பக்கங்கள்

பம்பரம் பதவிசு

பள்ளி நாட்களில் அரை மனதோடு உடுத்திய அரை கால் சட்டை எப்போதும் அழுக்காய் இருக்கும். நிச்சயமாய் கிழிந்து இருக்கும். பட்டன் கொக்கிகள் இரண்டு மாதத்திற்கு மேல் இருந்தது இல்லை. இருந்த சுவடு மாத்திரமே இருக்கும்.

படுக்காளியின் கால் சட்டை பை துருத்திக்கொண்டு இருக்கும். நெல்லிகாய், காகிதத்தில் பொதிந்த கல்கோனா, கூட்டத்தில் பம்பரம். பருவ காலங்களை போலே விளையாட்டு உபகரனங்கள் மாறி கொண்டே இருக்கும்.

நாடார் கடை ஒரு காமதேனு. தேங்காய் சில்லி முதல் ஆகாய விமானம் வரை (விளையாட்டு ) சல்லிசாய் கிடைக்கும். கூட்டம் குறையும் வரை காத்திருந்து, அரிசி முட்டை யின் மேல் கால் வைத்து எந்த கலர் வேண்டும் என்று சொல்ல முயற்சிக்கும்போது, அரிசி கொட்டி விடுமோ என்று நாடார் பதறுவார்.

நாலனா கொடுத்து வாங்கிய பம்பரம் நல்ல வாசமாய் இருக்கும். வர்ணத்தின் வாசனை அது. உலகையே வென்ற பெருமிதம் கொப்பளிக்கும்.

வாங்கிய பம்பரத்தோடு நேரே செல்வது பட்டறைக்கு தான். நடுவில் உள்ள ஆணி அகற்றப்பட்டு ஆக்கர் வைக்கப்படும். நாலனா பம்பரத்திற்கு பத்து பைசா ஆக்கர்.
புஸ்… புஸ்… என துருத்தி ஊதப்பட்டு, கன கன வென்று தீ எரியும். நெருப்பு பொறி பறக்கும்.

ஆக்கர் தீகுளித்து சிவப்பாய் மாறி, நீர் குளித்தவுடன் புகை விடும. இதில் உஸ்… என்று ஓசை வேறு. புதிதாய் வாங்கிய பம்பரத்தை காலின் இடுக்கில் பிடித்து, ஆக்கர் இடுவார்.

குளிர் பான முடியின் நடு மையத்தில் துழைஇட்டு வெள்ளை கயிறு முழ நீளம் வாங்கி, மொங்கான் முடி போட்டு இறுக்கினால் - ஒரு பக்கம் சோடா மூடியும் மறு பக்கம் பம்பர முடியுமாய் சாட்டை தயார்.

இன்னும் இரு வாரத்திற்கு படுக்காளி தான் ராஜா !!!

6 கருத்துகள்:

  1. Palli naatkalil padukkalikku padippaivida bambarathin meethu kaadhal athigam polirukkirathu...

    Inemaiyaana ninaivugalaiyum, ninaivugalai inimaiyaagavum pagirnthukolla therinda Padukkaliku oru 'O'podalam...

    பதிலளிநீக்கு
  2. பள்ளி நாட்களில் படுக்காளிக்கு படிப்பை விட பம்பரத்தின் மீது காதல் அதிகம் போலிருக்கிறது ... இனிமையான நினைவுகளையும், நினைவுகளை இனிமையாகவும் பகிர்ந்துகொள்ள தெரிந்த படுக்காளிக்கு ஒரு ஒ போடலாம்

    பதிலளிநீக்கு
  3. குளிர்பான மூடியின் நட்ட நடு சென்டர் மிடில் மையத்தில் துளை ஒன்றை இட்டு, வெள்ளை நிற செவுப்பு (உபயம் சின்னத்தம்பி திரைப்படம்) கயிறு முழ நீளம் வாங்கி, மொங்கான் முடி போட்டு இறுக்கினால் - ஒரு பக்கம் சோடா மூடியும் மறு பக்கம் பம்பர முடியுமாய் சாட்டை தயார் என்று தயாரித்த, பின் அதனை நன்கு விவரித்த

    படுக்காளி ஒரு துடுக்காளி

    பதிலளிநீக்கு
  4. டண்டனக்கா டமாலு
    கும்மாங்குத்து கோபாலு
    உத்துபார்த்தா நம்மாள்
    படுக்காளிக்கு சவாலு

    கோபி சார்,
    படுகாளிக்கு துடுக்காளி என்று பேர் கொடுத்து சூப்பர் ....

    பதிலளிநீக்கு
  5. டண்டணக்கா டமாலு

    கும்மாங்குத்து கோவாலு

    உத்துபார்த்தா நம்மாளு

    படுக்காளிக்கு சவாலு
    ----------------------------------

    இது சூப்பர்

    பதிலளிநீக்கு