பக்கங்கள்

உறங்காத ராத்திரி - பகுதி 1

உறங்காத ராத்திரி - பகுதி 1

கதை அல்ல. ஆனால் கதை போலே சொல்ல ஆசை உண்டு. என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். ஒ ... இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது . சூழ்நிலையின் தாக்கத்தால் உணர்வுகளின் விளிம்புக்கு தள்ளப் பட்டேன். பயம், கோபம், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சியும் ஒரு சேர பெற்றேன்.

இரவு 9 மணி தொடங்கி, விடிகாலை 5 மணிக்கு நிறைவு பெற்ற கதை
தடாலடி திருபங்களும், இதயம் நொறுக்கும் நிகழ்வுகளும் என ஒரு உறங்காத இரவு
மனித நேயம் மிக்கவர்களையும், அதை மறுத்த மாக்களையும் தரிசித்த ராத்திரி
இறையை சந்தித்தேனோ, என்று இன்று வரை நினைக்க வைத்த நிகழ்வு

ஆரம்பிக்கும் முன் :
(கதை என்றோம் அல்லவா, கதைக்கு ஒரு நாயகன்- பிரபா)
பிரபாவின் நீண்ட நாள் கனவு அந்நிய தேசம் வந்து பணம் சம்பாதிப்பது. பருத்தியே புடவையாய் காய்த்த்து போலே அலுவலக மாறுதல் கிடைத்தது . அதுவும் துபாய். மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பமே.
நாளை துபாய் பயணம். சென்னையில் - காலை 12 மணிக்கு. இப்போது இருப்பது பெங்களூர்.

மணி 2 : முன் தினம்
பரபரப்பான பெங்களூர், மந்தமான வானிலை, மெஜெஸ்டிக் ரயில் நிலையம்.
கண் நிறைய கனவுகளுடன், நெஞ்சம் நிறைந்த மகிச்சியுடன் டிப் டாப்பாய் பிரபா. நின்றது வாடகை கார். ஒ.கே. எட்டு லக்ககேஜு சரியா இருக்கு . சில்லறை கொடுத்தும் கூட, சிரிப்புடன் மறுத்தான் பிரபா. பெருமிதம் நெஞ்சிலும், முகத்திலும். டிரைவர் பூ போலே சிரித்தான். துணைவியார் கூட ஆச்சர்யமாய் பார்த்தார். பத்து பைசாக்கு கசடும் இவனா இன்று பாரி வள்ளல் ஆனான் என்று. திடும் என புறபட்டதால், முன் பதிவும் இல்லை, பயணச் சீட்டு இல்லை. .

ஐந்து மணி நேர பயணம் தான் என்றாலும் குடும்பத்தோடு கை நிறைய சாமான்களுடன், ம்... கஷ்டம்தான்.
சுற்றி இருந்த சாமான்களை பார்த்து பெருமுசோடு சொன்னான். இவ்வளவு தானா, இனி எல்லாம் புதுசுதானோ. வாழ்கையே வினோதமா இருக்கே , என் வீடு, என் படுக்கை என்று நான் நினைத்தது, இனி எனக்கில்லை. தத்துவம் புத்தியில் உரைக்க மெல்லிய முறுவலுடன் ரயில் நிலையம் நோக்கி நகர்ந்தான், அவனை பிரச்சனையில் ஆழ்த்த விதியும் தயாரானது.

தொடரும் ....

2 கருத்துகள்:

  1. பரபரப்பு - இதுதான் படுக்காளியின் இந்த படைப்பு

    விறுவிறுப்பு - இதுதான் இந்த பாமரனின் எதிர்பார்ப்பு

    பதிலளிநீக்கு
  2. Thodar kadhai (alla nijam) nalla thaan iruku. 'Title song' & 'vilambara idaivelai' mattum vendam please...

    பதிலளிநீக்கு