடித்தது . திடிரென வண்ண வண்ண நட்சத்திரங்களாய் தெரிந்தது. ஒரு கருகிய வாடை. லேசாய் வயிட்றை பிசைந்து கொண்டு ஒரு இம்சை. திடிரென மறைந்தது அந்த பிம்பம். ஆத்மா திகைத்து நின்றன்.

யாரது... என்னை போலே ஒருவன், திடிர் என்று வந்தான், சொன்னான், மறைந்தான். புதுசா ஒன்னும் சொல்லலே, அப்பா சொன்னது, அம்மா சொன்னது, அண்ணன் சொன்னது எல்லாம் கலவையாய் சொன்னான். "அட போங்கப்பா .....”

மனதினுள் இப்படி சொல்லிவிட்டு மெல்லமாய் நடக்க ஆரம்பித்தான் ஆத்மா

சுய விளக்கம்

நண்பர் கேட்டார். இந்த ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் கற்பனையா, இல்லை நடந்ததா.

நிச்சயமாக உண்மை. புனைவு எதுவுமே இல்லை. நினைவுகளின் செதில்களில் ஆழத்தில் பதிந்து உள்ள நிகழ்வுகளை தோண்டி எடுத்து பதிக்கிறேன். குறும்பு தனமான நினைவுகள் என்னை குளிர்விக்கின்றன. என் சேட்டைகளை அங்கிகரித்தும் ஊக்கப்படுத்தியும் என்னை வளர்த்த என் ஆச்சியின் பாதங்களுக்கே இது சமர்ப்பணம். அதனாலேயே இந்த தாமதம். மன்னிக்க வேண்டுகிறேன்.

உறவுகளின் உள்ளுக்குள்ளே ....

இரணடு மனித ஜீவன்கள் உறவாய் இருக்க… என்ன வேண்டும் ?

ஏன் இந்த கேள்வி, இதாலே என்ன யூஸ் என்பவருக்கு.
கூடி வாழும் இயல்பினன் மனிதன். தனியனாய் வாழ இங்கு முடியாது. மிகவும் அவசியம் சக மனித உறவு.
நட்பு, காதல், மரியாதை, என பல பரிமாணங்களில்.

சரி. அடுத்து என்ன.

உங்களுக்கு பிடித்தமான அதே சமயம் கடினமான ஒரு உறவு சமைத்தலை மனதில் கொள்ளுவோம்.
என் மானசிக குரு பாலகுமாரனின் நட்பு எனக்கு வேண்டும. வயிற்று பிழைப்புக்காக என் மேலதிகாரியின்/வாடிக்கையாளரின் உறவு வேண்டும்.
படுக்காளி இப்படி நினைக்க… நீங்கள் இப்படி நினைத்தாலும் ஓகே.
என் மனம் கவர்ந்த நங்கை, காதல் என்னும் உறவில் வேண்டும்.
எது எப்படியோ கேள்விக்கே மறுபடி வருகிறோம்
இரணடு மனித ஜீவன்கள் உறவாய் இருக்க… என்ன வேண்டும் ?

நண்பன் ஒருவன் சொன்னான்
'ஒருமித்த ரசனை அல்லது கருத்து'
இருக்கலாம். ஆனால் என் நெருங்கிய நண்பனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். நான் சைவம் அவன் அசைவம், நான் காங் அவன் BJP , நான் ரஜினி அவன் கமல். நான் இலக்கியம் அவன் ‘வேலை இல்லே போடா’ இருந்தும் நாங்கள் மிக நல்ல நண்பர்கள்.
இது எப்படி. கருத்தொருமித்து கதைக்க ஒன்றுமே இல்லை. வேறுபாடுகளை உணர்ந்து ஒத்து கொண்டு நண்பர்களாய் நீண்ட காலமாய் நாங்கள்.
சரி அடுத்து என்ன செய்யலாம்.
நாம் ஒரு சூத்திரம் உண்டாக்குவோம், இதை கடைபிடித்தால் யாருடனும் உறவு சமைக்கலாம் என்று அறிவிப்போம். பின்னர் உலகுக்கு சொல்லுவோம், உறவுக்கு அழைப்போம்.

உங்கள் கருத்துக்களை அறியும் ஆவல் உண்டு.

படுகாளியின் சிற்றறிவிற்கு எட்டிய சூத்திரம்.

உறவுக்கு தாரக மந்திரம் இரண்டு.
பரஸ்பர பாராட்டு
நம்பிக்கை

குணங்களோ செயலோ எண்ணமோ என்னமோ ஒன்றை பரஸ்பர அங்கிகரிக்க வேண்டும். பாலகுமாரனை நான் பாராட்டி அங்கிகரிக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் உயர்வாய் கருதுவது ஒன்றும் இல்லை. அங்கனம் அவர் பாராட்டும் ஒரு நிலை வந்தால் அவரும் என் உறவை நாடுவார்.

இதுவே முதல் படி.
இது செய்து விட்டால் ஒரு 70% வேலை முடிந்தது.

அடுத்து நம்பிக்கை வேண்டும். பரஸ்பர பாராட்டு மட்டும் இருந்தால் நாம் விலகியே இருப்போம். நம்பிக்கையும் சேரும் போது அங்கே உறவு மலரும்.

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 04/02/09

சச்சின், ஜெகன், அபு, ஜான், கோபி, பாஸ்கர் - இவர்கள் விரும்பி கேட்ட...................

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் ......................

பள்ளி சென்று, திரும்பி வந்த படுக்காளி இன்னும் சட்டையை / சீருடையை கழட்டவில்லை .
துவைக்கும் கவலையுடன் ஆச்சி சொன்னது
"சட்டையை கழட்டு"
"நான் என்ன பாம்பா, சட்டையை கழட்ட”.
பொக்கை வாய் சிரிப்போடே சொன்னார் ஆச்சி
"போட்ட சட்டை கழத்தாத படுக்காளி, இட்ட சட்டை கழத்தாத இன்ஸ்பெக்டர்”

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம்

மழை பெய்திருந்த ஒரு நாளில் , குளித்து கொண்டு இருந்த படுகாளியை பார்த்து ஆச்சி "உலாத்தி குளி "

"அப்படினா"

"ஒரே இடத்திலே இருந்து, மொண்டு மொண்டு ஊத்தாம நடந்து குளிச்சா, பாத்ரூம் சுத்தம் ஆகும்லே. ஆடு மேச்சா மாதிரி , அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரி "

குளித்து முடித்து வெளியே வந்த படுக்காளி சொன்னது " ஆச்சி உலாத்தி குளிச்சிட்டேன், ஆனா என்னை விட நீங்க சூப்பர். வீடு புரா உலாத்தி குளிச்சிங்க போலே , வீட்ட சுத்தி சுத்தமா இருக்கே

அப்புறம் உங்க சம்பந்தி ஆடா !!! அல்லது ஆடு மேச்சவுங்களான்னு!!!
சொல்லவே இல்லை....

வண்ணம் சொல்லும் பல சேதி

அரிய தகவல்கள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்

- கோபி
வண்ணம் சொல்லும் பல சேதிஇன்னும் உள்ளதோ மிச்சம் மீதி
கேட்டு சொன்னால் தெளிவோம்அதை அறியும் வரை நெளிவோம்

ஜோ பாஸ்கர் .... சொன்னது
You have stated many facts in this post. I wish to question a few of them.

1. Dreams are in B&W... Pl note this is a very old school of thought. The studies conducted from 1915 to until 1950 stated that dreams in B&W (that too only 12% of the people had their dreams in B&W). Today - (even after 1960) - recent studies have proved that only 4.4% people dream in B&W and that too they are mostly in under-25 age group. There is another theory that states that people had B&W dreams when the TV was in B&W. As Colour TVs came into our lives, people now are dreaming in colour. If you need details I will send you references of the above research papers. Ref: 1. "Black and white TV generation have monochrome dreams" by Richard Alleyne and 2. "Typical Dreams: Stability and Gender Differences" by Michael Schredl, Petra Ciric, Simon Götz, Lutz Wittmann.

2. "Brain's internal language is Colour" :I beg to differ completely. The internal communication inside the brain is through the nuerotransmitters of the neuron whether it is "Glutamate" which is excitatory and "GABA - Gamma-Aminobutyric acid" which is inhibitory. We can call this the Os and 1s. Minds or thoughts is like any other activity by brain like motor functions, sensory system etc.,There are no study to prove that there is light or colour sensing element available inside teh brain.So please review whether "Internal Communication" within the brain is color.

3. Now comes your main question: "Does Colours affect our thinking ?"Yes. Colours have a great impact on the thinking of "some" people and it varies greatly.The connotation for every colour os different for different persons. There is nothing like "Blue colour" stimulates thinking and Pink Colour stimulates erotic thought etc.,That sort of a sterotyping is impossible. However it is greatly liked to cultureLet us take an example - YELLOW:To most of us Tamilians - It is "Mangalakaramaana Manjal". It brings happpiness.Now see how other fellow human beings view Yellow.In the English language, yellow has traditionally been associated with jaundice and cowardice. In American slang, a coward is said to be a "yellowbellied" person or "yellow". "Yellow" ("giallo"), in Italy, refers to crime stories, both fictional and real. This association began about in 1930 because the first series of crime novels published in Italy had a yellow cover. Pencils are often painted yellow, originally because of the association of this color with the Orient, where the best graphite is found. The phrase "Yellow Yellow, dirty fellow" is used by children to mock someone wearing எல்லோ
Individuals develop an association between an emotion and a particular colour based on their culture, individual value system, happenings in their life etc.,Why only colour. The same is applicable for SMELL also.Emotions are associetd with smell. Viboothi is linked to temple. Sambrani is linked to church. Cheap Agarbathi and Eau de cologne is linked to funeral. Even soap smells could change your thoughts.
You have also mentioned that it is happening only for humans..Please think a whie.Bulls have an aversion towards RED colour.Bulls would run amok if it sees red.This is not just in India. This phenomenon is true worldwide. Remember the Bull Fight in Mexico.Studies prove that:* Red is liked to blood. So danger* Green is the colour of leaves - i.e., life.Each one of us extend this list to add emotions, moods and behaviour to various colours.
Final Comment:There are at an average 8% worldwide who are colour blind.They also have chesive thinking, logical thoughts and active mind.Colour or lack of colour do not take away their thought process.