பக்கங்கள்

கடலில் நடுவில் படகில் நிலவில் உறவில்


நிலா அது வானத்து மேலே
பலானது ஒடத்து மேலே
என்ற பாடல் வரி மனதில் ஒட இந்த பதிவு எழுதுகிரேன்.
என்னோடு வேலை செய்த வெள்ளைக்காரன். ஆறடி உயரத்தில் ஒங்கு தாங்காய் இருப்பான். வாயில் விளக்கெண்ணை வைத்து கொண்டது போலே அவன் தாய் மொழி பேசுவான். கொஞ்சம் நொர நாட்டியம். ஆள் தான் அய்யனார் மாதிரி இருப்பானே தவிர ரொம்ப பாவம்.

தெரியாதனமா கேட்டேன் நான். "என்னடா இன்னிக்கு உன் கண்ணுல நட்சத்திரம் தெரியுது. நடையில ஒரு குதியாட்டம், கை கால்ல ஒரு குத்தாட்டம்" அவ்வளவு தான் என் பக்கத்தில வந்து தோள்ல கை போட்டு.... 'டேய் நீ ரொம்ப கூண்டுடா தாங்கல’ என்று சொல்ல தோன்றினாலும், அவஸ்தையாய் சிரித்து கொண்டே கேட்டேன். அவன் சொல்ல சொல்ல என் கண்கள் விரிந்தன.

இது நம்ம லவ்ஸ் மேட்டேர். எத்தனை பேரு காலேஜ்ல கேட்டது.
'அந்த பிள்ளைய நான் டீப்பா லவ் பண்றேன். ஆனா ஒரு ரெஸ்பான்ஸ் இல்லேடா' என்றவுடன் கட்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்து ப்ளான் போட்டு ஸ்கெட்ச் போட்டு சொன்னது தானே. சரி வெள்ளைக் காரன் காதலுக்கும் உதவுவோமே என்று தொபுக்கடீர் என்று குதித்தேன்.
"சரி அந்த பிள்ளை எங்க இருக்கு"
"எங்க வீட்டுல தான்"
கிரகசாரமே... உன் வீட்டுலயா.
"ஆமா அஞ்சு வருசமா ஒன்னு மண்ணா குப்பை கொட்டிக் கிட்டு இருக்கோம்"
என்ற போது 'என்னை பார்த்தா எனக்கே பாவமா இருந்திச்சு.
என் பருப்பு இங்கே வேகும்னு தோணலே, உன் வீகத்த நீயே சொல்லு, என்றதும் சொன்னான்.
இன்று இரவு வெளியில சாப்பிடலாம் என்று சொல்லியிருக்கிறேன்.
அவள் வருவாள். நான் அவளை அழைத்துக் கோண்டு நேரே கடற்கரைக்கு செல்வேன். அங்கு நாங்கள் இருவர் மட்டுமே செல்ல ஒரு படகு உண்டு. மொத்தம் 6 மணி நேர வாடகைக்கு எடுத்து உள்ளேன். அது எங்களை நடுக் கடலுக்கு கூட்டி செல்லும். குளிர் காற்று தென்றலாய் தழுவும் நேரத்தில், முழந்தாலிட்டு .... அவசரமாய் கால் சட்டை பையில் கை நுழைத்து அந்த மோதிரத்தை காண்பித்தான். இதை அவளுக்கு கொடுத்து, 'என்னை மணந்து கொள்வாயா' என்று கேட்பேன்.

பெத்தவங்க பெரியவங்க இல்லை. அவனே போய் கல்யாணம் பேச வேண்டி இருக்கு. அந்த பிளையை நினைத்தேன். யார் பெத்த பிள்ளையோ, இவன் கூப்பிட்டு வந்து, சரி சோறு திங்கத்தானேன்னு நினைச்சா கடலுக்கு கூட்டி போறான், சரி கடல் தானேன்னு நினைச்சா தனியா ஒரு படகு, வைரத்தில் மோதிரம். மூட்டிக்கால் போட்டு விண்ணப்பம் வேற. உணர்ச்சி வசப்பட்டு சரின்னு சொல்லும் என்று தான் தோன்றுகிறது.

ஐந்து வருடம் ஒன்றாய் வாழ்ந்த பின் திருமணம் பற்றி யோசிக்கும் அவர்கள் வாழ்கை முறை எனக்கு புதுசு. நாம் பழகாதது. முக்காலே மூணு வீசம் வாழ்ந்து தொலைக்கும் அந்த வாழும் உறவு முறையில் திருமணம் தனித்து நிற்பது ஆச்சரியமாய் உள்ளது. இனக் கவர்ச்சியும், உடல் உறவும் தெரிந்த பின் முடிந்த பின் குடும்பம் சமைக்கும் அந்த கலாச்சாரம் இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.

நெட்டையோ குட்டையோ இதுதான் விதித்தது என்று வாழும் நம் வாழ்வும் சிந்திக்க வைக்கிறது.

தீர்மானம் செய்யாமல் வாழ்ந்து விட்டு பின்னர் சரிபட்டால் மணம் செய்து கொள்வோம் என்ற வாழ்வு முறையில் உள்ள நிலையாமை தெரிகிறது. இறுதி வரை இதுதான் என்ற தீர்மானத்தை பயன்படுத்தி அடுத்தவரை நசுக்கும் நம் நாட்டின் நச்சு புரிகிறது.காதல் - உணர்ச்சி வசப்படுத்தி வென்று எடுப்பது முறையா ??? குடும்ப உறவு காதலால் சமைந்தாலும் அன்பும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், உள்ளதை சொல்லும் பண்பிலும் அமைய வேண்டிய அவசியம் உண்டல்லவா.

1 கருத்து:

 1. படுக்காளி அவர்களே

  இதுபோன்ற "லிவ்-இன்" கலாச்சாரம் இந்தியாவின் உள்ளும் நுழைந்து பல வருடங்கள் ஆகிறது.

  நம் ஆட்கள், இதுபோன்ற சவுகரியமான விஷயங்களுக்கு எப்போதும் உடனே ஆதரவு தந்து விடுவார்கள்.

  நம் அடுத்த ஜெனரேஷன் எப்படி இருக்கும் என்ற கவலை இப்போதே என் மனதை அறிக்கை ஆரம்பித்து விட்டது.

  உங்க டைட்டில் சூப்பர் - நட்ட நடு நள்ளிரவில், நிலவொளியில், நைல் நதியில், நச்சென்ற நங்கூரம் பாய்ந்த படகில் .............

  பதிலளிநீக்கு