பக்கங்கள்

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 3

உன் லட்சியம் எதுவாயினும் அதை அடையலாம்.

எதுவாயினும்..... ????

அது எப்படிங்க...என நாம் டவுட் கேக்கும்போது பிரையன் ட்ரேசி கையை சுழற்றி, சொல்கிறார் ‘நீ டிசைட் பண்ணு. டிசைட் பண்ணி கமிட் ஆயிட்டேன்னா உன் பேச்ச நீயே கேக்க மாட்ட’ என்கிறார் அவரது அக்சிலேரட்ட்ட் லேர்னிங் எனும் அவரது அற்புதமான புத்தகத்தில்.

இதை கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால், லட்சியம் ஒவ்வொருத்த்ருக்கும் உண்டு. பக்கத்து வீட்டு பொண்ண கட்டுறதுல இருந்து, கொடி நாட்டி கோட்டைய பிடிக்கிற வரை பரந்து விரிந்து பாய் போட்டு படுத்து இருக்கிறது.

காசு பணம் சம்பாதிப்பது, கடவுளை அடைவது ஏன் தொழிலதிபர் ஆகும் வரை என லிஸ்ட் நீளூது.

லட்சியத்த லட்சியம் செய்யாம அதை அடையும் வழி மட்டும் யோசிப்போம்.

என் லட்சியத்தை நிறைவேற்றும் சக்தி எனக்குள் இருக்கு அல்லது வெளியில் இருக்கு என்ற இரண்டே பிரிவுதான். இதெல்லாம் நடக்காதுங்க என்று பெறுமூச்சாய் சொல்பவரை ‘நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்’ சிரித்த முகத்தோடு வழியனுப்பி விடுவோம்.

நமது இந்திய சிந்தனையில் இறை, விதி, ஜாதகம், என பல விசயங்கள் நம் தன்னம்பிக்கையே பதம் பார்க்கின்றன. வெள்ளைக்காரன் பரவாயில்ல இந்த சமாச்சாரங்கள் அவனுக்கு கொஞ்சம் குறைவு.

‘பையன் பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறான். அவன் கட்டத்த பார்த்து கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க’ எனும் தகப்பனுக்கு ஜோசியன் என்ன சொல்லுவான்.

இந்த மேட்டர விலாவாரியா பார்த்து சொல்லும் வலு நம்ம ஜோதிட சாஸ்திரத்துக்கு இருக்கு என்றே நம்புவோம். இந்த அறிவியல பயன் படுத்திர வியாபாரி கையில் இருக்கு இப்போ.
பையன் பிசினஸ் சூப்பர் என்றால் பிரச்சனையே இல்ல. பிசினஸ் ஊத்திக்கும் என்றால் உடைச்சு சொல்லாம, பூசி மெழுகினான் என்றால் கேட்ட தகப்பன் என்ன செய்வான்.

எனக்கு லக்கினத்தில் வாத்து, நாலாம் கட்ட்த்தில நாய் இருக்கு, இரண்டு வருசத்துக்கு நேரமே சரி இல்ல, என்று குட்டிச் சுவரில் குத்த வைத்து இருக்கும் குமாரை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது.

சிவப்புக் கலர்ல மூணு மோதிரம் ஒரே விரல்ல போட்டா, அதிர்ஷ்ட லச்சுமி அள்ளிக் கொடுப்பா என்கிற மோச லால் சேட் எப்படி தோன்றுகிறார்.

உழைப்பும் தன்னம்பிக்கையும் இல்லாது நேரம் சரியாயிருந்தால் போதும் என்ற நினைப்பு எப்படி.

சரி பிரையன் டிரேசி சொல்வது என்ன

1. உன் லட்சியம் என்ன என்பதை ஒரு காகித்த்தில் எழுது
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த வரை காகிதத்தை நிரப்பு

3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவர் பட்டியலிடு முடிந்தவரை
4. அவர்கள் என்ன செய்ததால் இப்படி ஆனார்கள் என கண்டுபிடி
5. நீயும் அதையே செய்.... அவ்வளவுதான்....


சரி எனக்கு டெண்டுல்கர் போல் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆசை. அவர் ஜொலிப்பதின் ஒரு பகுதி அவரது கடின பயிற்சி, ஒருங்கிய லட்சியம் என ஒத்துக் கொள்கிறேன். அதை என்னாலும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்.

ஆனால் அவரது இத்தகைய உயர்வுக்கு காரணம் அவரது கூரிய கண் பார்வை தானே. எத்தனை வேகத்தில் பந்து வந்தாலும் பார்க்க முடியும் அவரது இயல்பு தானே. இது போல் கூரிய கண் பார்வை உடைய கவாஸ்கரும் பெரிய பிஸ்து.
அது போல் மூளை இல்லாது, அனிச்சை எனும் தண்டு வடத்தின் செயல்பாடும் இவரது இன்னொரு கொடை. இந்த ரிப்லெக்ஸ் தானே அவரது பலம். அந்த தண்டு வட தடாலடி தானே பந்து வீசுபவருக்கு வயிற்றில் புளி கரைக்கிறது.

எனும் போது வரமாய் வாங்கி வரும் கொடைகளும் நமது முயற்ச்சியும் இணைந்தாலே தானே முடியும் என்ற எண்ணத்தில் தவறு இல்லை.

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, முனைப்பும் சேர்ந்து, கடினம் எனச் சொல்லாது எனக்கு இந்த முயற்சியும் பயிற்ச்சியும் பிடிக்கிறது என்று நாம் சொல்ல தொடங்கினால் வானம் நம் கைக்கு எட்டும் தூரம் தான்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்

எனும் வள்ளுவ சிந்தனையும் இதுதானோ

2 கருத்துகள்:

 1. //உன் லட்சியம் எதுவாயினும் அதை அடையலாம்.

  எதுவாயினும்..... ????

  அது எப்படிங்க...என நாம் டவுட் கேக்கும்போது பிரையன் ட்ரேசி கையை சுழற்றி, சொல்கிறார் ‘நீ டிசைட் பண்ணு. டிசைட் பண்ணி கமிட் ஆயிட்டேன்னா உன் பேச்ச நீயே கேக்க மாட்ட’ என்கிறார் அவரது அக்சிலேரட்ட்ட் லேர்னிங் எனும் அவரது அற்புதமான புத்தகத்தில்.//

  அட‌... இந்த‌ மேட்டர‌ லோக்க‌லாவே கேள்விப்ப‌ட்டு இருக்கேனே.. ஆமாம்... ந‌ம்ம‌ இளைய‌ த‌ள‌ப‌தி "போக்கிரி" ல‌ சொல்ற‌து... ஹ‌லோ... ஜோக்கிரி இல்லேங்க‌... அது வலைப்பக்கம்... இது போக்கிரி திரைப்ப‌ட‌ம்... "ஒரு த‌ட‌வை முடிவு ப‌ண்ணிட்டா என் பேச்ச‌ நானே கேட்க‌ மாட்டேன்"... சூப்பர்... இவ‌ர் பேச்சை இவ‌ரே கேட்க‌வில்லை என்றால், வேறு யார் கேட்பார்கள், சொல்லுங்க‌ த‌ல‌??

  //இதை கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால், லட்சியம் ஒவ்வொருத்த்ருக்கும் உண்டு. பக்கத்து வீட்டு பொண்ண கட்டுறதுல இருந்து, கொடி நாட்டி கோட்டைய பிடிக்கிற வரை பரந்து விரிந்து பாய் போட்டு படுத்து இருக்கிறது.

  காசு பணம் சம்பாதிப்பது, கடவுளை அடைவது ஏன் தொழிலதிபர் ஆகும் வரை என லிஸ்ட் நீளூது.//

  இது ஒரு முடிவில்லாத‌ லிஸ்ட்...அதுவும் இப்போ பருத்தி கொட்டை, புண்ணாக்கு விற்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் தொழில‌திப‌ர்க‌ளாம்... நான் சொல்ல‌ல‌.. க‌வுண்ட‌ம‌ணி அண்ண‌ன் "ம‌ன்ன‌ன்" ப‌ட‌த்துல‌ சொன்னாரு...

  //என் லட்சியத்தை நிறைவேற்றும் சக்தி எனக்குள் இருக்கு அல்லது வெளியில் இருக்கு என்ற இரண்டே பிரிவுதான். இதெல்லாம் நடக்காதுங்க என்று பெறுமூச்சாய் சொல்பவரை ‘நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்’ சிரித்த முகத்தோடு வழியனுப்பி விடுவோம்.//

  க‌ரெக்ட்.. முத‌லில் ந‌ம‌க்கு ந‌ம் மேல், ந‌ம் முய‌ற்சி மேல் ந‌ம்பிக்கை வ‌ர‌வேண்டும்... அப்புற‌ம் தான் முயன்று அந்த‌ வெற்றியை அடைய‌ முடியும்...

  //‘பையன் பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறான். அவன் கட்டத்த பார்த்து கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க’ எனும் தகப்பனுக்கு ஜோசியன் என்ன சொல்லுவான்.

  இந்த மேட்டர விலாவாரியா பார்த்து சொல்லும் வலு நம்ம ஜோதிட சாஸ்திரத்துக்கு இருக்கு என்றே நம்புவோம். இந்த அறிவியல பயன் படுத்திர வியாபாரி கையில் இருக்கு இப்போ.

  பையன் பிசினஸ் சூப்பர் என்றால் பிரச்சனையே இல்ல. பிசினஸ் ஊத்திக்கும் என்றால் உடைச்சு சொல்லாம, பூசி மெழுகினான் என்றால் கேட்ட தகப்பன் என்ன செய்வான்.

  எனக்கு லக்கினத்தில் வாத்து, நாலாம் கட்டத்தில நாய் இருக்கு, இரண்டு வருசத்துக்கு நேரமே சரி இல்ல, என்று குட்டிச் சுவரில் குத்த வைத்து இருக்கும் குமாரை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது.//

  ம்ம்ம்ம்...... ஜோதிட‌மும், ம‌ருத்துவ‌மும் இறையோடு இணைந்து செய‌ல்ப‌டுகிற‌து..
  அதாவ‌து 50/50....

  //1. உன் லட்சியம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுது
  2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த வரை காகிதத்தை நிரப்பு
  3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவர் பட்டியலிடு முடிந்தவரை
  4. அவர்கள் என்ன செய்ததால் இப்படி ஆனார்கள் என கண்டுபிடி
  5. நீயும் அதையே செய்.... அவ்வளவுதான்....//

  எழுத ஆரம்பிச்சுட்டேன் படுக்காளி...

  //என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, முனைப்பும் சேர்ந்து, கடினம் எனச் சொல்லாது எனக்கு இந்த முயற்சியும் பயிற்ச்சியும் பிடிக்கிறது என்று நாம் சொல்ல தொடங்கினால் வானம் நம் கைக்கு எட்டும் தூரம் தான். //

  இது கூட எங்க அண்ணன் கமல்தாசன் சொல்லி இருக்காரு... உன்னால் முடியும் தம்பி, தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வேகத்துக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  1. விஜய் ரொம்ப இன்ஸ்பையர் !!! ???? பண்ணுறார் ஜி. உஷார் பாஸ், அடுத்த படத்துக்கு டைட்டில் ஜோக்கிரின்னு வைச்சுர போறார்.

  2. நீங்க லட்சியத்த பேப்பர்ல‌ எழுத ஆரம்பிச்சதா சொல்றீங்க. சூப்பர். வழிமுறை, காலத் திட்டம் எல்லாம் போட்டுருங்க. ஆனா இந்த பேப்பர யாரு கிட்ட வேணா காட்டுங்க, ஆண்டவர் கிட்ட மட்டும் காட்டாதீங்க.இடுப்பில் கை வைத்து ஒரு நம்பியார் சிரிப்பு சிரிக்கலாம். இறை திட்டம் புரிவதே இல்லை.

  பதிலளிநீக்கு