பக்கங்கள்

படுக்காளி - அண்ணன் கூட்டு சதி


ஏழாம் வகுப்பு படிக்கும் போது அல்லது படிக்காமல் ஒப்பி அடித்த போது பொறி பரக்கும் காய்ச்சல்.
வாயெல்லாம் கசப்பு. உடம்பெல்லாம் தீ மற்றும் அசதி. வீட்டில் முடிவு செய்து மருத்துவமனை பயணம். மனசெல்லாம் பயம் காய்சலை மீறி. போடப் போகும் ஊசியை நினைத்து.
படுக்காளிக்கு துணை அண்ணன். வேலிக்கு ஒணான் சாட்சி.
அரசு மருத்துவமனை. பிரைவேட் எல்லாம் அவ்வளவு இல்லை. அவசியமும் இல்லை. வியாபாரம் இன்னும் வேர் விடாத வேளை. மூக்கை துளைத்து ஒரு மணம் இதயத் துடிப்பை இன்னும் அதிகம் ஆக்கும். பச்சை நிற காடா துணியில் ஒரு தட்டி. அதற்கு மறுபுறம் டாக்டர். அவஸ்தையாய் வரிசையில் நாங்கள். போடப் போகும் ஊசியை நினைத்து இப்போதே ஒலம் தொடங்கி விட்டான் என் பக்கத்து நோயாளி. நாலு வருடம் முந்தி பிறந்ததால் எனக்கு அந்த சௌகரியம் இல்லை. வாய் விட்டு அழக் கூட இந்த் வயது ஒரு தொல்லை. சொல்ல வேண்டிய வாக்கியங்களை உடல் உபாதைகளை மனதிலே ஒட விட்டு ஒரு ஒத்திகை.
பெரிய மேசையில் கண்டிப்பாய் கண்ணாடி அணிந்து கொண்டு மருத்துவர். நாங்கள் தான் வாய் ஒயாது பேசுவோமே அல்லாது, அவர் அமைதியாய் கேட்க மட்டுமே செய்வார். வெள்ளை காகிதங்கள் சதுர வடிவில் வெட்டி அவர் மேசை மீது இருக்கும். முதல் காகிததில் உருண்டை உருண்டையாய் கோழி கிண்டுவார். இன்னொரு காகிதம் எடுக்கக் கூடாது என்று ஊரில் உள்ள சாமியை எல்லாம் மனம் வேண்டும். அது என்ன கணக்கு. ஒன்று மாத்திரைக்கு, இன்னொண்று ஊசி.
மாதாவே... இரண்டும் எழுதி விட்டாரே இன்று.

தலை அனிச்சையாய் திரும்பி பார்க்கும். ஊசி போடும் இடம். செவிலியர் கொதிக்கும் தண்ணி அருகில் வெள்ளை உடையில். சமாதான வண்ணத்தில் வன்முறை நிற்கும். வலிக்காமல் ஊசி போடுவாரா என்று கேள்வி கோரிக்கையாய். மருந்து வாங்க நிற்கும் வேளையில் அண்ணா கேட்டான். "ஊசி போடாம ஒடிருவோமா" சட்டென ஒரு இன்ப அதிர்ச்சி. ஆஹா என்ன ஒரு ஐடியா.
கரும்பு தின்ன கூலியா. சந்தோசமாய் தலையசைத்து "சரி" சொன்னேன்.
ஒடி வந்து விட்டோம்.

வரும் வழியில் எல்லாம் அண்ணன் அன்பாய் தெரிந்தான். ஏன் இப்படி செய்தான். அவனுக்கும் இதே வலி இருந்திருக்கும். பாவம் அவன் முதலாய் பிறந்த துர்பாக்கியம் அந்த வலி போக வழி இல்லை. அவனுக்கு என்ன கைமாறு செய்யலாம் என்று எண்ணம் தான் மனதிலே. நன்று நன்றி என்று வார்த்தையாய் சொல்ல வில்லை.

1 கருத்து:

  1. நல்லா இருந்தது வேலிக்கு ஓணான் சாட்சி.

    ஆமாம், நீங்க நேரா போனது "ராயபேட்டா ஹாஸ்பிட்டல்" தானே? ஏதாவது ஒண்ணுன்னா, ஒடனே "ராயபேட்டா ஹாஸ்பிட்டல்" போயிடுவீங்களே?? சரி, போனீங்க, அங்க "அறிவை" பாத்தீங்களா, இல்லையா?

    என்னது, அறிவை பாக்கறதா?? ஹலோ. அறிவை பாக்க முடியுமா இல்லையான்னு ஒங்களுக்கு தெரியும்னு, எனக்கு தெரியும்னு, ஒங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்....... (யப்பா, இந்த டயலாக் சொல்லும்போதெல்லாம் நாக்குல நொர தள்ளுதுப்பா.......)

    அந்த டாக்டர் (மருத்துவர் அய்யா இல்லே தானே?). அவரா இருந்தா, ஊசி போடலேன்னா கூட மொதல்ல, உங்க பையில கைய விட்டு காசு எடுத்து இருப்பார், ஆமாம், அவருக்கு அதுல ரெம்ப வருஷம் சர்வீஸ் (எதுலன்னு உங்களுக்கே தெரியும், மறுபடியும் எதுலன்னு கேக்காதீங்கப்பு).

    ஊசிக்கு பயந்து ஓடினீங்க சரி, சொரம் என்ன ஆச்சு, எப்போ போச்சு, அதையும் சொல்லி இருக்கலாமே?

    அண்ணனுக்கு நன்றி நன்றி வார்த்தையை சொல்லவில்லை என்றீர்கள், அப்படின்னா, அவருக்கு என்ன செய்தீர்கள் "தல". என்கிட்டே மட்டும் தனியா சொல்லுங்க. நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்......... ஒங்க அண்ணன் கிட்ட கூட........ சரியா .....

    பதிலளிநீக்கு