பக்கங்கள்

அருணாவுக்கு சபாஷ் !!!! கோபிக்கு தேங்க்ஸ் !!!!

நண்பர் கோபியின் மின்னஞ்சல்:
நண்பர்களே
ஒரு தொடர் எழுத என்னை அன்புடன் அருணா அழைத்தார்கள்.. நான் எழுதி முடித்து விட்டேன்... அதன் தொடர்ச்சியாக, உங்கள் ஐந்து பேரையும் அழைத்து இருக்கிறேன்... (உங்களை முன்கூட்டியே கேட்காமல் உங்கள் பெயரை சேர்த்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்...). என்ன, முதன் முதலில் அழைக்கிறோம்... நண்பர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பிக்கைதான்...
தயவு செய்து இந்த தொடரில் கலந்து கொண்டு எழுதவும்...
தொட‌ருக்கான‌ விபரங்கள் இங்கே....

.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html

நன்றி...


R.Gopi

பின் குறிப்பு : இதை எழுத உங்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே தேவைப்படும்...

எனது பதில் :

அருணாவுக்கு சபாஷ் !!!! கோபிக்கு தேங்க்ஸ் !!!!

நீங்க சொல்லி தட்ட முடியுமா தலைவா....

சங்கிலித் தொடர்

மின் அஞ்சல் உபயோகிப்பவரா, ஆம் என்றால், இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. உங்கள் கணிணியில் வந்து இது குந்தும்.

உடனே இதை 5/10 பேருக்கு அனுப்பு. அனுப்பினால் வானம் பொத்துக் கொண்டு கரன்ஸி ஊத்தும், இல்லை என்றால் உன் கண் நொள்ளை ஆகும்.

பாவம் சில அப்புராணி ஆத்மாக்கள், இதை நம்பி அல்லது பயந்து சிரமேற் கொண்டு காரியம் ஆற்றும். எம்.எல்,எம். எனும் வர்த்தக டகால்டி கூட இது போல் உண்டு.

அருணா தொடங்கிய க....கா....பா.... அ..... கூட அந்த வடிவம் என்றாலும் சத்தானது, முத்தானது, நல்லது. வாழ்த்துக்கள்.

இதில் சங்கடம் இரண்டு.

ஒன்று : பதில் எழுதுவது. இது கூட ஒ.கே. எழுதிப் புடலாம்.

இரண்டு : ஐந்து பதிவர்களை தெர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து அவர்களையும் எழுத வைப்பது. இது தான் கொஞ்சம் உட்டாலக்கடி போல தோணுது.

முயற்சிக்கிறேன். படுக்காளி

2 கருத்துகள்:

  1. நான் கூட உள்ள வந்து பார்த்தேன்... என்னடா "தல படுக்காளி" அதுக்குள்ள‌ பதில் எழுதிட்டாரோன்னு...

    ஆனா....பதில் எழுதலேன்னு சொல்றதுக்கு ஒரு பதிவு போட்டு கலக்கிட்டீயளே மக்கா....

    உங்க பாசத்த பார்த்து எனக்கு புல்லரிச்சுடுச்சே.....

    பதிலளிநீக்கு