பக்கங்கள்

எதிர்… எதிரி…

ஒரு எளிமையான விடயத்தை தொட விரும்புகிறேன்… உங்களுக்கு உபயோகமாக இருந்ததா.. என விவாதிக்க தொடர்பில் இருங்கள்…

சரி……….ஒரு கேள்வி….

இந்த உலகில் … எல்லோருக்கும் ஒரே கருத்து எதிலாவது உள்ளதா??????

நம் விருப்பு வெருப்புக்களை சொல்கிறேன்……

ம்… அத்தனை மனிதருக்கும் பிடித்த… ஒரு உணவு இருக்கிறதா.. ஒரு செயல் இருக்கிறதா… ஒரு மனிதர் இருக்கிறாரா…. ஒரு இடம் இருக்கிறதா…

ம்… இல்லை…..

அப்படியானால்…

எதிர்… என்பதை தவிர்க்க முடியாது…. அது இயற்கை… அவருக்கு இட்லி… இவருக்கு தோசை.. அதே மாவு… அதே சட்னி.. அவிப்பதும், சுடுவதும் என வேறுபாடு மட்டுமே… ஆனாலும்… ஒருவருக்கு பிடிப்பது இட்லி, 

இன்னொருவருக்கு தோசை…. அது மட்டுமா… இட்லிக்கு சட்னி இல்லை சாம்பார்… இப்படி தொடங்கி, எதிர் என்பது எங்கும் இருக்கிறது…

அதாவது எதிர்…. நம் விருப்பத்தில், நம் தீர்மானத்தில், நம் சிந்தனையில்… இப்படி எங்கும் எதிலும் இருக்கும்….

எதிர் என்பது எங்குமிருக்கும்…… வீட்டில், வெளியில் அலுவலகத்தில்… கணவன் மனைவிக்கிடையில், உறவுக்களிடையில், அண்ணன் தம்பி, நட்பு.. இப்படி எல்லா இடத்திலும்…  நிறைந்து இருக்கும்.. இதனால் பாதகமில்லை… ஆனால், எதிர்.. எதிரி என ஆகும் போது விவகாரம் ஆகி விடுகிறது..

மிக நுணுக்கமான விஷயம் இது.  எதிர் ஒக்கே.. எதிரி தான் டேஞ்சர் எனும் போது… எது எதிர்……………………ர்ரிரியை ஆக்குகிறது என தெரிந்து கொள்வோமா….

அப்படி ஒரு விவாகாரமான ஒரு விஷத்தை.. அல்லது விஷயத்தை என்ன என தெரிந்து கொண்டால் நல்லதல்லவா… ,ம்… அந்த ஒரு சிறு துரும்பை புரிந்து கொண்டு, அதை தங்களுக்கு தோதான விஷயத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ம்… இந்த எதிர்……………………ர்ரிரியை எடுத்தெறிந்து தங்கள் வாழ்வை பூக்களமாக்குங்கள் எனும் வேண்டுகோள் தான் இப்பதிவு…
எதிர் எப்போது எதிரி ஆகும்.. ஒரு மெல்லிய கோடு.. அதை கடக்கும் போது எதிர் எதிரியாகி விடும்…

இக்கேள்விக்கு விடை காண… இது என்னவாக இருக்கும்… என நான் முயன்று கொண்டிருந்த போது… அவரை பார்த்தேன்… யார்…

அவர்தாங்க… நம்ம… எதுத்தாத்து ஏகாம்பரத்தை பார்த்தேன்.. அவரிடம் கேட்டேன்..

சார்.. எதிர் எப்போ எதிரி ஆகும் என.. அவர்… ஈ… என … பல் அத்தனையையும் காட்டினார்… எனக்கு பட்டென பொறி தட்டியது… நான் குஷியானேன்… உடனே.. கைய கொடுங்க சார்… கரெக்ட்டான ஆன்சர் சொன்னீங்க என்றேன்.. அவர் நே… என பார்த்தார்…

பகைமை எனும் உணர்வு வந்தமரும் போது.. பகைமை பல்லை காட்டும் போது.. இந்த எதிர் என்பது எதிரியாகி விடுகிறது…

இதை எளிமையாகவும் தெளிவாகவும் இனி மேலெடுத்து செல்ல, இரு ஆளுமைகளை பார்ப்போம்.

நாம் அனைவரும் அறிந்த இரு ஆளுமைகள்… காந்தி.. நேரு….

இவர்கள் இருவருமே.. அரசியல் அல்லது பொது வாழ்க்கை சம்பந்தப்பட்டவர்கள். வரலாற்று ஆளுமைகளில், இன்றும் இந்தியர்களால் மதிக்கப்படும் இரு ஆளுமைகள்…. இருவரும் இணைந்து பணியாற்றினர். இருவருக்கும் ஒரே தளம்… இலக்கு… இல்லையா..

தேச நலன்.. நாட்டுப் பற்று.. மனித நலம்.. மேம்பாடு இப்படி…

ஆனா… காந்தி………….. நேரு…………………. இரண்டும் இரு துருவங்கள்… ஒரு சில பரிமாணத்தில் இல்லையா…………….

சட்டையை கழற்றி போட்டுட்டு… இடுப்புல ஒரு கதர்… போதும் என்பவர் ஒருவர்… நீண்ட வெண்மையான ஷெர்வானி போட்டு, அன்றலர்ந்த ரோசாவை பட்டன் ஹோலில் செருகு என்பார் மற்றொருவர்… … 

அவருக்கு அது.. இவருக்கு இது…
சரி உங்களுக்கு எது…

உலகில் ஒரே அச்சா… எல்லோருக்கும்.. இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

எல்லோரும் காந்தியாக முடியுமா.. இல்லை எல்லோரும் நேருவாக வேண்டுமா.. கிடையாது, அவசியம் இல்லை… உலகம் என்பது, காந்தியையும் கொண்டிருக்கும், நேருவையும் கொண்டிருக்கும்… எனவே கவலையே இல்லை…

சரி, காந்தியையும், நேருவையும் அவர்கள் உடைகளை கொண்டா எடைபோடுகிறோம்… ம்… சிந்தனையை கொண்டா எடை போடுகிறோம்… காந்தியிடம் எதிர்பார்க்கும் அதே குணங்களையா நேருவில் தேடுகிறீர்கள்… 

இல்லையே… மாமா மாமா தான்.. தாத்தா தாத்தா தான்…

இதைத்தான் எதிர் என்பது இயல்பு என சொல்லுகிறேன்…

சரி, மாமா, என்றைக்காவது, தாத்தாவுக்கு ஷெர்வானி ப்ரசண்ட் பண்ணியிருப்பாரா… அல்லது காந்தி பக்கத்துல போய் உக்கார்ந்துகிட்டு, ஹலோ…இதை கேளுங்களேன்… அரை ட்ரவுசர் போட்டுகிட்டு, ஸ்விம்பிங் பூல்ல.. நீந்தி குளிச்சுட்டு, நச்சுன்னு ஒரு கப்புல கல்புல ஒயின் குடிச்சுட்டு… ஜம்முன்னு ஃப்பே…. சாப்பிட்டு விட்டு, அந்த குட்டை பாவாடை போட்டிருப்பாளே… ஜா…… பேசிக்கிட்டிருந்தா.. ஆஹா.. ஆஹா…அஹ்ஹா.. உலகம் என்ன சொர்க்கம் என பேசியிருப்பாரா…

பேசியிருந்தாலும்… உடனே.. காந்தி… சரி.. நாளைக்கு காலையில ஏந்திரிச்சு.. பல்விளக்கிட்டு உன் வீட்டுக்கு வந்துர்றேன்.. நீ சொன்னத செஞ்சுரலாம் என செய்திருப்பாரா….

அல்லது, காந்தி போய், ஆட்டிக்குட்டி, ஆட்டுக்குட்டி இல்ல அது புழுக்க போட்டுதே… அதை எடுத்திட்டு போய், அவரைக்காய் செடியில போட்டேனே… அது என்ன வித்தியாசம் வந்துச்சு தெரியுமா.. அப்பூறம்… ராட்டு நூக்கும் போது, 28 வது நிமிசத்தில… மனம் ஒரு தாள லயத்துல இயங்க தொடங்குச்சு… அப்படியே உடம்புன்னு இல்லாம.. பிரி… பிரியா… நூல் போகுதுப்பா என சிலாகித்திருப்பாரா…. அல்லது… நேத்து.. நைட்டு.. உடல் ஆராய்ச்சியில…. உடம்புல… கம்பளி பூச்சு ஊர்ற மாதிரி விரல் வைச்சு தேய்க்க சொன்னப்போ… ஒண்ணுமே ஆகலப்பா… அப்படியே… கட்டையா உடம்பு கிடந்துச்சு….

என காந்தி பேசியிருப்பாரா…..

இருந்திருக்காது… நிச்சயம் இருந்திருக்காது…

மறுபடியும் சொல்கிறேன்…

காந்தி காந்தி தான்… நேரு நேரு தான்..

இதில் சரி எனவோ.. தவறெனவோ எதுவும் இல்லை… எல்லாரும் காந்தி மாதிரி ஆகுங்க என்றால் அது தவறு.. அல்லது எல்லாரும் நேரு மாதிரி ஆகுங்க என சொல்வதும் தவறு…

எதிர் எதிர் மன விருப்பம் கொண்டிருந்தாலும்… நட்பில் இணக்கமாக இருந்தார்கள்… இருவரும் அருகில் உட்கார்ந்து கொண்டார்கள்… இந்தியா பற்றி கவலைப் பட்டார்கள்.. என்ன செய்வது என யோசித்தார்கள்… விவாதித்தார்கள்.. தட்ஸ் ஆல்….

நண்பர்களே.. இது தான் சூட்சமம்..

உங்களுக்கு எது சரியோ.. அது சரியானதே…

அடுத்தவருக்கு எது சரியோ… அது அவருக்கு சரியானதே…

ஷெர்வானியிலும் தவறில்லை.. சட்டை போடாத அரை நிர்வாணத்திலும் தவறில்லை…  நேரு போய்.. நேருக்கு நேராய் நின்று… காந்தியை பார்த்து… 

ம்.. இங்க பாரு… என ஷெர்வானியை கையில் திணித்து… கடலை உருண்டையை வாங்கி கீழே போடாத வரை தவறே இல்லை… அல்லது காந்தி போய், ஷெர்வானியை கிழித்து… சட்டை போடாம இருந்து பார், எப்படி சுகமாக இருக்குது என சொல்லும் வரை பிரச்சனையில்லை..

தான் செய்வது சரி…………… என நினைக்க வேண்டியது அவசியம்… ஆனால் தான் நினைப்பது மட்டுமே சரி … அடுத்தவனுக்கு ஒண்ணும் தெரியாது என நினைக்கும் போது… 

நான்… நான் தான் கரெக்ட்டு.. 

நீ வேஸ்ட் என மட்டம் தட்ட முயலும் போது தான்…. பகைமை மனதில் குடியேறுகிறது… 

நாம் நாமாயிருக்க… அடுத்தவரை அவர் நிலையில் மதிக்க… அறிந்திருக்கும் வரை குழப்பமில்லை…

எதிர் இருக்கும்……….. எதிரி இருக்காது…………

1 கருத்து:

  1. //தான் நினைப்பது மட்டுமே சரி … அடுத்தவனுக்கு ஒண்ணும் தெரியாது என நினைக்கும் போது…

    நான்… நான் தான் கரெக்ட்டு..

    நீ வேஸ்ட் என மட்டம் தட்ட முயலும் போது தான்…. பகைமை மனதில் குடியேறுகிறது…

    நாம் நாமாயிருக்க… அடுத்தவரை அவர் நிலையில் மதிக்க… அறிந்திருக்கும் வரை குழப்பமில்லை…

    எதிர் இருக்கும்……….. எதிரி இருக்காது…………//

    Correct ji.... If each one of thinks this way, there is ONLY peace in this world

    பதிலளிநீக்கு