எத்தனையோ வல்லுனர்கள் பக்கம் பக்கமாய் இதை பற்றி எழுதியிருந்தாலும். மிக எளிமையாய் ராபர்ட் கியோசாக்கி சொல்கிறார். அவரது புத்தகம் ‘ரிச் டாட்

எது பணத்தை உன் பாக்கெட்டில் போடுகிறதோ அது அசெட். எது உன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறதோ அது லையபிளிட்டி.
நம்மில் நிறைய பேர் நாம் குடியிருக்கும் நம் சொந்த வீட்டை அசெட் என்போம். வீட்டை அசெட் என்றால் நீ அசத்து. அவர் புத்தகம் கல கல வென சிரிக்கிறது நம்மை பார்த்து.
அவர் விளக்கத்தில் அது லையபிளிட்டி.
வருடா வருடம் சொத்து வரி, பெயிண்ட் அடிக்கணும், கரெண்ட் பில், இப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்குமே அல்லாது எப்போவாவது பணம் போட்டுருக்கா. அந்த வீட்டை விற்கும் வரை. பின்ன என்ன அது சொத்துதான் என நீங்கள் வரிஞ்சு கட்டி வாதாட வந்தால், கொஞ்சம் பொறுமை. அதன் அசல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அது தரும் ரிட்டேர்ன்ஸ் பற்றிதான் பேசுகிறோம்.
(அசலையும் வட்டியையும் குழப்பாதே – இதுவும் அவரது சூப்பர் பாயிண்டு. அதை பற்றியும் சொல்கிறேன். அது வரை பொறுமை வேண்டுகிறேன்).
அவர் சொல்லும் மிக அடிப்ப்டை விசயம் இதுதான். சொத்தை பெருக்கு. கடனை குறை. அவ்வளவுதான்.
ஒரு பேப்பர் பேனா எடுப்போம். நமது செலவு ஒரு பக்கம், வரவு ஒரு பக்கம் எழுதி எது கூடுதல் எது குறைவு என பார்த்தால் நம் உண்மை நிலை பளிச்சிடும் என்கிறார்.
இது என்னை ரொம்ப யோசிக்க வைத்து வாழ்வில் சில மாறுதலும் செய்த்து.
காலம் பூரா ஜல்லியடித்து நமக்கு நிரந்தர வருமானம் தரும் ஒன்றரை அணா பிசினஸ் இல்லையே எனும் போது நே! என்றிருக்கு.
உதாரணம், ஒரு லட்ச ரூபாயில் ஒரு சோடா கடையோ, பீடா கடையோ

ரொம்ப லேட் ஆச்சோ! என்ற புலம்பலை தள்ளி விட்டு, தீவிரமா இன்னைக்கு யோசிச்சா கூட இதுக்கு ஒரு தீர்வு நிச்சயம் நாளை இருக்கு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக