பக்கங்கள்

போட்டி இன்னும் முடியல.... பரிசு எனக்கே!!!

சர்வேசன் கதைப் போட்டியின் முதல் பரிசு 90$.
ஆனால் இருவது டாலர் தான் நமக்கு கிடைக்கும். மீதி 70 நம் பெயரில் உதவும் கரங்களுக்கு கொடுக்கப் படும்.

பிரமாதம். எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சுது.

உதவும் கரங்களையும் வித்யாவையும் அறிவேன். சிக்கனமாய் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவரிட்த்தில் கரிசனம் தெரியும். என் சார்பாய் 90$ அவருக்கு தனியாய் அனுப்பி விடுவேன்.

அப்போ, பரிசு கிடைச்சா மாதிரிதானே.
நன்றி சர்வேசன். இனி கதை.


பறப்பது போல் மிதப்பது போல் – கதை.

பரபரப்பான, பளபளப்பான, பப்பரப்பான்னு துபாயின் முக்கிய வீதி. நண்பகல்.

டொமார்..... கீரிச்
சொத் என்று ரோட்டில் விழுந்தேன். சத்தம் கேட்டு சர சர வென மக்கள் கூட்டம். ஒரு நிமிடம் நினைவு போய் திரும்ப வந்த்து. மல்லாந்து கிடந்த வாக்கில் கண் திறந்து பார்த்தேன். குழுப்பமான காட்சி. எனக்கு மேல் வெள்ளை கலர் வண்டி. மேக் சரியாக தெரியவில்லை. லாரி போல சைசில் ஒரு எஸ்யூவி. தெளிவில்லாத பேச்சுக் குரல்.

எப்படி விழுந்தேன். எல்லாம் ஒரு நொடியின் கீழ். கை தாங்கலாக ரோட்டோர இரும்பு கம்பி பிடித்தேன். ஞாபகம் இருக்கிறது. அதுதான் உடைந்து இருக்க வேண்டும். கையோடு வந்து விட்டது. அதன் ஒலி தான் அந்த டொமார் ஓசையாய் இருக்க வேண்டும்.

துள்ளி எழுந்தேன் பந்து போல். நல்ல வேளை உயிர் இருக்கிறது. நான் சாகவில்லை. கை கால்களை சுற்றும் முற்றும் பார்த்து, அடி ஒன்றும் இல்லை.
அந்த வண்டியின் சக்கரம் ஏறியிருந்தால் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய டயர். கருப்பாய் கோர பற்களோடு. ஏன் இத்தனை பெரிய டயர் எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த வீண் ஆடம்பரங்கள் படோபகாரங்கள் தான் மனிதனை இத்தனை துன்பத்தில் தள்ளுகிறது. நடக்கத் துவங்கினேன்.
எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த
நடக்கும் போது பறப்பது போல் இருக்கிறது. கால் இருக்கிறதா, இல்லையா. குனிந்து கீழே பார்த்தேன். இருக்கு. ஆஹா உடல் காற்று போல் அல்லவா உள்ளது. என்ன சுகம் சூப்பர். பறப்பது போல், மிதப்பது போல்.

சே! அந்த அமெரிக்கன் கம்பெனி மெயில் அனுப்புவதாய் சொன்னேனே. முதலில் அதை முடிக்க வேண்டும். தொலை பேசியில் ராணியிடம் சொன்னால் கூட போதுமே. அலுவலக காரியதரிசி.

தெளிவில்லாத பார்வை படர்ந்த திசையில் அது யார். தூரத்தில் வருவது எனது பாஸ்தானே. ஆம். அவரேதான்.

முசுடன்!!! ஒரு நாள் இல்லை ஒரு நாள் நடு ஆபிஸில் வைத்து அவரது குரலுக்கு மேல் உரக்க சொல்ல வேண்டும். நீங்கள் டிலே செய்தால் யூ ஆர் வெரி பிஸி, அதுவே நான் செய்தால் சோம்பேறித்தனமா.

இன்றைக்கு வேணாம். இருக்கட்டும் உள்ளத்தை மூடு, உதட்டை திற, ஒரு புன்னகை மட்டும் போதும். தளர்ந்து இருந்த களுத்துப் பட்டையை சரி செய்து, இடுப்பு பெல்ட் நேராக்கி ஒரு கண்ணிய துரித நடையில் நெருங்கினேன்.

அவரை பார்த்தால் என்னை கவனித்த மாதிரியே தெரியவில்லை. தூரத்தில் பார்த்தாலே கை ஆட்டும் இவர் பத்தடி தூரம் வந்த பிறகும்.... ஏன்.... கவனிக்கவில்லையோ. நெருங்கி ஹலோ என்றேன். கவனிக்காத்து போல் விலகி சென்றார். கடந்து சென்றார். ஏன். ஏன்.... என்னாயிற்று...

சட்டென கடந்த அந்த பெண், அது ராணிதானே. ஆம் சேலை கட்டி இருக்கிறாள். ஒ ராணியும் அவரோடு இருந்தாளா. பாஸ் மட்டும் பார்த்த்தால் அவளை கவனிக்க வில்லை. அது சரி, அவள் ஏன் என்னை பார்க்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட இல்லையே. வலிய வந்து பேசும் அவளும் கண்டுக்கலையே. என்னாச்சு. ஒரு வேளை

அட போங்கடா. உங்கள் நினைப்பு எனக்கு நேரம் விரயம். எனக்கு நடக்க பிடிக்கிறது. சந்தோசமாய் நடப்போம். சற்று தொலைவில் கார், எனது கார் தனியே தேமேன்னு நின்று கொண்டு இருந்த்து.

உள் அமர்ந்தேன். இக்னிஷன் ஆன் செய்ய, முன் பேனல் பளிச்சிட்ட்து. நேரம் 14.00, 46 டிகிரி. முதலில் இந்த கிளாக்கின் ரயில் நேரத்த மாத்தணும், நமக்கு இந்த 12 கழிக்கிர வேலை எல்லாம் மெனக்கேடு. டைம் வேஸ்ட்.

ஏசி முழுமையாய் ஓட விட்டேன். ஹூம் சரியில்ல. சன்னல் தணித்து வெளிக் காத்து படர விட்டேன். இது பரவாயில்ல, சூடு தெரியவில்லை. மறுபடி பேனல் பார்த்தேன். 46 டிகிரி, தோலை பொசுக்குமே. சட்டை அயன் பண்ணினா வர்ற மாதிரி ஒரு வாடை வருமே. ஒண்ணையும் காணல. என்னாச்சு இன்னைக்கு. ஆனால் இது நல்லா இருக்கே.

அழுத்திய ஆக்ஸிலேட்டரில் கார் சீறிப் பாய்ந்த்து. ஒரு சில தப்படிகளில் சாலை ஓரத்தில் மோகனை பார்த்தேன். இவன் என்ன செய்கிறான் இங்கு. உற்சாகமாய் கை அசைக்க, பதில் கை அசைத்தான். நில் என்பதாய் கை அசைப்பது தெரிந்த்து. அப்பா இவனாவது என்னை தெரிந்தானே.

பிரேக் அழுத்தி அவனருகே நிறுத்தி வாவென கை அசைத்தேன். வண்டியில் ஏறாது சுற்றி என் திசையில் வந்தான். டிரைவர் பக்கம் நீ ஏண்டா வர்ரே. நான் தான் ஓட்டுரேன்ல நீ அந்த பக்கம் வா. எனது குரலையோ செய்தியையோ கண்டு கொள்ளாமல் டபக் என கதவு திறந்தான். கொத்தாக என் சட்டை பிடித்தான். காரில் இருந்து என்னை வெளியில் இழுத்தான்.

விடு விடு, டேய் என்ன செய்ற, விடு என்னை.. சத்தம் ஜாஸ்தியாச்சோ. வலதும் இட்தும் திரும்பி பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லை.

வெளியில் இழுத்த என்னை பின் கதவு திறந்து உள் திணித்தான். இருடா, பொறுமை. மொதுவாடா நானே போறேன். அவன் கேட்ட்தாய் தெரியவில்லை. அறைந்து சாத்திய கதவில் சத்த்த்தில் கோபம் தெரிந்த்து. டிரைவர் சீட்டில் அமர்ந்து சன்னல் எல்லாம் மூடி, சீரான வேகத்தில் வண்டி ஓடத் துவங்கியது. கால் நீட்டி என்னை வசதி செய்து கொண்டேன்.

மோகன் வெடித்தான். ‘அறிவு இருக்கா. உன் நல்ல நேரம் நான் தற்செயலா வந்தேன். வண்டியா ஓட்டுர நீ. புழைப்புக்காக இந்த ஊர் வந்திருக்கோம். இதென்ன இந்தியாவா. துபாய்!!!

இந்த ஊருக்கு இவ்வளவு போதை ஆகாதுரா...

தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா அவ்வளவுதான். ஜெயில்ல வச்சு நாடு கட்த்திருவாங்க. ஏண்டா இப்படி அளவு தெரியாம குடிக்கிற, அப்படியே குடிச்சாலும் வீட்டுல படுத்துற வேண்டியது தானே,

அத்தனை போதையிலும் அவன் சொல்வது சரி எனப் பட்ட்து.

மரணத்துக்கும் போதைக்கும் தூரம் அதிகமில்லை எனத் தெரிந்த்து. கொஞ்சம் விட்டிருந்தால் என்னைக் கொன்று இருக்கும். குடித்தவனை உளறிடுவான் என்று ஊர் விலக்குவது தெரிந்த்து. குடித்த மனிதனிடம் குசலம் யாரும் விசாரிப்பதில்லை.

மனித இயல்பை தொலைய வைக்கும் வலு இந்த மதுவுக்கு உண்டோ. நினைவை, உறவை, நடையை எல்லாம் மாற்றி அமைக்கும் இந்த குடி இனிமே இல்லப்பா, என அப்போது தோணுச்சு.

முற்றும்


இந்த கதைக்கு நல்ல ஒரு தலைப்பு வைக்க சொல்லி சில பேரிடம் ஆலோசனை கேட்டேன்.

எடக்கு மடக்கு கார்ர் சொன்னது ‘டாஸ்மாக் டெரர்’ ‘கும்மியடிச்சு குட்டய குழப்பு’
சைலஜா ‘எண்ணிய குடிதல் வேண்டும், குடித்த பின் எண்ணவும் வேண்டும்’
அமரர் கல்கி ‘பொன்னியின் செல்வன் குடிக்காத சபதம்’
தெலுங்கு பட டப்பிங் பிரெண்ட் சொன்னார் ‘சட்டய பிடிச்சு மூஞ்சில குத்து’
சாரு சொன்னது ‘கழுகு ரத்தமும் கருவாட்டுக் குழம்பும் – ஒரு எதிர்வினை’
சுஜாதா ’46 டிகிரி குளுருது’
தண்டோரா ‘மானிட்டர் பக்கங்கள்’
பாலகுமாரன் ‘என்னை சுற்றி பல வாகனங்கள்’
வால் பையன் ‘குவார்ட்டரடி கும்மியடி’
பரிசல் காரன் ‘ ’ காரோட்டி காரன்
ஆசிப் மீரான் ‘மக்கா!!! மக்கர் பண்ணுது’
செல்லத்துரை ‘காதல் இல்லா வெறுமை’

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி

7 கருத்துகள்:

 1. வித்தியாசமான கதை படுக்காளி. தலைப்பு வைக்க நாங்களும் உதவுவோமே எங்க பேரெல்லாம் உங்களுக்குத்தோணாதே பரவால்லபரவால்ல! பரிசுபெற வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. வாருங்கள் ஷைலஜா!!

  முத‌ல்ல‌ யோசிச்சேன்.... அப்புற‌மா கோவிச்சுக்குவீங்களோன்னு விட்டுட்டேன்.

  அனுமதி கொடுத்தீட்டீங்கல்ல போட்டுர்ரேன்.

  சைலஜா 'எண்ணிய குடிதல் வேண்டும், குடிச்சப்புறம் எண்ணவும் வேண்டும்'

  பதிலளிநீக்கு
 3. வாங்க பெயர் சொல்ல விரும்பாதவரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  கதை நல்லா இல்ல, சஜெஸ்டட் தலைப்பு நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்.

  பார்க்கிறேன். இன்னும் ஏதாவது தோணுச்சுன்னா, வேறு ஒரு கதை எழுதிடுவோம்.

  அடிக்கடி வாங்க, தங்கள் கருத்துரைகள் தாங்க...

  நன்றி. படுக்காளி

  பதிலளிநீக்கு
 4. //'எண்ணிய குடிதல் வேண்டும், குடிச்சப்புறம் எண்ணவும் வேண்டும்'//

  அட...ஷைலஜாவோட டைட்டில் சூப்பரா இருக்கே...

  பதிலளிநீக்கு
 5. முதலில் ஏதாவது பிராணியாக இருக்கலாம் என்று தோன்றியது, பின்னர் மரணித்தவரின் பயணமா என்ற எண்ணம், பின்னர் தெளிவாக போதையின் உக்கிரம் தான் அது என்று சொல்லிட்டீங்க.

  அடிக்கடி 'ஃபுல்'ஸ்டாப் வைத்து எழுதுவது வாசிப்பவரை தொய்வடைய வைக்கும் என்பது என் எண்ணம்.

  பாராட்டுக்கள், போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. நான் நினைக்கவே இல்லீங்க. நெருங்கிய நண்பர் குழாம் கூட மரணம், ஆன்மா என தான் சொல்லியது. விலங்கு என தாங்கள் சொன்னது ரொம்ப நல்லா இருக்கு. அது தங்களின் கற்பனா வளத்தையே காட்டுகிறது.

  நீங்க சொன்ன கதை நடை குறித்த கருத்து என்னை மிகவும் யோசிக்க வைத்தது. மீண்டும் ஒரு முறை தாங்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் வாசித்தேன். சரிதான். என் குறை எனக்கு தெரிந்தது.

  சின்ன சின்ன வாக்கியங்கள் என நான் விரும்பியது வாசிப்பவரின் வேகத்தை தொய்வடைய செய்யும் என கூறும்போது.... ஹும்... சரியா இருக்கும் என்றே தோணுது.

  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரொம்ப நன்றி. அடிக்க‌டி வாங்க‌,

  பதிலளிநீக்கு