பக்கங்கள்

சீ... சீ.... இந்த CEO பழம் (பலம்) பிடிக்கும்

குட்டியா ஒரு கதை.
ஒரு ஊருல ஒரு நரி...... சரி......
குதிச்சு குதிச்சு திராட்சைய புடுங்க பார்த்துச்சு. சரி, வெரி நைஸ்.
கிடைக்காத்துனாலே, சீ சீ இந்த பழம் புளிக்கும் எனக்கு நாட் நெஸசரி என புட்டுக்கிச்சாம்.

கதை ஒகே, நீ என்ன சொல்ல வர்ரே அத சொல்லு என்பவருக்கு,

உங்களுக்கு CEO ஆகணுமா?

இல்லை என பதிலுரைப்பவர் ஒரு குழு. ஆம் என சொல்லுபவரில் இரு குழுக்கள்.
ஒருவர் CEO ஆனவர், மற்றவர் ஆவதற்கு முயல்பவர்.

இல்லை எனும் குழு பற்றிய கவலை இல்லை. சிஈஓ ஆனவர் தங்கள் பணியை மேலும் செம்மையாய் செய்யவும், முயல்பவர்கள் தெளிவு பெற்று முன்னும் முனைப்புடன் செயல்படவும் இப்பதிவு உதவும் என நம்புகிறேன்.

தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யேசு, எவன் ஒருவன் தலைவன் ஆக ஆசைப்படுகிறானோ அவன் அவர்கள் பாதங்களை கழுவி, தான் தொண்டர்களின் தொண்டன் என காட்டு என போதித்தவர்.

கிருபானந்த வாரியார் சொல்வார், தலைமைப் பீடத்தில் உனக்கு கிடைக்கும் சக்தியை உன்னை சார்ந்திருக்கும் கூட்ட்த்தின் மேன்மைக்காக பாடுபட கிடைத்த நிலை என்றே கொள்ள வேண்டும், இல்லாமல் உனக்கு கிடைத்த சுதந்திரமாய் மட்டும் கொண்டால் நீ தோற்பாய் என்பார்.

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதந்திரமும் பொறுப்பும் எதிர் எதிர் தட்டில் உள்ள தராசு. உன்னை யாரும் கேட்க கூடாது என நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உன் பொறுப்புணர்ச்சி வளர வேண்டும் என்பார்.

மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் வெறுமனே வாசித்து கடந்து செல்லும் தகவல்கள் அல்ல. மறுபடி மறுபடி படித்து புரிந்து அதை விவாதித்து தெளிவடைய வேண்டிய சமாச்சாரம்.

யாரும் அவர கேக்கிறதுல்ல, புடிச்ச்சா ஆபிஸுக்கு வர்றார், நினைச்சா அமெரிக்கா போறார். என்ன காரு, என்ன வீடு, அடேயப்பா அவர் எப்படியிருக்காரு என புற சமிக்கைகளை பார்த்து ஒருவர் தலைமை பீட்த்துக்கு ஆசைப்பட்டால் விவகாரமாகிவிடும்.

தலைமை என்பது பொறுப்பு, உங்கள் கீழே வேலை செய்யும் எல்லாரையும் சில சமயம் உங்களுக்கு தெரியாது. வாசலில் நிற்கும் வாயில் காப்போன் யார், அவன் பெயர் என்ன, அவன் குடும்பம் என்ன, பிள்ளைகள் எத்தனை, எங்கு படிக்கிறார்கள் என எதுவும் தெரியாது இருக்கலாம். ஆனாலும் உங்கள் வளர்ச்சியில் தான் அவன் வாழ்க்கை இருக்கிறது. அவனுக்கு ஒரு பத்து ரூபா கூடுதல் கொடுக்க உங்களால் முடிந்தால், அவன் பிள்ளைக்கு சாக்லேட்டாய் லேட்டாகாமல் கிடைக்கும்.

சந்தையிலே உங்கள் கம்பெனி வளர்ந்தால், அவன் சமூக மதிப்பு உயரும். அந்த கம்பெனியிலயா வேலை செய்யுற, நல்ல கம்பெனியாச்சேப்பா என சமூகம் அங்கிகாரம் தரும்.

இதை செய்யும் திடமும், தெளிவும், துணிவும், தீர்க்கமும் இருக்கிறதா. தென் ஆல் த பெஸ்ட், இல்லையா இதை செய்ய வேறு யாருக்காவது வழி விட்டு நாம் விலகுவது நல்லது. தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் தகராறு செய்தல் சிறுபிள்ளைத்தனம்.

(CEO)வின் வாழ்க்கை வாழ ஆசைப்படுவதில் தவறே இல்லை. அந்த வாழ்க்கைதான் வேண்டும் என்றால் ஒரு நாள், அல்லது ஒரு வாரம், ஒரு மாதம் வாழ்ந்து முடித்துவிடுவது நலம்.

பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்

அத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.

தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. அரசியல், பிசினஸ், ஆன்மீகம் என எந்த தலைமைக்கும் இது பொருந்தும். நம் வாழ்க்கையை அப்படி தாரை வார்க்க ரெடியென்றால் அதை தலைமை (CEO) நோக்கி நகரணும், இல்லையா எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுட்டுஅத நோக்கி நகரணும்.

நண்பருக்கு நன்றி

கிறிஸ்தவ தவம் பதிவு பார்த்து
அருமை நண்பர் பஹ்ரைன் பாபா அனுப்பிய கருத்து எனக்கு மிகவும் பிடித்த்து. என் எண்ணத்தின் பிரதிபலிப்பும் அதுவே என்பதால் ஒரு பதிவாய் இங்கு இணைத்துள்ளேன். நண்பருக்கு நன்றி.

பஹ்ரைன் பாபா சொன்னது…

"ஆன்மிக பலம் பெற எல்லா கிறிஸ்தவ சகோதரரையும் வாழ்த்துவோம்"..

மத ஈகோ வை ஒழித்துவிட்டால்..ஆன்மிகம் என்ற மிக புனிதமான பயணத்தை ரசித்து அனுபவிக்க முடியும் என்பது என் கருத்து... விரதத்தின் முழுமையான காரணத்தை அறியாமல்.. மத உள்நோக்கோடு செய்யும்பொழுது.. அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்...

எல்லா மதமும் நன்னெறிகளை கற்றுக்கொடுக்கிறது.. தான் பிறக்க வைக்கப்பட்ட மதத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு.. மொத்தமாக உள்ள எல்லா மதங்களின் சாராம்சங்களை புரிந்து கொள்வது நன்று.. இது பொதுவான என் கருத்து..யாதும் ஊரே..யாவரும் கேளிர்..

மிகச் சரியாக சொன்னீர்கள். நாற்பது நாள் விரதம், சாம்பல், மறு உலக நித்திய வாழ்வு என்பதெல்லாம் எல்லா மதங்களின் பொதுவான விசயம் என்பதை சுட்டிக் காட்டவே விரும்பினேன். மதங்களை கடந்து ஆன்மாவின் ஆழம் செல்லும் ஆன்மிகம் மனிதருக்கு பொதுவானதே என்பது என் எண்ணம்.

ரஜினியின் அன்புக்கு நான் அடிமை

தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த். கலைத்துறையில் இருவரும் ஆற்றும் பணியும், சமூக அரங்கிலே அவர்கள் தரும் நல்ல தாக்கமும் பாராட்டுதலுக்குரியது.

திரைத்துறையில் ஒருவரை ஒருவர் முந்தும் முனைப்பு இருந்தாலும் ஆழமான நட்பும் புரிதலும் இருவரிடமுமே உண்டு. அதற்கு சான்றாக, சமிபத்தில் ரஜினி ஒரு ஓவியம் வரைந்து கமலிடம் கொடுத்திருக்கிறார். கமலும் அதை விரும்பி தன் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டார் என ஊடகம் வாயிலாக அறிகிறோம்.

நல்ல வண்ணத்தில் வடிவத்தில் அருமையான கலைப்படைப்பு. கலைத்தாய் நல்ல முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளார். நட்பும், கலையும் மின்னுகிறது. நன்றியும் பாராட்டுக்களும்.

ஓவியம் பார்க்கும் போது சில கேள்விகள் தவிர்க்க முடியவில்லை.

தன்னை தாழ்த்தி மற்றவரை புகழ்வது நல்லதா.
என்னைவிட/அவரைவிட என ஒப்பிடுவது அவசியமா
பட்த்தில் உடன் இருப்பவர்களுக்கு இந்த கருத்தில் உடன்பாடு உண்டா. அனுமதி பெறப்பட்ட்தா.
அங்கனம் உடன்பட்டால் கூட அதை படம் வரையும் உத்தி உயர்ந்ததா.

வார்த்தை பிரயோகத்தில் கவனமும், கருத்து பகர்வதில் கட்டுப்பாடும் கவனத்தில் கொண்டால் நல்லது. ஒவ்வொரு அசைவும் கவனிக்கப் படும் போது, நம் தாக்கம் தர்க்கமாகி விடாமல் பார்க்கும் பொறுப்புணர்ச்சி நிச்சயம் வேண்டும்.

கிறிஸ்தவ தவம்

இன்று கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் அடங்கிய தவக் காலத்தை தொடங்குகின்றனர். தவக்காலத்தின் தொடக்கமாய் இன்று சாம்பல் புதன். கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் தறிக்கும் சடங்கு இன்று தான். குருவானவர் சாம்பலை எடுத்து ‘மண்ணில் இருந்து பிறந்தவன் நீ, மண்ணுக்கே திரும்புவாய் என வாழ்வின் ஒரு பரிமாணத்தை காட்டி பூசுவார்.

இந்த 40 நாட்களும் நாலு கோட்பாடுகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது

பிரார்த்தனை

சுய பரிசோதனை மற்றும் நாளைய திட்டத்துக்கான தீர்மானம்

பிறர்க்கு உதவி செய்தல்

தன்னை ஒறுத்தல்

நாவுக்கு பிடித்த உணவுகளை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரம் உண்ணாமல் இருப்பது, சிறப்பு பிரார்த்தனைகள் போன்ற சில செயல்களால் உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்வது இதன் நோக்கம்.

பைபிள் தகவல்களின் படி யேசுவை பற்றிய சுவாரசியமான தகவல் உண்டு.
மனிதனாய் பிறந்த அவர், அறிவில் முதிர்ந்து மத குருமாரிடம் வாதம் செய்தார் என சொல்லப்படுகிறது, பின்னர் தன் தந்தைக்கு தச்சு வேலையில் உதவி செய்தார் எனவும் சொல்லுகிறது. சுருக்கமாய் சொன்னால் ஒரு மனிதனாக இருந்தார். மனிதர் புனிதர் ஆனது எப்படி.


முக்கிய திருப்பமாக, ஒரு 40 நாள் பாலைவனத்துக்கு சென்று செய்யும் பிரார்த்தனையில் தன்னை உணர்ந்தார்.

தவக் காலம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுள் கிறிஸ்துவை தேடும் நேரம் என வாசிக்கும் போது அதன் மேன்மை தெரிகிறது.

ஆன்மிக பலம் பெற எல்லா கிறிஸ்தவ சகோதரரையும் வாழ்த்துவோம்.

ஆதலினால் காதல் செய்வீர்

அது என்ன
இந்த பூ மட்டும் நகர்கிறதே
என வண்ணத்துப் பூச்சி வியந்தது.
ஓ! அவள் என் காதலி


இன்னொரு கவிதை;

என் பெண்ணே !!
நீ பூச்சுடி வலம் வரும் போது
பூ சொன்னது
கூந்தலின் இறுபுறமும் பூ!!!

காதல் தெய்வீகமானது என ஒரு குழு சொல்ல, காதல் வெறும் உடல் பசி, மனிதனை மனிதனே ஏமாற்றும் குறளி வித்தை என இன்னொருவர் சொல்வர். காதலை விரும்ப வெறுக்க என மனிதர்கள் பிரிந்து கிடக்கின்றனரே. ஏன் இந்த பாகுபாடு என யோசித்த போது தோன்றியது.

கடற்கரை ஓரத்தில் ஒரு மூன்று நிலை வீடு. வீட்டின் கிரவுண்ட் ப்ளோரில் இருந்து பார்த்தால் புல் தரை தெரியும் மரத்தின் கிளையும் இலைகளும் தெரிகிறது. படிக்கட்டு ஏறி முதல் நிலை வந்தால் புல் தரை மற்றும் மரத்தின் முழுதும் தெரிகிறது. மூன்றாம் நிலை வரும்போதுதான் புல் தரையும், மரமும் அதை தாண்டி தூரத்து கடற்கரையும் தெரிகிறது.

காதலும் அது போலத்தான். வாழ்வின் சில பருவங்களை கடந்து வரும் போது அதன் முழு பரிமாணம் தெரியும்.

காதலை பற்றி புரியும் முன் ஒரு பெண்ணை அறிந்து கொள்ள வேண்டாமா, பிரசவ ஆஸ்பத்திரி போய் பார், என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் சொல்வார். எத்தனை நெஞ்சுரம் கொண்ட ஆண் கூட திணறிப் போவான். அங்கு பெண்கள் தெய்வமாய் தாய் எனும் அவதாரம் எடுப்பர்.

காதலையும் குடித்தனத்தையும் குழப்பக்கூடாது. காதலோடு கூடிய குடித்தனம் ஆரோக்கியமானது. காதலே இல்லாத குடித்தனம் துரதிருஷ்டவசமானது. எனில் காதல் என்றால் என்ன.

எவர் ஒருவரிடம் எந்த வருத்தமும் இல்லாமல் தோற்க நம்மால் முடிகிறதோ அவரிடத்தில் தோன்றும் உணர்வே காதல். இன கவர்ச்சியின் கடந்தபின் காதல். நட்பின் வேறு பரிமாணம் காதல்.

நட்பின் சாராம்சம் என்ன. அண்மைக்கு ஆசைப்படும், எவ்வளவு பேசினாலும் அடுத்து பேச பேலன்ஸ் இருக்கும். மனதில் தோன்றியதை வாயில் வரும் எந்த வார்த்தையையும் கொட்டித் தீர்த்த பின்னும் நாளை எந்த பிரச்சனையும் இல்லாமல் ‘சாரி, நேத்து ரொம்ப தப்பா பேசிட்டேன்’ என சொல்லும் அண்மை, உரிமை.

ஆதலினால் காதல் செய்வீர்

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 12/02/2010

படுக்காளி : தமிழ் வாழ்க!!!! தமிழன்னா என்ன கொக்கு குருவின்னு நினைச்சீங்களா, இன மான உணர்வெல்லாம் அத்துப் போச்சுன்னு நினைச்சீங்களா, கொளுத்தீப்புடுவோம்,
ஆச்சி : வாடா படுக்காளி, சவுண்ட் பலமா இருக்கே, கை கால் மூஞ்சி எல்லாம் ஏண்டா கரியாயிருக்கு.
படுக்காளி : வீட்டுக்குள்ளயே ஃபோட்டாவிலேயே இருந்தா ஆச்சா ஆச்சி... அச்சா!! நாட்டு நடப்பு தெரிய வேண்டாமா
ஆச்சி : நாலு தெரு போயி நாட்டாமை பண்றவன் நீ தானடா, விவரத்த
சொல்லு
படுக்காளி : மலையாளத்துல லேட்டஸ்டா ஒரு படம் எடுத்துருக்காங்க ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ இதுல நடிச்ச, ஜெயராமன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில பேசுறார். ரிப்போர்ட்டர் கேக்கிறார் ‘ஏன் சார் இந்த பட்த்துல வர மாதிரி வீட்டுலேயும் வேலைக்காரிக்கிட்ட ஜொள்ளு விடுவீங்களான்னு’ அதுக்கு நம்ம அண்ணன் பதில் சொல்லும் போது ‘எங்க வீட்டு வேலைக்காரி தமிழச்சி, தடிச்சு எருமை மாதிரி இருக்கா, அவள யாரு பாப்பாங்கன்னு’
ஆச்சி : அடப் பாவமே. வாயில சனி, மூக்கில சளி இரண்டுமே சிந்தினாலும் போகாதேடா....
படுக்காளி : சும்மா விட்டுருவோமா, இன மான தமிழனெல்லாம் ஒண்ணு திரண்டு அடிச்சு வீட்ட ஒடைச்சாச்சு, கார கொழுத்த டிரை பண்ணோம், ஜெஸ்ட் மிஸ்ஸாயிருச்சு.
ஆச்சி : கொழுத்துனா சரியாப் போச்சா, வன்முறை எப்படிறா சரியாகும். கொஞ்சம் மூக்க பொத்திக்கோ இதபத்தி நான் ஒரு மேட்டர சொல்றேன். சாக்கடையில கல்ல எறிஞ்சா நம்ம மேல தானடா தெறிக்கும்.
படுக்காளி : அதுக்குன்னு வாயில வந்ததெல்லாம் பேசலாமா.
ஆச்சி : வாடா, அவசரத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தவனே. உன்ன பத்தி தான சொன்னேன்.
படுக்காளி : சரி ஜெயராமன் பத்தி சொல்லுங்க
ஆச்சி : கேக்குறவங்கள சிரிக்க வைக்கணும், காமெடி பண்ணனும் என்கிற நினைப்பு நல்லது. அதுக்காக எத சொல்லணும் எத சொல்லக்கூடாதுங்கறதுல நாமதான் உஷாரா இருக்கணும். இப்படி வச்சுக்கோயேன், ‘எங்க வீட்டுல வேலைக்காரி பார்க்க நல்லாயில்லீங்க’ என்று மட்டும் பரைஞ்சிருந்தால் இவ்வளவு தூரம் வெளிய தெரிஞ்சிருக்காது.
படுக்காளி : ஆனா, வீட்டுல குத்து வெட்டு நடந்துருக்குமே. அவங்க வீட்டுகாரம்மா, வேலைக்கார வீட்டுல யெல்லாம் விவகாரம் ஆயிருக்குமே
ஆச்சி : கரெக்டா சொன்ன, இதயே இப்படி சொன்னா எப்படி இருக்கு ‘ நல்லாயிருக்கேங்க நீங்க சொல்ற கதை. போன சினிமாவில, சட்டத்த மீறின ஒரு ஆள, துப்பாக்கிய சுட்டு போட்டு தள்ளினேன். அதுக்காக அத நெசத்துலயும் செய்யுங்க சார்ன்னு சொல்லி கையில அருவாள திணிப்பீங்களோ சார்....’ என சொல்லியிருந்தால் கேள்வி கேட்ட ஆள திருப்பி சட்டய பிடிக்கிற மாதிரி இருக்காது.
படுக்காளி : ஆமாயில்ல, விவகாரமான கேள்விய கேட்டுபுட்டு அந்தாள் கம்முன்னு இருக்காரே. பதில் சொன்ன சேட்டன் மட்டும் சேத்துல விழுந்திட்டாரே.
ஆச்சி : வாயில இருக்கிற வரைக்கும் அதுக்கு பேரு ஃபுட்டு அல்லது புட்டு, துப்பிட்டா அதுக்கே எச்சின்னு பேரு. நெல்ல போட்டா அள்ளிரலாம், சொல்ல போட்டா.... கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் எல்லாம் பத்திரமா இருக்கட்டும், நாம இப்போ பேசுறது இங்கீதத்த பத்தி.
படுக்காளி : இதுதானா ஆச்சி, யாகாவராயினும் நாகாக்கன்னு வள்ளுவர் சொன்ன மேட்டர். ஆச்சி : வெள்ளக்காரன் ஒரு கருத்து சொல்லுவான். நான் பேசுற இந்த மேட்டரு கேக்கிறவனுக்கு சந்தோசம் தருமா, நன்மை பயக்குமான்னு கவனமா பேசு தம்பின்னு, அதுபோல ஒரு பில்டர எப்பவும் வாய் பக்கத்தில வைச்சிருந்தா நமக்கும் மத்தவங்களும் நல்லதுடா.

இதுதான் காதல் என்பதோ !!! நிறைவுப் பகுதி

நாராயணன் காதல் சொன்ன முதல் சில நாட்கள் படபடப்பாகவும் கொஞ்சம் பரவசமாகவும் சுதாவுக்கு இருந்தது. மனம் வேலையிலும் மற்ற விசயங்களிலும் பிடிப்பு கொள்ளாமல், இதே சிந்தனை சுழன்று சுழன்று வந்த்து. மெதுவாய் அம்மாவிடம் முதலில் சொல்ல, யார், எந்த ஊர், குடும்பம் எப்படி என கேள்விகள் வந்தன. அப்பாவிடம் விசயம் செல்ல, அப்பாவோ என்ன படிப்பு, எங்கே வேலை, எவ்வளவு சம்பளம் என அடுத்த துருவத்தில் கேள்விகளை முன் வைத்தார்.

அம்மாவின் கேள்விக்கு திருப்தியான பதில் நாராயணனின் வாழ்வில் இருக்க, அம்மா ஓகே என சிரித்தபடி சொன்னார். வேலையும் சம்பளமும் சரி இல்லாததால் அப்பாவுக்கு கவலை. ஆழமாய் யோசித்து, வேண்டாம் இது சரியாகாது. உன்னை விட குறைவாய் சம்பாதிக்கும் ஒருவன் வாழ்க்கையில் கஷ்டம், விட்டுறு என தீர்க்கமாய் தீர்மானமாய் சொன்னார். சரி நேரில் பார்க்காமல் ஒரு தீர்மானம் சொல்ல முடியாது , எனவே வரச்சொல். பார்த்தபின் பைனலாய் சொல்லலாமே என சந்திக்க தேதி குறிக்கப்பட்ட்து.

காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வாங்களேன், அப்பா அம்மாவுக்கு பேசணுமாம், சுதா மெல்லியமாய் சொன்னாள். வீட்டுக்கு வாங்க எனத்தான் சொன்னாளே அன்றி அழைப்பிதழில் இன்னும் காதல் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை, ஆனாலும் நாராயணன் குஷியானான்.
சொன்ன தேதியில் சுதா பரிதவித்து கொண்டிருந்தாள். பத்து மணி கடந்து கடிகாரம் ஓடிக் கொண்டிருக்க, ஆளை காணவில்லை. கண்கள் கடிகாரமும் வாசலும் பார்த்து பார்த்து சலித்தது. வெறும் பார்வையிலேயே திட்டிக் கொண்டிருந்த தந்தை நேரம் ஆக ஆக வார்த்தையாய் கொட்டினார் ‘பாரு சொன்ன நேரத்துக்கு வரல, நிரந்தரமான வேலையும் இல்ல, இப்படி ஒரு ஆளு தேவையா’ சுதா பதிலேதும் சொல்லாது அமைதி காத்து நின்றிருந்தாள்.

சரியாய் 12 மணிக்கு இரண்டு மணி நேர தாமதிப்பில் பளிர் சிவப்பு நிற மேல் சட்டையில் வந்து நின்றான். சாலை நெரிசல் என சாக்கு சொன்னான், வேர்த்து விறுவிறுத்து நனைந்திருந்தான். சட்டை வேறு கலர்ல போட்டுருந்திருக்கணும் என சுதா நினைத்தாளே தவிர, நாராயணன் அதையெல்லாம் கவனம் செலுத்தாத மன நிலையிலே இருந்தான்.

உணவு, பேச்சு என சில மணிகள் கடந்தன. சந்திப்பின் முடிவில் பெற்றோர் இருவரும் அவர்களின் முதல் அபிப்பிராயத்திலே தீர்மானமாய் சொன்னார்கள். அம்மா, பையன் பார்த்தா புத்திசாலியா இருக்கான் சரியாத்தான் இருக்கும் என சம்மதம் சொல்ல. அப்பாவோ அவனிடம் உன் வாழ்வின் லட்சியம் என்ன என கேட்க, அரசியலில் சேர்ந்து உழைக்கணும், அனாதை ஆசிரம் நடத்தி சேவை செய்யணும் என பதில் சொல்லியிருக்கிறான். ஏம்மா!!! இன்னிக்கு வாய்க்கும் கைக்குமா சம்பாதிக்கிறவனுக்கு இது என்ன நடக்க கூடியதா. வாழ்க்கைன்னா என்ன்ன்னு புரியல, என் சஜேஷன் விட்டுறு.

ஆனாலும் என்னவோ, சுதாவுக்கு இப்போது நாராயணனை பிடித்த்து. முதலில் தோன்றாத காதல் நாராயணனிடம் இப்போது தோன்றியது. அவன் நேர்மை, அணுகுமுறை எல்லாம் இவன் தான் புருஷன் என சொல்லியது. பெற்றோர்களிடம் எனக்கு அவன் தான் என முடிவு எடுத்துவிட்டேன், நீங்கள் இருவரும் முழு மனதோடு சம்மதம் தரும் வரை நான் காத்திருப்பேன் என தீர்மானமாய் சொன்னாள். சொல்லும் போது தெரியவில்லை மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும் என. பொறுமையாய் காத்திருக்க வேண்டியதாயிற்று. மூன்று வருடங்கள், என்றாலும் அது அவர்கள் உறவை பலப்படுத்த உதவியது. இந்த மூன்று வருடங்களும் ஒரு டைப்பான காதலில் கழிந்தது.

ஒரு மாலை வேளையில் உணவகத்தில் சந்தித்த போது, புத்தகம் லட்சியம் என இனிமையாய் பொழுது கழிந்த்து. பில் வந்த போது, என்கிட்ட இன்னிக்கு காசு இல்ல, நீ கொடுத்துறு. எழுதி வைச்சுக்கோ அப்புறமா திருப்பி தந்திடுறேன், கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் நாராயணன் சொன்னான். உன்னை காதலித்த பாவத்துக்கு கடனும் கொடுத்து அதை ஒரு நோட்டில் எழுதியும் வைத்து 4000 ரூபாய் என கணக்கும் வைத்திருந்து, கடைசி வரை நீ கொடுக்கவே இல்லை. நம் திருமணம் ஆன சில வருடங்களில் சிரித்துக் கொண்டே கிழித்தேன்.

அவர்கள் இருவரும் நினைவு கலைத்து இன்றைக்கு வந்தனர். வர வைத்த்வர் சர்வர். சார் என்ஜாய் யூவர் டீ. பவ்யமாய் வைக்கப்பட்ட டீ கோப்பை, புகைவிட்டு மணமும் பரப்பியது. குளிர்ந்த அந்த மாலைப் பொழுது அதன் குணத்தை பட்டையிட்டு தந்தது.

யோசிச்சு சொல்றீயா, நிச்சயம் கம்பெனி தொடங்கணுமா, சுதா நாராயணனின் முகம் பார்த்து கேட்டாள். ஆம் அதுதான் சரி என நினைக்கிறேன், தீர ஆலோசித்து விட்டேன். சற்று நேர அமைதியில் சுதா சொன்னாள், சரி செய். உன் லட்சியத்தை துரத்து, உனக்கு 3 வருடம் டைம். இந்த மூன்று வருட்த்தில் குடும்பம் பற்றியோ, நம் உணவு பற்றியோ, குழந்தைகள் பற்றியோ எந்த கவலையும் வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தா, நம் கஷ்ட காலத்தில் பயன் தரும் என நான் சேமித்து வைத்த 10,000 ரூபாயும் வைத்துக் கொள், உனக்கு உதவும். உன் லட்சியத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள். வெற்றி பெற வில்லையென்றாலும் பரவாயில்லை, மூன்று வருட்த்தில் மீண்டும் வேலைக்கு செல்லும் திடத்தோடு திட்ட்த்தோடு திரும்பி வா, நான் இருக்கிறேன்.

நாராயணன் மும்முரமானான், முன்னிலும் முனைப்பாய் தன் கம்பெனியின் பணி செய்தான். பசி தூக்கம் மறந்தான், வெற்றிக்காய் வெறியானான். வெற்றியும் பெற்றான். இடைப்பட்ட இந்த காலத்தில் சுதா அவன் கம்பெனிக்கென உழைத்தாள், உதவினாள். அவளையும் பிஸினஸில் சேர்த்துக் கொள்ளலாமே என நண்பர்கள் சக ஊழியர்கள் ஆலோசனை தந்த போது, நாராயணன் தீர்மானமாய் மறுத்தான். கணவன் மனைவி இருவரும் ஒரே இட்த்தில் பணி புரிவது நல்லது அல்ல. உனக்கு மிகவும் விருப்பம் என்றால் எந்த லஜ்ஜையுமில்லாமல் நான் விலகி விடுகிறேன். சந்தோசமாய் இந்த முடிவெடுப்பேன்.

சுதா அதிர்ந்தாள். மேல் சாவனிஸ்ட் இல்லையே, பின் ஏன் இப்படி சொல்கிறான். நிர்வாகம் எனும் கட்டமைப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பாடுபடுவது குடும்பத்தை பதம் பார்க்கும் எனும் தொலை நோக்கு பார்வையை சுதாவும் உணர்ந்து சமனமானாள்.

இந்தியாவின் முண்ணனி நிறுவனமான இன்போஸிஸ் உருவாக்கிய நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா நாராயணமூர்த்தியை பற்றிய மின்ன்ஞ்சல் தந்த தகவல்கள் என்னை ஈர்த்தது, அதையே இரு பகுதிகளாக பதிவிட்டேன். வாழ்வின் மெல்லிய ஆழமான உணர்வுகளை இத்தகவல் உணர்த்தியது. ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் எனும் வாசகம் வாஸ்தவம் என தோன்றியது.

உண்மை காதல் வாழ்க ...

இதுதான் காதல் என்பதோ !!!

சுதாவின் கை பற்றி மெல்லமாய் அழுத்தி, நாராயணன் அவள் கண்களை ஊடுருவி பார்த்தான். சற்றும் எதிர்பார்க்காத அவள் அவன் கண்களை சந்தித்தாள்.

வார்த்தைகள் தொண்டைக்காற்றில் கலக்க, எச்சில் முழுங்கி சொன்னான் ‘ஐ லவ் யூ.... உன் லட்சியத்தை மிதித்து, என் கனவை நனவாக்கினேன்’ கன்னம் துடிக்க நீர் திரண்டு கண்ணில் வழிந்தது. சுதா பதறினாள். என்னாச்சு உனக்கு, ஷட் அப். நாம் இருவரும் எப்போதோ சேர்ந்து எடித்த முடிவுதானே இது.

அந்த உணவகத்தின் ஓர மேசையில் அமர்ந்து இருந்த அந்த இருவரையும் பார்க்கும் சுவாரசியம் இந்த உலகுக்கு இல்லை. எழுபது வயது ஆண், முன் மண்டையின் வழுக்கை, சிதறிய நரை, கண்ணை மறைத்த கண்ணாடி என அவனும் அல்லது அவரும் காஞ்சிபுர சேலையில் தன் தளர்ந்த உடல் மறைத்த எழுபதை எட்டிப் பிடிக்கும் பெண்ணாய் அவளும் அல்லது அவர்களும் இருந்தனர். கூப்பிட்டால் மட்டுமே வர தயாராய் சர்வர்கள் மூலையில் பதுங்கியிருக்க,
அந்த மாலை வெயிலில் இருவரும் தளர்வாய் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்போது ஏன் கலங்குகிறாய். நம் காதல் உயர்ந்தது. நாகரிகமானது, நாசுக்கானது, ஆழமானது, முக்கியமாய் வெற்றியானது. நமக்கு மட்டும் அல்லாது நம் தேசத்துக்கும் பெறுமை. இதில் இன்று வருந்த ஒன்றுமே இல்லை.

சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்த, அவன் கையை ஒரு செல்ல தட்டு தட்டி விட்டு, நினைவிருக்கிறதா அந்த மழை பெய்யும் நாளை, நான் காதலிக்கிறேன் என்று சொன்னாயே அந்த நாளை. சுருங்கிய கண்ணை சிமிட்டி உதடை சுழித்தாள்.

நாராயணன் வாய் விட்டு சிரித்தான். மூக்கு கண்ணாடியை கழற்றி துடைத்தான். சுதா முன்னேறி ‘ அடேயப்பா.... எவ்வளவு நாள் இழுத்தடிச்ச, சட்டுன்னு சொல்ல வேண்டியது தானே’ புறங்கையில் கிள்ளி செல்லமாய் அடித்தாள் சுதா. பின்னிருக்கையில் தன் முதுகை சாய்த்து ‘ நீயுந்தான் எவ்வளவு நாள் இழுத்தடிச்ச, சட்டுன்னு சரின்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே’ என பதில் உரைத்தான். ’சீக்கிரமா சொல்லியிருப்பேன்’ சிரிப்புடன் சுதா சொன்னது ‘பின்ன!!! நீ காதல் சொன்ன முறை அப்படி’

அவர்கள் குறிப்பிட்ட அந்த தேதி தேடி, நாமும் காலக் குதிரையில் ஏறி, நாற்பது வருடங்கள் முன்னால் செல்வோம்,

மழை பெய்யும் அந்த மாலை வேளையில் நாராயணன் அந்த உணவு விடுதியின் வாயிலில் நிலை கொள்ளாது நின்றிருந்தான். பதற்றம் பல் இளித்து கொண்டு இருந்த்து. கையில் ப்ராஜெக்ட் பேப்பர்ஸ் ஒரு பெறும் சுமையாய் கனத்தது. வலது இடது என கை மாற்றி கை மாற்றி ஒவ்வொரு முறையும் சாலையை பார்த்து கொண்டிருந்தான்.

எத்தனை நாள் இம்சை. எப்போது சுதாவை காதலிக்க தொடங்கினேன் என தெரியவில்லை. நிச்சயம் முதல் முறை அவளை சந்தித்த போது இல்லை. நடுவில் எப்போதோதான் நடந்திருக்க வேண்டும். முதலில் நல்லது என தோன்றியது பின்னர் பிடித்தது. நல்ல பெண் இவள் என்ற அபிப்பிராயம் சற்று வளர்ந்து பிரியமாய் மலர்ந்தது, அதுவே சில காலத்தில் அவள் மனைவியாய், துணைவியாய் வேண்டும் என ஆனது. அவள் இல்லாமல் இல்லை எனவும் ஆனது. இன்றைய நிலை கண்டிப்பாய் வேண்டும் என ஆகிப் போச்சு.

அவள் இல்லாமல்..... ஹுகும்.. அந்த நினைப்பெல்லாம் இல்லை. வேண்டும், வேண்டும், நிச்சயம் வேண்டும். ஆயினும் சொல்லும் துணிவு மட்டும் வருவதே இல்லை. இன்று நாளை என்று எத்தனையோ நாள் சொல்ல முயன்று தோற்றும் போனேன். ஆனால் இன்று நிச்சயம். எப்படியும் இன்று காதலை சொல்லி விட வேண்டும். இனியும் பொறுக்க முடியாது.

முடிவு எடுத்தாலும் தைரியம் தான் இன்னும் குறைவு. நெஞ்சு பலமாய் துடிக்கிறது, நிலை கொள்ளாது உடல் பரபரக்கிறது. எத்தனை முறை சொன்னாலும் கேட்காது சின்ன சின்னதாய் மூச்சு வெப்பமாய் பூக்கிறது. எப்படி சொல்ல்லாம் என பல நாட்கள் யோசித்து இது தான் சரி என பட்டதை பல முறை சொல்லிப் பார்த்தாயிற்று. பல முறை சொல்லி பார்த்து கொண்ட அந்த வார்த்தை கோர்வை சரிதானா. இப்படித்தான் காதலை சொல்ல வேண்டுமா. தெரியவில்லை. எனக்கு இது சரி என படுகிறது.

சுதா சாலை முனையில் வந்தாள். பதற்றம் பெறுகி, வயிறு வரை இம்சை செய்த்து. இன்னைக்கு வேண்டாம், பேசாமல் தள்ளி போட்டு விடலாமா. சூ! சும்மா இரு. மனதை கண்டிப்பாய் அதட்டி அடக்கினேன். என்னை நெருங்கி வந்து ஹலோ சொன்னாள். சொன்ன ஹலோவில் சுரத்தை இல்லை. அவளை பார்க்க நான் படும் பரவசம் நிச்சயம் அவளிட்த்தில் இல்லை. என் காதலில் ஒரு சிறு பெர்சண்டேஜ் கூட அங்கு இல்லை. மிக தெளிவாய் தெரிகிறது. என்னை அவள் விரும்பவில்லை,

என்ன செய்வது.

உன் எண்ணம் உண்மைதானே. கண்டிப்பாய் அவள் வேண்டும் அல்லவா. பின் என்ன, முயற்சி செய். கடினம் எனப் பார்த்தால் எதுவும் முடியாது. தொடங்கு.

உள் அமர்ந்த முதல் சில் நிமிடங்கள், பொதுவாய் கழிந்தன. கண்ணை மூடி ஒரு கணம் தைரியம் வரவழைத்து சொல்லத் தொடங்கினேன்.

‘என் உயரம் 5 அடி 4 அங்குலம்’. மிடில் கிளாஸ், பணக்காரன் இல்லை, பணக்காரன் ஆகவும் முடியாது. நீ புத்திசாலி, கூர்மையானவள், அழகி. நீ நினைத்தால் என்னை விட நல்ல துணை உனக்கு கிடைக்கும். ஆனால் உன்னை மணம் செய்ய நான் விரும்புகிறேன். என்னை மண்ந்து கொள்வாயா’

ஏற்கனவே அறிமுகம் ஆனதால் நாராயணன் பற்றி தெரியும். அவனது நேர்மை, குணம் எல்லாம் தெரியும். அதிலும் அவனது சமீபத்திய நடவடிக்கைகள், கண்ணின் ஆர்வம் எல்லாம் தெரிந்த்தால் சுதா, இது வரும் என எதிர்பார்த்து தான் இருந்தாள். ஆயினும் இன்று சொல்வான் என எதிர்பார்க்கவில்லை.

நாராயணன் யார். என் நண்பன் பிரசன்னா தரும் புத்தகம் மூலந்தான் அவன் முதல் அறிமுகம். என் பிரியமான நேரப்போக்கு புத்தக வாசிப்பு. எனக்கு பிடித்த புத்தகங்களில் பார்த்த பெயர் தான் நாராயணன். எல்லா புத்தகத்திலும் அந்த பெயர் இருக்கும்.

பிரசன்னாவிடம் கேட்ட போது, அது நாராயணன் புத்தகம் என்பான். பெயரும் அந்த ரசனையுமே எனக்கு முதலில் அறிமுகம். முதல் முறை சந்தித்த போது சற்று அதிர்ச்சியாகவும் இருந்த்து. நான் மனதில் வைத்திருந்த பிம்பம் வேறு, காணும் காட்சி வேறு. அந்த புத்தக ரசனையின் அடிப்படையில் செதுக்கி இருந்த பிம்பம் ஒரு வேளை நான் பார்த்த சினிமா காட்டியதோ.

சரி கேள்வி கேட்டு பதிலுக்கு காத்திருக்கும் நாராயணனுக்கு என்ன சொல்ல. இப்போது என்ன செய்ய, சொல்வான் என யோசித்திருந்தேன், என்னையே பார்க்கிறான், கண்ணில் ஆர்வம் தெரிகிறது என்றெல்லாம் சிந்தித்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் எனவும் யோசித்திருக்க் வேண்டுமே. இப்போது சொல்ல ஒன்றுமே இல்லாமல் முழிக்க வேண்டியிருக்கிறதே.

தலை கவிழ்ந்து தரை பார்த்தாள். தூரத்து மரம் பார்த்தாள், பின்னர் திரும்பி ‘கொஞ்சம் டைம் கொடுங்க, யோசிச்சு சொல்றேன்’ என்றாலும் அவன் காதல் சொன்ன விதம் உண்டாக்கிய ஆச்சரியம் இன்னும் விலகவில்லை.

அடுத்த பகுதியில் நிறையும் ....