பக்கங்கள்

அமுக்குவான் பேய்

பேய் , இருக்கா... இல்லையா .

தெளிவாக பதில் சொல்ல முடியாத கேள்வியில் படிக்கின்ற நீங்கள் சிந்தனையை நெருடிகொண்டு இருக்கும் வேளையில் , படுக்காளி ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

கல்லூரி நாட்களில் - ஊர் சுற்றி விட்டு, இரவிலே படுக்க ஆயத்தமான ஒரு குளிர் கால இரவு. நள்ளிரவு மணி 12:00 .

உடன் உள்ள சில நண்பர்கள் ஏற்கனவே நித்ரா தேவியோடு கை குலுக்கி இந்த உலகத்தை மறந்து இருந்தனர். படுக்க ஆயத்தங்களில் படுகாளியும் அவன் நண்பனும். திடீர் என்று அந்த சம்பவம் நடந்தது.

உறங்கி கொண்டு இருந்த ஒரு நண்பன் ஹிம்சையாய் உருண்டு கொண்டு இருந்தான். பற்களை கடித்து கொண்டு , ஒரு முச்சு திணறுவது போலே. என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கால்களை , கைகளை லேசாய் அசைத்து கொண்டு ஒரு தப்பிக்கும் முயற்சியில். ஹீனமாயி ஒரு கூக்குரல் வேறு. தொண்டை அழுத்தி வார்த்தைகள் வராத ஒரு பாவனை. உமிழ் நீர் லேசாய் கன்னத்தில் வழிந்தோடியது.

அவனே சற்று நேரத்தில் எழுந்தான். பரக்க பரக்க முழித்தான்.
"யாரோ என் மேலே உக்கார்ந்துகிட்டு என் கழுத்தை புடிச்சு நெரிச்சாங்க , கத்த முயற்சி பண்ணேன் முடியலே.
சக நண்பன் சொன்னான் " ஆமாடா எனக்கும் நேத்து இது மாதிரி இருந்தது . இந்த வீட்டுலே பேய் இருக்கு. "

பார்த்தும் கேட்டதும் நினைவில் பதிந்து ஒரு செய்தியானது .

நாட்கள் பல கடந்த போது ஒரு பத்திரிகையின் வாயிலாய் ஒரு செய்தி வாசித்தேன். கடினமான உடல் உழைப்பின் இறுதியில் உறங்கும் நேரத்தில், ஏதோ ஒரு காரணத்தால் மனம் முழித்துக்கொள்ளும் ஒரு சந்தர்பத்தில், உடல் சோர்வினால் ஒத்துழைப்பது இல்லை. மனம் மறுபடி மறுபடி வறபுருத்தினாலும் உடல் சொல் பேச்சு கேட்காமல் ஒழுங்கீனம் செய்தால், இது போன்று தோன்றும்.

இந்த செய்தி கேட்ட போது புத்தி கடந்த காலத்தை நினைவு படுத்தி தெளிந்தது. பயம் விலகியது.

ஒரு செயலை நினைவில் பதிக்க ஒரு விளக்கம் தேவை படுகிறது.
அது அறிவியலோ மருத்துவமா, மனோ தத்துவமா, வேதாந்தமா, சித்தாந்தமா, என்பது உங்கள் கைகளிலே

சந்தர்பவாதமாய் மேற் கூறினாலும் உண்மையின் ஆழம் அதிகமோ ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக