பக்கங்கள்

சும்மா இரு...

நேற்று வாசித்து முடித்த நாவல் . அனிதாவின் காதல் - சுஜாதா.



சுமாரான கதை. அவருக்கே உரிய நடையினால் பரவாயில்லை. படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடிய வில்லை.



சுஜாதாவின் பலம் தகவல்கள். தாறு மாறாய் படித்து தொலைத்து இருப்பார். ஆழ்வார் படிப்பார், அறிவியலும் படிப்பார். ஆழ்வாரில் அறிவியலை, அறிவியலில் ஆழ்வாரையும் தேடுவார்.



படுக்காளியின் காலா நூலா பதிவின் கேள்வி இந்த கதையின் அடிப்படை என்றவுடன் சுருசுருப்பாய் பதிவு எழுதி விட்டேன்..


புயலாய் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் புகுகிறான் அவன். உருகி உருகி காதலிக்கிறான். அனிதா காதல் பற்றி யோசிக்க கூட இல்லை, அதற்குள் அவள் மூச்சு விடக் கூட நேரம் தராமல் அவளை பல கோணத்திலிருந்தும் தாக்கி அவளை மணம் புரிகிறான். அவசர அவசரமாய் கல்யாணம் கூட பரவாயில்லை, அதே வேகத்தில் ம்ண முறிவு என்றால்,



இவள் தனக்குள் கேள்வி கேட்கிறாள். இது வரை என் வாழ்க்கை என் முடிவில் இல்லாமல் என்னை சார்ந்தவர்களே முடிவு செய்கிறார்களே, என்று வருந்தி ஒரு குருவை சந்திக்கிறார்.



குரு சொல்கிறார் "இன்று நாம் சந்திப்போம் என்பதும், நாம் பேசும் வார்த்தைகள் கூட முன்னமே தீர்மானிக்கப் படுகிறது. உன் முயற்சியாய் நீ நினைப்பது கூட உனக்கு வழங்கப் படுகிறது. எனவே நீ சும்மா இரு"



தர்க்க ரீதியாய் ஒத்து கொள்ள மனம் மருத்தாலும், ஆழமாய் மேல் குறிய வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை வாசித்து அதன் அர்த்தம் புரிந்து சும்மா இரு என்று மனதிற்கு கட்டளை கொடுத்ததும், மனதில் குடி கொள்ளும் அமைதி உண்மையிலும் உண்மை.



"இன்று நாம் சந்திப்போம் என்பதும், நாம் பேசும் வார்த்தைகள் கூட முன்னமே தீர்மானிக்கப் படுகிறது. உன் முயற்சியாய் நீ நினைப்பது கூட உனக்கு வழங்கப் படுகிறது. எனவே நீ சும்மா இரு"




பதிவு எழுதி முடித்தாலும் ஒரு திரைக் கவியின் வரிகள் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சும்மா உட்கார்ந்து சோம்பேறியா இருந்த போதும்

முன்னாலும் பின்னாலும் மூக்காலே மூச்சிழுக்க வேண்டும் !!!

மிகப் பெரிய பிராணயாமா தத்துவமோ !!!

1 கருத்து:

  1. இதே மேட்டர் "தல" நடிச்ச "சிவாஜி" படத்துலயும் வருமே.

    அதுலேயும், ரஜினி, ஷ்ரேயாவ, தொரத்தி தொரத்தி காதலிப்பாரே...........

    (பின்னால மூச்சு இழுத்து விடற மேட்டர் கீதே, அது சூப்பர் தல. என்ன கொஞ்சம் வாசம்தான் சாஸ்தி).

    பதிலளிநீக்கு