பக்கங்கள்

பதிலுரைக்கு பதில்

தனி மனித ஒழுக்கம் என்ற பதிவின் பின்னோட்டம் பிரமாதம்.
பதிவிற்கு நன்றி.
சரி தான். நீங்கள் நினைத்தும் பதித்தும் உண்மை.
ஆழமான பார்வைக்கும், கருத்து செறிவுக்கும் பாராட்டுக்கள்.

விபசாரம், திவிரவாதம், ஹவாலா, கடத்தல், ஆள் கடத்தல், அடிமை
வேலை என்ற துபாயின் முகங்கள் மறுக்க முடியாது என்றாலும், அதை இன்னொரு பதிவாக சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன்.
என் வேலை சுலபம் ஆகி விட்டதே, உங்கள் பட்டியலை சொல்கிறேன்.
அதிலும் இந்த அரசு எடுத்த கோட்பாடு கோடு பற்றி சொல்லி ஆக்க புர்வமாய் பார்க்க எண்ணம் உண்டு.

துபாய் - சட்ட மீறல்கள் இல்லாத, புண்ணிய பூமி எனபதல்ல என் வாதம்

தனி மனித ஒழுக்கமாய் நான் பார்த்தது - பெரும்பான்மையான ஒரு 70% மேலான வாழ்க்கை நடைமுறை என்பது என் கணிப்பு
வாதங்கள் சிந்திக்க வைக்கும், எண்ணங்கள் விரிவாக்கம் செய்யும்.
தங்கள் எழுத்துக்களை வேண்டி விரும்பும் - படுக்காளி

1 கருத்து:

  1. துபாய் முன்பு காலங்களில் வேண்டுமாயின் சொர்க்கபுரியாக இருந்திருக்கலாம்.

    இன்று, குளோபல் கிரைசிஸ் என்ற சொல் கேட்டு மயங்கி விழாதோர் இல்லை.

    உலக நாடுகள் பலவும் (ஏன் அனைத்தும்), ஆட்டமாக ஆடி கொண்டிருக்கிறது என்பது உண்மை. நேற்று வரை வளைகுடா தப்பித்தது, சொர்க்கபுரி தான் என்று நினைத்தவர்கள், இன்று காலை, மதியம், மாலை, இரவு என ஏதாவதொரு விமானம் பிடித்து ஊர் போய் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    தனி மனித ஒழுக்கம், மாற்ற நாடுகளை விட, இங்கு சற்று கூடுதலாக உள்ளது என்பதை கண்கூடாக காணலாம்.

    லஞ்ச லாவண்யம் குறைவு. தமிழை தலைகீழாகவும், நேராகவும், தூக்கி பிடிக்கும் தலைவர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்கள் (குண்டர்கள்) தொந்தரவு இல்லை.கொடிபிடித்தால் இல்லை. கோஷங்கள் இல்லை, வேலை நிறுத்தம் இல்லை. அமைதிக்கு பஞ்சம் இல்லை.

    சட்டம் அனைவருக்கும் சமம். சட்ட மீறல் அதிகம் இல்லை. இருந்தால், அபராதம் கண்டிப்பாக உண்டு.

    மற்றபடி, சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் விசேஷம் இல்லை.

    என்ன, ஒழுங்குமுறையை கடைபிடித்தால், கையில் கொஞ்சம் காசு பார்க்கலாம். இல்லை என்றால், முதலுக்கே மோசம்.

    பதிலளிநீக்கு