பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரப்பெட்டி 11 ஆகஸ்ட் 2009

படுக்காளி அறையில் இருந்த புகைப் படத்தில் இருந்து பேச ஆரம்பித்தார்.

ஆச்சி: படுக்காளி எப்ப முகமூடி ஆன. வாய மூடி, மூக்க மூடி ஒரு மார்க்கமா இருக்க.
படுக்காளி: உங்களுக்கென்ன ஆச்சி, போட்டாவா இருக்கீங்க பிரச்சன இல்ல. ஊரெல்லாம் பயந்து போய் கிடக்கு.
ஆச்சி: ஏண்டா
படுக்காளி: பன்னி காய்ச்சல். முதல்ல பன்னிக்கு வந்துச்சு, இப்போ 6 உசிர வாங்கிருச்சி. வயசு வித்தியாசம் இல்லாம, பச்ச பிள்ள, வைத்தியம் பாத்த டாக்டருன்னு வகை தொகை இல்லாம கொன்னுக்கிட்டு இருக்கு. எப்போ எப்படி முடியும்னு தெரியல‌.
ஆச்சி: எங்க காலத்தில கூட ஃப்ளேக் வந்துச்சு. இந்த கொள்ள நோய்க்கு ஒரு சாவு இல்லடா.
உட்டுல உள்ளவ்ங்கள சாவ கொடுத்துட்டு, ரொம்ப கஷ்டம்டா... கவனமா இருக்கணும். வீண் வதந்தி, பிள்ளைதாச்சி வாந்தி போல. இதெல்லாம் அடங்குற வர நாமெல்லாம் அடங்கணும்டா.
ஆச்சி: உள்ள வந்தப்போ ஒரு பாட்டு பாடுனியே... 'போடி போடான்னு' ரொம்ப மரியாதயா இருக்கேடா”

படுக்காளி: அதெ ஏன் கேக்குறீங்க, இப்ப உள்ள சினிமாக் காரன் எல்லாம், பொறுக்கி, மொள்ளமாரின்னு டைட்டில் தேடி அலையுறாங்க. தமிழாவும் இருக்கணும், மரியாத இல்லாம் இருக்கணும்னு தேடுறாங்க‌

படுக்காளி: கந்த சாமி வருது ஆச்சி.
ஆச்சி: முருகன் படமா...
படுக்காளி: பேருதான் நொந்த சாமி, செய்யுறது பூரா முருக்கு சாமி வேலதான். அதுல ஓசியில காசு வாங்காம காங்கிரசுக்கு கொள்கை விளக்கப் பாடல் வருது.

இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க, நான் ஒரு மின்னல் தாங்க, தள்ளி நீங்க போங்க.

பாட்டு கேட்ட பா.ஜா.கா. மனித உடம்புல பிறந்து வளராத ஒரே பாகம் கண்தான். அது மட்டும் தான் இத்தாலி. இந்த தாலி / இந்திய தாலி வந்த பின்னாடி இந்தி மாதிரி இடுப்பு சேல மாதிரி பூரா இந்தியாதேன். அப்படின்னு மேடத்த பத்தி எழுதியிருக்காங்கங்குதாம். அத்வானி கூட அவரோட அரசியல் ஆலோசகர்கிட்ட அடுத்த வாட்டி இமயமல போற வழிக்கு இதை சொல்லிட்டு போங்கன்னு சொல்லப் போக, எந்திரன் எசகு பிசகா மோட்டு வளைய பார்க்கிராம்.

நம்ம தாணு தம்பி படம் தான, ஒரு வாரம் தள்ளிப் போனதுல கர் புர்னு இருக்காராம்.

ஆனாலும் ஆச்சி, டாப் டூப்னு ஒரு பாட்டு, மியா மியான்னு ஒன்னு, வாடா காப்பி குடிப்போம்னு காதலன கூப்பிடுற பாட்டு எல்லாம் நச்சுன்னு இருக்கு. பாவம் சந்திர பாபு. 'பம்பரக் கண்ணாலே' ன்னு பாடச் சொல்லிட்டு, டிஜிட்டல் தொழில் நுட்பத்துல் கொதவளய பிடிச்சு, பாவம் பம்பர... பம்பர... ன்னு பரிதாவமா பாடுராறு. இந்த பாடல் கொலைக்கெல்லாம் ஈ.பி.கோ இல்லையோ. சொர்கத்துல அங்கனக்குள்ள சந்திர பாபு பார்த்தா சொல்லுங்க இத பத்தி. இல்லேன்னா சட்டம் போட்ட அம்பேத்கர் கூட ஒ.கே.


படுக்காளி: ஆடி படம் பிடிச்ச பாம்பு, ஒரு வாரத்தில பொட்டிக்குள்ள வந்துருச்சு.

ஆச்சி: யாரப் பத்தி சொல்லுற
படுக்காளி: நம்ம விஜயகாந்த் இல்ல, அவர் நொடிச்சுப் போன தயாரிப்பாளர கூப்பிட்டு, நான் நடிக்கிறேன் என்ன வச்சு படம் எடுன்னு சொல்ல, 'எங்கள் ஆசான்' ன்னு படத்துக்கு பேரு. பாவம் ஆச்சி ஒரு வாரத்தில பொட்டிக்குள்ள வந்துருச்சு.

ஆச்சி: ஆயிரம் சொல்லு, மிஸ்சியம்மா மாதிரி வருமா. இல்லக்காட்டி அந்த ஜகன் மோகினி. இப்படி படம் எடுக்க சொல்லு.

ஆச்சி: வில வாசி எப்படிரா....

படுக்காளி: பருப்பு வில பட்டம் மாதிரி பறக்குது ஆச்சி.

ஆச்சி: எது நீ விடுற கோணப் பட்டம் தான, சுருக்க சரியா போட்டு, வால்ல தும்ப கட்டு எல்லாம் சரியாகும்.

படுக்காளி: புரியல ஆச்சி.

ஆச்சி: அடே, நீ சொன்ன பட்டம் பாஷைதான். சுருக்கு உன் பொண்டாட்டி, தும்பு வரவு செலவு.

படுக்காளி: ஆச்சி நீங்க கில்லாடி, பட்டத்தில பட்டம் கொடுக்கலாம் போல.


வெட்கத்தில் சிரித்து உறைந்தார் ஆச்சி. உரை யாடல் நாளை தொடரும்

5 கருத்துகள்:

 1. ஆச்சி, படுக்காளியின் அஞ்சறைப்பெட்டி அராஜகம் அட்டகாசம்...

  ஸ்வைன் ஃப்ளூ...
  இத்தாலி.. இத் தாலி.. இந்திய தாலி..
  பா.ஜ.க...
  காங்கிரஸ்..
  நொந்த மொந்த, வெந்த‌சாமி...
  சந்திரபாபு....
  கேப்டனின் ஒரே ஒரு வாரம் மட்டுமே ஓடிய‌ மெகா ஹிட் படமான "எங்கள் ஆசான்" பற்றிய ஒரு அலசல்...
  ஜகன்மோகினி.. இதுதான் இப்போ ரீமேக் ஆகுதே (ஆச்சி கிட்ட சொல்லி இருக்கலாமே படுக்காளி..)..
  விஷத்த விட வேகமா ஏறற பருப்பு விலை.....அப்படியே இத சமாளிக்க ஒரு சூப்பர் ஐடியா (சுருக்கு உன் பொண்டாட்டி, தும்பு வரவு செலவு)....

  பின்னிடுச்சு ப‌டுக்காளி.....

  வ‌ரும் வார‌ங்க‌ளில் தொட‌ருங்க‌ள்.....

  பதிலளிநீக்கு
 2. எம்புட்டு வெசயத்த இம்புட்டு வெவரமா சொல்லி போட்ட‌ புள்ள, நம்ம "ஒலக்க நாயகன்", நட்சத்திர டி.வி.கிட்ட துட்டு வாங்கிட்டு, "தல" டி.வி.கிட்ட அவரோட "ஒலக்க நாயகன் 50" நிகழ்ச்சிய குடுத்துட்டாராமே.....அத்தயும் பத்தி சொல்லி இருக்கலாமேடா ராசா...படுக்காளி.....

  பொறவு வெரசா வந்து சொல்லிபோடுடா ராசா....என்னா?? வர்ட்டா....இது கணக்கு..

  பதிலளிநீக்கு
 3. ஆச்சி படுக்காளி உரையாடல் சூப்பர். நல்ல கற்பனை. மசாலாவிற்கு குறையே இல்லாத அசத்தல் அஞ்சறைப்பெட்டி. நாளைய உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. கோபி, அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் ஊக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும்.

  பதிலளிநீக்கு