பக்கங்கள்

காமெடி – பொறுப்பில்லாத கோணங்கித்தனம்

ஒளி விளக்கு திரைப்பட்த்தில் ஒரே நேரத்தில் ஐந்து எம்.ஜி.ஆர் வந்து ஆடிப் பாடும் ஒரு அசத்தல் தத்துவ பாடல்.

ஒரு எம்.ஜி.ஆர். திரையில் வந்தாலே தாங்காத நம் ரசிகன், செய்வதறியாது திகைத்த தருணம்.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை நீதான் ஒரு மிருகம்”

பாடல் சிச்சுவேசன், நிறைய பேருக்குத் தெரியும், தெரியாதவருக்கு. இது டாஸ்மாக் மேட்டர். குடிக்கு அடிமையானவனை அவனது மனசாட்சி அதன் பாதகங்களை சொல்லுவதாய் அமைந்த பாடல்.

சிக்கென்று பளிர் உடையில், துறு துறு வென நடிப்பில், நறுவிசான நாகரிக உடல் அசைவில் (பாடி லேங்குவேஜ்- சூப்பர்) தூள் கிளப்பும் காட்சி அமைப்பு. ஆழ்ந்த அர்த்தம், எளிமை வார்த்தைகள், இனிய துள்ளலான இசை, திரையில் தூள் பரத்தும் காட்சி அமைப்பு என்று எல்லாம் நல்லதாய் அமைந்த பாடல். என் பேவரிட் என்றும் சொல்ல்லாம்.

அழுது வடிந்து கொண்டுதான் தத்துவம் சொல்லணும்னு இல்லை என புது டிரெண்ட் செட்டர்.

சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். தலைப்பு பயங்கர கோபத்தில எழுதின மாதிரி இருக்கே என நினைப்பருக்கு, இதனுடன் தொடர்புடைய இன்னொரு நிகழ்வு இதோ.

ஒரு நகைச்சுவை மேடை நாடகத்தில், கதா நாயகனுக்கு வால் முளைத்து விடுவதாய் கதை. தனிமையில் புலம்பிக் கொண்டி இருக்கும் அவன் சென்று ரேடியோ ஆன் செய்கிறான். பாடல் ஒலிக்கிறது.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை.....
(இல்லையா!!! என அதிர்ச்சியில் டிராமா நாயகன் கவுண்டர் வசனம் தர.... அரங்கமே சிரிப்பில் அதிருகிறது)

நீதான் ஒரு மிருகம்”
சரியாக இந்த இடத்தில் ஒட்டை விழுந்த ரெக்கார்ட், இந்த ஒரு பத்த்தையே திரும்ப திரும்ப சொல்ல சலிப்போடு ரேடியோ ஆப் செய்கிறான்.

நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்து ரொம்ப காலம் ஆனது. மீண்டுமொறு நேரத்தில் ஒளிவிளக்கு பாடல் மறுபடி ஒலிக்க, எனக்கு ஆச்சர்யம். பாடல் வரி காதில் விழுந்து மனதில் எம்.ஜி.ஆருக்கு பதில் காமெடி கிங். தத்துவம் போயி காமெடி.

இது என்ன கலாட்டா. இத்தனை வருடங்களாய் ஆக்கிரமித்து இருந்த ரெபரன்ஸ் பாயிண்ட், மாறி விட்ட்தே. என்னைப் போல் ரசிகனுக்கும் இதே உணர்வு வருமே என்றவுடன் சட சட வென சில கேள்விகள்.

நமக்கு சொந்தம் இல்லாத அடுத்தவர் கற்பனையை அல்லது சிந்தனையை அவரின் அனுமதி இல்லாம, நாம் எடுத்துக் கொண்டு, முன்னவர் சொன்னதை அர்த்தம் திரித்து, அவரது நோக்கம் சிதிலமடைந்தால் நாம் அவருக்கு செய்யும் துரோகம் ஆகுமோ...

நிச்சயமாய் எந்த உள் நோக்கமும் இல்லாமல், சும்மா காமெடி தான் பண்ணியிருக்கிறார் என புரிகிறது. சும்மா.... காமெடிக்கு தான பாஸ், என்றாலும், சிரிப்பு வரும் என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா.
காமெடி செய்யும் போது கவனமாய் இருக்க வேண்டுமோ.

மனதை லேசாக்கும் சிரிப்பு அவசியம் ஆனாலும், வலுக்கட்டாயமாய் தினிக்கும் நகைச்சுவை வன்முறையோ.

நாட்டுக்கு தேவை நல்ல சிந்தனையா, சிரிக்க வைக்கும் காமெடியா..

கலைஞர்களுக்கு சமூக மாற்றும் சக்தி இருப்பதால், நமது ஒவ்வொரு நடையும் கவனமாய் இருக்க வேண்டுமோ.

கலைஞர்களுக்கு சமூக பிரங்ஞை மிக மிக அவசியமோ...

2 கருத்துகள்:

  1. நண்பர் படுக்காளி அவர்களே...

    எனக்கு "ஒளிவிளக்கு" எம்.ஜி.ஆரும் வேண்டும், "வால்பையன்" எஸ்.வி.சேகரும் வேண்டும்... இந்த அனைவரையும் அரவணைக்கும் பண்பு, என் முன்னோர் எனக்கு சொல்லி கொடுத்தது.. அதை இன்னும் விடாமல் பாதுகாத்து வருகிறேன்..

    மெசபடோமியா காலத்து.... அய்யோ... நான் இன்னும் இப்படி பேசறத நிறுத்தலியா...

    பதிலளிநீக்கு
  2. வாங்க கோபி.

    அவரை பற்றி குற்றமாய் சொன்னதால், வால் பையன் பெயரை நேரடியாய் நான் குறிப்பிடவில்லை. கிங் யாரென்று வாசகருக்கு சொன்னதுக்கு தேங்க்ஸ். வாசிக்கிரவுங்களுக்கு புரியாதா பின்ன... 'யானை பார்க்க வெள்ளெழுத்தா'

    காமெடி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் அல்லவா தாங்கள். தங்கள் பின்னூட்டத்தில் கூட, அதை விட வில்லையே. வாழைப் பழ ஊசி போல சமூக பிரங்ஞையும் காமெடியும் வேண்டும் என நைசா சொன்னது உங்க பஞ்ச். சூப்பர்.

    கழுவுர மீன்ல நழுவுர மீன் மாதிரி புரியாத மாதிரி பேசுர ஞானி ஊருக்குள்ள சில பேர் உண்டு. நீங்கள் அந்த வகை தேர்ந்தெடுத்ததில் பளிச்சிடுகிறது தங்கள் புத்திசாலித்தனம். கீப் இட் அப் ....

    பதிலளிநீக்கு