பக்கங்கள்

ஆத்மாவின் பயணம் - நிறைவு பகுதி


“எப்படி இந்த வினோதம், ஏன் இது மாய உலகம் போலுள்ளது”மிடறு விளங்கி ஆத்மா சொன்னான் "எதை சொல்லுகிறீர்" வார்த்தைகள் காற்றோடு கலந்து செல்லமாய் பேசினாள்

"நிறைய உள்ளன. புலி சிரித்தது என்னை முத்தமிட்டது யானயை கிச்சு கிச்சு மூட்டியது"
"இதில் வினோதம் என்ன நண்பரே. அன்பு தானே அடிப்படை உணர்ச்சி. ஒரு மலரை மலையை முயலை ஏன் ஒரு கழுதை குட்டியை பார்த்ததும் தோன்றும் முதல் உணர்ச்சி என்ன? அன்பு பாசம் நேசம் எதோ ஒன்று தானே. உங்கள் கிரகத்திற்கும் இதற்கும் சில மாறுதல்கள் இருக்கலாம், உங்கள் தோல் போல”

டி ஷர்ட் பார்த்து கல கல வென சிரித்தான் ஆத்மா. சிரித்த போது வாய் வழியே காற்று புகுந்தது. நுரையிரலை நிரப்பியது. நரம்பியலில் மாறுதல் செய்தது. சிந்தனை துடைத்தது. புத்துணர்ச்சி பெற்றான். உடல் பஞ்சு போலே ஒரு நொடி மேல் எழும்பி கீழ் இறங்கியது. "என்ன இது, சிரித்தால் இப்படியா. எங்கள் ஊரில் பழமொழி மட்டும் வைத்துள்ளோம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. இங்கே அது நிஜமாய் உள்ளதே.
குனித்து தான் அணிந்து இருந்த நீல நிற டி ஷர்ட் தொட்டு சொன்னான். "இதையா" "ஆம். நீங்கள் நீல நிற தோல் கொண்டவர் அல்லவா" “இல்லை இது உடை” இழுத்து விலக்கி தன் மார்பை காட்டினான். அவள் மெல்ல நகர்ந்து அவன் உடையை பற்றி இழுத்தாள். ஸ்பரிசித்தாள். "ஒ... இது என்ன பழக்கம்… ஏன் மூட வேண்டும்"
தலை சொரிந்து கொண்டு ஆத்மா சொன்னான் "சரியா தெரியலே எல்லாரும் போடுறாங்க நானும் போடுறேன் அவ்வளவுதான். அதுவும் ஒரு 500-600 வருஷம்தான், இதுவும் இரண்டு கட்டமா செய்தோம். முதலில் இடுப்ப மட்டும் மறைத்தோம் பின்னர் மார்பையும். அதுக்கு முன்னாலே நாங்களும் உங்களே போலே தான் இருந்தோம்."
“அப்படி என்றால் ஏன் மார்பையும் இடுப்பையும் மட்டும் மூடி கொள்கிறிர்கள். அங்கம் மறைப்பது தான் நோக்கம் என்றால் மூக்கையும் கண்ணையும் மறைக்கனூமே...."
“அதுவும் செய்யுறோம். அரபு நாடு எனும் பகுதியில் நீங்கள் சொன்னது போலே முஞ்சியையும் மூடி கொள்வோம்”
விசித்தரமாக உள்ளதே. ஏன் இப்படி.
குடும்பக் கட்டமைப்பு. தன் சந்ததி பற்றிய மூர்க்கம், பாலியல் வன்முறை, பொருளாதார ஏற்ற தாழ்வு இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எப்படி ஆரம்பித்தது என்று தெரியாது ஆனால் இன்று நாங்கள் ஓவ்வொருவரும் ஓவ்வொரு காரணத்திற்காக உடுத்தி கொண்டு இருக்கிறோம்.
“சரி… இது உடை… இதை எப்படி செய்திர்கள்.” "நெய்தோ, காய்ச்சியோ, கட்டியோ இதை உருவாக்கி ஜீவனம் நடத்துகிறார் நெசவாளி"
"புரிந்தது போலே பேசிக்கொண்டு இருந்தவர் ஏன் இப்படி புரியாததாய் சொல்லுகிறீர்”
எதை
கடை… நெசவாளி… என்ன இதெல்லாம்
ஒ இங்கே கடையும் இல்லை நெசவாளியும் இல்லை..... முக்கியமாய்... இங்கே ஜீவனமே இல்லை.
இங்கு நிறைய இல்லைகள். வீடு இல்லை. ரோடு இல்லை. மருத்துவமனை இல்லை வைத்தியர் இல்லை. போலீஸ் இல்லை. ஏன்… ஏன்… ஏன்…
இங்கு பசி இல்லை.
தலை உலுக்கி கேட்டான் ஆத்மா. என்ன கொடுமை இது. பசி இல்லைனா எப்படி? ருசியும் இல்லையா?? அப்போ மரணம் எப்படி??
“தெரியாது…. ரொம்ப போட்டு ஏன் அலட்டிகிர ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற!!! எங்களுக்கும் மரணம் உண்டு. செத்தா போய்கிட்டே இருப்போம்”
“அப்போ அழுகை இல்லையா! அஞ்சலி இல்லையா! அண்ணா செத்து போன கவிதை இல்லையா!!!”
காதல் இல்லையா நட்பு இல்லையா பொழுது போக்கு இல்லையா, இலக்கியம் இல்லியா ரஜினிகாந்தும் இல்லையா
நீண்ட இல்லை லிஸ்ட் வாசித்த ஆத்மா சோர்ந்தான். மெலிய குரலில் அவள் சொன்னாள் "அதனால் இங்கு நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடு பட வேண்டியதில்லை. பிட்டி வலிக்க பிள்ளை பெற வேண்டியதில்லை”
ஒ இது ஒன்று தானா, இத்தனை மாறுதல் செய்தது. பகை பஞ்சம் புகழ் பணம் இல்லாதது வரம் என்றால், விஞ்ஞானம் குடும்பம் உயர்வு சொவ்கரியம் என்பது சாபம் ஆகுமா
திரும்பி நடந்து சென்றாள் அவள். முயல் குட்டி ஒன்று அவள் பின்னே தொடர்ந்து நடந்தது. சிந்தனையை கலைத்து ஆத்மா வேகமாய் எழுந்து " பெண்ணே ...."
"என் பெயர் ஏவாள். தனிதனியாய் எங்களுக்கு பெயர் இல்லை. ஆண் என்றால் ஆதாம் பெண் என்றால் ஏவாள். தனி மனித அங்கிகாரம், தனி மனித சாதனை என்று வேறு படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அவள் மறைந்து சென்ற திசை நோக்கி சிறிது நேரம் செய்வதரியாது நின்றான். பின்னர் கல்லும் மண்ணும் செடியும் கொடியும் சேகரித்தான். விண்கலத்தின் அமர்ந்த ஆத்மா ஒரு மெசேஜ் பார்த்து துள்ளி எழுந்தான்.
. அன்பு ஆத்மா.
என் மேல கோபம் போச்சா. உன் அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் தூக்கி போட்டுட்டு செனாய் நகர் உடனே வா. உனக்கு பிடிச்ச கத்திரிக்காய் பொரியல் பிரிட்ஜ் ல இருக்கு. மல்லி பூவும் பக்கதிலே இருக்கு. இரண்டும் இரண்டு நாளா.
பழசை எல்லாம் மறந்துடு. மன்னிச்சுடு
இப்படிக்கு
அபிதா


முற்றும்


முடிக்கும் முன் :

உலகம் உண்டானது எப்படி? முதல் மனித உயிர் உண்டானது எப்படி என்ற கேள்விக்கு, இப்படிதான் என்று சொல்ல இயலாத நிலையில், கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் இது குறித்து ஒரு சுவாரசியமான செய்தி தருகிறது.

ஆறு நாட்கள் எடுத்து இறைவன் உலகை படைத்தார். இறுதி நாளில் தன் சாயலாய் ஆதாமை உண்டாக்கினார். அவன் விலா எலும்பு எடுத்து ஏவாள் உண்டாக்கினார். மகிழ்ச்சியாய் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் இந்த நடு மரத்தின் கனியை மாத்திரம் உண்ண கூடாது என்று எச்சரித்தார்.

சாத்தானின் சோதனையால் ஏவாள் தர ஆதாம் அதை புசித்தான் / சாப்பிட்டான் .

சற்று நேரம் கழிந்து இறைவன் அவர்களை தேடி வந்த போது காணாததால் உரக்க அழைத்தார். ஆதாம் மறு மொழி சொன்னான். "இறைவனே நான் நாணத்தால் மரத்தின் பின்னல் ஒளிந்து கொண்டு இருக்கிறேன்" என்று.
என்ன நாணம் புரிந்ததா. உன் நிர்வானம் உணர்ந்தாயா!!!. நான் வேண்டாம் என்று சொன்ன பழத்தை சாப்பிடாயா என்றார். ஆம் என்ற பதிலுக்கு " இதை செய்ததால் இரு சாபங்கள் பெற்றாய். ஒன்று நீ நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடு பட்டு வாழ்வாய் . ஏவாள் பிரசவ வேதனையோடு பிள்ளை பெறுவாய்.
செய்தி முடிந்தது.

இதை முழுமையாய் புரிந்து கொள்ளும் பக்குவம் படுகாளிக்கு இல்லை, ஆனால் நிறைய கேள்விகள் மட்டும் மண்டையை குடைகிறது. குடைந்த கேள்விகளை கதையாய் எழுதியது தான் இந்த முயற்சி.

ஒரு வேளை இறைவன் சொன்னது போல் நடந்து இருந்தால், ஆதமோ ஏவாளோ கீழ்படிந்து இருந்தால் உருவான உலகம் எப்படி இருந்திருக்கும்….
அல்லது தப்பு செய்தது நல்லதாய் போயிற்றா…

என்னை விட ஆழமாய் யோசிக்கும் உங்களிடம் இருந்து கற்று கொள்ள ஆசை. சில மணி துளிகள் செலவழித்து பின்னூட்டம் எழுதுவிர்களா

5 கருத்துகள்:

 1. To
  adam and eval

  y did like that... u could nt able to control ur sexual sensation, who gave the sensation to you. Did u see " manada Mulayada Program", or mid night songs. why u did insert u to there adam wht a blendy mistake u did. wht do do. Because of u only we r suffering here.

  ok... i want to ur sexy eval nirvana photo. i know u hve it.. snd it to me or publish it ur blogs.

  chigunnukka chinnkku...adu illana vera ithukku...

  eye thandannakkka... eye...

  cdhurai

  பதிலளிநீக்கு
 2. நண்பர் சிதுரை ஆதாம் ஏவாளை ஏன் இப்படி செய்தீர்கள், அதனால்தானே நாங்கள் இப்போது கஷ்டப்படுகிறோம் என்று கேட்டது நன்றாக இருந்தது.

  ஆனால், அதற்கு எதிர்மாறாக, ஏவாளின் நிர்வாண புகைப்படம் வேண்டும் என்று கேட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.

  அவர் ஒரு செக்ஸ் ரசிகர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பெரிய கலாரசிகராக இருந்து படுக்காளியின் இந்த கதையை ரசித்து விட்டு, பின் கதையின் நாயாகியாம் ஏவாளின் நிர்வாணப்படம் கேட்டது அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றியது.

  மற்றபடி சிதுரையை நேரில் விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அவரிடம் அளவளாவ ஏராளமான விஷயங்கள் உள்ளது.

  படுக்காளி - தங்களின் இந்த படைப்பு, மிகவும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், திகில் கலக்காமலும் இருந்தது பாராட்டுக்குரியது.

  கதைக்கான களங்களை அருமையாக விளக்கும் புகைப்படங்கள், மிக நன்று. எங்கு பிடித்தீர்கள் அய்யா??

  வேறு எந்த கதைக்களத்தை தொடப்போகிறீர்களோ என்று எங்களின் ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்.

  வித்தியாசமான முயற்சி. உலகத்தின் படைப்பை, இவ்வளவு எளிதாக எனக்கு தெரிந்து வேறு யாரும் விள்ளக்கியது இல்லை.

  உங்கள் எழுத்தின் வீச்சை சிறிது நாள் அரசியல் பக்கமும் திருப்பலாமே? பின் சினிமாவைப்பற்றியும் எழுதலாம். என்ன சொல்கிறீர்கள் தல??

  பதிலளிநீக்கு
 3. நல்ல கற்பனை. சீக்கிரத்தில் முடிந்து விட்டது போன்றதொரு ஏக்கம்.
  இதே கதைக்களத்தில் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.

  பசி இல்லாத பகை இல்லாத
  காயம் இல்லாத காமம் இல்லாத
  உடைகள் இல்லாத உடைசல் இல்லாத
  உலகைப்படைத்த உட்டாலக்கடி பிரம்மனே !

  உங்களிடம் சில விதண்டா வாதக்கேள்விகள்....

  நாடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது எனப்பணித்த இறைவன் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று சொன்னது ஏன் ?

  நாடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்ற உத்தரவு மனிதப் படைப்புகளுக்கு மட்டும் தானா ? அப்படியானால் விலங்குகளும் இன விருத்தி செய்கிறதே எப்படி ?

  நிர்வாணம் என்றல் என்னவென்று இறைவன் படைத்த விலங்குகள் இன்னும் உணரவேஇல்லையே ! அப்படியானால் அவை இன்னும் நாடு மரத்தின் கனியை உண்ணவே இல்லையா ?

  மனிதப்படைப்புகள் நிச்சயம் தனது உத்தரவை மீறும் என்று இறைவனுக்கு முதலிலேயே தெரியுமா ? ஆண் என்றும் பெண் என்றும் இரு வேறு விதமாகப் படைத்தது ஏன் ?

  மற்ற எந்த விலங்குக்கும் பேசக் கற்றுத்தராத இறைவன் பாம்புக்கு மட்டும் பேசக் கற்றுத் தந்ததேன் ?

  சில தினங்களுக்கு முன் நீங்கள் வினவிய காலா நூலா கேள்வி மீண்டும். ஆதாம் ஏவாள் தவறு செய்த பொது தம் கால் கொண்டு ஆடினார்களா அல்லது நூல் கொண்டு ஆட்டுவிக்கப்பட்டர்களா ?

  பதிலளிநீக்கு
 4. பாம்பு சொல்கிறது - "நடு மரத்தின் கனியை உண்டால் நீங்களும் இறைவனைப் போல ஆகி விடு வீர்கள்" -
  அப்படி என்றால் நடு மரத்தின் கனி என்றால் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளலாமா ?
  பகுத்தறிவு வந்ததால் தான் நிர்வாணம் புரிந்ததா ?
  பாம்புக்கு பகுத்தறிவு எங்கிருந்து வந்தது ?
  படைத்தவன் பாதகம் மிக்க பாம்பைப் படைத்ததேன் ?

  ஆதாமும் ஏவாளும் பாவம் புரிந்த பிறகு தோட்டத்தில் இருந்து துரத்தி விடப்பட்டார்கள். விலங்குகள் வெளியே வந்தது எப்போது ?

  உங்கள் கதையின் நாயகிக்கு தொப்பிள் இருந்ததா ? அவள் படைக்கப்பட்டவளா அல்லது பிறந்தவளா என்பதை உறுதி செய்ய ..

  பசி என்பதையே படைக்காத இறைவன் வாயையும் வயிற்றையும் படைத்தது ஏன் ?

  பதிலளிநீக்கு
 5. On a lighter note..

  I always used to say that when I die I would like to go to the hell rather than heaven because you would find Mother Teresas and Mahatma Gandhis in heaven - how boring ! On the contrary Bipasha Basu and Sri devi will all be in Hell. So it woudl be fun and frolic in hell.

  Somehow this has reached Vatican !

  I was surprised to read in news papers that

  Vatican has issued a statement last week that in hell male and female would be kept separate. They woudl not be allowed to see each other.

  I do not undersatand why Vatican has to issue this statement. May be there are too many people in the world thinking like me !!

  பதிலளிநீக்கு