பக்கங்கள்

சிற்றுலா - பகுதி 1

வார இறுதியில் குடும்பத்தோடு ஒரு சிற்றுலா.
ஊர் சுற்றுலா!!!.

அல் அய்ன் மிருகக்காட்சி சாலை வரை ஒரு நடை போய் விட்டு வந்தோம். சின்ன சூ தான். நம் வண்டலூருக்கு பஸ் விட்டு இறங்கி மிருகக்காட்சி சாலை டிக்கெட் வாங்க செல்வோமே அத்தனை பரப்பில் கொஞ்சம் அகலத்தில் அவ்வளவு தான். என்ன!!! சுத்தம் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும். போய் வந்ததில் கால் வலி ஒரு உபரி பரிசு (இதுக்கேவா...). சூடு குறையும் முன்னே ஒரு பதிவு சுட சுட எழுதலாம் என அமர்ந்து விட்டேன்.

எங்காவது வெளியில் போகலாம் என்றதும் சினிமா, அம்முஸ்மெண்ட் பார்க்,கடற்கரை என நீளும் பட்டியலில் ஏனோ இறுதி இடம் தான், பாவம் நம் மிருக காட்சி சாலைக்கு.
நுழைவுக் கட்டணம் ரொம்ப கம்மி. எங்கேயும் எப்போதுமே குறைவு தான். ஊரில் கூட இதே நிலவரம் தான்.

சினிமாவின் கட்டணத்தில் 50%, நாடகம், இன்ன பிற நிகழ்ச்சிகளின் 25%, கேளிக்கை பார்க்குகளின் 10%. பெரும்பாலும் அரசே நடத்துவதால் இந்த விலை குறைவா என்பது தெரியவில்லை. என்றாலும் குடும்பத்தலைவருக்கு குஷி. பின்னே முட்டை போடும் கோழிக்கு தானே பிட்டி வலி தெரியும். கட்டணத்தை உயர்த்தி, பார்வையாளர் அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்கினால், நல்லா இருக்குமோ.

துபாயிலிருந்து 120 கி மி தூரத்தில் உள்ள அல் அய்னுக்கு 120 கி மி வேகத்தில் சென்றால் ஒன்று ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். இதற்கு மேல் வேகத்தில் போக முடியாதா ரோடெல்லாம் நல்லா தான இருக்கு என்ற நினைப்புக்கு, தாராளமாய் அபராதம் கட்ட திராம் மரத்தில் காய்த்து இருந்தால் ஒ. கே. சாலை யோரத்தில் ராடார் உதவியுடன் காமிரா தயாராய் இருக்கும். வேகம் கூடி கார் வந்தால் ஒரு போட்டாவும் எடுத்து அபராதம் என நம் அக்கவுண்டில் ஏற்றி விடும். பியுஜைரா போகலாம் என்ற திட்டம் முதலில் வந்தது. போகும் வழி அன்றி போய் சேர்ந்ததும் பார்க்க பெரிதாய் ஒன்றும் இல்லையே என்ற நினைப்பே அல் - அய்ன் என முடிவானது.

மலை சுழ்ந்த வளைந்த பாதைகள் அடங்கிய டிப்பா வழி செல்லும் ஃபுஜைரா கூட ஒன்ற்ரை மணி நேரத்தில் செல்லும் தூரம் தான்.

போகும் வழியில் மொட்டையாய் பாலைவனங்களை பார்க்கலாம். சில நேரம் ஒட்டகமும் பார்க்கலாம். சாதுவாய் இருக்கிறதே அதனால் தொல்லை இல்லை என்றே கருதலாம். வாஸ்தவம் மிகுந்த சாது வான பிராணி. வாயில் விரல் விட்டா கடிக்க கூட தெரியாது. இருந்தாலும், சாலையில் அதை மோதி அது உங்கள் வண்டியில் சாய்ந்தால் நீங்கள் சட்டினிதான். பின்னே 250 கிலோன்னா சும்மாவா.

எதோ பூர்வ ஜன்ம புண்ணியத்தில் புழைத்தாலும், ஒரு ஒட்டகத்தின் இழப்புக்கு ஈடுகட்டும் தொகையில் நம் ஊர் ஒன்று பிழைத்து விடும்.

அல் - அய்ன் : ஏழு எமிரடேகளில் இதுவும் ஒன்று. பசுமை ஊர் என்றும், கோடை வாசஸ்தலம் என்றும் பெருமையாய் சொல்லும் இந்த ஊர் மூன்று நான்கு டீகிரிகள் மற்ற எமிரடேகளை விட குறைவே. பார்ப்பதற்கும் பச்சை நிறமே.

இரண்டு அதிசயங்கள் உண்டு. ஒன்று நிலத்தடி சுடு நீர். இயற்கையாகவே கொதி நீர் இருக்கும் கிணறு. வட நாட்டில் நிறைய இடங்களில் உண்டு. தமிழ் நாட்டில் இருப்பதாய் நியாபகம் இல்லை. மற்ற அதிசயம் வில்லங்கமானது. ஒரு மொட்டை மலையை எடுத்து அதில் பூராவும் தண்ணீர் குழாய் பதித்து, செடி நட்டு, பச்சை மலை ஆக்கி இருக்கிறார்கள் இந்த ஊர் பிரகஸ்பதிகள். இயற்கையாய் நிமிர்ந்து நிற்கும் பச்சை மலைகளை செயற்கையாய் உருவாக்கி நம் கண்ணுக்கு விருந்தாக்கி இருக்கிறார்கள்.

அல் அய்ன் வந்தாச்சு... உள்ள போவோமே...

தொடரும்....

4 கருத்துகள்:

 1. We wish you Happy Holidays. Enjoy ! Thanks for sharing with us. - Joe Basker

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  பெற்ற இன்பம் எழுத்தில் பங்கு வைக்கும் போது தங்களுக்கும் சந்தோசம் தந்தால் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, இந்து திருமணம். நானும் பிறந்தது மதுரையில் தான். உங்கள் வலைப் பதிவு பார்த்தேன். மிக விரிவான தகவல்கள் அடங்கியுள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு