பக்கங்கள்

டிசம்பர் பூ

திரையிலே ஒரு பாயும் புலி, திரை விலகினால் ஒரு தங்க மகன்
வெற்றி என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்த உழைப்பாளி
ஒப்பனையில் தன் முதுமையை மறைக்காத முரட்டுகாளை
பல முறை அழைத்தும் அரசியலுக்கு இன்னும் வராத முத்து

தமிழ் (உலக ) திரை உலகின் முடி சூடா மன்னன்…
ரஜினி
என்ற மந்திர சொல்லின் உரிமையாளர்

திரை துறையில் கால் வைக்கும் போதே
தன் இயற் பெயரை இன்னொரு மாமேதைக்கு
தாரை வார்திருந்த மன்னன்
பல ஆண்டுகள் கடந்தபின் அதை
மறுபடியும் சொந்தம் ஆக்கி கொண்ட மாவீரன்
பிறந்த நாள் காணும் அண்ணாரை படுக்காளி வாழ்த்துகிறேன்

3 கருத்துகள்:

 1. தலைவா நீ வாழி பல்லாண்டு

  12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
  12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
  இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

  நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
  திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

  உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
  சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
  உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

  உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
  நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
  வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

  துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
  இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
  நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

  வாழிய நீ பல்லாண்டு

  பதிலளிநீக்கு
 2. தல கலக்கிடிங்க !

  என்ன வரிகள் அத்தனையும் முத்துபோன்ற வரிகள் !

  எதுகை மோனையுடன் எழுதிய சில வரிகள் மேழும் இதனை சிறப்பிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகது.

  வாழ்த்துக்கள் !
  உங்கள் அபுதாகீர்
  துபாய்

  பதிலளிநீக்கு