பக்கங்கள்

இன்றைய நாள் உணர்வு என்று வண்ணம் பெறும்

'கடிகாரம் 12 மணி அடிக்கும் போது, இந்த தேசமே உறங்கிக் கொண்டு இருக்கும்.

விழிக்கும் போது அடிமை விலங்கு உடையும் புது வாழ்வு மலரும்.

நீண்ட காலமாய் அடக்கப்பட்ட நம் தேசத்தின் ஆன்மா உரிமை பெறும் சரித்திரத்தின் அரிய தருணம்.

இன்று நம் எல்லா துரதிருஷ்டம் முடித்து, புனர் ஜென்மம்'

நேரு 62 வருடங்களுக்கு முன்னால் முழங்கியது.

போர் முடித்து, வெற்றி நடை போட்டனர் சுதந்திர போர் வீரர்கள். உடலில் குறைந்து மனதில் விழுப் புண் அதிகம். அஹிம்சைக்கு நன்றி.

என்னவோ போர் தளபதி மாத்திரம் ஸ்கூட் விட்டு ராட்டை நூற்றார்.

சரி இது நேற்று.

இன்று. கொடி ஏத்தி முட்டாய் கொடுத்தால் முடிந்து போயிற்றா. விடுமுறை எடுத்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்தால் ஆயிற்றா.

அந்த நாள் உணர்வு தர இதோ புகைப்படம். நம் இன்றைய நாள் உணர்வு என்று வண்ணம் பெறும்.

சுதந்திர தின வீர வணக்கங்கள்

2 கருத்துகள்:

 1. விரைவில் வண்ணம் பெறும் என்று நம்புவோம்....முன்புபோல் நிறைய குருதி சிந்தாமல்.....

  ப‌டுக்காளிக்கும், ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் கனிந்த‌ சுதந்திர‌ நாள் வாழ்த்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்,

  அடிமையாக வாழ ! ஒரு சுதந்திரம் நமக்கு பெற்று தந்த தியாகிகளை வணங்கி, இந்த நாளில் அவர்களுக்கு ஒரு இலவச வேட்டி, துணிமணிகளை நமது இன்றைய கழக ராஜா - ராணி கண்மணிகள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை வாழ்த்துவோம்.

  சுதந்திர அடிமை

  செல்லத்துரை.

  பதிலளிநீக்கு