பக்கங்கள்

அழகு.... பணம்.... கடவுள்....

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

ஆபத்தில்லாதது, சமூகம் அங்கீகரித்தது, சந்தோசம் தருவது அழகு. நிரந்தரமானதா என்பது கொண்டவரின் கோட்பாடு பொறுத்த்து.

செந்தில் (கவுண்டமணி) புகைப்படம் ஆப்பிரிக்காவில் பெண்தேட அனுப்பினால் நிச்சயம் ‘மாப்பிள்ள நச்சுன்னு இருக்கார்’ என சிலாகிக்கலாம். அதுவே வட நாட்டுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பினால் ‘ரிஜெக்டட் தான்’

அரிசி சாக்கு மூட்டய இரண்டு பிடி பிடித்து, மேல் பிடிக்கு மீசை, தலை முடி வைத்த மாதிரி உடல் கட்டு மோகன் லாலுக்கு. சேர நாட்டின் எல்லா பெண்களின் கனவிலும் ஆதர்சன நாயகனாய் ஐம்பது வயதிலும் வலம் வருவது எந்த கணக்கில் சேர்த்தி.

‘கல்யாணம் பண்ணுற முதல் அஞ்சு வருசத்துக்கு தான் இந்த அழகு வனப்பு எல்லாம். அப்புறம் எல்லாரும் ஒண்ணு போலத்தான் என்கிற விடல பையன் கமெண்டை எங்க போய் சொல்றது.

பணம் அவசியமா?

கடலை முட்டாய் வாங்க பணம் தேவை. கிரெடிட் கார்ட் அக்ஸெப்ட் செய்வது இல்லை.

கடல் காற்று வாங்கவும், அஸ்தமனம் பார்க்கவும் காசு இல்லை.

கடவுள் உண்டா?

ஆஹா! பயங்கரமான கேள்வியாச்சே.

இது ஒயாத சர்ச்சை, தீர்வு இல்லாத கேள்வி.

எத்தனை மகான்களும் தேவ குமாரனும் வந்தால் கூட, ஒ.கே. ஒத்துக்குறோம் என ஒதுங்க முடியாத ஒன்லைனர்.

எந்த சீலமான் டாப்பையா வந்தாலும் முடிவு சொல்ல முடியாத வெட்டி மன்றம். சரி படுக்காளியும் தன் பங்குக்கு சொல்கிறேன். (ஆனா! பாஸ் எஸ்ஸே டைப் கொஸ்டினுக்கு ஒன் வேர்ட் ஆன்ஸர் பதில் சொல்ல சொன்னா எப்படி...)

கடவுள் இருக்கு என்று சொல்பவன் முட்டாள் எனும் பகுத்தறிவாளர்கள், கடவுள் இல்லை என்பவன் மூர்க்கன் என்பதை ஒப்புக் கொள்வார்களா.

ஆராயாமல் அனுபவிக்காமல் அடுத்தவன் சொன்னதை கேட்டு ஆமாஞ்சாமி போடும் ஆன்மிக வாதியை புறந்தள்ளுங்கள் என்பவரே, புஸ்தகம் படிச்சுட்டு, எல்லாம் தெரிந்ததாய் தம்பட்டம் அடிக்கும் அரை வேக்காடை அடுப்பில் போடுவோம் என்றால் கோபப் படாமல் ஒத்துக் கொள்வீர்களா.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றவர் நாம் விண்டினானும் போதே நமக்கு இறை பற்றி ஒண்ணும் தெரியாது என்கிறார். இது எப்படி.
சிறு வயதில் பெற்றோர் எனும் பாதுகாப்பில் அரவணைப்பில் வளர்ந்து, அவர் ஆதரவை எதிர் பார்க்கும் குழந்தை மனம் வளர்ந்த பின்னும் அதையே தேடி அலைவது என்பார் உளவியல் விற்பன்னர்.

இறை பற்றி விளக்க முற்படும் போதே சிக்கல் சிஞ்சினக்கா ஆடுகிறது. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்பது கவித்துவமாய் இருக்கலாம், பொருள் அளவில் வெந்தும் வேகாத ஆப்பாயில்.

குருடான நால்வர் யானை பார்த்து சொன்ன கதை தான், ஆன்மிகம் பற்றி விளக்க நாம் முற்படும் போது.

கடவுள் இருக்கு என ஒத்துக் கொண்ட இட்த்தில் கூட கோஷ்டி தகராறு. த்வைதம், அத்வைதம். ஆமா இருக்கு என்பதில் கூட, உனக்கு உள்ள இருக்கு எனும் விவேகானந்தர் கூருப், இல்லை வெளிய எனச் சொல்லும் ஆழ்வார் கூருப் இந்த பக்கம்.

இருக்கு இல்லை என்ற எந்த நம்பிக்கையோட நீ தேடினாலும் நீ மடையன் என சீறும் ஜே.கே. யும் உண்டு. மனம் போன போக்கில் தேடும் மகரிஷி மார்க்கம்.

எளிதாய், இது பற்றி விளக்க முயற்சித்தால்.

யோக நிலை என்பது மனதும், உடலும் ஒரு சேர தர்க்கம் இல்லாமல் நிற்கும் ஒரு நிலை. சொன்னதை கேட்காத மனமும் உடலும் வேலைக்கு ஆவாது. நட்பான உடலும் மனமும் ஆரம்பம். பின்னர் தியானம். தியானம் என்பது உடல், மனம், பகுத்தறியும் புத்தி எனும் மூன்றையும் அடக்கிய (மூன்றும் கண் மூடி, வாய் பொத்தி நிற்கும் பரிதாவமான) ஒரு நிலை. ஆன்மாவை தரிசிக்கும் ஒரு கட்டம்.

நான் என்பது உடல் இல்லை, மனம் இல்லை, புத்தி இல்லை. சரி பின்னே என்ன, காலம் கடந்த, பொறுப்புக்கள் கடந்த, உலகம் கடந்த ஒரு குட்டி ஒளி. ஆன்மா. நம் ஆன்மாவை கண்டபின் ஆன்மாவின் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஆன்மாவை காணுவது இறையியம். கண்டதை வெளியில் / மொழியில் சொல்வது பெரிய உட்டாலங்கடி வேலை.

டேன் பிரவுன் தனது கதை ஒன்றில் இதே கேள்விக்கு ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனையாய் இதை சொல்லுவார்.

‘இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டால் கூட அதை புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். மேலும் அதை என் வாழ் நாளில் தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் போல தோன்றுகிறது’

நானும் ததாஸ்து.

2 கருத்துகள்:

 1. //செந்தில் (கவுண்டமணி) புகைப்படம் ஆப்பிரிக்காவில் பெண்தேட அனுப்பினால் நிச்சயம் ‘மாப்பிள்ள நச்சுன்னு இருக்கார்’ என சிலாகிக்கலாம். அதுவே வட நாட்டுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பினால் ‘ரிஜெக்டட் தான்’


  அரிசி சாக்கு மூட்டய இரண்டு பிடி பிடித்து, மேல் பிடிக்கு மீசை, தலை முடி வைத்த மாதிரி உடல் கட்டு மோகன் லாலுக்கு. சேர நாட்டின் எல்லா பெண்களின் கனவிலும் ஆதர்சன நாயகனாய் //

  செந்திலும், மோகன்லாலும் பின்னே படுக்காளியும்....அழகுக்கு நல்லா போட்டீங்கய்யா சோடி...

  //கடல் காற்று வாங்கவும், அஸ்தமனம் பார்க்கவும் காசு இல்லை. //

  இது சூப்பர் மேட்டரு "தல"...

  //எந்த சீலமான் டாப்பையா //

  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தீர்ப்பு சொல்ல எந்த பாலமன் ஆப்பையா வந்தாலும் முடியாது என்று நறுக்கென்று சொல்லி இருக்கிறீர்கள்... நான் சொல்வது என்னவென்றால் :

  "கடவுள் இல்லை என்று சொல்லவில்லை
  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்"

  இங்கு நான் சொல்லிய, நான் என்பதை அகங்காரத்தின் அங்கமாகவோ, ஆணவத்தின் அடையாளமாகவோ, திமிரின் ஒட்டு மொத்த எடுத்துக்காட்டாகவோ எடுத்துக்கொண்டால் இந்த ஆ..வார்..டை ஆ..வ..ன் பொறுப்பாக மாட்டான்..

  இங்கு ஆண்டவனை பற்றிய விளக்கத்திற்கு பெரியார், ஜே.ஜே., விவேகானந்தர், டேன் ப்ரௌன் போன்றோரை எல்லாம் சாட்சிக்கு அழைத்தது பாராட்டுக்குறியது...

  அதே போல், காதலை பற்றி எதுவுமே சொல்லாமல் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது..

  ஒன்றே செய்தீர்கள்... நன்றே செய்தீர்கள்.. அதையும் இன்றே செய்தீர்கள்... வாழ்த்துக்கள் படுக்காளி....

  பதிலளிநீக்கு
 2. வாங்க தலீவா. நன்றி. நல்லா கமெண்ட் போட்டீங்க.

  காதலுக்கு எஸ்கேப் ஆகல. ரொம்ப நீளமா இருந்ததால, இன்னொரு பதிவா போட வேண்டியதாச்சு அவ்வளவுதான். தங்கள் (மவுசு) எலித் துணையோடு இன்னும் கீழே தோண்டினால் காதல் அங்கு இருக்கு.

  பாருங்க லவ்ஸ்சுன்னாலே விவகாரம் ஆயிடுது.

  பதிலளிநீக்கு