பக்கங்கள்

கர்நாடகா ... கர்... புர்

சேனா – மது.

அருகருகே இருந்தாலும் பகைமையாய் உட்கார்ந்து இருந்தனர். ஒரே ஊரை சேர்ந்தவர்களே . நேற்று வரை பிரச்சினை இல்லை.
ஆனால் இன்று நிலை வேறு. உடகங்கள் எல்லாம் இன்று இவர்களை பற்றியே. அரசியல் கூட இன்று அவர்களிடையே அருகில் உட்கார்ந்து அளவளாவி கொள்கிறது

மது : ஏன் என்னை அடிச்சே....
சேனா: நீ ஏன் குடிச்ச …..
மது : அதுக்கு அடிப்பியா
சேனா: ஆமா நீ நாட்ட, நம்ம கலாச்சாரத்தை கெடுக்கிரே
மது : நீ குடிக்க மாட்டியா
சேனா: நான் ஆம்பிளை
மது : ஓஹோ. நான் பொம்பளே, அதான் பிரச்சினையா
சேனா: பேச்ச மாத்தாதே , உங்க வீட்டுலே அப்பா நீ குடிச்சதுக்கு கொஞ்சுவார ….. தூக்கி போட்டு மிதிக்க மாட்டாரு , உன் அண்ணன் உனக்கு ஊத்தி கொடுப்பானா ….
நாம் யார் பக்கம். மதுவா……. சேனாவா .....

நல்ல கிளப்புராங்கையா பீதிய........ படுக்காளி

செய்தி : மங்களூர் நேற்று பகலில் சேனா உறுப்பினர் சிலர் மது அருந்தும் இடம் சென்று அங்குள்ள பெண்களை அடித்து விரட்டினர்.

1 கருத்து:

 1. மது அருந்தும் இடத்தில் மாது
  இதில் மட்டும் இட ஒதுக்கீடு ஏது

  நீ குடித்தால், நானும் குடிப்பேன்
  நீயும் நிறுத்து, நானும் நிறுத்துகிறேன்

  நாயகனை பின்பற்றும் நாயகிகள்.

  பதிலளிநீக்கு