பக்கங்கள்

சிற்றுலா – நிறைவுப் பகுதி

மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்,

நான் பெண்ணைக் காணேன்,

ராஜரிஷி படத்தில் வரும் அருமையான பாடல் வரி. நல்ல வேளை மிருக காட்சி சாலை போனதை முதலில் சொல்லி விட்டோம், இல்லை என்றால் லவுசு மூடுல இருக்கேன்னு தப்பால நினைச்சிருப்பீங்க. நாங்க நுழைஞ்ச உடன் பார்த்தது முதலில் மான்களை, அவ்வளவு தான்.

சரி ஒரு சிந்தனை. மானை அழகான பெண்ணுக்கும், ஆண் என்றால் - வம்பு தும்புக்கும் செல்லாத அப்புராணிக்கும் அல்லவா கூறுகிறோம். அது ஏன். காரணம் தேடி மனம் இந்த கேள்வியில் சிக்கிக் கொண்டது.

மான் தோற்றத்தில் ஒரு ஆட்டுக் கூட்டம். ஆடு போல பார்ப்பதற்கு, அதே போல் இருக்கும். நாலு காலில் ஒரு வளைந்த வாலில். தொல்லை செய்யாது மேயும், தானாய் வால் ஆட்டி, மேய்ந்ததை அசை போடும். மான் அழகாய் இருக்கும். பெரிய கொம்பு உண்டு, என்றாலும் குத்தாது.

சரி ஒரு பெண்ணை பார்த்து மான் போல் இருக்கிறாய் என்றால் மகிழ்வாள். ஆடு போல் இருக்கிறாய் என்றால் அடிக்க வர மாட்டாளா. அடிக்க வரும் காரணம் இதுவோ. குண்டான ஆடு உண்டு மான் இல்லை. எல்லாம் சிக்கென்று, அழகிய வடிவம் நிறம் கொண்டு நிச்சயமாய் இருக்கிறது. சரி, அது ஏன். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். இந்த பழமொழி இறைவனுக்கும் உண்டோ. ஆடு குண்டாக இருக்கிறது. திங்கத் தெரியாம தின்னுட்டு, தொப்பை எல்லாம் வைக்குது. விடை சொல்லாமல் கேள்வியோடு இதை விடுவது நல்லது என தோணுது.

மொத்தமாய் நான்கு மணி நேர நடை. அது ஏனோ தெரியவில்லை, சூவில் ஷு தேய நடக்க வேண்டி இருக்கிறது. ஒரு சோம்பேறி சிந்தனை, நண்பரிடம் ஆலோசனையாய் சொன்னேன். ஒரு வ‌ட்ட‌ வ‌டிவத்தில் இதை நிர்மாணிக்க‌ வேண்டும், ந‌ட்ட‌ ந‌டுவில் உண‌வ‌க‌ம், உட்கார‌ வ‌ச‌தி எல்லாம் இருக்க‌ வேண்டும், அடுத்த‌ சுற்றில் மிருக‌ங்க‌ள் இருக்க‌ வேண்டும். ந‌ம் ந‌டை ப‌ய‌ண‌ம் 10 நிமிட‌த்துக்கு குறைவாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌தும், ஏற‌ இற‌ங்க‌ பார்த்து விட்டு, உட‌ற் ப‌யிற்சி என்று தான் ந‌ட‌க்க‌ வில்லை, இப்ப‌டியாவ‌து ந‌ட‌வேன்.


நியாய‌ம். ச‌ரியான‌ அறிவுரை. ம‌ன‌தை கேட்டேன், உட‌லையும் கேட்டேன், பெரிய‌ துன்ப‌ம் இல்லை, நடக்கலாமே என்றது.

எது நடந்த‌தோ அது ந‌ன்றாக‌வே இருந்தது
எது ந‌ட‌க்கிற‌தோ அது ந‌ன்றாக‌வே இருக்கிற‌து
எது ந‌ட‌க்குமோ அது ந‌ன்றாக‌வே இருக்கும்

ஆஹா! நடை பயிற்சி பற்றி இந்த உபதேசம் கேட்டிருக்கீங்களா!

டார்வின் தியரி தப்பு என சொல்லக் கேட்டாலும், சரியோ என நினைக்க வைக்கும் அளவு நல்ல கூட்டம் குரங்கு கூண்டின் முன். செக்யூரிட்டியும் அங்குதான். கூண்டின் உள்ளேயும் வெளியேயும் நிறைய கருத்துப் பரிமாற்றங்களும், தொடர்புகளும். நமக்கும் வெகு சுவாரசியமாய் உள்ளது.

இந்த ஊர் சீதோசனத்தில் சொல்ல வேண்டிய முக்கிய விசயம் ஒன்று உள்ளது. ஈரப் பதம். நம் ஊரில் இல்லாத ஒரு தொல்லை இங்கு உண்டு. காற்றில் ஈரப்பதம் கூடியும் குறைந்தும் நம்மை சங்கடப்படுத்தும். குறைவான தருணத்தில் நம் உடம்பில் உள்ள ஈரத்தை உறிஞ்சி விடும். இதனால் வீட்டிற்குள் உட்கார்ந்து இருக்கின்ற போதும், பத்து கி.மி. நடந்தது போல கால் உளையும். உடனே சென்று நாலு கிளாஸ் தண்ணீர் குடித்து விடுவோம்.

பொது இடங்களில் நீர் துவாலைகள் உண்டு. வாட்டர் ஸ்பெரயர்கள் மூலமாய் பனித்துகள் போல் தண்ணீர் தெளிக்கப்படும். இங்கும் அப்படி ஒரு துவாலையின் அருகில் மனிதர் கூட்டம். நாங்களும் போய் சுகமாய் நின்று கோண்டோம். சாரல் போல விழுந்த துளி நின்றதும் மாயமாய் போனது.

நிற்கும் போது, இன்னோரு துணுக்குற்ற‌ ச‌ம்ப‌வ‌ம்.

சாரலில் நனைய விரும்பி ஒரு அரேபிய தம்பதியினர் ஒரு வ‌ய‌தே ஆன குட்டி பாப்பா என எங்கள் அருகே. குழந்தை ரோஜா பூ போல‌ இருந்த‌து. திடிரென்று சின்ன‌ வாய் திறந்து த‌ண்ணீ என்ற‌து. அரேபிய அப்பா பாட்டில் தந்ததும் குடித்தது. ஆடிப் போய் விட்டோம். பின்ன‌ர் க‌வ‌னித்த‌ போது கூட‌ அப்பா அம்மா அர‌பியில் பேசுகிறார்க‌ள். யோசித்து யோசித்து ம‌ண்டை காய்ந்து விட்ட‌து, சற்று நேர‌த்தில் ப‌ணிப் பெண் வ‌ரும் வ‌ரை.
ந‌ம்மைப் போல் நிற‌த்தில் வந்தவள் தமிழச்சியாக இருக்க சாத்தியம் இருந்ததால், த‌மிழ் மொழி ப‌ர‌விய‌ வித‌ம் க‌ண்டு பெறுமை கொண்டோம். எடி ஊர அப்பாக்களும், பங்கா ரப்பாக்களும் உணராத தமிழ் தண்ணீர் தாகம் அரேபிய அப்பாக்கு புரிந்து விட்டதே. அடங்கொம்மா....
........................ முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக