பக்கங்கள்

எழுத்தை பதிவாய் பொறித்து விட்டேன்

பிரியத்திற்குரிய நண்பனே !!!!
உயர்ந்த உள்ளமும், உன்னத எண்ணமும் கொண்டவனே !!!!
என்ன தவம் செய்தேன் உன்னை நண்பனாய் அடைய.

படுக்காளி வலைப்பதிவின் எண்ணமும் எழுத்தும் நான் அல்லவே.

தன்னடக்கம் என்ற ததிடு தத்தம் இல்லை.
நட்பின் உந்துதலும், ஊக்கமும் என்று உறுதியாய் சொல்ல முடியும்.

இதை எழுது இன்னும் எழுது என்ற பரிவு தானே பதிவாய் ஆனது.

மேலும் தங்கள் எழுத்தின் நையாண்டி, கவித்துவம், ஆளுமை யாருக்கு வரும். தங்கள் எழுத்தை பதிவாய் பொறித்து விட்டேன்.

இதெல்லாம் அரசியல் விளையாட்டு
நீ ஆம் என்று மட்டும் தலையாட்டு

எங்கெங்கு காணினும் அயோக்கியர்கள்
தேடியும், காணவில்லை யோக்கியர்கள்


தேனில் தோய்த்த வாக்குறுதி
பின், ஆனது நமக்கு வாக்கரிசி

நீட்டிய நோட்டை வாங்கினோம்
காட்டிய சீட்டில் குத்தினோம்


அவர்கள் சின்னத்தில் முத்திரை விழுந்தது
பின், அந்த சின்ன புத்தி எட்டி பார்த்தது


வாக்கை குத்திய மை காயும்முன்
அவர்கள் நம்மை குத்திய கதை கேளு

அவர்கள் கேட்ட ஓட்டை போட்டு விடு
பின், ஒட்டிய வயிறோடு இருந்து விடு

இது அரசியல் சூது விளையாட்டு
நீ வெறுமே பார்த்து தலையாட்டுநன்றி : நண்பர் கோபி - http://edakumadaku.blogspot.com/

http://www.jokkiri.blogspot.com/

1 கருத்து:

 1. பிரிய படுக்காளி

  நான் வாலில் எழுதிய பின்னூட்டத்தையே, உன் வலைப்பதிவின் சிகரம் ஆக்கிய உன் தோழமை என்னை நெகிழ வைக்கிறது. இது எங்களை போன்ற எழுத ஆரம்பித்தவர்களுக்கு கிடைக்கும் மிக பெரிய முதல் மரியாதை (சிவாஜி நடித்த படம் அல்ல).

  என்னதான் உந்துதல், ஊக்கம் இருந்தாலும், தங்கள் எழுத்து, தங்களின் சிந்தனையில் உதித்த முத்தல்லவா (மு.க.முத்து அல்ல), இது தங்களின் சிந்தனை முத்து. இதன் மதிப்பு, தங்களை முழுதும் அறிந்தவன் என்ற முறையில் எனக்குத்தான் தெரியும்.

  எந்த விஷயத்தையும் நறுக்கென்று நாலு பேருக்கு உரைக்கின்ற வகையில் எழுதும் தங்கள் உரை

  எங்களுக்கு ஒரு கோனார் தமிழ் உரை.
  இதற்கு எந்நாளும் போட வேண்டாம் திரை.
  எங்கள் வாழ்வுள்ள வரை
  உங்கள் தமிழ் எங்கள் அன்பு சிறை

  பதிலளிநீக்கு