பக்கங்கள்

சினிமா புதிர் - கமல் காந்த / யார் இவர்

யார் இந்த பிரபலம் ????

இன்று மிக பிரபலமான ஒரு தமிழ் சினிமா நடிகர். அரசியலிலும் இன்று இவர் கொடி பறக்குது

இவர் இயற்பெயர் வேறு. ஆனால் திரை துறையில் கால் பதிக்க இவர் இட்ட பெயர் கமல் காந்த. தனக்கு தானே வைத்து கொண்ட பெயர் இது.

ஏன் இந்த பெயர் என்று கேட்டதற்கு. மொட்டை மாடி கூட்டி போய் சட்டையை கழட்டி விட்டு துள்ளிகுதித்து போஸ் கொடுத்தார். பேட்டி எடுக்க சென்ற ஆனந்த விகடன் நிருபர் பயந்து போனார். ஆனாலும் மிக வித்தியாசமாக அவர் கொடுத்த போஸ் பார்த்து பாராட்டினார்.

கமல் காதல் இளவரசன் , ரஜினி அடி தடி என்று தூள் கிளப்புகிறார். நான் இவர்கள் இருவர் செய்யும் வேலையையும் செய்வேன் அதனால் தான் இந்த பெயர் என்றார் இந்த ஸ்டார். பின்னர் இந்த பெயரை மாற்றி வேறு பெயரில் முயற்சித்து பிரபலமும் ஆனார்.

இவர் நேற்றைய மிஸ்டர். மெட்ராஸ்.

கண்டு பிடித்தீர்களா - சரியான விடை : சுப்ரீம் ஸ்டார் சரத் குமார்

2 கருத்துகள்:

 1. சரத் குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) -

  இது பெரிய உப்புமா மற்றும் டகால்டி கட்சி என்பது, திருமங்கலம் இடைதேர்தலில் 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதில் இருந்தே தெரிகிறது.

  பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தும் திறமை இதனிடம் இல்லை. கட்சியின் ஒரே பலம் ராதிகாதான்.

  நான் டாஸ்மாக் பார்ட்டி இல்லை, பாஸ்மார்க் பார்ட்டி என்று வீரமுழக்கம் விடுத்து, திருமங்கலத்தில் பீப்பீ ஊதியவர்.

  *********

  "தல" சரத்குமார் பத்தி ஒரு லேட்டஸ்ட் நியூஸ் பாருங்க.

  இப்போ பாராளுமன்ற தேர்தல்-ல தனியா 15 எடத்துல நிக்க போறாராம். யாருக்காவது இவரு நிக்கறது அடையாளம் தெரிஞ்சா சரி.

  ஓட்டு .. சார், நீங்க காமெடி கீமெடி பண்ணலியே ... சரத், அவருக்கு ஓட்டுன்னு...........

  பதிலளிநீக்கு
 2. கமல் காந்த் யாருன்னு தெரிஞ்சு போச்சு

  இப்போ, ஒலகம் முழுக்க பரபரப்பா பேசிக்கற அந்த "குஜினிஹாசன்" யாருங்க? அதையும் கொஞ்சம் வெளக்கமா சொல்லிடுங்க "தல".

  பதிலளிநீக்கு