பக்கங்கள்

நம்பியார் நல்ல நம்பியார்

ஒரு முறை ஒரு மூதாட்டிஎம். ஜீ. ஆர். கிட்டே சொனாரம், நீ நல்லவன்தான், எல்லாத்தையும் சமாளிச்சுருவ, இருந்தாலும் அந்த நம்பியார் கிட்ட மட்டும்ஜாக்கிரதையா இரு என்றாரம்.

தன் நடிப்பால் இத்தக்கைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய நடிப்பின் சொந்தகாரர் இன்று நம்மிடையே இல்லை. அவரின் நினைவுகளை பட்டியலிடுகிறேன்
* ஒரு காலில் எட்டு, ஒரு காலில் ஒன்பது - என ஷூ போட்டு கொண்டு, டேபிள் மேல் போட்டு ஆட்டுவார்.
* காகிதம் செய்வோம் நல்ல ஆயிதம் செய்வோம் - அதான் கள்ள நோட்டு அடிக்கிறேன், துப்பாக்கி செய்றேன் என்று விளக்கம் தருவார்
* நாய்க்கு பதிலாக , வீட்டில் புலியை வளர்ப்பார், அதையும் காலடியில் வைத்து கொண்டு தடவி கொடுப்பார்.
* பிற்காலத்தில் குணசித்திரமும் நகைச்சுவையும் பிரதானமாய் நடித்தார்
* திரை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்
* பலகுரல் கலைஞர்களுக்கு பிழைப்பு இன்று வரை வழங்குகிறார்

2 கருத்துகள்:

 1. நம்பியார் நல்ல நம்பியார்

  டைட்டில் பார்த்தவுடன் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது ....

  நிழலில் வில்லனாகவும், நிஜத்தில் நல்லவராகவும் வாழ்ந்த ஒரு சில கலைஞர்(கருணாநிதி அல்ல)களில் நம்பியாரும் ஒருவர்....

  எட்டு, ஒன்பதா, ஏழு, எட்டா என சரியாக ஞாபகமில்லை .... ஆனால் அந்த ஷூ சீன் ஞாபகம் உள்ளது ....

  டேய் ஜக்கு, முனியாண்டி, பைரவா என்று தன் பல அடியாட்களை கூப்பிடும்போது திரையில் வெளியில் இருக்கும் நமக்கே குலை நடுங்கும் .........

  இதையெல்லாம் விட ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது ....

  அதாவது எம்.ஜி.யாரும் நம்பியாரும் ஒரு படத்தில் சண்டை போட்டுக்கொண்டே ஒரு தூண் மறைவில் ஒதுங்கும்போது, நம்பியாரின் கைத்துப்பாக்கி எம்.ஜி.ஆரை குறிபார்க்க .... நம்பியாரை ஒரு நிஜ துப்பாக்கி திரைக்கு வெளியெ இருந்து குறி பார்த்து சுட்டது ..... திரை கிழிந்தது ... சுட்டது ஒரு குருவி சுடும் துப்பாக்கியால் ... சுட்டவர் - வழக்கமாக் குருவிகளை சுடுபவர்.

  திரையில் மட்டுமே நடித்த வெகு சிலரில் மறைந்த வில்லன்-கம்-காமெடியன் நம்பியாருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

  தூறல் நின்னு போச்சு, எஜமான், வின்னர் போன்ற படங்களில் நம்பியார் நல்ல காமெடி செய்திருப்பார்.

  அவரின் ஐயப்ப பக்தி அனைவரும் அறிந்த ஒன்றுதான் .....

  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .....

  பதிலளிநீக்கு