பக்கங்கள்

வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே

சாமுத்திரிகா லட்சணப்படி அல்லது அவலட்சணப்படி அல்லது அவாஅவாலட்சணப்படி அல்லது டாவின்சி தியரி படி இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் உள்ள சைசே மனித மூளை.

கேள்விப்பட்ட விசயம் தான்.

அவங்க சொன்ன தகவல் படி விரல் அளவு வைத்து மூக்கின் அளவும் மூஞ்சியின் அளவும் சரியா இருந்தது. இல்லாமல் மண்டைக்குள் கையை விட்டு எல்லாம் பார்க்க வில்லை.

அறிவியல் ஆய்வு படி 10% குறைவாகத்தான்... நம்ம மூளைய நாம் பயன்படுத்துகிறோம் என்று கேட்கிற போது ஆச்சரியமும் ஆத்திரமும் வருகிறது.

வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே என்று மண்டைக்குள் கேட்க தோன்ற்றுகிறது.

ஒரு சிந்தனை.

நமக்கு அறிமுகமான மனிதரை எடுத்துக் கொள்வோம். ஆணோ, பெண்ணோ எது வானலும் ஒகே. அவரை கண்களால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வளவு நேரம் வேண்டும்.

சரி அவர் தொப்பி போட்டாலோ, கண்ணை மறைத்து கண்ணாடி போட்டாலோ பிரச்சனை இல்லை. உடம்பை போர்வையால் போர்த்திக் கொண்டாலும் தப்பிக்க முடியாது. என்றால் எதை வைத்து நாம் மனித முகங்களை நினைவு கொள்கிறோம்.

மறுபடி கேட்கத் தோன்றுகிறது வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே, கொடுத்தா குறைஞ்சா போயிடுவ ?

1 கருத்து:

 1. நீ சொல்ற மேட்டர் சூப்பர் "தல".

  நான் என் மூளைய, 10% விட ஜாஸ்தி உபயோகிச்சும் ஒரு தபா ஏமாந்துட்டேம்பா .....

  அதான், நம்ம கமலதாசன் நடிச்ச "பத்தாவதாரம்" படத்துலதான்.

  நான் நெனச்சேன், அதுல பூரா வெசமும் "தல கமல்"தான் போட்டு கீராருன்னு. அப்பாலிக்கா பாத்தா, அதுல அசின், பிசின் அல்லாரும் நடிச்சு இருக்காங்களாமே??

  நான் இன்னா சொல்றேன்னா, நீ இன்னாதான் தல கீய நின்னு தண்ணி குட்ச்சாலும், லிமிட்டு தாண்டிடுச்சுன்னா, வெளில வந்துடும்.

  "அவன் நல்லவனா, கெட்டவனானுன்னு தெரியல ........ ஆனா, நல்லவனா இருந்தா, நல்லா இருந்திருக்கும் தல"

  பதிலளிநீக்கு