பக்கங்கள்

காலா நூலா

சாலையில் உருண்டோடியது வாகனம், மெல்லிய கும்மென்று குளிர்சாதன வசதியுடன். டேப் சுழள ஆரம்பித்தது.
'உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா'
எஸ். பி பி ன் வசிகர குரலில், தத்துவம் ததிகினத்தோம்.

ஒரு பாடல் வரியில் மனம் சிக்கி கொண்டது. மேலே நகராது சிந்தனை மக்கர் செய்தது. இரண்டு பழமொழிகள் நினைவில்நெருடியது .

'அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது'
'உன் வாழ்கை உன் கையில்'

என்னடா இவன் பாட்டுக்கு, அச்சு பிச்சுன்னு ஒரு தலைப்பை போட்டுட்டு, கார்ல போறான், பாட்டு கேக்கிரான், பழமொழி சொல்றான்னு படுக்காளி ய நீங்க திட்டுறது கேட்குது. வாங்கண்ணே… ஆனது ஆச்சு. இந்த பதிவு முடியிறதுகுள்ளே சொல்லிட்றேன்.

'கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை,
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்த லாலா '

எதை கொண்டு என் வாழ்வை முடிவு செய்ய.

கால் கொண்டு ஆடும் பிள்ளை ஆனால் , என் வாழ்க்கை என் கையில். அதன் வெற்றியும் தோல்வியும் என்னை சாரும் . அதுவே நூல் கொண்டு ஆடும் பொம்மை ஆனால் , இறைவன் ஆஜர்.
நீ கடமையை செய், கொடுப்பதும் எடுப்பதும் அவனே என்று உங்கள் மனது சொல்லுவது எனக்கு கேட்கிறது.
அதுவும் தான் இதுவும் தான் என்ற டகால்டியே வேண்டாம்.
தெளிவாய் சொலுங்கள் காலா… நூலா …

3 கருத்துகள்:

  1. "கடவுள் வேறு நான் வேறு என்று எண்ணும்பொழுதுதான் "காலா நூலா" என்ற கேள்வி எழும். மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் மிருகங்களுக்கிடயில் உறங்கிக்கொண்டிருக்கும் கடவுளை தேடி உணர்ந்தால் நூலின் இன்னொரு முனை தான் கால் என்றரியலம்!"

    பதிலளிநீக்கு
  2. தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
    -----------------------------------

    பதிலளிநீக்கு