பக்கங்கள்

சினிமா மாறுமா

திரைச் சலனப் படம் தொடங்கிய காலத்தில் கருப்பு வெள்ளை காமிராக்களே. மிக சக்தி வாய்ந்த விளக்குகளும், தூக்கிச் செல்ல வாகு இல்லாத காமிராக்களும் என ஸ்டுடியோக்குள்ளேயே திரைப்படம் எடுப்பது முடங்கிக் கிடந்த்து.

தொழில் நுட்பம் வளர வளர, ஒரளவுக்கு சிரமத்தில் சுமாரான ஒளியில் சினிமா செய்யலாம் என்றதும் ஹப்பா!!! என கடற்கரையையும் பூங்காவையுமாய் பார்த்து நகர்ந்த்து படக் குழு.

கள்ளிக்காட்டுக்கும், கிராமத்துக்கும் கூட்டி வந்தார் பாரதிராஜா.

இது திரைப்படம் உருவான சைடு. நம் பார்வையாளர் பக்கம் எப்படி.

காசு கொடுத்து, கால் கடுக்க கூயுவில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த சினிமா, கட்டை விரல் அழுத்த்த்தில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் நடு வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது
(நன்றி: கலை ஞானி கமல் - தனது மய்யம் எனும் இதழ் வெளியீட்டு விழாவில் சொன்னது) நன்றி டி.வி, வி.சீ.ஆர்.


மழை விழும் மங்கல் பிரிண்டுகளும்,அறுந்து ஓடும் காட்சிகளும், சைடுல கடிச்சுருச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது எனும் டேப் ஃபார்மேட்டுகளை ஓரம் போ என சொன்னது சி.டி.

வீசிடி யை விட நான் துல்லியமான படமும் ஸ்டுடியோ குவாலிட்டி சவுண்ட்டும் தருகிறேன் என்றது டீவீடி.
அதோடு நிற்காமல் பூளு ரே, எச்.டி.எம்.ஐ. என நாளோரு மேனியும் பொளுதொரு வண்ணமுமாய் வளருது.

சரி தொடங்கின இட்த்துக்கு வந்தால்.

மும்பை எக்ஸ்பிரஸில் தோல்வியான டிஜிட்டல் முயற்சி, ரெட் ஒன் புண்ணியத்தில் உன்னைப் போல் ஒருவனில் சக்சஸ்.

ரெட் டிஜிட்டல் எனும் கம்பேனி பிரத்யேகமாக இந்த காமிராக்கள் தயாரிக்கிறார்கள்.

சரி அடுத்து என்ன.

எல்லோரும் டிஜிட்டல் வழி வர சாத்தியம் உண்டு. இன்று எல்லோரும் நம்பியிருக்கும் பிலிம் விலை காரணமாய் மலை ஏறிவிடும்.

அப்படியா!!!! வரட்டும்.. வந்தால் என்ன நடக்கும்.

இன்றைய விலைப்படி இந்த ரெட் ஒன் காமிராவின் விலை சுமார் ரூபாய் 10 லட்சம். வாங்குவதோ அல்லது வாடகைக்கு எடுப்பதோ கூட சாத்தியமாகலாம். போஸ்ட் புரோடக்‌ஷன் வேலை சுலபமாயும் சுருக்கமாகவும் ஹை ஸ்பீடு பிசிய்லே முடிந்து விடும்.

எனும் போது திரையில் காட்டத் தகுந்த வடிவத்தில் ஒரு சினிமா எடுக்க நம்மால் முடியும்.

வலையுலகம் எனும் தொழில் நுட்பத்தால் இன்று நடக்கும் அக்கப் போரை பாருங்கள். படுக்காளியான நான் கவிதை கதை எழுதினால் முப்பது வருட்த்துக்கு முன் என்னவாகி இருக்கும். யாரோ ஒரு பதிப்பகத்தின் பின்னால் ஓட வேண்டி இருந்திருக்க வேண்டும்.

இன்று என் சவுகரியம் எனக்கே ஆச்சர்யம்.

தோணுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒரு பைசா செலவில்லை. கலை தாகம், தமிழ் தாகம் தீருகிறது. எழுதுவதற்கு ஒன்றுமே இல்லையே என சில நாள் டிரையாகவும் உள்ளது. எழுதுனா கேப்பாரும் இல்ல, எழுதலன்னா அடிப்பாரும் யாரும் இல்ல.

வலையுலகம் இப்படி ஆச்சுன்னா, அப்போ சினிமா நாளை என்னவாகும்....

2 கருத்துகள்:

  1. நிச்சயம் மாறும் படுகாளி.. ஆனால் இமமாதிரியான புரட்சிகள் வரும்போது சில நல்ல விஷயங்களுக்காக பல மொக்கைகளை சகித்து கொள்ள வேண்டியிருக்கும். அவ்வ்ளவுதான்..

    பதிலளிநீக்கு
  2. கேபிள் சங்கர், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    உங்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்ட‌ படுக்காளியின் பணிவான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு