பக்கங்கள்

திருவக்கரை - ஊமை மரத்தின்... ரகசியம்!!!

அன்று வார இறுதி, ஓய்வு நாள். ஆத்மா படுக்கையில் நெளிந்தான், அபி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.

எந்திரிக்கிற மாதிரி உத்தேசம் இருக்கா, இல்ல…. மட்டையா….
அபி, வீக்கெண்டுல கொஞ்சம் வீங்கி கிடக்கலாம்ல.. அதுசரி, நீ திட்டுறீயா, இல்ல புலம்புறீயா….
ஆங்…. ரெண்டும் இல்ல…. இப்படி அற்புதமா கிடைச்ச மனுச வாழ்க்கைய… அற்ப்பமா… தூங்கி தூங்கியே பொழுத கழிக்கிறீயேன்னு ஆத்தாமை….. வேறென்ன…
நான் என்ன கல்லாலமரமா….கோடி வருசம் வாழறதுக்கு…..
அபி, அந்த வார்த்தை பிரயோகத்தில் சுவாரசியமானாள்…
என்னது… என்ன சொன்ன…
ஹாங்…. கோடி வருசம் வாழ முடியாதுன்னு சொன்னேன்…
அதில்ல… என்னவோ கல்லான்னியே….
ஓ… அதுவா… அது தெரியாதா உனக்கு…. நீ மெட்ராஸ் கேர்ள்தான… அப்புறம் ஏன் கல்லால மரம் பத்தி ஏங்கிட்ட கேக்குற… சரி சொல்றேன் கேளு…..


உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது ஆச்சி, கோடி வருசங்களுக்கு மேல…
ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது…. அதுவும் சென்னைக்கு பக்கத்துல ஒரு 100 கிலோ மீட்டர் தொலைவில..
அப்படியா..


ம்… பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்கள நீ பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…
ம்… வெரி இண்ட்ரஸ்ட்டிங்… மரம் மனுசன மாதிரி மக்கி போகாதில்ல…
ம்.. மக்கி போகாதுன்னு சொல்ல முடியாது… ஏன் பெட்ரோல் அப்படி மக்கினதுதான… அண்டர் கிரவுண்டுல ஆக்சிஜன் கிடைக்காம பிட்டிரைஃபைட்டு ஆனா இந்த கல்லாலமரம் …………. அதாவது மரம்………. இப்ப கல் ஆயிருச்சு…
வாட்… கல்லாச்சா…


யெஸ்… மரம் ஒரு ஆர்க்கானிக் காம்பணெண்ட் இல்லியா… அதனோட தன்மைகள் சுத்தமா போயி, இப்ப சில்லிக்கான் செல்களா இருக்குது…..
ஆத்மா… என் செல்லமே… ஆர்வத்தை தூண்டி விட்டாய்… 100 கிமி தானே சொல்கிறாய்… போவோமா… நம் பைக்கில் சென்றால் அற்புதமாக இருக்கும்…
ம்… 100 ன்னேன்… ஸ்பஷ்ட்டமா சொன்னா ஒரு 100 -130 கிமி… இருக்குமே..
பைக்கில நானும் பின்னால உக்காரும் போது, 30 கூடினா என்ன…. வாயேன் வேணுன்னா, திரும்பி வந்ததும்…. உன் கால் பிடிச்சு தர்றேன்….
20ம் நூற்றாண்டின் புதுமைப்பெண்ணே… வா யூகங்களை தாண்டி சென்ற மரங்களை தரிசிப்போம்… கம்மான் கெட் ரெடி…


போர்வையை உதறி, ஆத்மா சுருசுருப்பானான்.


மணி 8 இருக்கும் போது, அவர்களின் இருசக்கர வாகனம் வண்டலூரை தொட்டது. சோம்பேறித்தனமான சென்னை சாலைகள் இன்னும் விடியாத புண்ணியத்தில் டிராபிக் பிரச்சனை இல்லாமல் வண்டி வேகமாய் நகர்ந்தது. திருச்சி நோக்கி செல்லும் சாலையில், மேல்மருவத்தூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து, பாண்டிச்சேரி சாலையில் பயணித்து, இதோ திருவக்கரை எனும் ஊரை இலக்கிட்டு காற்றாய் நகர்ந்தது.
திருவக்கரை இதுதான் இந்த கல்லால மரம் இருக்கும் இடத்து ஊரின் பெயர். வக்கர காளியம்மன் எனும் கோவில் அலங்கரிக்கும் ஊர் கூட இதுதான்.


ஆகம விதிப்படி அமைக்கப்படாத ஒரு கோவில் உண்டு என்றால் ….. கோவில்ன்னா இப்படி இருக்கணும் என்ற விதிக்கு …. சொன்னதற்கு நேர் மாறாக கோவில் அமைக்கப்பட்டது இங்காகத்தான் இருக்க வேண்டும்.
மூலவர் என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில் நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி. ஆனால்………. இங்குள்ள கோவிலில் நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும் இடம் வலமாய் சுற்றி வந்தால் இங்கு மாறி சுற்ற வேண்டி வரும்.


ஆதிச்ச சோழனால் கட்டப்பட்டு, மாணிக்க வாசகரால் பாடப்பட்ட இத்தலம், இன்றும் மக்களின் பெருங்கூட்டத்தால் அம்மாவாசை பௌர்ணமிக்கு திணறுகிறது. சில கிரகங்களின் வக்கிர பார்வைக்கு இந்த கோவில் வந்து எலிமிச்சை மாலை சாத்தினால் பரிகாரம் உண்டு என நம்பப் படுகிறது. மிக பிரசித்தியான தலம்.



இக்கோவிலின் உள்ளே, குண்டலினி சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்கிறது, அந்த இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தால் மனம் ஒருமைப்படுவதை வியக்காமல் இருக்க முடியாது… எப்படி எப்படி.. இப்படி என மனம் மிரள வைக்கும் ஒரு அதிர்வை எளிதில் உணரலாம்… பிரணவ மந்திர மூம்மூர்த்திகளும் ஒரே சிவலிங்கத்தில் இருப்பது உலகிலேயே இங்குதான்.
ம்… இந்த கோவில் ஏன் இப்படி இருக்கிறது….. சொல்வதற்கு ஆதாரமில்லை என்றாலும்… இக்கோவில் நாட்டார் வழிபாடு செய்யப்பட்டு பின்னர் சிவ வழிபாடு… அரக்கனை அழித்தது… என அரசியலாகி மாற்றப்பட்டது……… என உள்ளுணர்வு சொல்லும்….


கல்லால மரம் இந்த ஊரில் இருப்பதும்…. இவ்வூரின் கோவில் வக்கிர சித்தரிப்புக்கும் ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும். ஒரு ஆழ்ந்த தொடர்பும் இருக்க வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரகசிய தொடர்ப்பில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்க வேண்டும்… என்றாலும் ஆழமான ஆராய்ச்சி செய்யும் யாராவது செய்ய வேண்டிய பணி இது….


சமீபத்திய சாலை மேம்பாட்டினால் வழுக்கி கொண்டு ஓடும் சாலைகள் இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் இருப்பது பெரிய ஆறுதல். ஆத்மாவும் அபியும் அலுங்காமல் குலுங்காமல் அந்த இடம் வந்து சேர்ந்தார்கள். ஊரின் ட்டோப்போகிராபி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. சம தளம் அற்று, அங்குமிங்குமாய் உயர்வு தாழ்வு இருக்கும் ஓர் மண் தளம். கொஞ்சம் பாறைகள், கொஞ்சம் குன்றுகள் என்றாலும் வளப்பமான மரங்களும் நம்மை வரவேற்க்கும்.


சுற்றி வேலி அமைக்கப்பட்டு, அந்த பூங்கா அழகுடனும் அமைதியாகவும் இருந்தது. அதனுள் தான் அந்த கல்லாலமரம் இருக்கிறது.


அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு, பொது மக்களுக்காக திறந்து விடப்பட்ட சிறு நிலப்பரப்பு ரகசியங்களை தரிசிக்க சொல்லி நம்மை வரவேற்க்கும்.
நுழைந்த உடனேயே சிவப்பு வண்ணத்தில் மரம் கண்ணுக்கு படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல…. நிறைய நிறைய மரத் துணுக்குகள்…. அதில் ஒரு நீண்ட கல்லால மரம் இருக்கிறது. அதன் நீளம் சுமார் 50 அடி….
‘இந்த மரத்தோட வயசு 3,000 கோடி வருசமா….


அபி அந்த மரத்தை வருடினாள். மயிர்க்கால்கள் குத்திட்டன. ஏய்… மரமே உன் வயது கோடிகளிலா… கொஞ்சம் பேசேன்.. நீ பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. நீ எப்படி வாழ்ந்தாய்… நீ வாழ்ந்த காலத்தில் பூமி எப்படி இருந்தது.


உன் காலத்தில் எல்லாம் இங்கு சமுத்திரமாமே… அப்படியா… ஐஸ் ஏஜ் என சொல்கிறார்களே அப்படி என்றால் எப்படி…. நீ வாழ்ந்த காலத்தில் மனிதனே இல்லையாமே…. டைனோசர் எனும் ராட்சத விலங்குகள் தானாமே அப்படியா… புராணங்கள் சொல்வதை கேட்டு, இங்குள்ள வாயிற் காப்போன் சொல்கிறார்… ‘அந்த காலத்தில இங்கு வாழ்ந்தவர் பூரா அரக்கர்கள் என்று….’ அப்படியா….


யார் யார் இங்கு வசித்தார்கள். உனக்கு தெரியும் உண்மையை உரக்க சொல்லேன்…


ஆத்மா அந்த அமைதியை கலைத்தான்…


கல்லாகி போன இந்த மரங்கள் இங்குள்ளவை அல்ல…. அதன் வேர்களோ, இலைகளோ அல்லது, அதன் ஒடிந்த கிளைகளோ இங்கு இல்லை… இவையெல்லாம் எங்கிருந்தோ இங்கு வந்து கொட்டப்பட்டிருக்கிறது… எப்போது… எந்த காலத்தில்………….


பதில் சொல்லாது அபியை பார்த்தான்.


ம்… 2 கோடி வருசங்களுங்கு முன்னால்… இப்படி 2 கோடி வருசங்களுக்கு இங்கு வந்து கொட்டியவர்கள் யார்… மனிதனா…. அரக்கனா…. அல்லது டைனோசரா….
ஹா….ஹா…


18ம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பியர் கண்டுபிடித்து இப்படி கல்லாகி போன ஒரு மரத்தின் துண்டுகள் இங்கே கொட்டி கிடப்பது பற்றி கண்டுபிடித்து எழுத…. ஆராய்ச்சி குழு இங்கே வந்து 100 வருசமாக ஆராய்ச்சி செய்ததில் நாம் கண்டுபிடித்தது இவ்வளவே…
1.   இந்த கல் மரத்தின் தன்மையில் ஆர்கானிக் இல்லை இல்லவே இல்லை… முழுக்க முழுக்க சிலிக்கான் தன்மைகளே உள்ளன.
2.   இந்த கல் மரத்தின் ஆயூள் 3000 கோடி வருசம்
3.   இந்த கல் மரம் இந்த பகுதியை சேர்ந்தது அல்ல, எங்கோ இருந்ததை யாரோ கொண்டு கொட்டி வைத்திருன்ந்தார்கள்…
4.   கொண்டு கொட்டிய வருசம்…. 2 கோடி வருசங்கள்
5.   யார் கொண்டு வந்து கொட்டியது………. ஏன் இங்கு வந்து கொட்டி வைத்தார்கள்… என்ன செய்வதாக உத்தேசம்…. ம்…ஹூம்.. தெரியவில்லை… அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை
6.   10 வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனம் பத்தடி தோண்டி, மணல்களை சேகரித்து சென்றிருக்கிறது. சேகரித்த மண் தங்கம் போல மின்னியதாகவும் … ஆராய்ச்சியின் தகவல் பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் தகவல்கள்.



கேள்விகள் ஓராயிரம் உண்டு, விடைகள் சொல்லத்தான் யாருமில்லை…. வெறும் 2000 வருசத்து சரித்திரமே தரிகிணத்த்தோம்… போட்டு… தெளிவாகத் தெரியாமல் விழிக்கின்ற சிறு புல் நாம்… நம் முன்னோர்களை பற்றியோ, இந்த பூமியை பற்றியோ எதுவும் அறியாத சிறு பாலகர்கள் நாம்…


எல்லாம் எமக்கு தெரியும்… என இறுமாப்பு கொள்ளும் நம் இன்றைய ஈகோவை பார்த்து பல் இளிக்கவாவது இந்த திருவக்கரைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளலாம்…


அமைதியாக ஆத்மாவையும் அபியையும் சுமந்து கொண்டு சாலையில் விரைந்தது பைக். திருச்சி சென்னை சாலையில் திரும்பியதும் ஆத்மா சொன்னான்…


ம்… இவ்வளவு ஆர்வமா…. பூமியின் வரலாறை தெரிந்து கொள்ள இத்தனை ஆவலா…. அப்படியென்றால் நீ அங்கு நிச்சயம் செல்ல வேண்டும்……..
இன்று வேண்டாம், அடுத்த முறை அங்கு செல்லலாம். திருச்சிக்கு அருகில் பெரம்பலூர் பக்கத்தில்…. அங்கு சென்றால் அதிர்ச்சி ஆகி விடுவாய்…


அபி திரும்பி அவனை பார்த்தாள்….


என்ன இருக்கிறது அங்கே….


ம்… முட்டை ….. டைனோசர் முட்டை….


என்ன கதை விடுகிறாய்… ஜூராசிக் பார்க் சினிமாவில் விட்டு புளுகு மூட்டை எனவல்லவா அந்த முட்டையை பற்றி நினைத்தேன்…


ஆத்மா பலத்த சிரிப்புடன் சொன்னான்…. ஹா…ஹா… இல்லை, ஆயிரக்கணக்கில் டைனோசர் முட்டைகள் இருக்கும் திருச்சிக்கு அருகில் அடுத்த முறை செல்வோம்… அதுவரை… 

16 கருத்துகள்:

  1. தலீவாஆஆஆஆஆ......

    தங்களின் தொடர் வாசகனான இந்த பாமரனுக்கு இந்த திருவக்கரை ஊமை மரம் மூலம் தாங்கள் சொல்ல வரும் அறிவுரை தான் என்ன?

    நாடெங்கும் தேடி தேடி அலைந்தும் நாம் இன்றும் கண்டறியாத பல ரகசியங்களை அறிந்த ”செல்லா சித்தர்” பற்றிய வரலாற்று, பூகோள குறிப்புகள் ஏதேனும் எங்கேனும் தென்படுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...

      1. 3000 கோடி வருசங்களுக்கு முன்னால மரமாகவும் இன்று கல்லாகவும் இருக்கும் ஒரு மரத்தினை நான் சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தேன்... அதையே இங்கு எழுதியிருக்கிறேன்....

      2. தகவல்களை எப்படி தந்தால் நல்லது எனும் பரிசோதனையில் சும்மா கற்பனையா.... ஒரு கதை மாதிரி... ஆனா கதை இல்லாத ............ ஒரு ஃபார்மேட்டுல முயற்சி செய்திருக்கிறேன்... அம்புட்டுத்தேன்............

      2. அப்புறமா... யூகங்கள் தாண்டி, காலங்கள் தாண்டி........ ரகசியங்களை அறிய....... சித்தர் குறித்து தெளிய... பூகோளமும் புவியியலும் சாத்தியமே இல்லை............

      நூலகத்தில் அடங்காத புத்தகம்.....
      குறுப்பிட்டு சொன்னால் குறுங்கண்டம்... அதுதான் நம் சித்தர்....

      தெலுங்கில் பேசினால் தெலுங்கர்.........
      தெலுங்கே பேசினால் அதுதான் சித்தர் ..............

      நீக்கு
  2. ஒரு பழமைய புதுமையாக்கிருக்கிங்க. ஆனால் நான் இந்த மரதை கண்டிப்ப ஊருக்குபோனால் பார்ப்பேன் . படுகாளி அவர்களே! சித்தர் சொன்னாரா இல்லையா ஆனால் படுகாளி சொன்னால் ஒர் அர்த்தம் இருக்கும்.. சில மர்மம் மரைந்து கிடக்கிறது ஆனால் மாற்ற யாரும் இல்லை உங்களை போன்றவர்கள் நாட்டம் கொண்டால் மர்மம் உடைந்துவிடும்.. இந்த காலத்தில் இப்படி பட்ட பதிவுகள் வருவதில்லை ஆனால் நீங்கள் தந்துரிக்கிங்க சூப்பர்..இன்னும் இந்த மாதிரி பதிவுகள் தாருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... வாசிம்........... தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்........

      //// நான் இந்த மரதை கண்டிப்ப ஊருக்குபோனால் பார்ப்பேன் . /////

      சூப்பர்.... குடும்பத்துடன் செல்லுங்கள். அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாகவும் பரந்த மனதுடனும் வளர்ப்பதற்க்கு இது உதவும். பயணத்திட்டங்களோ அல்லது அது குறித்த தகவல்களோ ஏதேனும் அவசியம் இருப்பின் சொல்லுங்கள்....

      //////////////// இந்த காலத்தில் இப்படி பட்ட பதிவுகள் வருவதில்லை ஆனால் நீங்கள் தந்துரிக்கிங்க சூப்பர்..இன்னும் இந்த மாதிரி பதிவுகள் தாருங்கள்.. /////////////

      ரொம்ப தேங்க்ஸ்... வாசிம்.... தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைக்கு மிக்க நன்றி...

      நீக்கு
  3. From a website: "Sometimes a natural disaster like an earthquake or a sudden volcanic erruption buries large swathes of forests or lone trees in soft sediment. Trapped and devoid of oxygen the tree preserved almost intact but not only that, the mineral rich water finds way through the sediments and it binds the cellulose of the wood replacing every cell and every bit of bark and ring with minerals usually silica. Centuries later when an archeologist or geologist turns aside a rock he finds the tree preserved with all its details intact only now after all these years its stone."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...... மரம் கல்லாவதிலேயே இத்தனை விடயங்கள் இருக்கின்றன.....

      இப்பதிவு.... பூகோளம், வரலாறு, ஆன்மீகம் என பல தளங்களில் விரிந்து ................... இருப்பது......... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

      வெறும் ஒரு பயணக் கட்டுரை இன்று இத்தனை தளங்களில் பார்க்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் மிகவும் ஆரோக்கியமான செயல்....

      தங்கள் மேன்மையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

      நீக்கு
  4. http://articles.timesofindia.indiatimes.com/2009-10-01/india/28066173_1_eggs-nest-river-bed

    India's Jurassic nest dug up in Tamil Nadu
    Radha Venkatesan, TNN Oct 1, 2009, 12.48am IST


    (Geologists in Tamil Nadu…)
    COIMBATORE: Geologists in Tamil Nadu have stumbled upon a Jurassic treasure trove buried in the sands of a river bed. Sheer luck led them to hundreds of fossilized dinosaur eggs, perhaps 65 million years old, underneath a stream in a tiny village in Ariyalur district. ( Watch Video )

    Researchers from the Salem-based Periyar University found clusters of eggs of what they believe to be the most aggressive Carnosaur and the docile, leaf-eating Sauropod at Sendurai village.


    While Carnosaurs were large predatory dinasaurs, Sauropods were long-necked, herbivores which grew to enormous heights and sizes.

    That dinosaurs once roamed the area was known from the fossils found there on earlier expeditions. But this is the first time that hundreds of nests embedded with hundreds of clusters of dinosaur eggs have been unearthed in the district.
    Located on the highway between Chennai and Tiruchi, the Ariyalur and the neighbouring Perambalur geological sites nestle in the northern plains of the Cauvery river. The place is a veritable museum of ancient organisms, dating back to 140 million years. Ever since a British couple -- the Wines -- collected 32 boxes of "strange stone objects" in 1843, the Ariyalur region has drawn geologists from across the world for its rich fossil presence and diversity.

    Scientists have found the tiniest marine algae or the nano fossils besides the rare shell-like bivalve, gastropoda, telecypoda and brachiopoda in the geological sites spread across 950sqkm in Ariyalur and Perambalur districts.

    "We found clusters and clusters of spherical eggs of dinosaurs. And each cluster contained eight eggs," says Dr M U Ramkumar, geology lecturer of the Periyar University. Each egg was about 13 to 20 cm in diameter and they were lying in sandy nests which were of the size of 1.25 metres.

    In the 1860s, a British geologist first recorded the presence of bone remains of dinosaurs in Ariyalur. Over a century and a half later, the egg of a dinosaur was found in a cement factory of the state-owned Tamil Nadu Cements Ltd in 1990s. But officials realized that it was a dinosaur egg only 10 years later.

    On a sultry afternoon on September 12 this year, Ramkumar and his research students went to Ariyalur to scour the rocks and sediments as part of a study funded by Indian and German scientific institutions. As they paused by a stream on a grazing land at Sendurai, they found spherical-shaped fossils peeping out of the sand beds. "We got really excited. As I have seen a dinosaur egg, I was sure these were dinosaur eggs," said Ramkumar.

    A quick digging revealed clusters of eggs beneath seven layers of sand spread over two sqkm. The eggs may not have hatched due to the Deccan volcanic eruptions or seasonal flooding, surmise the team. "We suspect the extinction of dinosaurs was triggered by the Deccan volcano. Volcanic ashes cap the eggs," said one researcher.

    "This is a very significant finding as never before have we found so many dinosaur eggs in the country. Besides the spherical size of the eggs covered with sand and volcanic ash provide significant insight into the possible reasons for extinction of the species," says Dr Jyotsana Rai, senior scientist, Birbal Sahni Institute of Paleobotany in Lucknow. Her team will collect samples of these eggs to determine its exact age.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... பகலவன் சார்....

      அருமையான தகவல்கள்.....

      தகவல்களின் செறிவு நம் வாழ்க்கையை நம் சிந்தனையை மேம்படுத்தும் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. ஆம்.... இத்தகைய தகவல்களின் பரிமாறுதலும், கருத்தோட்டங்களும் நம்மை இலகுவாக்கும் என ஆழமாக நம்புகிறேன்... தங்கள் தகவல்களுக்கும் விலை மதிப்பில்லாத நேரத்துக்கும் மிக்க நன்றி....

      நீக்கு
  5. மிக்க நன்றி... வாசிம்........... தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்........

    //// நான் இந்த மரதை கண்டிப்ப ஊருக்குபோனால் பார்ப்பேன் . /////

    சூப்பர்.... குடும்பத்துடன் செல்லுங்கள். அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாகவும் பரந்த மனதுடனும் வளர்ப்பதற்க்கு இது உதவும். பயணத்திட்டங்களோ அல்லது அது குறித்த தகவல்களோ ஏதேனும் அவசியம் இருப்பின் சொல்லுங்கள்....

    //////////////// இந்த காலத்தில் இப்படி பட்ட பதிவுகள் வருவதில்லை ஆனால் நீங்கள் தந்துரிக்கிங்க சூப்பர்..இன்னும் இந்த மாதிரி பதிவுகள் தாருங்கள்.. /////////////

    ரொம்ப தேங்க்ஸ்... வாசிம்.... தங்கள் ஊக்கம் தரும் வார்த்தைக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  6. எனக்கு ஊக்கம் குடுத்ததே நீங்களும் RG சாரும் தானே!......இன்ஷால்லாஹ் காண்டிப்ப குடும்பத்துடன் பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வாசிம். தங்களுக்கு இறைவன் எல்லா நலன்களும் வழங்க பிரார்த்தனைகள்... தங்களின் திறமை மேல் எனக்கும் RG க்கும் நம்பிக்கை உண்டு.....

      நீக்கு
  7. நல்ல பதிவு , ஆர்வத்தை தூண்டுகிறது..இன்னும் நண்பரை போல என் மனதுக்கு தீனி போட வில்லையோ என நான் என்னையே நொந்து கொண்டேன் ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தலைவா... தங்கள் நேரத்துக்கும் பின்னூட்டத்துக்கும்.. அடிக்கடி தங்களின் பிச்சைப் புகினும்.... நினைவுக்கு வருகிறது... இன்னும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.... ஆவலாய் காத்திருக்கிறோம்...

      நீக்கு
  8. //நூலகத்தில் அடங்காத புத்தகம்.....
    குறுப்பிட்டு சொன்னால் குறுங்கண்டம்... அதுதான் நம் சித்தர்....

    தெலுங்கில் பேசினால் தெலுங்கர்.........
    தெலுங்கே பேசினால் அதுதான் சித்தர் ..............//

    ஹா ஹா ஹா ஹா....

    செல்லா சித்தர் பற்றிய உங்கள் விளக்கம் கண்டேன்.... தெளிந்தேன்....

    பதிலளிநீக்கு
  9. திரு, லா...

    திருச்சி அருகில் டினொசுர் முட்டையா? omlette kittuma...

    சித்தர் விளக்கம்....இன்று தான் பார்தேன்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைனோசர் முட்டை சாப்பிட்டா கொம்பு முளைக்கும்ன்னு பரவலா பேசிக்கிறாங்க.............. பரவாயில்லையா..... செல்லா....

      ஹா...ஹா..சித்தர் விளக்கம் பிடிச்சுதோ............ அது சரி.... என்ன செய்யுறது செல்லா... உங்களை பற்றி எழுத அமர்ந்தாலே.............

      கொண்டை சேவல் கொக்கரிக்கும்... தமிழ் சோடா கொப்பளிக்கும்....

      நீக்கு