பக்கங்கள்

ரஜினியின் அன்புக்கு நான் அடிமை

தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த். கலைத்துறையில் இருவரும் ஆற்றும் பணியும், சமூக அரங்கிலே அவர்கள் தரும் நல்ல தாக்கமும் பாராட்டுதலுக்குரியது.

திரைத்துறையில் ஒருவரை ஒருவர் முந்தும் முனைப்பு இருந்தாலும் ஆழமான நட்பும் புரிதலும் இருவரிடமுமே உண்டு. அதற்கு சான்றாக, சமிபத்தில் ரஜினி ஒரு ஓவியம் வரைந்து கமலிடம் கொடுத்திருக்கிறார். கமலும் அதை விரும்பி தன் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டார் என ஊடகம் வாயிலாக அறிகிறோம்.

நல்ல வண்ணத்தில் வடிவத்தில் அருமையான கலைப்படைப்பு. கலைத்தாய் நல்ல முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளார். நட்பும், கலையும் மின்னுகிறது. நன்றியும் பாராட்டுக்களும்.

ஓவியம் பார்க்கும் போது சில கேள்விகள் தவிர்க்க முடியவில்லை.

தன்னை தாழ்த்தி மற்றவரை புகழ்வது நல்லதா.
என்னைவிட/அவரைவிட என ஒப்பிடுவது அவசியமா
பட்த்தில் உடன் இருப்பவர்களுக்கு இந்த கருத்தில் உடன்பாடு உண்டா. அனுமதி பெறப்பட்ட்தா.
அங்கனம் உடன்பட்டால் கூட அதை படம் வரையும் உத்தி உயர்ந்ததா.

வார்த்தை பிரயோகத்தில் கவனமும், கருத்து பகர்வதில் கட்டுப்பாடும் கவனத்தில் கொண்டால் நல்லது. ஒவ்வொரு அசைவும் கவனிக்கப் படும் போது, நம் தாக்கம் தர்க்கமாகி விடாமல் பார்க்கும் பொறுப்புணர்ச்சி நிச்சயம் வேண்டும்.

6 கருத்துகள்:

 1. //தன்னை தாழ்த்தி மற்றவரை புகழ்வது நல்லதா.
  என்னைவிட/அவரைவிட என ஒப்பிடுவது அவசியமா
  பட்த்தில் உடன் இருப்பவர்களுக்கு இந்த கருத்தில் உடன்பாடு உண்டா. அனுமதி பெறப்பட்ட்தா.
  அங்கனம் உடன்பட்டால் கூட அதை படம் வரையும் உத்தி உயர்ந்ததா.//

  நானும் இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்..

  இந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர், சீமான், தங்கர் பச்சான் போன்றோர் இல்லையே என்று வருந்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 2. இது ஏற்கனவே மேடையில் சொன்ன விசயம்தானே.. என்று நினைத்திருப்பார் போலும்.. அமிதாப் பச்சனை இதில் சேர்த்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.. இருந்தாலும் இந்திய திரை உலகில் தமிழ் நடிகரான கமல் முன்னோடி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.. ரஜினி என்ன பண்ணினாலும் நமக்கு தப்பாதான் தெரியும்.. அந்த மனுஷன் வாங்கி வந்த வரம் அப்டி..

  பதிலளிநீக்கு
 3. //// R.Gopi சொன்னது…
  நானும் இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்..

  இந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர், சீமான், தங்கர் பச்சான் போன்றோர் இல்லையே என்று வருந்துகிறேன்...////

  நன்றி. ஜி!!!!சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பதில், உங்களை போல் நானும் நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை.

  தாங்கள் வருந்திய விசயத்தில் எனக்கு சிரித்து சிரித்து வயிறு தான் வலித்தது.

  பதிலளிநீக்கு
 4. //// பஹ்ரைன் பாபா சொன்னது…
  இது ஏற்கனவே மேடையில் சொன்ன விசயம்தானே.. என்று நினைத்திருப்பார் போலும்.. அமிதாப் பச்சனை இதில் சேர்த்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.. இருந்தாலும் இந்திய திரை உலகில் தமிழ் நடிகரான கமல் முன்னோடி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.. ரஜினி என்ன பண்ணினாலும் நமக்கு தப்பாதான் தெரியும்.. அந்த மனுஷன் வாங்கி வந்த வரம் அப்டி.. ////

  மிக்க நன்றி.

  கமலின் திறமையை நாம் நன்கறிவோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ரஜினியின் நட்பும், தன்னை முன்னிலைப்படுத்தாத உயர்ந்த குணமும் இதில் நிச்சயம் தெரிகிறது.

  ரஜினியை நேசிக்கும் நமக்கு, அவரது மேன்மையை விரும்பும் நமக்கு, நேர்மையாய் தோன்றியதை சொல்லும் திடம் வேண்டும்.

  எல்லாம் சரியே என வாதிடும் நிலையில் நாம் நிச்சயம் இல்லை.

  நல்ல நண்பர்களிடம் நாம் என்ன செய்வோம். நம் கருத்துக்களை சொல்வோம். தாங்கள் சொல்லிய

  /// அமிதாப் பச்சனை இதில் சேர்த்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.. ////

  தங்கள் நேர்மையும் திடமும் தெளிவும் என்னை மிகவும் கவர்ந்தது.

  நம் அக்கரையும் அன்பும் ரஜினியை மேலும் உய்ர்த்தும்.

  பதிலளிநீக்கு
 5. //சமூக அரங்கிலே அவர்கள் தரும் நல்ல தாக்கமும்//

  யாரு? கமலா? சமூக அரங்கிலே அவரின் நல்ல தாக்கமா?

  ஒருவேளை கௌதமி சமாசாரத்தை சொல்றீங்களோ? அதன் தாக்கம் சன் டிவி சீரியல்களில் "நல்லாவே" தென்படுதே!!!! அவனவன் ஒரு மனைவி வெச்சுக்கொண்டே, பல "துனைவிகளுக்கும்" அலை, அலைன்னு ஆலயரானுன்களே. ரொம்ப நல்ல தாக்கம்.

  பதிலளிநீக்கு
 6. //// M Arunachalam சொன்னது…
  //சமூக அரங்கிலே அவர்கள் தரும் நல்ல தாக்கமும்//

  யாரு? கமலா? சமூக அரங்கிலே அவரின் நல்ல தாக்கமா?

  ஒருவேளை கௌதமி சமாசாரத்தை சொல்றீங்களோ? அதன் தாக்கம் சன் டிவி சீரியல்களில் "நல்லாவே" தென்படுதே!!!! அவனவன் ஒரு மனைவி வெச்சுக்கொண்டே, பல "துனைவிகளுக்கும்" அலை, அலைன்னு ஆலயரானுன்களே. ரொம்ப நல்ல தாக்கம்./////

  வாங்க அருண்ஜி !!!!

  அதிரடி சரவெடியாய் தாங்கள் சொன்ன கருத்து சிரிக்கவும் ஆழமாய் சிந்திக்கவும் செய்கிறது.

  நீங்க சொன்ன அதே பாயிண்டைத்தான் நல்ல தாக்கம் என குறிப்பிட்டுள்ளேன். வெறுமனே தாக்கம் என எழுதியிருந்தால் அதில் கெட்டதும் கேடு கெட்டதும் அடங்காது.

  என்றாலும் பள்ளிக்கு செல்லாத கலைஞானி இன்று தகவல்களாகவும், இலக்கியமாகவும் தேடிப் பிடித்து படித்து தன்னை தயார் படுத்திக் கொண்டது.

  நடிப்பு என்று மட்டும் நின்று விடாமல், எழுத்து, இயக்கம் என விரிந்து செயல் படுவதெல்லாம் அவரின் முயற்சியும் ஆர்வமும் நம்மை அதிசயிக்க வைக்கிறதல்லவா.

  அவரிடத்தில் உள்ள நல்லதை மட்டும் எடுத்து நமக்கு உதவும் தகவல்களை மட்டும் கொள்ளும் அன்னப் பறவையாய் நம்மை ஆக்கும் தங்கள் அறிவுரை மிகவும் கரெக்ட்.

  தலைவர பத்தி சொன்ன கருத்துக்கு கோபப் படாமல் இருந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். நீங்க தான் கோபப்படுவீங்களோன்னு ஒரு பயம் இருந்துச்சு.

  பதிலளிநீக்கு