பக்கங்கள்

கலாச்சாரத்தின் கயமைத்தனம்

பூத்துக்குலுங்கும் ஒரு செடியை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது?

எனக்கு இப்படி தோன்றுகிறது. ம்… ஒரு சக ஜீவன். என்னைப்போல் அதுவும் ஒரு உயிர், அதன் படைப்பு என்னை மகிழ்வு கொள்ள செய்கிறது. அதன் நிறம் பச்சை எனக்கு நல்லதாய் தெரிகிறது. அதன் வடிவமும், இன்னும் அழகும் என் கண்ணில் நிறைந்து…. பின் மனதில் நகர்ந்து இறுதியாக  உணர்வில் சேர்கிறது.

ஒரு செடி, எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி, இதம் தந்து, என்னுள் அமைதி படர்த்தி மனசை லேசாக்குகிறது. இல்லையா, உங்களுக்கும் அப்படித்தான்.

இதுவரை விவகாரமில்லை… ஆனால் விவகாரமே இனிதான்….

செடியை பார்த்துக் கொண்டே நின்றிருந்த எனக்கு சிந்தனை கிளம்பி கிளை விட்டு கொஞ்சம் சைடில் படர்ந்தது. படர்ந்தது ஒகே, ஆனால் அது சென்ற திசை கொஞ்சம் டேஞ்சரானது.

அது என்ன டேஞ்சர் ஏரியா? 

என்று நீங்கள் புருவத்தை சுருக்கி உயர்த்தினாலும்,ஏண்டா எங்கயிருந்து எங்கடா போற என நினைத்தாலும், எதையும் பாத்தா பார்த்துப்புட்டு வந்திடுறதில்லையா, ஏதாவது பீலீங்ஸ் விட்டுட்டு நிக்கிறியே என எண்ணினாலும்….  தங்கள் நியாயமான எண்ணத்துக்கு வணங்கி, தொடர்கிறேன் ....

என்னை கவர்ந்து, இழுத்து நிறுத்தி ரசிக்க வைத்த செடியின் குணம் கவர்ச்சி தானே. அழகை ரசிக்கும் என் ரசனைதானே என்னை நிற்க வைத்த்து. அழகை ரசிப்பது நல்லதா… கெட்டதா….

அழகு ரசிப்பதை பாவம் என கூட சிலர் சொல்கிறார்களே.. அது சரியா…

சரி அழகை ரசிக்கிறேன்… அதே நான்… பட்டு போன மரத்தை நின்று ரசிப்பேனா. அது எனக்கு மகிழ்வு தருமா… அமைதி தருமா. இல்லை என்றே தோன்றுகிறது.

சரி செடி பார்த்தேன். அதே போல் குழந்தை பார்த்து ரசித்திருக்கிறேனே..

ம்… சரி உங்களிடம் ஒரு கேள்வி…

ஒரு குழந்தை உங்களை பார்த்து சிரிக்கிறது என வைத்துக் கொள்வோம். சிரித்ததும் நாம் செய்வது என்ன. வெறுமனே பதிலுக்கு சிரித்து விட்டு நகர்வோமா.... இல்லையே. அதன் அருகில் நகர்ந்து அச்செயலை அங்கிகரிப்பதோ இல்லை நம் அன்பை காட்டுவதாகவோ ஒரு வினை செய்கிறோமே….

ம்…. அனேகமாக தொடவோ, முத்தமிடவோ, அல்லது ஏதாவது தொட்டு செய்கிறோமே… அது ஏன்……….. நம் அதீத உணர்வை சொல்ல, அன்பை தெரிவிக்க… மெய் தீண்டல் அவசியம் ஆகிறதோ.

ஆம், ஒரு செடியை பார்த்ததோடு நில்லாமல் தொட்டு, தடவி, முகர்ந்து, பார்த்து மகிழச் சொல்வது எது. என்னுள் தோன்றும் தன்னகப்படுத்தும் எண்ணமா.

அழகை வெறுமே நின்று ரசித்து விட்டு செல்லாமல் எனக்கு உரிமையாக்கும் எண்ணம் எதனால் வருகிறது.

பார்த்து, உணர்ந்து நான் நிற்பது ஒட்டு மொத்த செடியிடமா.. அல்லது அந்த செடியின் அங்கங்களிடமா… ஆழமாக ஒரு அங்கம் பார்த்துத்தான் நான் செடியை ரசிக்கிறேனா… தண்டு பெரிய ரசனையில்லை… இலையை ரசிக்கிறேன், அதன் வடிவம் கவனிக்கிறேன், பூவை தேடுகிறேன். அதன் காம்புகள் கூட எனக்கு கவனம் இல்லை…

செடியின் அங்கங்கள் தண்டும், இலையும், மலரும் அதன் உடம்பல்லவா.  அந்த செடியிடம் அதனை ரசிக்க அனுமதி வாங்கினேனா… எனக்கு அனுமதி உண்டா. கிடைக்க வாய்ப்புண்டா…

காய்ந்த மரம் ரசிக்காத எனக்கு, என் கண்களுக்கு ….. பச்சை இலைகள் சொல்வது அச்செடியின் ஆரோக்கியந்தானே. பட்ட மரம் ரசிக்காத என் தன்மை எனக்கு ஆழமாய் சொல்வது என்ன. ……..????
 
ஆரோக்கியம் எனக்கு மகிழ்ச்சி தருகிறதா. நம்பிக்கை தருகிறதா.

சரி ஒத்துக் கொள்கிறேன்… ஆரோக்கியமான இலையை தாண்டி என் உணர்வுகள் அலைவது எங்கே…

இலைகள் தாண்டி, என்னை மேலும் பரவசப் படுத்துவது பூக்கள் அல்லவா.

பூ பூக்கும் செடி, எனக்கு பச்சை செடியை விட உன்மத்தமாய் தெரிவது ஏன். பூக்கள் எனக்கு சொல்வதென்ன, உணர்த்துவது எதை. வெறும் நிறம் மட்டுமா பூவின் குணம். இல்லையே… வெறும் நிறத்தால் மட்டுமா எனக்கு பூவை புடிக்கிறது…. அதென்ன என் சிந்தனை, செயல் எல்லாம் பொருளுக்கு பொருள் மாறுபடுகிறதே…...

பூக்கள் இன பெருக்கத்தை அல்லவா சொல்கிறது. ஒரு வேளை என் ஆழ் மனம் அதன் பயனை பட்டியல் இடுகிறதோ… படைக்கும் திறன் உள்ளவை அற்புதமாய் படுகிறதா. ஆச்சரியமாய் தோன்றுகிறதா. அழகாய் தெரிகிறதா.


யாரோ ஒருவர் என்னிடம் வந்து, செடி நல்லா இருக்குங்க, தொட்டுப் பாருங்க, என்ன ஸ்மெல், எவ்வளவு பியூட்டிங்க என சொல்லும் போது. ஆச்சரியமாய் பார்த்து, அடேயப்பா அவன் பெரிய கலாரசிகன் என சொல்லும் அதே நான். அவன் பூவுக்கு செய்ததை பூவைக்கு செய்தேன் என சொன்னால்… என்னை செய் என சொன்னால் ………… நான் அவனை  காமந்தகாரன் என்று அல்லவா சொல்வேன்.

கலாரசிகன் எனவும், காமாந்தகாரன் எனவும் எத்தனை மாறுபாடு…

ஒரே செயலுக்கு, ஒரே உணர்வுக்கு,
ஏன் இந்த மாறுபாடு, ஏன் இந்த சிந்தனை தாறுமாரு…
இப்படி மாறுபாட்டை சமைத்தது இயல்பு அல்ல, இயற்கை அல்ல.
என்னை அப்படி மாற்றி சொல்ல வைத்த்து நான் சார்ந்த கலாச்சாரம் தானே.
இக்கலாச்சாரம் சில முன்னோர்களால், மூத்தோர்களால்… நல்லதற்கென ஆக்கப்பட்டது தானே…. இக்கலாச்சார வரைவுகள் நம்மை பலப்படுத்தியதா… இல்லை பலவீனப்படுத்தியதா… நம்மை எளிமையாக்கியதா இல்லை சிக்கலாக்கியதா…
பாவம் என இயல்பை திரித்து, நம்மை முடமாக்கியதா… முற்றும் உணராமல் நம்மை முடமாக்கியதா…
ஆழ செல்வோம், நம் இயல்புகளை உணர்வோம், கலாச்சார வரைவுகளை இனம்கொள்வோம், அதை புரிவோம், பின்னர் தெளிவோம். வாழ்க்கை வாழ்வதற்க்கே…

1 கருத்து: