பக்கங்கள்

சுய விமர்சனம்

46 நாட்கள் 20 பதிவுகள் 12 தேசங்கள் (படுக்காளியை படித்தவர்கள்) , தமிழ் மொழி எனும் அற்புதத்தால் படுக்காளி சமைத்த குழுமம் / குடும்பம்.
உருவாக்கியமைக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் உறுதுணையாய் சில உயர்ந்த உள்ளங்கள். கோபி, அபு, ஜோ பாஸ்கர், ஷேர்னி, ராம்கி, இன்னும் பல.
என் பணிவு கலந்த வணக்கங்களும் நெஞ்சம் நிறைத்த நன்றிகளும்
வெண்ணை இல்லாத ரொட்டி, அதி மேதாவித்தனமான அனத்தல்கள், அப்படி ஒன்னும் பிரமாதம் இல்லே என்ற விமர்சனங்கள் துணிவான சில நல்ல இதயங்களிடமிருந்து பெற்றேன்.
காலா நூலா என்ற பதிவு பார்த்து பெயரில்லா எழுதிய ஊடகம் என்னை திகைக்க வைத்து தெளிய வைத்தது.
கலாச்சாரத்தின் கயமைத்தனம் பார்த்து மிரண்டவரே அதிகம். என் சகியே என்னை ஏர இறங்க பார்த்து மௌனத்தை பதிலாய் வைத்தார் .
உன் மனதில், நினைப்பில் இத்தனை அழுக்கா என்று பிரிய நண்பன் சுட்டி காட்டினான். படுக்காளி சருக்கியதை உணர்தேன். நான் நினைத்ததையும், உணரந்ததையும் வார்த்தையில் உணர்த்த
முடியாத இயலாமையை புரிந்தேன். இன்னும் முயற்சிப்பேன்.
எண்ணிகையை மட்டுமே விரிவு செய்து எந்த செயல் திறனும் இல்லாத சில்லறையாய் சில பதிவுகள்.
வார்த்தை கோர்வையும் உள்ளடங்கிய மெல்லிய நகைச்சுவையுமாய் திருப்தியாய் இரண்டு பதிவுகள் பம்பரம் பதவிசு , குப்புசாமி சுப்புசாமி பொன்னுசாமி .
ஆதரவுக்கு நன்றி .
படுக்காளி படிக்கிறேன் , முயற்சிப்பேன் முன்னிலும் தீவிரமாய் ...

2 கருத்துகள்:

 1. அடுத்தவர்களின் விமர்சனத்தையே அரை மனதோடு காதில் போட்டு கொள்பவர்களுக்கு நடுவில் சுய விமர்சனம் செய்து கொள்பவர்கள் வெகு சிலரே.

  தன் முதுகில் இருக்கும் அழுக்கையும் சுத்தம் செய்து முகத்தையும் பொலிவு பெற சைய நினைக்கும் "தலயில் ரப்பர் பொருந்திய படுக்காளியின் பெந்சிலுக்கு" எனது பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 2. படுக்காளியின் சுய விமர்சனம் சூப்பர்

  உங்கள் எழுத்துக்களை படிக்க
  எங்களை போன்றோர் இருக்க,
  நிறைய எழுதுங்கள் படுக்காளி அவர்களே

  அடுத்தவர்களையே எப்போதும் விமர்சிக்கும்
  நபர்கள் மத்தியில் தன்னையே விமர்சிக்கும்
  படுக்காளி ஒரு மிடுக்காளி

  பதிலளிநீக்கு