பக்கங்கள்

மிஸ்டர் எக்ஸ்…. வானொலி நாடக குறிப்பு…

 ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அன்பிற்குரிய நிகழ்ச்சி தயாரிப்பாளர் அழைந்திருந்தார்.

லாரன்ஸ்… நாடக விழா… வருசா வருசம் ஆல் இந்தியா ரேடியோவில நடக்கும்…. சிறப்பான வாய்ப்பு. இந்த முறை அறிவியல் புனைவு (Science Fiction) செய்யலாமென நினைக்கிறேன்.. நல்ல ஒரு நாடகம் எழுதுங்களேன்..

அதுக்கென்ன சார், செஞ்சிருவோம் என எப்போதும் இருக்கும் அதே பாசிட்டிவ் எனர்ஜியுடன் சொன்னேன்… உபரியாக… சார் எப்படி இருக்கணும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்களேன்…

ம்..ஹூம்… தொண்டையை செருமிக் கொண்டு, சொல்லத் தொடங்கினார். அன்பு.. அன்பால மனிதர்களெல்லாம் நிறைஞ்சிருக்கோம்… ஆனா அந்த அன்ப நாம எல்லோரும் மறந்துட்டோம்… கோவை வானொலி நிலையத்துல ஒரு நாடகம் செஞ்சோம்… கதை என்னன்னா..ஹூயுமன் டி என் ஏ ஆராய்ச்சியில ஈடுபட்ட ஒரு சயிண்ட்டிஸ்ட்… அவன் காதலி… ஆராய்ச்சியோட ஒரு கட்டத்தில ஒரு விபத்து… மிகப்பெரிய விபத்து…

அவன் காதலி அந்த எந்திரத்தில விழுந்து கூழாகி, அவளோட ரத்தம் பூரா தெறிக்குது… அவளோட ரத்தம் சிதறும் அந்த தருணத்தில் இவன் கண்டுபிடிப்பும் நிறைவு பெறுதுன்னு…. ஒரு மேட்டர்…
இந்த ட்ராமா நல்லா வந்துச்சு… அது மாதிரி நல்ல தத்துவமா அறிவியல் சார்ந்து எழுதுங்க....

அவரே ஒரு சிந்தனையாக இப்படி சொன்னார்.

சேக்ஸ்பியர் கருத்துப்படி…. ஒரு அபரிமிதமான இழப்பு அல்லது சோகம் தான் ஒரு கதை அல்லது இலக்கியம் என முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தார்.


நானும் வெளி வந்து சாந்தோம், கடற்காற்று முகத்தில் அடிக்க புல்லட்டை துவக்கி ஓட்ட ஆரம்பித்தேன்… கதை என்னுள் உதயமாக துவங்கியது. ஆனால் நம் கதை எப்போதுமே என்னுடைய வேல்யூ சிஸ்டம் பேஸில் தானே பயணிக்கும்... அப்படி ஒரு அக்மார்க் என் பாணி சிந்தனையில் ஒரு கதை ஓடத் துவங்கியது.

நான் கதை எப்படி அமைக்கிறேன் என தெரியாது. அந்த செயல் புரியாது. என்ன அதிசயம் எப்படி நடக்கிறது என தெரியாது… 

எனக்கே புரியாத விந்தை இது… கதை எப்படி உருவாகிறது… திரைக்கதை எப்படி அமைகிறது… வசனங்கள் எப்படி வந்து அமருகிறது என்று புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்… ஆனால் இது வரை புரிந்ததில்லை…

கதை எழுதும் சூட்சமும் தெரியாது… ஆனால் அது தானாகவே நடக்கும்…. பிரபாகர் எனும் சராசரி நான் ஒதுங்கி கொண்டு, இலக்கியம் தன்னை எழுத.... நான் சம்பதிப்பேன். என் மனம் ஒரு நிலைக்கு செல்லும்… கடகடவென வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாய் அணி வகுக்க துவங்கும்… அப்படியே வந்து வசனங்கள் கொட்டத் துவங்கும்…

இன்றும் அப்படித்தான்.
அறிவியல் புனைவு… ராக்கெட்…. ராக்கெட் லாஞ்ச்…  கவுண்ட் டவுண்… இரைச்சல்….

சக்ஸஸ்… சக்ஸஸ்… ப்ரெண்ட்ஸ்.. இப்ப நாம விண்ணுல ஏவியிருக்கிற இந்த ராக்கெட் ஒரு அற்புதம்… ஒரு மாபெரும் சக்சஸ்…. இந்த மனித குலமே மாறப்போகுது….

வீடு வரும் வரை ஒரு 20 நிமிட கதை ஓடி விட்டது. வீட்டுக்கு வந்ததும் மடிக்கணினியில் அத்தனையும் தட்டினேன்…

மனதில் ஓடும் வெர்ஷனை துணை கொண்டு, வார்த்தைகளாக்கும் அடுத்த கட்ட செயல். இது அடுத்த வடிவம்…. இது மனதில் ஓடிய வெர்ஷனின் ஒரு பூசப்பட்ட ஒரு வடிவமாக இருக்கும்…

இப்போது எழுதும் போது இப்படி ஆரம்பிக்கிறேன்…

காட்சி 1

 இந்தியன் ஸ்பேச் ரிசர்ச் செண்டர்
பாத்திரங்கள் : எம்.கே.. சீஃப், மினிஸ்டர், மற்றும் குரல்... குழு....

மினிஸ்டர் கார் சைரன்…. கார்கள் வரும் ஓசை.. குழு…கும்பல் சத்தங்கள்
குரல்
மினிஸ்டர் வர்றாரு..  மினிஸ்டர் வர்றாரு… கொஞ்சம் வழி கொடுங்க…
மினிஸ்டர்
(புன்னகைத்தபடி) வணக்கம்…வணக்கம் வாழிய நலம்
சீஃப்
வெல்கம் டூ இந்தியன் ஸ்பேச் ரிசர்ச் செண்டர்… வாங்க சார் வாங்க… உள்ள போகலாம்…. திஸ் வே….

கடகடவென ஒரு 20 பக்கங்கள் ஓடி விட்டன…. 4 காட்சிகள் முடிந்தது. துணைவியார் வந்து என்ன பிசியா என்ற போது… நிமிர்ந்து பார்த்து… வேலையிருக்கா… இல்லன்னா உக்காரேன். என சொல்லி எழுதியதை வாசித்தேன். ம்..ம்… என கேட்டவர்… நான் முடித்தவுடன்… ம்.. அப்புறம் என்னாச்சு என்றார்… இல்ல இவ்வளவுதான் தெரியும் இனிம யோசிக்கணும் என்றேன்…

எழுந்து செல்லும் முன் திரும்பி…ம்.. நல்லாயிருக்கு… தொடர்ந்து எழுதுங்க என ஒப்புதல் தந்தும் சென்று விட்டார்.

அடுத்த நாள் காலை, அலுவலகம் வரும் பயணத்தில் மீண்டும் அடுத்த பாதி நாடகம் ஓடியது. அன்று இரவில் அடுத்த பகுதியையும் அடித்து முடித்து விட்டேன்…

அப்புறம் மறந்து போயிற்று… வேறு வேலைகளிலும், அலுவலகத்தின் பணிகளிலும் ஆழ்ந்து போனேன்… இது மறந்து போயிற்று.

நான்கைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து ஃபோன். என்ன லாரன்ஸ்… ஏதாச்சும் யோசிச்சீங்களா… சினாப்சிஸ் மட்டும் கொடுங்க… எழுதுறது கூட டைம் எடுத்துக்கோங்க….

பேச்சின் ஊடே ஒரு தகவலை கேட்டதும் சுரிர் என்று இருந்தது. இல்ல ஆர்னிகா நாசர் கிட்ட தான் முதல்ல கேட்டேன். அவர் சிதம்பரம், அதனால பாண்டிச்சேரி ரேடியோவில கொடுக்க சொல்லிட்டேன்… டெக்னிக்கலா எழுதணும், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா யோசிச்சு எழுதணும், அதான் உங்ககிட்ட கேக்குறேன்… என்றதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

என்னது நான் ஆர்னிகா நாசருக்கு ஆல்டர்னேட்டிவ்வா.. சே.. அக்கறை இல்லாம அலட்சியமா விட்டுட்டோமே… என மீண்டும் அன்றிரவு வந்து சுருசுருப்பாக வேலையை தொடங்கினேன்…

இது வானொலி நாடகம். எனவே, ஒலியில் மட்டுமே…. கதை சொல்ல வேண்டும். அதனால் நான் ஒரு ரேடியோ லிசனராக உருமாறி, முதல் முறையாக கதை கேட்பது போல், அமர்ந்து கொண்டு கேட்பேன்… அல்லது வாசிப்பேன்….

எப்படி ஒரு டகால்ட்டி பாருங்க…. 

இருந்தாலும் இதையும் சும்மா ஒதுக்காமல் என்ன என யோசிக்கிறேன். ஆனாலும் இது ஒரு மெடிட்டேட்டிவ் ஸ்டேஜ் என்றே தோன்றுகிறது. அதாவது தற்காலிகமாக, நான் என்னை மறந்து என் படைப்பை மறந்து, ஒரு சாமான்ய ரசிகனாக அமர்ந்து வாசிக்க துவக்குவது.

ஒரு நேயராக வானொலி நேயராக எனக்கு புரிகிறதா... புடிக்கிறதா என பார்ப்பேன். இதுவும் செய்து முடித்த போது, சில சின்ன சின்ன டெண்டிங்க் பெயிண்டிங்க் வேலை அவசியமாக இருந்தது..... ஸ்கிரிப்ட்டுக்குத்தான்.

உதாரணத்துக்கு…….. ‘ஹலோ நான் தான் எம்.கே பேசுறேன்’……… ‘மாப்பிள்ளை அந்த பேக் அ இங்க கொடுங்க… நீங்க முதல்ல உள்ள வாங்க’……… என்பன போன்ற……….. சில பிர்காக்களை சேர்க்க வேண்டியதாயிற்று...

மொத்தமாக முடித்து……………. அடுத்த நாள் ஆல் இந்தியா ரேடியோ சென்றேன்… உணவு இடைவெளி … ப்ரொடூயூசர் சாப்பிட்டு கொண்டிருந்தார்…. அப்புறமா வரேன்..சார் என நான் சொல்ல…

பரவாயில்ல… வாங்க… உள்ள வாங்க….. லாரன்ஸ்… நீங்க சாப்பிட்டுட்டீங்கன்னா… ஃபைன். உக்காருங்க… சொல்லுங்க சினாப்சிஸ் கேப்போம் என்றார்.

நான் மெதுவாக ஸ்கிரிப்ட் எடுத்து… அவர் முன் நீட்டி… முடிச்சுட்டேன் சார்..
கொஞ்சம் நம்பாமல்… முடிச்சுட்டீங்களா.. ஃபுல்லா … தேங்க்யூ… தேங்க்யூ… சரி கதை சொல்லுங்களேன், என்றார்.

ஸ்கிரிப்ட்டை எடுத்து கையில் வைத்து கொண்டு, சொல்ல துவங்கினேன்.... ஒரு 20 நிமிடத்தில்… ஃப்ளோ சொன்னேன்… வசனங்களை அவ்வப்போது துணைக்கு வைத்து கொண்டு, விருவிருவென சொன்னேன்... அவரும் இடை மறிக்காமல் கேட்டார். கேட்டவுடன் திருப்தியாய் தலை அசைத்தார்.

ஹூம்… நல்லாயிருக்கு……. அந்த மிஸ்டர் எக்ஸ்… மனசாட்சின்னு ஒரு லிங்க் பண்ணியிருந்தீங்கள்ல அது பிடிச்சுச்சு…. என்றார்…

இன்று ஒலிப்பதிவு சமயத்தில் நடித்த கலைஞர்கள் கூட ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்.. கொஞ்சம் காம்பிளிக்கேட்டட்….. பட்… நல்லாயிருக்கு என்றார்கள்’

காமெடி நல்லாயிருக்குது, சரியான விகிதத்துல…. எமோஷன், தத்துவம், காமெடி எல்லாம் கலந்திருக்குது… என பாராட்டினார்கள்.

பார்ப்போம், ரசிகர்கள் என்ன சொல்லவிருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள, 30ம் தேதி மே வரை காத்திருக்கிறேன்….