பக்கங்கள்

ஒண்ணுமே புரியலே இந்த கிரிக்கட்டுல (IPL)பின்னூட்டமாய் நண்பர் கோபி எழுதிய சூப்பர் கமென்ட்ஸை சிவப்பு நிறத்தில் சேர்த்துள்ளேன். (நன்றி நண்பர் கோபி - http://edakumadaku.blogspot.com/ மற்றும் http://www.jokkiri.blogspot.com/)

IPL தொடங்குது. இங்க விளையாட கூடாதுன்னு சொன்னதாலே பயலுக எல்லாம் மட்டைய தூக்கிகிட்டு பக்கத்து ஊருக்கு கிளம்பிட்டானுக. படுகாளிக்கு சின்ன சந்தேகம்.

1. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு
எல்லை கோட்டுக்கு வெளிய விழுந்துச்சு, இன்னொன்னு உள்ளே. அப்போ எத்தனை ரன்.

மொத்தம் 6+ 4 = 10 ரன்

2. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு கிழே விழுந்துச்சு இன்னொன்னு ஒருதான் கையிலே விழுந்து அதை அவன் பிடிச்சிட்டான். அப்போ அவுட்டா இல்லையா

அவன் அவுட், அவுட் இல்ல (ஏதாவது புரியுதா??)

3. ஓங்கி அடிச்துலே பந்து இரண்டா போச்சு, அதுலே ஒண்ணு ... (டேய் எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கிங்க) ... தேமேன்னு நின்னு கிட்டு இருந்த நம்ம கிச்சா மேலே விழுந்திருச்சி. இது விபத்தா இல்லே திட்டமிட்ட தாக்குதலா

இது திட்டமிட்ட தாக்குதல் என்கிற விபத்து என்கிற திட்டமிடாத தாக்குதல். (புத்தம் சரணம் கிச்சாமி!!)

4. ஓங்கி அடிச்துலே கால் தடுக்கி நம்ம பேட்ஸ்மன் ஸ்டம்பிலே விழுந்திட்டார், (அட பாவி போயும் போயும் அங்கேயா விழுவ) அதே நேரத்தில் அடிச்ச பந்தை நம்ம பீல்டர் பயலும் பிடிச்சிட்டான். இப்போ விக்கெட் ஹிட் அவுட்டா இல்ல கேட்ச் அவுட்டா

ஹிட் கேட்ச் விக்கட் அவுட் (ஹீ ஹீ)

5. ஒரு டீம். இப்போதான் புதுசா விளையாட வந்து இருக்கானுக. எல்லா பயலும் ரன் எடுக்காம அவுட் ஆயிட்டாணுக. நம்ம பயலுகளும் நோ பால் வைட் ன்னு ஒண்ணுமே கொடுக்கலே (கஞ்ச பயலுக ) ஸ்கோர் 0/10... இப்போ அடுத்த டீம் விளையாடனுமா இல்லே மேட்ச் முடிஞ்சு போச்சா

அடுத்த டீம் வெளையாடனும், அடுத்த மேட்ச்... (எப்படி!!!... அஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்)

6. நம்ம பய பௌலிங் பண்றேன்னு தூக்கி வீசுனது ஒரு பனை உசரத்துக்கு போய் நேரா பேட்ஸ்மன் மண்டைக்கு பின்னாலே இறங்கி ஸ்டம்பில அடிச்சிருச்சி, இப்போ அவுட்டா

கொஞ்சம் ஏமாந்தா, அந்த பேட்ஸ்மன் மண்டை மேலே விழுந்து அவுட் (ஆளே அவுட் "தல")...... அவ்ளோதான் சொல்லிட்டேன்.

8 கருத்துகள்:

 1. 1. மொத்தம் 6+ 4 = 10 ரன்

  2. அவன் அவுட், அவுட் இல்ல (ஏதாவது புரியுதா??)

  3. இது திட்டமிட்ட தாக்குதல் என்கிற விபத்து என்கிற திட்டமிடாத தாக்குதல். (புத்தம் சரணம் கிச்சாமி!!)

  4. ஹிட் கேட்ச் விக்கட் அவுட் (ஹீ ஹீ)

  5. அடுத்த டீம் வெளையாடனும், அடுத்த மேட்ச்... (எப்படி!!!... அஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்)

  பதிலளிநீக்கு
 2. 6. கொஞ்சம் ஏமாந்தா, அந்த பேட்ஸ்மன் மண்டை மேலே விழுந்து அவுட் (ஆளே அவுட் "தல")...... அவ்ளோதான் சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. நல்லா இருக்கு
  அடிச்சி ஆடுங்க ...

  word verification-i தூக்குங்கப்பா ...
  தாங்க முடியல ...

  பதிலளிநீக்கு
 4. //ஒண்ணுமே புரியலே இந்த கிரிக்கட்டுல//

  நீ சொன்னது
  மெய் தாம்பா ,எனுக்கு ஒண்ணுமே
  பிரியல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  !!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 5. "தல" கேப்டன் பேட் புடிச்சுட்டு இருக்கற ஸ்டைல பாத்தா, நெசமாவே கிரிக்கெட் ஆடுவாரு போல இருக்கு டோய் ............. (பசங்களோட, ஏமாத்தி ..... ரோடு கிரிக்கெட்...)


  பக்கத்துல யாரு, அவரோட செல்ல பிராணி, "டாமி"யா??

  இதுக்கு முன்னாடி அந்த "லேப்டாப்" போட்டோல பாத்தோமே, அந்த "டாமி"யா?

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வருகைக்கு நன்றி - கோபி சோனி மற்று டவுசர் பாண்டி

  நண்பர் கோபி - அசத்தலான கமெண்ட்ஸ் போட்டு தூள் கிளப்பிட்டார்
  நண்பர் சோனி : தூக்கிட்டேன்னா வோர்ட் வெறிபிக்கேஷன - இனி அடிச்சு விளையாடுங்க
  நண்பர் டவுசர் பாண்டி (எங்க புடிச்சீங்க அண்ணா உங்க பெயர் - நச்சுன்னு இருக்கு)

  பதிலளிநீக்கு
 7. //padukali சொன்னது…

  தங்கள் வருகைக்கு நன்றி - கோபி சோனி மற்று டவுசர் பாண்டி

  நண்பர் கோபி - அசத்தலான கமெண்ட்ஸ் போட்டு தூள் கிளப்பிட்டார்
  நண்பர் சோனி : தூக்கிட்டேன்னா வோர்ட் வெறிபிக்கேஷன - இனி அடிச்சு விளையாடுங்க //

  **********

  நண்பர் மோனி, படுக்காளி அவர்களால் இன்று முதல் அன்பாக சோனி என்றழைக்கப்படுகிறார்.

  "படுக்காளி" - நீர் ஒரு துடுக்காளி.

  பதிலளிநீக்கு