பக்கங்கள்

பாய்ச்சா பக்


வார இறுதியில் குடும்பமாய் வாகனத்தில் நான் படுக்காளி. மூன்று வயது முல்லை மலர் , என் மகளை சொல்லுகிறேன். தூரத்தில் கண்கள் சிக்கி கொண்டு வெறித்த பார்வையுடன் அந்தகாரத்தை உற்று நோக்கியவாறு பாய்ச்சா பக் …பாய்ச்சா பக்…

என்ன இது. ஒன்றுமே புரியவில்லையே. வார்த்தையையும் இல்லை, சொற் பதமாகவும் இல்லை. அவள் அகராதி சற்றே வித்தியாசமானது. ரசிக்ககூடியது. என்றாலும் இது புது வார்த்தை. ரகசிய சமிக்கையில் துணைவியரிடம் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை.

அடுத்து இருந்த என் மகன் சொன்னான் "நாம பார்த்த சினிமா பாட்டு பாடுறா" ‘Boys are Back’ - High school musicalsதிரைப்படம்

துணுக்குற்றேன். ஆச்சரியம். மெலிதாய் அவள் விரல் தொட்டு, சொன்னேன். பாய்ச்சா பக்… பாய்ச்சா பக்
“வாய மூடு, கார ஒட்டு” நான் சொல்வது அல்ல அவள் நினைப்பதும், பாடுவதும. கேலி செய்கிறேன் என்பதாய் உணர்ந்ததால் அவள் சொன்னாள். “வாய மூடு, கார ஒட்டு”

டிசம்பர் வெளியீடாய் இந்த திரைப்படம்.
ஆரவாரமாய் ஒரு கை பந்தாட போட்டியில் தொடங்குகிறது படம். சிவப்பு கட்சி ஊதா கட்சி இரண்டும் உக்கிரமான விளையாட்டு. தோல்வியின் விளிம்பிலே சிவப்பு கட்சி. தொங்கிய தோள்களுடன் இடைவேளைக்காக வந்தவர்களை பார்த்து கோச் சொல்லுகிறார். “நடந்தது நல்லவையாகவே இருக்கட்டும். இன்னும் இருப்பது 16 நிமிடங்கள்தான். இனி எப்போது இந்த உடை உடுத்தி நீங்கள் விளையாட முடியும் என்று தெரியவில்லை. இருக்கும் இந்த 16 நிமிடத்தில் போய் பூந்து விளையாடு” புது உத்வேகத்தோடு 16 நிமிடம் என்ற ஒரே தாரக மந்திரத்தோடு உள்ளே வருகிறது அந்த அணி. பாடல் தொடங்குகிறது 16 நிமிடம் என்ற அதே வரிகளோடு. நிமிர்ந்து உட்காருகிறோம் நாம். நாமே விளையாடுவது போலே ஒரு உணர்ச்சி ஆரவாரமான வெற்றி பெறுகிறது அந்த அணி.

கதை ஒன்றும் புதுசு இல்லை. பள்ளி பருவம் முடிந்தும் வாழ்வின் புது அத்தியாயம் தொடங்கினாலும் இனிய நினைவுகளை உங்களோடு கொண்டு செல்லுங்கள் என்ற கதை வரி தான் இந்த திரைப்படம்.

'பசுமை நிறைந்த நினைவுகளே' என்று நம் முன் தலைமுறை பாடியதும் 'மனம் பாடிட நினைகிறதே வார்த்தை எங்கே' என்று நாம் நினைவு கொண்டதும் இதே தான்.

திரைப்படம் மனித வாழ்வின் முக்கிய பங்களிக்கும் ஒரு செய்கை என்னை சிந்திக்க தூண்டுகிறது. மூன்று வயதில் என் மகள் கொண்ட நினைவு செதில் என்னை திரைப்படம் தயாரிக்கும் துறையில் உள்ளவர்களை பார்த்து கை கூப்பி கெஞ்ச தோன்றுகிறது "ஐயா பார்த்து படம் எடுங்க"

1 கருத்து:

 1. சூப்பர் படுக்காளி அவர்களே ...... அந்த "பாச்சா பக்" மேட்டர் சொல்றேன்.

  நீங்களே சொல்லி ஆச்சுல்ல, பாய்ஸ் ஆர் பேக் படம் பாத்துட வேண்டியதுதான்......

  நீங்க நம்ம ஆளுங்கள பாத்து, நல்ல படமா எடுங்கன்னு சொல்லலியே "தல". பாத்து படம் எடுங்கன்னுதானே சொன்னீங்க. இப்படி சொல்லி பாருங்க......

  "ஐயா, எல்லாரும் பாக்கற மாதிரி படம் எடுங்க"

  (இவ்ளோ சொல்ற நம்மளே நேத்து டி.வி.ல பாத்த படம் "லாரி டிரைவர் ராஜாகண்ணு தானே .... அந்த டைரக்டர கொலைவெறியோட தேடறேன் சார்..... ஏன், இந்த படத்த ஆஸ்கருக்கு அனுப்பலேன்னு கேக்கறத்துக்கு ............)

  பதிலளிநீக்கு