பக்கங்கள்

காட்சிகள் கவிதையாய்

காட்சிகள் சிறையானால்
நினைவுகளுக்கு காப்பு
காலத்துக்கு ஆப்பு
புகைப்படம் பற்றிய புகைப்படம் பற்றிய என் பழைய கவிதை.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

குடுக்க வேண்டியதை,
கூட கொடுத்தால்
அதையும் கூரைய பிச்சுக்கிட்டு கொடுத்தால்
இயற்கையும் கூட இடைஞ்சல்
சுடும் வரை சூரியன்,
சுற்றும் வரை பூமி,
போராடும் வரை மனிதன்.
(நன்றி வைரமுத்து)
வெற்றி வேண்டுமா!
போட்டுப் பாரடா எதிர் நீச்சல்,
சரிதான் போடா தலை விதி என்பது வெறும் கூச்சல்

காப்பாற்ற வேண்டிய இறைவன் கணுக்கால் தண்ணீரில்
பகுத்தறிவாளர் கெக்கலிப்பார்


இயல்பிலே
மனிதம் வேறு இறை வேறல்ல,
இயற்கைக்கு,
இயற்கையாய்


வழிபாடும் கோவிலும்
மனிதன் இறை அடையும்
இடமே

அண்மையில்
அடை மழையால்
அண்டை மாநிலத்தில் துயரம்
வேண்டுகிறேன் விரைவில்
நிலையில் சகஜம்

4 கருத்துகள்:

 1. //காட்சிகள் சிறையானால்
  நினைவுகளுக்கு காப்பு
  காலத்துக்கு ஆப்பு//

  இது லைட்டா பேரரசு / டி.ஆர்.எழுதுன மாதிரி இருந்தாலும் நல்லா இருக்கு...

  //அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

  குடுக்க வேண்டியதை,
  கூட கொடுத்தால்
  அதையும் கூரைய பிச்சுக்கிட்டு கொடுத்தால்
  இயற்கையும் கூட இடைஞ்சல்//

  உண்மையே... எதுவும் அளவோடு இருத்தல் நமக்கும், அடுத்தவர்க்கும் நலம் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

  //சுடும் வரை சூரியன்,
  சுற்றும் வரை பூமி,
  போராடும் வரை மனிதன்.
  (நன்றி வைரமுத்து)//

  உருமினாதான் சிங்கம்னு பாட்சா ப‌ட‌த்துல‌ ராம‌கிருஷ்ண‌ன் எழுதின ட‌ய‌லாக் ஞாப‌க‌ம் வந்த‌து...

  //வெற்றி வேண்டுமா!
  போட்டுப் பாரடா எதிர் நீச்சல்,
  சரிதான் போடா தலை விதி என்பது வெறும் கூச்சல்//

  இது நம்ம மாடிப்படி மாது சொன்னது...மாடிப்ப‌டி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி..

  //இயல்பிலே
  மனிதம் வேறு இறை வேறல்ல,
  இயற்கைக்கு,
  இயற்கையாய்

  வழிபாடும் கோவிலும்
  மனிதன் இறை அடையும்
  இடமே//

  ந‌ல்ல‌ சிந்த‌னை "த‌ல‌".

  //அண்மையில்
  அடை மழையால்
  அண்டை மாநிலத்தில் துயரம்
  வேண்டுகிறேன் விரைவில்
  நிலையில் சகஜம்//

  நிறைய‌ த‌ண்ணீர் வந்துட்ட‌‌தால‌, இப்போ ந‌ம‌க்கு திறந்து விட‌வில்லையா?

  பதிலளிநீக்கு
 2. வாங்கண்ணா உங்க எழுத்து கலக்குது நீங்க வந்தா களை கட்டுது.

  பதிவின் ஒவ்வொரு வரியும் எடுத்து, அதில் தங்கள் பஞ்ச் வைக்கும் ஸ்டைல் நல்லா இருக்கு.

  1. ஆப்பு என்பது ஆசாரி சம்பந்தப்பட்டது. அசையா வண்ணம், இழுத்து நிற்க வைக்கும் மரத் துண்டை குறிப்பது, சினிமாக் காரர் புண்ணியத்தில் அது ஒரு அசிங்க வார்த்தையாய் போயிற்றே தல.

  2. அண்டை மாநில அரசியலை உரசிப் பார்த்த வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிச்சுது. எதுக்கு தலைவா விவகாரம்னு நான் விட்டுபுட்டேன். பின்னூட்டத்தில் சேர்த்ததுக்கு ஸ்பெஷல் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இயல்பிலே
  மனிதம் வேறு இறை வேறல்ல,
  இயற்கைக்கு,
  இயற்கையாய்


  வழிபாடும் கோவிலும்
  மனிதன் இறை அடையும்
  இடமே

  nice words padukali

  nala irukku

  பதிலளிநீக்கு
 4. வாங்க தேன். வருகைகும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ரொம்ப நன்றி.

  படுக்காளி

  பதிலளிநீக்கு