பக்கங்கள்

திருவக்கரை - ஊமை மரத்தின்... ரகசியம்!!!

அன்று வார இறுதி, ஓய்வு நாள். ஆத்மா படுக்கையில் நெளிந்தான், அபி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.

எந்திரிக்கிற மாதிரி உத்தேசம் இருக்கா, இல்ல…. மட்டையா….
அபி, வீக்கெண்டுல கொஞ்சம் வீங்கி கிடக்கலாம்ல.. அதுசரி, நீ திட்டுறீயா, இல்ல புலம்புறீயா….
ஆங்…. ரெண்டும் இல்ல…. இப்படி அற்புதமா கிடைச்ச மனுச வாழ்க்கைய… அற்ப்பமா… தூங்கி தூங்கியே பொழுத கழிக்கிறீயேன்னு ஆத்தாமை….. வேறென்ன…
நான் என்ன கல்லாலமரமா….கோடி வருசம் வாழறதுக்கு…..
அபி, அந்த வார்த்தை பிரயோகத்தில் சுவாரசியமானாள்…
என்னது… என்ன சொன்ன…
ஹாங்…. கோடி வருசம் வாழ முடியாதுன்னு சொன்னேன்…
அதில்ல… என்னவோ கல்லான்னியே….
ஓ… அதுவா… அது தெரியாதா உனக்கு…. நீ மெட்ராஸ் கேர்ள்தான… அப்புறம் ஏன் கல்லால மரம் பத்தி ஏங்கிட்ட கேக்குற… சரி சொல்றேன் கேளு…..


உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது ஆச்சி, கோடி வருசங்களுக்கு மேல…
ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது…. அதுவும் சென்னைக்கு பக்கத்துல ஒரு 100 கிலோ மீட்டர் தொலைவில..
அப்படியா..


ம்… பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்கள நீ பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
ம்… வெரி இண்ட்ரஸ்ட்டிங்… மரம் மனுசன மாதிரி மக்கி போகாதில்ல…
ம்.. மக்கி போகாதுன்னு சொல்ல முடியாது… ஏன் பெட்ரோல் அப்படி மக்கினதுதான… அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம பிட்டிரைஃபைட்டு ஆனா இந்த கல்லாலமரம் …………. அதாவது மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…


யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
ஆத்மா… என் செல்லமே… ஆர்வத்தை தூண்டி விட்டாய்… 100 கிமி தானே சொல்கிறாய்… போவோமா… நம் பைக்கில் சென்றால் அற்புதமாக இருக்கும்…
ம்… 100 ன்னேன்… ஸ்பஷ்ட்டமா சொன்னா ஒரு 100 -130 கிமி… இருக்குமே..
பைக்கில நானும் பின்னால உக்காரும் போது, 30 கூடினா என்ன…. வாயேன் வேணுன்னா, திரும்பி வந்ததும்…. உன் கால் பிடிச்சு தர்றேன்….
20ம் நூற்றாண்டின் புதுமைப்பெண்ணே… வா யூகங்களை தாண்டி சென்ற மரங்களை தரிசிப்போம்… கம்மான் கெட் ரெடி…


போர்வையை உதறி, ஆத்மா சுருசுருப்பானான்.


மணி 8 இருக்கும் போது, அவர்களின் இருசக்கர வாகனம் வண்டலூரை தொட்டது. சோம்பேறித்தனமான சென்னை சாலைகள் இன்னும் விடியாத புண்ணியத்தில் டிராபிக் பிரச்சனை இல்லாமல் வண்டி வேகமாய் நகர்ந்தது. திருச்சி நோக்கி செல்லும் சாலையில், மேல்மருவத்தூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து, பாண்டிச்சேரி சாலையில் பயணித்து, இதோ திருவக்கரை எனும் ஊரை இலக்கிட்டு காற்றாய் நகர்ந்தது.
திருவக்கரை இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் இடத்து ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான்.


ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.


ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.



இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….


கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….


சமீபத்திய சாலை மேம்பாட்டினால் வழுக்கி கொண்டு ஓடும் சாலைகள் இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் இருப்பது பெரிய ஆறுதல். ஆத்மாவும் அபியும் அலுங்காமல் குலுங்காமல் அந்த இடம் வந்து சேர்ந்தார்கள். ஊரின் ட்டோப்போகிராபி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. சம தளம் அற்று, அங்குமிங்குமாய் உயர்வு தாழ்வு இருக்கும் ஓர் மண் தளம். கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.


சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.


அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….


அபி அந்த மரத்தை வருடினாள். மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.


உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….


யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…


ஆத்மா அந்த அமைதியை கலைத்தான்…


கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….


பதில் சொல்லாது அபியை பார்த்தான்.


ம்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….
ஹா….ஹா…


18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1.   இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2.   இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3.   இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4.   கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5.   யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6.   10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.



கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…


எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…


அமைதியாக ஆத்மாவையும் அபியையும் சுமந்து கொண்டு சாலையில் விரைந்தது பைக். திருச்சி சென்னை சாலையில் திரும்பியதும் ஆத்மா சொன்னான்…


ம்… இவ்வளவு ஆர்வமா…. பூமியின் வரலாறை தெரிந்து கொள்ள இத்தனை ஆவலா…. அப்படியென்றால் நீ அங்கு நிச்சயம் செல்ல வேண்டும்……..
இன்று வேண்டாம், அடுத்த முறை அங்கு செல்லலாம். திருச்சிக்கு அருகில் பெரம்பலூர் பக்கத்தில்…. அங்கு சென்றால் அதிர்ச்சி ஆகி விடுவாய்…


அபி திரும்பி அவனை பார்த்தாள்….


என்ன இருக்கிறது அங்கே….


ம்… முட்டை ….. டைனோசர் முட்டை….


என்ன கதை விடுகிறாய்… ஜூராசிக் பார்க் சினிமாவில் விட்டு புளுகு மூட்டை எனவல்லவா அந்த முட்டையை பற்றி நினைத்தேன்…


ஆத்மா பலத்த சிரிப்புடன் சொன்னான்…. ஹா…ஹா… இல்லை, ஆயிரக்கணக்கில் டைனோசர் முட்டைகள் இருக்கும் திருச்சிக்கு அருகில் அடுத்த முறை செல்வோம்… அதுவரை… 

குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….

கல்லூரியில்……. பெண்ணுக்கு சீட் கிடைக்குமா என விசாரித்து விட்டு சீனுவாசன் தன் காரில் நகரத்துக்கு திரும்ப துவங்கினார். ஊரின் வெளியே ஒய்யாரமாய் அமைந்திருந்த ஒரு கல்லூரியின் கேம்பஸ் அது…. கிளம்பிய காரில், டேப் சுழல ஆரம்பித்தது. பாடல் காரை நிறைத்தது.

என்னவோ ஏதோ….
எண்ணம் திரளுது கனவில்
எனும் பாடல் உயர்தர ஸ்டிரீயோவில் ஒலிக்க….. அவர் மனம் ஒரு வரியில் ஸ்தம்பித்தது…
ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…

ஹப்பா… என்ன ஒரு வார்த்தை கோர்வை இது…. என்ன வலிமையான சொற்கள்… என்ன நுணுக்கமான நுண்ணியமான ஒரு வார்த்தை….
Unfocussed Visual Illusion….. Shapeless Tommorrow…………….

குவியம்… எப்போதோ பள்ளியில் பிசிக்கிஸில் படித்தது… குவியம் இல்லா …. எனும் இரு வார்த்தைகள் இணைந்து …. குவியமில்லா என கேட்கும் போது இனிக்கிறதே…

Unfocussed Visual Illusion … அதிலும் அந்த காட்சிப் பேடை….
ஆஹா… இப்படி ஒரு மொழிபெயர்ப்பை இது வரை கேட்டதில்லையே சமீபத்தில் உணர்வு இங்கனம் உணர்ந்ததில்லையே….

என்ன ஒரு ஆழமான சொற்பதம்… அற்புதமான மொழியின் வீச்சு என சிந்தனை ஓடிக் கொண்டிருந்த போது அவர்களை கவனித்தார். கல்லூரி இளைஞர்கள். பயணப் பொதிகளுடன் சாலை ஓரத்தில் வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தனர். காரை மெல்லமாக்கி, அவர்கள் அருகில்வர, சன்னலை திறந்து…

சிட்டிக்குத்தான்னா, வாங்க ஏறிக்கோங்க…. டிராப் பண்றேன்…. என்றார்.
அவர்கள் மகிழ்ச்சியாய் ஏறி அமரும் அந்த தருணத்தில், இக்கல்லூரியை குறித்தும்…. படிப்பு வசதிகள் என அனைத்தும் குறித்து அத்தனையும் விசாரிக்கலாமே என மனம் குறிப்பு கொடுக்க கை நீட்டி, டேப் ரிக்கார்டரை அணைத்து விட்டு… பேச துவங்கினார்…

அவர்கள் பேசிய ஆரம்ப பேச்சுக்கள் சீனுவாசனுக்கும் அவர் பெண்ணுக்கு மட்டுமே உபயோகமானதால், நமக்கு தேவையானது வரும் வரைக்கும்……….. பாஸ்ட் ஃபார்வேர்ட்டு செய்து கேட்போமா…..

ஆமா தம்பி அடுத்ததா என்ன படிக்க போறீங்க…
பி.ஹை.டி… பண்ணனும் சார், டாக்ட்டரேட் வாங்கணும், ஆனா இப்பவே செய்யணுமா என்ன செய்யணும்ன்னு குழப்பமா இருந்துச்சு… ம்… யோசிச்சுக்கிட்டு இருக்கேன்….

சீனுவாசன் தலை திருப்பி அவர்களை பார்த்தார்…. முனைவராகும் முயற்ச்சியில் உள்ள இளம் குருத்தை பார்த்த போது மனம் மகிழ்ச்சியானது… இன்றைய தலைமுறையின் சிந்தனையும் வேகமும் பார்த்த போது, மனம் அடுத்த தலைமுறை குறித்த ஆக்கபூர்வம் பற்றி சிந்தித்து…. பெருமிதப்பட்டது….

நல்லது தம்பி…. நல்ல விசயம் தான செஞ்சுருங்க… எனக்கு எப்பவும் ஏதாவது குழப்பம் இருந்துச்சுன்னா இந்த 5 வொய்… எனும் அணுகுமுறை கொண்டு முயற்ச்சிப்பேன்…. அப்ப தெளிவாயிடும்…

அதென்ன சார், 5 வொய்…
பழைய முறைதான் தம்பி, எளிமையானது தான். வொய்… வொய்ன்னு…. 5 தடவை … நொய்… நொய்..ன்னு கேள்வி கேக்குறது…. மெல்லிய சிரிப்பு காரில் பரவ அனைவரும் இலகுவாகினர்.
இப்ப உங்க விசயத்தையே கேப்போமே….

வொய்… நீங்க டாக்ட்டரேட் பண்ணனும்…. பதில் சொல்லுங்க….
ம்….. எல்லாரையும் விட நான் பெரிசாகணும்… அங்கீகாரம் வேணும்… ஈசியா வேலை கிடைக்கும்….

ஓ… ஒக்கே… வொய்… நீங்க எல்லாரையும் விட பெரிசாகணும்…. இது ரெண்டாவது வொய்....


ஆமா... நீங்க ஏன் பெரிசாகணும்.... ஏன் சின்னவங்களா இருந்தா என்ன குறைஞ்சு போச்சு…. ஏன் ஒரு கருணாநிதி அல்லது ஜெயலலிதாவ விட நாம செயல் குறைவும் சிந்தனை குறைவும் ஆளுமைக் குறைவும் உள்ளவங்கத்தான… அதனால நாம என்ன குறைஞ்சு போயிட்டோம்…. பொறந்த எல்லாருமே தலைவராக முடியுமா…. ஏன் நம்ம அடுத்தவங்கள விட பெரிசா ஆகியே ஆகணும்….

சீனுவாசனின் இந்த கேள்வியால் அமைதி அங்கே அலற ஆரம்பித்தது… அவரே அதை கலைத்தார்.

ம்… இந்த முனைவராகும் முயற்ச்சியில்… நான் என்னை உணர வேண்டும்…. சில கருத்துக்கள் பற்றிய தெளிவு வேண்டும்….. ஒரு ஆய்வு வேணும்… ஒரு ஆழ்ந்தறிதல் வேணும்…. இந்த மனித குலத்துக்கு என்னால் ஏதும் அறிவு சார்ந்த எண்ணத்தை விட முடியணும்மான்னு……….  நீங்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்குமே… இல்லியா தம்பி….

உங்களுக்கு பிடிச்ச கார் எது…..
ம்.. டயோட்டா…. கரோலா….
ஓ…  நல்ல கார் அது…. ஆமா அது ஏன் பிடிக்கும்…. வொய்...!!!

ம்… தம்பி லேசாக விழித்தான்….
டயோட்டா பிடிக்கதுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்…. ஆனா அது உங்களோட உள்ளுக்குள்ள இருந்து வரணும்… வந்தா நீங்க புத்திசாலி….

அடுத்த வீட்டுக்காரரு…. உங்களுக்கு பிடிச்ச ஒரு மனுசரு… இவங்கல்லாம் ஒட்டுறதால மட்டும் டயோட்டா பிடிச்சா தப்பு…. இப்படி… அடுத்தவங்கள் பார்த்து வராம… உங்க உள்ளுக்குள்ள இருந்து வர்றத பாருங்களேன்…

ஓரு கார் வாங்கணும், சரி என்னென்ன கார் இருக்குது..எல்லா கார்களோட தன்மைகளும் என்ன என்ன..… கார்ன்னா என்ன…. அதை அலசி ஆராய ஒரு பத்து விசயங்கள்…. இன்ஜின்… அதனோட செயல்திறன்… மைலேஜ்… உக்காரக் கூடிய இருக்கைகள், வண்டியோட கம்பர்ட், ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ்… இப்படி, பல தளங்களில் யோசிச்சு, அப்புறமா உங்களுக்கு இதுதான் பிடிக்கும்ன்னு சொன்னா நல்லது.

ஒரு வேளை, இது மாதிரி ஆராய்ஞ்சு, உங்களுக்கு பிடிச்ச கார் என்னவா வேணும்னா இருக்கலாம்… ம்… அது ரோல்ஸ் ராயாக் கூட இருக்கலாம் …… தப்பே இல்லை… உங்களுக்கு தோணனும்… எனக்கு இதுதான் வேணும்ன்னு …. அப்படி தோண்றது தான் ஆழமான சிந்தனை, ஆணித்தரமான லட்சியம்…


ம்… இது மாதிரியான சிந்தனைகள் தான் தன் இலக்கை அடைஞ்சே தீரும்….. இல்லாம அடுத்தவனுக்காக யோசிக்கிறது வெறுமனே நம்ம நேரத்தத்தான் வீணாக்கும் இல்லியா தம்பி…

கார் இப்போது முழுக்க அமைதியானது… சீனுவாசன் மனதிற்குள் சிந்தித்தார்… கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ…. பாவம் சின்ன பசங்கதான…. இன்னும் பட்டு தெளிய காலமிருக்கே…,.ம்…

தம்பி… ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுருங்க…. மனசுக்கு தோணுச்சு பேசிட்டேன்...., மனசுல வைச்சிக்காதீங்க…

கார் அவர்களை இறக்கிவிடும் இடத்தை நெருக்க… தம்பி அவசரமாய் மறுத்தான்.

ஐய்யய்யோ…. இல்ல சார், நீங்க சொன்னது நல்லா இருந்துச்சு… யோசிக்க வைச்சிது.. இன்னும் நிறைய விசயம் உங்ககிட்ட பேசணும்… டெலிஃபோன் நம்பர் தருவீங்களா…

சீனுவாசன் நெகிழ்ந்தார்…. கண் லேசாய் கண்ணீரை நிரப்பியது… மனம் விம்மி தளர்ந்தது… எண்ணை கொடுத்து விட்டு அவர்களை இறக்கி விட்டு, காரை செலுத்தினார். மனம் கனிந்தது. சந்தோசம் வந்தது. உற்சாகம் கொடுத்த ஊக்கத்தில்…. பாடல் கேட்போமே என டேப்பை ஒலிக்க விட்டார்…. விட்ட இடத்திலிருந்து பாடல் ஒலித்தது... 


ஆனால் அது இப்போது உருவாக்கிய அர்த்தத்தை... நிகழ்ச்சி தொடர்பில் சீனுவாசன் அதிர்ந்தார்.... இசை அதையறிமால் ஒலித்தது.... ஸ்பீக்கர் அதன் இயல்பாய் அதிர்ந்தது...

ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…  
ஓ….ஓ….
அரைமனதாய்
விடிகிறது என் காலை….. !!!!

என் தமிழ் தப்பு பண்ணாது….

தமிழின் தலை நிமிர்வு

செம்மொழி என்று சொல்லப்பட்ட போது கூட அடையாத சந்தோசத்தை நான் இன்று பெற்றேன். தமிழ் என் தாய்மொழி என சொல்லி பெருமிதத்தால் நெஞ்சு நிமிர கண்கள் நனைந்தது.

இத்தனை வலுவானதா என் மொழி, என என் உணர்வு விம்மியது.................நடந்தது இதுதான்.

சமீபத்தில் ஒரு சந்திப்பில் அவர் சொன்னார். என் தமிழ் தப்பு பண்ணாது….

என்ன…என்ன….!!!! இந்த வார்த்தை பிரயோகம் மிகவும் விநோதமாக உள்ளதே…. ஏதோ அசட்டையாய் கேட்டுக் கொண்டிருந்த நான் எங்கோ சிக்கியிருந்த மனதை காதுகளுக்கு திருப்பி ஒலிகளை உள் வாங்கத் துவங்கினேன். கேட்பவற்றை பற்றிய சிந்தனையில் இப்போது மனம் இருந்தது.

அவர் சொன்னார்… ‘என் தமிழ் தப்பு பண்ணாது…. எனும் தீர்மானத்துடன் அணுகிய போது தான் என் ஆய்வு நிறைவை எட்டியது. சரி அப்படி என்ன ஆய்வு என்ற போது….

கிறிஸ்தவர்களின் இறை தூதர் பெயர் என்ன….
ஜீசஸ்….. 


ஆம்…. ஆங்கிலத்தில் ஜீசஸ்…. ஆனால் அவரை இஸ்லாம் சகோதரர்கள் ஈசா என அழைக்கிறார்கள்… தமிழில் இயேசு… அல்லது யேசு நாதர்…. அதெப்படி ஒருவருக்கு வெவ்வேறு பெயர்கள்… ஏன் இப்படி என அவர் யோசித்த போது நடந்ததையே அங்கு அவர் குறிப்பிட்டார்.

இயேசு என்பதே அவர் பெயர். சரி பின் ஜீசஸ் என எப்படி ஆனது.

இயேசு, வாழ்ந்த காலத்தில் அங்கு பேசப்பட்ட மொழி…… நகரிபலிது என்பதே. நகரிபலிதுவில் எழுதப்பட்ட இவ்வார்த்தையை லத்தினிலில் மொழி பெயர்க்கலாம் என லத்தீன் அறிஞர்கள் அமர்ந்த போது யே…. எனும் ஒலி அமைப்பு இல்லாததால் ஜே… எனும் ஒலி அமைப்பால் மொழி பெயர்த்து விட்டனர். அதுவும் போக, லத்தினிலில் எந்த ஒரு பற்பதத்தையும் ‘எஸ்’ எனும் எழுத்தில் முடிப்பது வழக்கம்… என்னதான் ‘எஸ்’ போட்டு எழுதினாலும்…. பின்னர் நம்மிடம் சொல்லுவார்கள்…. ‘எஸ்…. சைலண்ட் ஃப்ளீஸ்….’ என… 


பாருங்களேன்... பாரி எனும் ஊரை எழுதும் போது, லத்தின்காரர்.... எஸ்.... போட்டு எழுதிவிட்டு..... பின்னர் எஸ் சைலண்ட் ஃப்ளீஸ் என்றார்கள்... யெஸ்... யெஸ்... என சொல்லிவிட்டு... யார் கேட்டார்கள் அதை........... எஸ்!!!! சேர்த்து சொல்லி... நம்மவர்கள் எல்லாம் இன்றும் அதை பாரிஸ் எனத்தான் அழைக்கிறார்கள்....

எனவே யேசு என ஒலி எழுப்ப வேண்டிய பதம் ஜேசு என எழுதப்பட்டு…. எஸ் சைலண்ட் ஆக இருந்தது….

லத்தினிலில் எழுதப்பட்ட இந்த வார்த்தை பதத்தை ஆங்கிலிக்கன் முறைமையில் மொழிமாற்றம் செய்ய….. முயன்ற போது… எஸ்…. சைலன்ஸ் எல்லாம் மறந்து போய்….. ஜீசஸ் என ஆனது……
அடேயப்பா, ஒரு வார்த்தை எப்படி யெல்லாம் உருமாறி, உருவாகி இருக்கிறது… என சிந்திக்கும் போது வியப்பும் ஆச்சரியமும் படருவதை தவிர்க்க முடியவில்லை….


ஆனாலும் சரியான உச்சரிப்பில் தமிழில் அப்பெயர் அழைக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. அன்பரின்... என்னோட தமிழ் எப்பவும் தப்பு பண்ணாது எனச் சொல்லும் அன்பும் நம்பிக்கையும் என்னவோ செய்கிறது.

ஒலி ஒரு மொழியில் ஆற்றும் பங்கை நினைக்கும் போது அதன் வீரியமும் அவசியமும் புரிகிறது…. சில ஆதிவாசி பழங்குடியினரால் பேசப்படும் மொழிகள் ஏன் பரவலாக பேசப் படவில்லை… சில மொழிகள் மாத்திரமே பரவுகிறதே… அது ஏன் எனும் வினாவுக்கு கூட விடை கிடைக்கும் அந்த பாதை கண்ணுக்கு தெரிகிறது…. 

மொழி…. அதன் பணி குறித்த பரிமாணங்கள் விளங்குகிறது... 

ம்…. எது எப்படியோ….இப்போதும்… அடிக்கடி…. அந்த வார்த்தைகள் மட்டும்…. காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது… அதில் ஒரு சுகம் தெரிகிறது….

‘என் தமிழ் தப்பு பண்ணாது………….’