பக்கங்கள்

மரணம் மலர்ந்தே தீரும்

மரணம் மலர்ந்தே தீரும்.

மண்ணில் பூத்த மனித மலர்கள் மணம் வீசி, மகரந்தம் உதிர்த்து விடை பெற்றே ஆக வேண்டும்.
வேறு மார்க்கம் இல்லை.

கடந்த சில மணிகளாய் அங்கலாய்த்த தேடல் பணி, விபத்து விடை பெற்றார் என முற்றுப் புள்ளியாகி விட்டது.
ந‌ம் இத‌ய‌ம் க‌ன‌க்கிற‌து.
ஆந்திரா தேசம் தனது முதல்வரை தொலைத்து விட்டு, கண்ணீரில் கரைகிறது.

ஏழைகளின் பங்காளன் என விவசாய மக்கள் கூறிய ஒய்.எஸ்.ஆர்., எத்தனை சினிமா கவர்ச்சி வந்தாலும் வெற்றி ஈட்டுவேன் என்ற காங்கிரஸ் கட்சியின் வெற்றி வீரர், வியாபாரம் சீர் பெற உதவிய குடும்பத் தலைவன் என பன் முகம் கொண்ட பர்சனாலிட்டி. இன்று வாழ்வு முடித்து ஒய்வு எடுக்கிறார்.

எதிர்பாராத‌ நேர‌த்தில் வ‌ருப‌வ‌ன் கால‌ன். எப்போதும் வ‌ர‌லாம், எத‌ற்கும் வ‌ர‌லாம். ம‌ல‌ராய் ம‌ண‌ம் ப‌ர‌ப்பி ந‌ம் இருப்பையும் சொல்லி விட்டு, ந‌ம் பெய‌ர் சொல்லி ச‌ந்த‌திக‌ள் விட்டு செல்லும் போது ந‌ம் வாழ்வு அர்த்த‌திற்கு த‌குதி பெறுகிற‌து.

அவ‌ர‌து ஆன்மா சாந்தி பெற‌ட்டும். அவ‌ரை இழ‌ந்து வாடும் குடும்ப‌ம், க‌ட்சி, அமைப்புக்க‌ள், ச‌ராச‌ரி குடிம‌க‌ன் எல்லாம் துக்க‌ம் குறைய‌ட்டும்.

இறைவா இற‌க்கும் முன் தெரிவேனா, இதெல்லாம் என்ன வென்று?
எத‌ற்கு என்று?

2 கருத்துகள்:

  1. A great loss. We have lost the only Christian Chief Minister of the south. We join you in paying Homage to this great soul.

    பதிலளிநீக்கு
  2. மரணத்திற்கு பின்னும் மதம் தேவையா ஜோ நண்பா... எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே அவன் உண்மையான மனித மனமே ! ! மரணத்தையும் தாண்டி இந்த பூமியில் வாழுமே...

    செல்லத்துரை...

    பதிலளிநீக்கு