பக்கங்கள்

குப்புசாமி சுப்புசாமி பொன்னுசாமி

பள்ளி நாட்களில் படுக்காளியின் பயங்களில் பிரதானமானது மேற்கூரிய இந்த மகானுபாவர்கள்தான். வாத்தியர்கள்!!!
வன்முறையில் நம்பிக்கை உள்ள வர்க்கம்.
தாள் வாரத்தில் இவர்கள் நடந்து வந்தால் அடி வயிற்றில் அமிலம் சுரக்கும். இதயம் தாறு மாறாய் ஓடும்.

நாற்காலி செய்யும் கடையில், கருப்பு புள்ளி இருந்தால் நல்லது என பிரம்பு வாங்கி, ஒரு கை - இரு கை - பிருஷ்டம் - முழங்காலிட்டு பாதங்கள் என தண்டனை பகுக்கப் பட்டு பரிமாரப்பட்டன.

இவர்களில் சுப்பு பொன்னு பிரத்யேகமானவர்கள். தன் கையே தனக்கு உதவி என்ற கோட்பாடுடன் கோதாவில் உள்ளவர்கள்.

தோள் பட்டைக்கு கிழே சதை திரட்சியை தேடி சுப்புசாமி கிள்ளினால் வலி உச்சத்தில் மயக்கம் வரும். கத்தக்கூட முடியாது.
பொன்னு வேறு வகை. கை விரல்களை முஷ்டி மடக்கி நடு விரல் மொக்கையாக்கி உச்சந் தலையில் குட்டுவார். கபாலத்தில் கிர்.... என்று ஓசை கேட்கும். சிந்தனை ஒரு நொடி ஸ்தம்பிக்கும். .. டூரிங் தியேட்டர் இல் அறுந்து போன பிலிம் சுருள் போலே. கண்ணில் சுருள் சுருளாய் சங்கீத குரி போலே சுழலும். கண்ணீர் கட்டுப்பாடு இழந்து மடை திறக்கும்.
சக மாணவர்கள் பார்வையிலே , தன்மானம் விளித்து பார்க்கும். அவமானம் புடுங்கித் தின்னும். அடி வாங்குதல் அவமானம் இல்லை. அழுவது அவமானம். அனிச்சையாய் வாய் வாத்தியாரை
வையும். கூட்டுக்காரன் பிரதீப் பிருஷட்டத்தில் பிரம்படிவாங்குவன். வேதனை காட்டுவான். கூட்டுவான். வாத்தியாருக்கு முகம் மறைந்து முதுகு தெரிய... பூ போலே சிரிப்பான். சில சமயம் கண்ணடிப்பான். ஒ. எத்தனை பெரிய சாதனை. அவன் தான் நாயகன். தனிமையில் சந்தித்து ரகசியம கேட்டபோது, பல முறை மறுத்து, ஒரு நன்னாரி சர்பத் லஞ்சத்தில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கி கொண்டு சொன்னான். சுப்பு சாமீ வகுப்புக்கு இரண்டு கால் சட்டை அணிவேன் என்று. படுக்காளி முயன்ற பொது, கடைசி வரை முன்றாம் கட்ட தண்டனை கிடைக்காததால் பிரதீப் சொன்னது சரியா தவறா என்று இன்று வரை தெரிய வில்லை .

2 கருத்துகள்:

 1. Vow ! Wonderful flow.. Great language. Subtle sense of humour. The reality is striking. Please continue. Please write more...

  பதிலளிநீக்கு
 2. படுக்காளி அவர்களே ...

  உங்களுடன் படித்த அந்த சில பல ... பல சில சாமிகள் (குப்புசாமி சுப்புசாமி பொன்னுசாமி) கண்டிப்பாக எந்த கோயில்களிலும் இல்லை, ஆகவே எங்கும் தேட வேண்டாம் ..... பின் அவர்கள் என்ன ஆனார்கள் ... நேற்று ஒரு அருமையான தமிழ்படபாடல் கேட்டேன் ... அதையே உங்களுக்கு விடையாக தருகிறேன் ...

  ----------------------------------
  ராமசாமி .... குப்புசாமி ... மாடசாமி ... கல்யாணம் கட்டிக்கினாங்கோ .......
  -----------------------------------
  ஆஹா .. என்ன ஒரு அருமையான பாடல் இது (இதற்கு தேசிய விருது நிச்சயம் கிடைத்து இருக்குமோ என்னவோ ??).

  பாடலை விடுங்கள் ...

  பழைய நினைவுகளை நினைப்பூட்டிய படுக்காளிக்கு என்ன தரலாம் ...

  எடைக்கு எடை தங்கம் தரலாம் ... ஆனால் அது அவரிடம் நிறைய உண்டு

  ஆகவே என் இதயத்தில் இடம் தருகிறேன்

  பதிலளிநீக்கு